அவன் இவன்: சில வசனங்களை நீக்குமாறு பாலாவிடம் கேட்டுக்கொண்ட போலீஸ்!


பாலாவின் அவன் இவன் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் இடம்பெற்றுள்ள ஆட்சேபணைக்குரிய சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார் கோவை மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரி.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமூக மக்களின் இஷ்டதெய்வமான சொரிமுத்து அய்யனாரை கேலி செய்வதாகவும் சில காட்சிகளில் ஜமீனைக் கேலி செய்வதாகவும் கூறி சில அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றும் இதுகுறித்து மாநகர கமிஷனர் அம்ரேஷ் பூஜாரியை சந்தித்து, பாலா, விஷால், ஆர்யா மீது வழக்கு பதிவு செய்யவுமாறு புகார் கொடுத்தனர்.

இதையடுத்து இரு போலீசாரை நேற்று இரவு தியேட்டருக்கு அனுப்பி அவன்-இவன் படத்தை பார்க்கச் செய்த கமிஷனர், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கும்படி படக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை கமிஷனரும் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார். போலீசாரின் வேண்டுகோளுக்கு பாலாவின் பதில் என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.
 

தனுஷ் நடிக்கும் படத்துக்கு வேங்கை பெயரை பயன்படுத்த தடை!!


தனுஷ் நடித்துள்ள புதிய படத்துக்கு வேங்கை என்ற தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நடிகர் தனுஷ், தமன்னா ஜோடியாக நடித்த வேங்கை என்ற பெயரில் புதுப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். வேங்கை பெயரில் ஏற்கனவே படம் எடுத்து வருவதாகவும் தனுஷ் படத்தில் அப்பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கலைச் செல்வம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் சார்பில் வக்கீல் ராஜசேகரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராம சுப்பிரமணியம் தனுஷ் படத்தில் வேங்கை பெயரை பயன்படுத்த ஒரு வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

இந்த விவகாரம், வேங்கை படத்தை துவங்கும் போதே பிரச்சினையாக வெடித்தது. அப்போது, 'போட்டி வேங்கை'யை பணம் கொடுத்து சமாளித்துவிட்டதாக ஹரி தரப்பில் கூறினர். ஆனால் இப்போது தனுஷ் படம் வெளியாகும் நேரம் என்பதால் மீண்டும் தலைப்பு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.
 

அடுத்து விஜய்யை இயக்கப் போவது சீமானா... முருகதாசா?


இதோ அதோ என ஒராண்டுக்குமேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.

காவலன் முடித்த பிறகு..., வேலாயுதம் முடிந்த பிறகு...., ஷங்கர் படம் முடிந்த பிறகு... என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போதுதான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு விதைபோட்டவர் ஏ ஆர் முருகதாஸ்.

இவர் ஒரு கதையைச் சொல்லியுள்ளார் விஜய்க்கு. அந்தக் கதையைவிட, அதைப் படமாக்க அவர் போட்ட ரூ 65 கோடி பட்ஜெட்டும், அதையும் தர தயாராக வந்த பாலிவுட் தயாரிப்பாளரும்தான் விஜய் மனசைக் கெடுத்துவிட்டார்களாம்.

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சீமான் புராஜக்டை ஆரம்பிக்க முடியுமா என யோசிக்கிறார் விஜய் என்கிறார்கள்.

ஆனால் முருகதாஸ் கதையைவிட, மிக உணர்ச்சிப்பூர்வமான, விறுவிறு அதிரடி ஆக்ஷன் கதை சீமானுடையது. விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.

பெரிய பட்ஜெட்டை நம்பி அகலக் கால் வைப்பதைவிட இப்போது சீமான் படத்தை முடியுங்கள், அதுதான் சரியாக இருக்கும் என்று நலம் விரும்பிகள் ஒருபக்கம் விஜய்க்கு கூறி வருகிறார்களாம்.

அதனால்தான் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய், அடுத்த படம் சீமானுக்கா முருகதாசுக்கா என்று கேட்ட போது, "பார்க்கலாம்" என்று மையமாக சொல்லி வைத்தார்!
 

நான் பாலிவுட் நடிகை : காஜல் திடீர் பல்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நான் பாலிவுட் நடிகை : காஜல் திடீர் பல்டி!

