இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதி!

Srilanka Also Green Signal Vishwaro

கொழும்பு: இலங்கையில் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகம், மலேசியா அரசுகள் தடை விதித்திருந்தன. இலங்கையிலும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் திரையிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலும் தற்போது தடை நீக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க கூறியிருக்கிறார்.

 

8ம் வகுப்பு படிக்கையில் ஆசிரியையை காதலித்தேன், ஆனால் அவருக்கு...: விக்ரம்

I Loved Teacher 8th Std Vikram 8

வேலூர்: உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாக விக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் தான் 8ம் வகுப்பு படிக்கையில் ஆசிரியை ஒருவரை காதலித்ததாக அவர் கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த ரிவேரா 2010 என்னும் சர்வதேச கலாச்சார மற்றும் விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். போட்டியில் வென்ற மாணவ-மாணிவயருக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசுகையில்,

விஜடி நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டது. தற்போது எனது மனைவியின் வற்புறுத்தலின்பேரில் தான் வந்தேன். வந்த பிறகு தான் இதை இத்தனை ஆண்டுகளாக மிஸ் பண்ணிவிட்டோமே என்று தோன்றியது. இங்கு படிக்கும் மாணவ-மாணவியர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இங்கு படிப்புக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது பெருமையாக உள்ளது என்றார்.

அதன் பிறகு அவர் மாணவ-மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: உங்கள் கல்லூரி வாழ்க்கை பற்றி...

பதில்: சுத்த போர். ஆண்கள் பள்ளியில் படித்தேன். கல்லூரியில் லயோலா கல்லூரியில் சேர்த்துவிட்டனர். அங்கும் பெண்கள் இல்லை.

கேள்வி: உங்களுக்கு பெண் தோழிகள் இருக்கிறார்களா?

பதில்: அதைக் கூறினால் பிரச்சனையாகிவிடும். எனது உறவினர் ஒருவர் இங்கு படிக்கிறார். நான் ஏதாவது கூறினால் அதை அவர் என் மனைவியிடம் தெரிவித்துவிடுவார். நான் 8ம் வகுப்பு படிக்கையில் ஆசிரியை ஒருவரை காதலித்தேன். ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டது.

கேள்வி: உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்?

பதில்: பெயரைக் குறிப்பிட்டு கூறினால் பிரச்சனை ஏற்படும் கேள்வி கேட்ட மாணவரைப் பார்த்து உங்களுக்கு எந்த நடிகையை பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர் நமீதா என்றார். நமீதாவை எனக்கும் பிடிக்கும். அவர் என்னை கோஹினூர் வைரம் என்று கூறியுள்ளார் என்றார் விக்ரம்.

கேள்வி: எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க உங்களுக்கு ஆசை?

பதில்: டபுள் ஆக்ஷன் ஹீரோவாகவும், என் மகனுடன் நடிக்க ஆசையாக உள்ளது. மேலும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, கார்த்தியுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. என்னது தப்பிச்சிட்டேனா? கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்றார்.

 

கடல் நஷ்டத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: கைகழுவினார் மணிரத்தினம்

After Distributors Protest Madras Talkies

சென்னை: கடல் பட நஷ்டத்திற்கும், மெட்ராஸ் டாக்கீஸுக்கும் தொடர்பில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில்,அவரது மெட்ரீஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான கடல் படம் படுதோல்வி அடைந்துள்ளது. பட ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே ஓவர் பில்ட் அப் கொடுக்கவே படம் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கையில் வாங்கிய வினியோகஸ்தர்கள் தற்போது நஷ்டப்பட்டு நிற்கின்றனர்.

இதையடுத்து அவர்கள் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள மணிரத்னத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அலுவலகத்திற்குள் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர்.

இதையடுத்து போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மெட்ராஸ் டாக்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது,

"கடல்" திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012ம் ஆண்டிலேயே ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது.

இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரபல நடிகர் காதர் கான் மரணம் என ட்விட்டரில் பரவிய வதந்தியால் பரபரப்பு

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர், காமெடியன், வசனகர்த்தா மற்றும் இயக்குனர் என பலமுகம் கொண்ட காதர் கான் இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி பரவியது.

ட்விட்டரில் யாரோ ஒருவர், பழம்பெரும் பாலிவுட் நடிகர், காமெடியன், வசனகர்த்தா மற்றும் இயக்குனர் காதர் கான் இன்று மரணம் அடைந்துவிட்டார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று நேற்று தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த பலரும் காதர் கானின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ட்விட்டரில் தெரிவித்தனர்.

மேலும் ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் காதர் கானுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் காதர் கான் நலமாக உள்ளார் என்று பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் சிஇஓ தனுஜ் கார்க் தெரிவித்தார்.

இதையடுத்து தான் யாரோ வேண்டும் என்றே வததந்தியைப் பரப்பியது தெரிய வந்தது.

77 வயதாகும் காதர் கான் கூலி, ஷராபி போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் ஆன்கேன் மற்றும் ஹீரோ நம்பர் 1 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் இறந்துவிட்டதாக விஷமிகள் ட்விட்டரில் வதந்தியைக் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருவது இது முதல் முறை அன்று.

 

மீண்டும் கதை கேட்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்!!

Aishwarya Rai Prepares Her Second Innings

மும்பை: குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு நடிக்காமலிருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் நடிக்க முடிவு செய்து கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.

குழந்தை பிறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. மகள் ஆரத்யாவை கவனிப்பதில் தன் நேரத்தைச் செலவிட்டு வந்தார் ஐஸ்வர்யா.

இப்போது மீண்டும் நடிக்கும் ஆர்வத்துடன் கதை கேட்கத் துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா. அவருக்கு கதை சொல்ல நான் நீ என நிறைய இயக்குநர்கள் வருகிறார்களாம்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், "குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும். கவனம் சிதறக்கூடாது என்பதற்காகத்தான் நான் நடிக்காமல் இருந்தேன்.

குழந்தைக்கு ஒரு வயது முடிந்துவிட்டது. வீட்டில் உள்ளவர்களால் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

சில இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பது உண்மைதான். ஆனாலும் உடனடியாக நடிக்க முடியாது. இப்போது கதை கேட்டாலும் சில மாதங்கள் கழித்துதான் நடிப்பேன்.

என்னால் வழக்கமான ஹீரோயின் வேடங்களில் நடிக்க முடியும். ஒன்றரை வருடங்கள்தானே ஆகிறது," என்றார்.

சமீபத்தில் பள்ளிக்கூட நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேடையில் தனது கஜ்ராரே பாடலுக்கு ஆடினார் ஐஸ்வர்யா ராய். குழந்தை பெற்ற பிறகு அவர் தோன்றிய முதல் மேடை நிகழ்ச்சி இதுதான்.