அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், `நண்பன்' என்ற பெயரில் `ரீமேக்' ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். விஜய்-க்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய பெஸ்ட் இயக்குனர் ஷங்கர் தான் என்று இளைய தளபதி விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும்போது 'இதுவரை என்னை இயக்கிய இயக்குனர்களில் ஷங்கர் தான் சிறந்தவர், அவருடைய படத்தில் நடிக்க பல நாட்கள் காத்துக் கிடந்தேன், தற்போது இந்த வாய்ப்பை சந்தோஷமாக முடித்துள்ளேன், என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இது இருக்கும். ஷங்கர் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட, ஒவ்வொரு காட்சிக்கு முன்னாடி அவர் நடித்துகாட்டுவார், அவரின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.' எனக் கூறினார்.
ஷூட்டிங் பிசியால் அன்னாவை பார்க்க முடியல : விஜய்!
ஊழல் எதிரான லோக்பால் மாசோதாவை தாக்கல் செய்யக் கோரி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக டெல்லி நேரில் சென்று அன்னாவிற்கு தன் ஆதரவை தெரிவித்தார் இளைய தளபதி விஜய். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அன்னா ஹசாரேவை விஜய் சநத்திக்கவில்லை. அர்ஜூன் மட்டுமே அன்னாவை நேரில் சந்தித்தார். இந்நிலையில் 'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் தான் பிசியாக இருந்ததால், என்னால் அன்னாவை பார்க்க முடியவில்லை என்று விஜய் கூறியுள்ளார். அன்றைய தினம் தான் மும்பையில் இருந்ததாகவும், அதனால் தன் அப்பா சந்திரசேகரை அனுப்பி வைத்து தன் ஆதரவை தெரிவித்ததாக விஜய் கூறினார்.
மே தினம் அன்று முகமூடி ரிலீஸ்!
தன்னுடைய கனவுப் படமான 'முகமூடி' ஹாலிவுட் படம் 'ஸ்பைடர் மேனை' மிஞ்சும் என மிஷ்கின் கூறியுள்ளார். படத்தில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். நரேன் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு 'கே' இசையமைக்க, யு டிவி நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், தன்னுடைய கனவு படமான இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய படமாக கருதப்படும் என நம்புவதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். இந்த கதை உருவாக்க நிறைய ஆண்டு உழைத்திருப்பதாகவும், குழந்தைகளுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என மிஷ்கின் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி முகமூடி படம் ஆங்கலி படம் போல பார்ட் 2, பார்ட் 3 என எதிர்காலத்தில் வெளியாகும் எனக் கூறிய மிஷ்கின் முகமூடி பார்ட் 2-ன் கதையை தயார் செய்து விட்டதாக மிஷ்கின் கூறினார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படமும் இதுதான் என்பதால் 'முகமூடி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகும் இந்த படம், மே தினம் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அசின் நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ரஜினி இன்னும் படத்தில் நடிக்கும் அளவிற்கு உடல் தகுதி அடையவில்லை. இதனையடுத்து ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.