6/24/2011 2:27:54 PM

பாரதிராஜா மும்பை சென்றபோது ஒரு பார்ட்டியில் காஜல் அகர்வாலை சந்தித்தார். உடனே தான் இயக்கிய 'பொம்மலாட்டம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதே படத்தை இந்தியிலும் ரீமேக் செய்து அதிலும் காஜலையே நடிக்க வைத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார் காஜல். தெலுங்கில் டாப் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தார். இந்நிலையில் 'சிங்கம்’ படம் இந்தியில் ரீமேக் ஆனது. இதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆனார். தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ‘தமிழ் படம்தான் என்னை சினிமாவுக்கு அடையாளம் காட்டியது, தெலுங்கு படவுலகம் என்னை கைதூக்கி விட்டது’ என உணர்ச்சிவசப்பட்டார். இப்போது பாலிவுட் படத்தில் நடிப்பதால் அதற்கு ஏற்ப தனது பேச்சை மாற்றிக்கொண்டிருக்கிறார் காஜல். '’மும்பையில்தான் நான் பிறந்தேன். இந்தியில் புகழ் பெற வேண்டும் என்பதுதான் ஆசை. அந்த ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. தொடர்ந்து பாலிவுட் படங்கள் மீது கவனம் செலுத்துவேன். நான் பாலிவுட் நடிகைதான்’ என்று பேட்டி அளிக்க தொடங்கி இருக்கிறார்.

 

சினிமாவை விட்டு விலக நினைத்த இலியானா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சினிமாவை விட்டு விலக நினைத்த இலியானா!

6/24/2011 2:24:46 PM

இலியானா கூறியது: ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்Õ படத்தில் நடிப்பது புது அனுபவம். ஒவ்வொரு காட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஷங்கர். ஒரு காட்சியை படமாக்கினால் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைக்கூட துல்லியமாக கவனிக்கிறார். செட்டுக்கு வந்துவிட்டால் வேலையில் மூழ்கி விடுவார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதில் இதுபோன்ற அனுபவம் வாய்த்ததில்லை. நடிகையானதிலிருந்தே எனது அம்மா எனக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் இருந்து வருகிறார். சிறு வயதில் வெற்றி, தோல்வி மனதை பாதிக்கும். படம் வெற்றி பெற்றால் பெருமையாக இருக்கும். தோல்வி அடைந்துவிட்டால் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். அதுபோன்ற நேரங்களில் சினிமாவை விட்டு விலகி விட நினைப்பேன். அப்போதெல்லாம் எனக்கு அம்மாதான் ஆறுதல் கூறுவார். இந்தியில் 'பர்பிÕ படத்தில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ராவுடன் நடிக்கிறேன்.

 

சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!


சென்னை: 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது ரசிகர்களைச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த முறை நிர்வாகிகளை மட்டும் சந்திக்காமல், ரசிகர்களையும் சந்திக்க அவர் விரும்புகிறாராம். எனவே அவர்கள் வந்து போக வசதியாக, சென்னையில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றைப் பார்த்து வருகின்றனர்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, பூரண நலம் பெற்று இப்போது அங்கேயே அபார்ட்மெண்ட் ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார்.

இன்னும் 15 நாட்களில் சென்னை வருவார் என்று ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை திரும்பியதும் தனது பழைய போயஸ் தோட்ட வீட்டில் குடியேறாமல், புதி வீட்டில் குடியேறுவார் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் போயஸ் தோட்ட வீடு இப்போது வாஸ்து சாஸ்திரப்படி மாற்றிக் கட்டப்படுகிறது.

மேலும் ரஜினி இனி இங்கு தங்கினால், அவரைப் பார்க்க ஏராளமான விவிஐபிகள் மற்றும் ரசிகர்கள் வர ஆரம்பிப்பார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தவிர்க்க தற்காலிகமாக ஒரு புதுவீட்டுக்குப் போகிறாராம் ரஜினி.

கிருமி தொற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாத நல்ல காற்றோட்டம் உள்ள தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றில் அவர் குடியேறுகிறார். அத்தகைய வசதிகளுடன் உள்ள வீட்டை ரஜினியின் நண்பர்கள் தேடி வருகின்றனர்.

