விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் சங்கு தேவன்

Vijay Sethuupathi Turns As Producer

பிரபல நடிகர்களே படம் தயாரிக்க தயங்கும் நேரத்தில் நான்கு படங்கள் மட்டுமே நடித்துள்ள விஜய் சேதுபதி படம் தயாரிக்கப் போகிறார். அவர் தயாரிக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர்கள் பிரபு சாலமன், லிங்குசாமி ஆகியோரின் ஃபேவரைட் ஹீரோ விஜய் சேதுபதி. தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்த போட யாரு இவர் யோசிக்க வைத்தவர். அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பீட்சா, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், போன்ற படங்களில் நடித்து புதிய ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.

இப்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, புதிதாக "விஜய் சேதுபதி புரொடக்ஷ்ன்" எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

இவரது தயாரிப்பில் முதன் முதலாக சங்குத் தேவன் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். கதைக்களம் திண்டுக்கல். ஆனால் கதாநாயகி யார் என்று இன்னமும் முடிவு செய்யவில்லை.

அட்டகத்தி, பீட்சா படங்களில் இசை அமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ள விஜய் சேதுபதி, ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறாராம்.

 

கோவை டூ சென்னை டிவி நடிகை ஆனந்தியின் ஆனந்தம்

Coimbatore Anandhi Sizzles Tv Serial

கோவையில் பிறந்து இப்போது சென்னைவாசியாக மாறியிருக்கிறார் டிவி நடிகை ஆனந்தி. கனாக் காணும் கோலங்கள் தொடங்கி கார்த்திகைப் பெண்கள் வரை எல்லாமே சூப்பர் சீரியல்களாம் ஆனந்திக்கு. இது தவிர ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளார்.

சீரியல், நடனம், என புகழ் பெற்றாலும் படிப்பிலும் படு சுட்டியாம். எம்.எஸ்.சி ஐ.டி பட்டம் பெறப்போவதை மகிழ்ச்சியோடு தோழிகளுக்கு ட்வீட் செய்துள்ளார்.

படிப்பு, நடிப்பு என ஒரு பக்கம் இருந்தாலும் ஆனந்தியின் ஆர்வம் முழுக்க நடனம்தானாம். அதற்குக் காரணம், ஆனந்தியின் அம்மா கோவையில் நடத்திக்கிட்டிருக்கிற 'ரேணு ரித்யாலயா நடனப் பள்ளிதான்.

விஜய் டி.வியின் 'கனா காணும் காலங்கள்' ஆடிஷன்ல தேர்வாகி, இப்போ நடிக்கத் தொடங்கியதில் இருந்து இப்போது முழுக்க முழுக்க சென்னைவாசியா ஆகிவிட்டார். இப்போது நடிப்பு, நடனத்தோட நண்பர்கள் எடுக்குற குறும்படங்களுக்கு ஸ்கிரிப்ட் ஐடியா கூட கொடுக்கிறாராம் ஆனந்தி.

 

பணத்தையும், இந்து கடவுள் லட்சுமியையும் அவமதித்தார்: இயக்குனர் பாலா மீது போலீசில் புகார்

Hindu Makkal Katchi Complaints Against Director Bala

கும்பகோணம்: இயக்குனர் பாலா மீது இந்திய பணத்தை அவமதித்ததாக கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

கடந்த மாதம் 25ம் தேதி நாம் தமிழர் இயக்கம் சார்பில் இயக்குனர் பாலாவுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய பாலா, தான் பட வாய்ப்புக்காக ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மேடையில் கூறினார். அப்போது சீமானும், அவரும் ஒரே அறையில் வறுமை நிலையில் தங்கி இருந்ததாகவும், முதல் திரைப்பட பட வாய்ப்பு கிடைத்த போது, தங்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்த பணத்தை தாங்கள் தங்கியிருந்த அறைக்குள் கீழே கொட்டி இருவரும் ஏறி மிதித்து இந்த லட்சுமியைத் தானே நாம் தேடிக் கொண்டு இருந்தோம். நல்லா ஏறி மிதிடா என்று இருவரும் மிதித்தாக அவர் தெரிவித்தார்.