ரஜினி சென்னை திரும்பியதும் இந்த வீட்டில்தான் ரசிகர்களை தொடர்ந்து சந்திக்க முடிவு செய்துள்ளாராம். முன்புபோல விருப்பப்படும் ரசிகர்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தொலைவில் உள்ள மாவட்ட ரசிகர்களை தானே நேரில் சென்று பார்க்கவும் முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

சென்னை திரும்பிய பின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளார் ரஜினி.

 

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சென்னையில் கைது


ஹைதராபாத்: திரைப்பட ஃபைனான்சியர் ஜெயந்த் ரெட்டியை மிரட்டியதற்காக தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கனமலா ரமேஷ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த ரமேஷை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் இன்று பிற்பகலில் ஹைதராபாத் கொண்டுசெல்லப்பட்டார்.

முன்னதாக தனது 7.2 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டதற்காக ரமேஷும், பானு கிரண் என்பவரும் தன்னைக் கொலை செய்துவிடுவதாக 2008-ம் ஆண்டு மிரட்டல் விடுத்தனர் என்று ஜெயந்த் ரெட்டி இந்த ஆண்டு பிப்ரவரியில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

மதலச்செருவு சூரி என்ற தாதாவின் கொலைவழக்கில் பானு கிரண் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர்.

கொமரம் புலி படத்தின் விடியோ உரிமை தொடர்பாக ஷாலிமர் விடியோவின் உரிமையாளரை மோசடி செய்ததாகவும் ரமேஷ் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் சூரி படுகொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என போலீசார் கருதுகின்றனர்.

 

சென்னை திரும்பினார் லதா ரஜினி!


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரைப் பார்த்துக் கொள்ள உடன் தங்கியிருந்த அவர் மனைவி லதா ரஜினி மட்டும் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் தங்கியிருந்தனர். ரஜினி தனது வழக்கமான உடல்நிலைக்குத் திரும்பிவிட்டார். படம் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, எளிய உடற்பயிற்சிகள், தியானம் என ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட வீடு புதுப்பிப்பு வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை கவனிக்கவும், வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் லதா ரஜினி நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை திரும்பினார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் ரஜினியின் உடல்நலம் குறித்து அவரிடம் அக்கறையாக விசாரித்தனர்.

லதா அவர்களுக்கு பதில் அளிக்கையில், “ரஜினி நலமுடன் உள்ளார். சிங்கப்பூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் விரைவில் சென்னை திரும்புவார். உங்கள் அன்புக்கு நன்றி,” என்றார்.

 

பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு பாராட்டு விழா!


தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற இயக்குநர் பாலச்சந்தருக்கு பிரம்ம கான சபை சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இதில் சினிமா, நாடக, எழுத்துலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்று அவரைப் பாராட்டினர்.

விழாவில் கலந்து கொண்ட நாடகக் கலைஞர் கிரேஸி மோகன், "பாலச்சந்தர் படைத்த பாத்திரங்கள் காலத்தை வென்றவை. அவரது பாமா விஜயத்துக்கு இணையான ஒரு நகைச்சுவை திரைக்கதையை யாராலும் எழுத முடியாது. ஜெயகாந்தனால் ஞானபீட விருதுக்குப் பெருமை கிடைத்தது. அதுபோல, கேபியால் பால்கே விருதுக்கே பெருமை," என்றார்.

நடிகர் இளவரசு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, த்ரிசக்தி சுந்தரராமன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ நடராஜன் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

நிறைவாக கே பாலச்சந்தர் பேசுகையில், "நடிப்பில் வைரங்களாய் ஜொலித்த மேதைகளோடு பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியம். இன்றைக்கு எனக்கு திரையுலகில் பெரிதாக எந்த ரோலும் இல்லை. என்றாலும் எனக்கு இத்தனை பேர் சேர்ந்து பாராட்டு விழா எடுப்பதை என்னவென்று சொல்வது... இது என் பாக்கியம்," என்றார்.
 

வாஸ்துப்படி மாற்றப்படுகிறது ரஜினியின் போயஸ் கார்டன் வீடு!