பாலாவுக்கு பணம் தேவைப்படும் போது எனக்கு 20 லட்சுமி அனுப்புடா என்றும், சீமானுக்கு பணம் தேவைப்படும்போது 10 லட்சுமி அனுப்புடா என்றும் பேசிக்கொள்வதாக பாலாவே கூறியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையல், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயலாளர் குருமூர்த்தி கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், இந்திய பணத்தையும், இந்து மக்களால் கடவுளாக வணங்கப்படும் லட்சுமியையும் பாலா அவமதித்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போன்று திருவிடைமருதூர் காவல் நிலையத்திலும் பாலா மீது இந்து மக்கள் கட்சி சார்பில் மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

சூது கவ்வும்- சினிமா விமர்சனம்

Rating:
3.5/5
எஸ்.ஷங்கர்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி
ஓளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: நளன் குமாரசாமி

தமிழ் சினிமா பார்க்காத கதைகளாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதிக்கும், அவரிடம் சொன்ன கதையை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கும் புதிய இயக்குநர் நளன் குமாரசாமிக்கும் முதல் வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்.

'காமெடி என்பது அடுத்தவரைக் கலாய்ப்பதுவேயன்றி வேறில்லை' என்றாகிவிட்ட தமிழ் சினிமாவில், கதை வேறு காமெடி வேறல்ல என்பதை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் நளன்.

soodhu kavvum review   

தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் 3 இளைஞர்களும் சேர்கிறார்கள். ஒருநாள் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்தும் அஸைன்மென்ட் வருகிறது. முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டு கடத்துகிறார்கள். அதில் ஒரு திருப்பமாக, கடத்தப்பட்ட அமைச்சர் மகனே இவர்களுடன் பங்காளியாகிறான். ஆனால் கடத்தல் வேன் விபத்துக்குள்ளாகிறது. கடத்தல் திட்டம் கவிழ்ந்துவிடுகிறது. இந்த கும்பலைப் பிடிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வருகிறார். அவர் துரத்த, இந்த கடத்தல் கும்பல் ஓட.. காமெடியும் விறுவிறுப்பும் கலந்து கட்டிய க்ளைமாக்ஸாக முடிகிறது.

விஜய் சேதுபதிக்கு இதில் 40 வயது 'இளைஞர்' வேடம் (நாற்பதுன்னா வயசாயிடுச்சின்னு அர்த்தமா என்ன...!). பிரமாதப்படுத்தியிருக்கிறார் மனிதர். ஹீரோயிசம் என்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஹீரோயிசம் பண்ண வைத்துள்ளார்கள். அதைப் புரிந்து நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது உடல் மொழி. நானும் நடிக்க வருகிறேன் என களமிறங்கும் பிரபலங்களின் வாரிசுகள் விஜய் சேதுபதியிடம் ட்யூஷன் கற்க வேண்டும்.

இவருக்கு ஜோடியாக வரும் சஞ்சிதா ஷெட்டியும் அருமையாக நடித்துள்ளார். அவருக்கு தரப்பட்டுள்ள வசனங்கள் மற்றும் அதை அவர் பேசும் லாவகம் மனதை அள்ளுகிறது.

விஜய் சேதுபதியின் கூட்டாளிகளாக வரும் சிம்ஹா, ரமேஷ், அசோக் ஆகியோரும் நடிப்பில் மனதைக் கவ்வுகிறார்கள். அமைச்சராக வரும் எம்எஸ் பாஸ்கரும், அவர் மகனாக வரும் கருணாவும் கூட சிறப்பாக நடித்துள்ளனர்.

அந்த சைக்கோ போலீஸ் ஆபீசர் யோக் ஜெப்பி... எதையும் கண்களால் பாவனையாகவே சொல்லும் அவரது பாணி புதிது. ஆனால் அவரை ஏன் கடைசியில் கிண்டலுக்குரிய கேரக்டராக்கினார்கள் என்பதுதான் புரியவில்லை.

படத்துக்கு இசை பெரிதாக தேவைப்படவில்லை. யாரும் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. சில காட்சிகளில் பாடல்கள் வேகத் தடையாய் எரிச்சல்படுத்துகின்றன. இந்த மாதிரி படங்கள் பண்ணும்போது பாடல்களே வேண்டாம் என கண்டிப்பான முடிவோடு இயக்குநர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

படத்தின் நிஜமான ஹீரோ இயக்குநர்தான். அவரது வசனங்களும் திரைக்கதையும் ஒரு சாதாரண கதையை வேறு தளத்துக்கு கொண்டு சென்றுள்ளன. குறிப்பாக விஜய் சேதுபதி தன் கடத்தலுக்காக வைத்திருக்கும் 5 கொள்கைகளும், வழக்கமாக கடத்தல் முடிந்ததும் பேசும் வசனமும் சுவாரஸ்யம்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பல இடங்களில் குறும்பட இயக்குநர்களுக்கே உரிய பக்குவமற்ற காட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை குறிப்பிட ஆரம்பித்தால், மருந்து குடிக்கும்போது குரங்கை நினைத்த கதையாகிவிடும்.

மனதில் இந்தப் படம் இப்படித்தான் இருக்கும் என்ற எந்தவித எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போய் ரசித்துவிட்டு வரலாம்!

 

மேலும் 3 வழக்குகளில் பவர் ஸ்டார் மீண்டும் கைது: குவியும் புகார்கள்

Power Star Srinivasan Arrested 3 More Cases

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் ஆந்திர தொழில் அதிபர் ரங்கநாதனுக்கு ரூ.20 கோடி கடன் வாங்கிக் கொடுக்க ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றார். ஆனால் அவர் கடன் வாங்கிக் கொடுக்கவும் இல்லை, கமிஷன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 26ம் தேதி பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

பவர் பாபா டிரேடிங் கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒரு தொகையை கமிஷனாக பெற்று வந்தார். இந்த நிறுவனம் குறித்து பல்வேறு மாநிலங்களில் விளம்பரமும் செய்துள்ளார். சில ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் மூலம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள் வந்தன. பவரிடம் ஏமாந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

பவர் மீது இதுவரை 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சண்டிகரைச் சேர்ந்த ஜெகதீஸ் சிங், கோவாவைச் சேர்ந்த ரதோர் மற்றும் பெசன்ட் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகார்களின்பேரில் போலீசார் பவரை மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்துள்ளனர்.

 

நடிகர் சங்கத்திலிருந்து குமரி முத்து நீக்கம்... விஷாலுக்கு மன்னிப்பு!

Actor Kumari Muthu Dismissed From Artist Association

நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை நடிகர் குமரி முத்து நீக்கப்பட்டார். நடிகர் சங்கத்தை விமர்சித்ததால் நிர்வாகிகளின் கண்டனத்துக்குள்ளான விஷால் மன்னிக்கப்பட்டார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் குமரி முத்து, நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினராக இருந்தார். நடிகர் சங்க கட்டிடம் வழக்கு தொடர்பாக சங்கத்தின் தலைவர் சரத்குமார் மீதும், பொதுச் செயலாளர் ராதாரவி மீதும் குமரிமுத்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தார்.

முறைகேடுகள் பற்றி நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளதால் இருவரும் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி நடிகர் சங்கத்துக்கு கடிதமும் அனுப்பினார்.

ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் முன்பே தீர்ப்பு வந்து விட்டது என்று எப்படி சொல்லலாம் என விளக்கம் கேட்டு குமரிமுத்துவுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.

குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை செயற்குழுவில் தாக்கல் செய்யும்படியும் வற்புறுத்தப்பட்டது. ஆனால் செயற்குழு கூட்டத்துக்கு வராமல் குமரிமுத்து அவகாசம் கேட்டார். அவர் கோரியபடி அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆதாரம் அளிக்கவில்லை.

இதையடுத்து நடிகர் சங்க செயற்குழு மீண்டும் இப்பிரச்சினை குறித்து விவாதித்தது. நடிகர் சங்கத்தையும், சங்க நிர்வாகிகளையும் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி அவமதித்த குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள்.

சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூவரும் நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஆனால் செயற்குழு உறுப்பினர்கள் அதனை ஏற்காததால் சங்கத்திலிருந்து குமரி முத்து நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஸ்வரூபம் பிரச்சினையில் நடிகர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்று விமர்சித்ததற்காக நடிகர் விஷால் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்தனர் செயற்குழு உறுப்பினர்கள். ஆனாலும் இது முதல் முறை என்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடல...? - நட்சத்திர ஓட்டலில் த்ரிஷா ரகளை!!

Trisha Fights With Shooting Crew

நட்சத்திர ஓட்டலில் தன் அம்மாவுக்கு தனி ரூம் போடாததால் ஆத்திரமடைந்த நடிகை த்ரிஷா, படப்பிடிப்புக்கு வர மறுத்து ரகளை செய்தார்.

'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்புக்காக சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் த்ரிஷா. உடன் அவர் அம்மாவும் சென்றிருந்தார்.

இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார்.

திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் ஒதுக்கி இருந்தனர். சுவிட்சர்லாந்தில் ஒரு அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ 20 ஆயிரத்துக்கும் மேல். மேலும் வழக்கமாக த்ரிஷாவுடன் ஒரே அறையில்தான் உமாவும் தங்குவார்.