சென்னை: போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து ரஜினி வரும்போது புதுமனை புகுவிழா நடத்தி குடியேற திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மருத்துவமனை, சிகிச்சை என அவர் பெரும் சோதனைக்கு உள்ளானார்.

அவருக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இப்போது ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த வாரம் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இப்போது அவர், டாக்டர்கள் அறிவுரையின்படி, குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். டாக்டர்கள் தினமும் அங்கு சென்று அவரது உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் இன்னும் சில வாரங்கள் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பார். அவருடைய உடல்நலனை கருதி, அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரையின்படி பார்வையாளர்கள் முக்கிய பிரமுகர்களாக இருந்தால்கூட, ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

சமீபத்தில் அவரை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் கன்னட நடிகர் அம்பரீஷும் சந்தித்தாக செய்திகள் வந்தன. ஆனால் இதை அவரது வீட்டினர் உறுதி செய்யவில்லை.

இதற்கிடையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய வீடு, ஜோதிடர்களின் ஆலோசனைப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் மாற்றி அமைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள சில பகுதிகளை இடித்துவிட்டு, வாஸ்துப்படி மாற்றியமைக்கிறார்களாம்.

ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பும்போது, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் 'புதுமனை புகுவிழா' நடத்தி குடியேற திட்டமிட்டிருக்கிறார்கள்.

ரஜினியின் வீட்டுக்குப் பெயர் பிருந்தாவனம். அதன் முகப்பில் வாய்மையே வெல்லும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை 2001-ம் ஆண்டு ரஜினி புதுப்பித்துக் கட்டினார்.
 

தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்து


கர்ப்பம் தரித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நடிகர் சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அபிஷேக்கை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சல்மான் கானை காதலித்து வந்தார். பின்னர் விவேக் ஓபராயுடனும் பழகி வந்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தற்போது கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து அவருக்கு சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அபிஷேக் பச்சனுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அபிஷேக், ஐஸ்வர்யாவை நான் வாழ்த்துகிறேன். மீண்டும் அமிதாப் பச்சன் தாத்தாவாகப் போவது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

1999ம் ஆண்டு சல்மான்கானுடன் பழக ஆரம்பித்தார் ஐஸ்வர்யா. பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் உருவானது. சல்மான் கான் முரட்டுத்தனமாகவும், மோசமாகவும் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 2002ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
 

நான் அப்படிச் சொல்லவே இல்லை! - ஒரு நடிகையின் வழக்கமான மறுப்பு


ஆர்வக் கோளாறில் அல்லது தங்களின் இயல்பான குணாதிசயம் காரணமாக திமிராகப் பேசிவிடுவதும், நிலைமை விபரீதமான பிறகு, 'நானா... எப்போ அப்படிச் சொன்னேன்' என்றை பிளேட்டைத் திருப்பிப் போடுவதும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நடிகைகளுக்கும் சாலப் பொருந்தும்!

சில தினங்களுக்கு முன் மும்பையில் ஒரு படவிழாவில், என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்லி கேவலப்படுத்த வேண்டாம். நான் பாலிவுட் நடிகை. அப்படிச் சொல்வதைத்தான் விரும்புகிறேன் என்று கூறியவர் காஜல் அகர்வால்.

இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா புள்ளிகளின் கடும் கண்டனத்துக்குள்ளானார். இனி அவரை வைத்து சினிமா எடுக்க வேண்டாம் என முன்னணி இயக்குநர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை கைமீறியுள்ளது. காஜல் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சக நடிகைகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், படப்பிடிப்புக்காக ஜெர்மனி போய் திரும்பி வந்துள்ள காஜலிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த காஜல், "இதெல்லாம் சுத்தப் பொய். நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் ஒரு மும்பைப் பெண். அதுதான் எனக்கு பெருமை. நான் ஒருபோதும் தென்னிந்திய நடிகையாகிவிட முடியாது, என்றுதான் சொல்லியிருந்தேன். அதை திரித்து எழுதிவிட்டார்கள்.

தென்னிந்திய படங்கள் மீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. கடந்த சில தினங்களாக நான் வெளிநாட்டில் இருந்தேன். அதற்குள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பரப்பி எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கி வைத்துள்ளனர்," என்றார்.