எனவே ஒரு ரூம் மட்டும் போட்டார்களாம். ஆனால் இதை அறிந்த த்ரிஷா ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார். அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு சண்டை போட்டுள்ளார்.

படக்குழுவினர் ஒரு ரூம்தான் ஒதுக்க முடியும் என பிடிவாதம் பிடித்ததால் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்துவிட்டாராம் த்ரிஷா.

பின்னர் இயக்குநர் அகமது அங்கு விரைந்து த்ரிஷாவை சமாதானப்படுத்தியுள்ளார். த்ரிஷா விருப்பப்படி அம்மாவுக்கு தனி ரூம் ஒதுக்கிய பிறகே, த்ரிஷா படப்பிடிப்புக்கு வந்தாராம்.

 

விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Vijay S Thalaiva On June 22   

இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.

காரணம்... இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளில் வெளியிடும் திட்டம்தானாம்.

பொதுவாக விஜய் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்றாலும், அது பிரமாண்டமாக இருக்காது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பிக்கப் ஆகும். அவரது சமீபத்திய படங்களே இதற்கு சாட்சி.

நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்த ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், விஜய் பிறந்த நாளில் படத்தை வெளியிட்டால் பெரிய வரவேற்பும், பிரமாண்ட ஓபனிங்கும் கிடைக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரி படப்பிடிப்பை வேகப்படுத்தி முடித்துள்ளார்களாம்.

மும்பை, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் இதன் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது ‘டப்பிங்' மற்றும் ரி-ரீக்கார்டிங் பணிகளும் முக்கால்வாசி முடிந்துள்ளதால், ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றனர்.

வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அதற்கு ஒரு நாள் முன்பு வெள்ளிக்கிழமை இந்தப் படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாம்.

முதல் நாள் விஜய் பட ரிலீஸ், அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் என டபுள் ட்ரீட் ரசிகர்களுக்கு!

 

இரண்டே நாளில் 1.5 மில்லியன் ஹிட்ஸ் - அஜீத்தின் பெயரில்லா பட சாதனை!

Ajith S Untitled Movie Become Super Hit

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரில்லா படத்தின் முதல் ட்ரைலருக்கு இணையத்தில் ஏக வரவேற்பு.

இந்தப் படத்தின் ட்ரைலரை யு ட்யூபில் இரண்டே நாட்களில் 1.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இது ஒரு சாதனை எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் மே மாதம் திரைக்கு வரும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் ஆடியோ கூட இன்னும் ரிலீசாகவில்லை. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஜீத் தனது இன்னொரு படத்தில் நடிக்கப் போய்விட்டார் என்றார்கள்.

ஆனால் அதில் ஒரு சில தினங்கள் மட்டும் நடித்துவிட்டு, மீண்டும் விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க வந்துவிட்டார் அஜீத்.

லடாக், லெஹ் என பல இடங்களில் ஷூட்டிங் நடத்தப் போகிறார்களாம். எனவே இன்னும் ஒரு மாதமாவது ஆகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் ஒரு பாடலை மட்டும் வெளியிடலாமா என யோசித்து வருகிறாராம் விஷ்ணு வர்தன்.

 

சிம்புவுக்காக சென்னை வந்த பிரபல 'ராப்' பாடகர் ஏகான்!

பிரபல ராப் பாடகர் ஏகான் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். காரணம்... நடிகர் சிம்புவின் லவ் ஆந்தம் பாடலைப் பாடுவதற்காக.

தனுஷின் காதல் தோல்விப் பாடலான கொலவெறி... ஹிட்டானதால், நடிகர் சிம்புவும் தன் பங்குக்கு ஒரு காதல் பாடலை உருவாக்குவதாகக் களமிறங்கினார்.

akon comes chennai simbu
அந்தப் பாடலுக்கு முன்னோட்டம் கூட வெளியிட்டுவிட்டார். இப்போது பாடலை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்ல, உலகளவில் புகழ்பெற்ற ஒரு பாடகரை அழைத்து வந்துள்ளார். அவர்தான் ஏகான். இன்றைய தேதிக்கு முன்னிலை ராப் பாடகர். கிராமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றவர் ஏகான்.

கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சென்னை வந்த ஏகானை விமான நிலையம் சென்று வரவேற்று அழைத்து வந்தார் சிம்பு.

அடுத்த நாளே ஸ்டுடியோவில் சிம்புவின் லவ் ஆந்தம் பாடலை பாடி முடித்துக் கொடுத்தாராம் ஏகான்.