சிங்கம் 3-ல் மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஸ்ருதி!

ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

கமல் ஹாஸன் மகள் ஸ்ருதி தமிழில் நாயகியாக அறிமுகமான படம் ஏழாம் அறிவு. ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.

இப்போது அஜீத், விஜய் என்று முன்னணி நடிகர்களின் நாயகியாகிவிட்டார் ஸ்ருதி.

தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நாயகியாகத் திகழும் இவர், மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.

Shruthi in Singam 3

ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தின் நாயகிகளில் ஒருவராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கம் மற்றும் சிங்கம் 2-ல் நாயகியாக நடித்த அனுஷ்காவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சூர்யா இப்போது விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் இம்மாத இறுதியில் சிங்கம் 3-ல் நடிக்கிறார்.

 

தனி ஒருவன் என்னைக் கட்டிப் போட்டது... இயக்குநர் ராஜாவைப் பாராட்டிய கவுதம் மேனன்

சென்னை: தனி ஒருவன் படம் என்னை மிகவும் கவர்ந்தது குறிப்பாக படம் பார்த்த ரசிகர்களை இருக்கையோடு கட்டிப் போட்டு விட்டீர்கள் என்று படத்தின் இயக்குநர் ராஜாவை மற்றொரு இயக்குனரான கவுதம் மேனன் பாராட்டி இருக்கிறார்.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.

Director Raja Has Arrived - Says Gautham Menon

ஜெயம் ரவியும் அவரது அண்ணன் ராஜாவும் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பின் ஒரு மாபெரும் ஹிட்டைக் கொடுத்திருக்கின்றனர்.

படத்திற்காக இயக்குநர் ராஜா தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் தனி ஒருவன் நன்றாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


மேலும் "தனி ஒருவன் படத்திற்காக வாழ்த்துகள் இயக்குநர் ராஜா, பார்வையாளர்களை நிர்பந்தப்படுத்தாமல் கதையுடன் ஒன்றச் செய்து கட்டிப்போட்டுவிட்டீர்கள்.

உங்கள் பாதையில் நீங்கள் ஒரு படம் கொடுத்திருப்பது சிறப்பு.இதற்காக நான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம் இது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ராஜாவை மனந்திறந்து பாராட்டியிருக்கிறார் கவுதம் மேனன்.

தனி ஒருவன் வெளியாகி 2 வாரங்கள் தாண்டியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் படம் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவன் நினைத்து விட்டால்...

 

பாரதிராஜாவுக்கு ஒரு ரசிகனின் பகிரங்க கடிதம்!

எங்கள் இனிய தமிழ் இயக்குநர் பாரதிராஜாவுக்கு வணக்கம்.

கடந்த வாரம் ஒரு வார இதழில் தங்கள் பேட்டியில் 'இசையமைப்பளர் தேவேந்திரன் இளையராஜாவை விட இசை அதிகமாக தெரிந்தவன். அவருக்கு வாய்ப்பு கொடுத்த பிறகுதான் எனக்கும் இளையராஜாவுக்கும் பிரிவு வந்தது,' என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இதை நீங்கள் சொல்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. காரணம். தேவேந்திரன் நல்ல இசைக் கலைஞர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே. இப்போது நீங்கள் இதைச் சொல்வதற்கு காரணம் உங்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு காலத்தில் நட்பிற்கு உதாரணமாக சொல்லப்பட்ட இளையராஜா - பாரதிராஜா என்கிற தோழமை சீர்குலைய நீங்கள்..... ஆம், நீங்கள் மட்டுமே காரணமாக அமைந்து விட்டீர்கள்.

An open letter to Bharathiraja

உணர்ச்சி வசப்பட்டாலும் உண்மையைப் பேசும் நீங்கள் இப்போது மட்டும் சில உண்மையை மறந்து விட்டீர்கள். அதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொம்மலாட்டம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல், இளையராஜா இருவரும் கலந்து கொண்டனர். அதில் இருவரும் பேசியது நினைவிருக்கிறதா?

கமல் பேசும்போது, "இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா. ஆனால் இந்த விழாவிற்கு இளையராஜா வந்திருக்கிறார். தான் இசையமைத்த பட விழாக்களுக்கே போகாதவர் இளையராஜா. அப்படியிருந்தும் இங்கு வந்திருக்கிறார் என்றால் பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இருக்கும் நட்பு என்னை வியக்க வைக்கிறது," என்றார்.

இளையராஜா பேசும்போது, "என்னைப் பற்றிய வாழ்க்கை வரலாறு எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்து விட்டுப்பார்த்தால் எல்லா இடத்திலும் பாரதிதான் இருக்கிறார்," என்று நெகிழ்ந்து குறிப்பிட்டு இருவரின் நட்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நீங்கள் பொல பொலவென கண்ணீர் விட்டு அழுதீர்களே... நினைவிருக்கிறதா? அது நீங்கள் சொன்ன அந்த பிரிவுக்கு பிறகு நடந்த சம்பவம்தானே. அப்போ நீங்கள் வடித்தது நிஜ கண்ணீரா? நீலிக் கண்ணீரா?

அன்னக்கொடி படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. அந்த விழாவிற்கு இளையராஜாவை நீங்கள் அழைத்தீர்கள்... சில காரணங்களால் அவரால் வர முடியவில்லை. ஆனாலும் நீங்கள் அவரிடம் கோபித்துக்கொண்டு, "நான் ரஜினி, கமல் இருவரையும் வைத்து இந்த விழாவை நடத்திக்கட்டுகிறேன் பார்..." என்று சூளுரைத்துப் போனீர்கள். ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து விடவே, சில நாட்கள் கழித்து திரும்பி வந்து, "விழாவில் நீ இல்லாவிட்டால் பெரிய அளவில் பேசப்படாது" என்று மீண்டும் இளையராஜாவை அழைத்தீர்கள். உங்கள் நிலைக்காக விழாவுக்கு வந்தார். ஆனால் அப்படி வந்த அவருக்கு நீங்கள் கொடுத்த மரியாதை என்ன என்பது உலகத்திற்கே தெரிந்த விஷயம். உங்களுக்குதான் தெரிய வாய்ப்பில்லை!

அன்று பார்த்திபன் மட்டும் இல்லாமலிருந்தால் காலகாலமாக நீங்கள் சேர்த்து வைத்திருந்த புகழுக்கு களங்கம் வந்திருக்கும். அந்த அளவுக்கு 'நிலை கொள்ளாமல்' இருந்து இளையராஜாவை அவமதித்தீர்கள். ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். காரணம் உங்கள் மீது அவர் வைத்திருந்த பாசம்.

ஒரு சம்பவம் தெரியுமா... ஜெயகாந்தன் மறைந்த போது இளையராஜா சார்பில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதை இளையராஜாவிடம் காட்டியபோது ‘பாரதிராஜா பேரை விட்டுடீங்களே. அதை சேர்த்துட்டு கொடுங்க" என்று சொல்லியிருக்கிறார். இப்படி எந்த இடத்திலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் தார்மீக ஆதரவு கொடுத்து வருபவர் இளையராஜா. ஆனால் நீங்கள் மட்டும்தான் எல்லா மேடைகளிலும் நட்பு என்கிற பெயரில் இளையராஜாவை தரம் தாழ்த்திப் பேசி வருகிறீர்கள்.

தேவேந்திரன் மிகப்பெரிய இசைமேதை என்றால் அவரை உங்களின் அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தி அவருக்கு பெரிய வாழ்வு கொடுத்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை? வேதம் புதிது படத்திற்குப் பிறகு நாடோடி தென்றல் படத்திற்கு இளையராஜாவிடமே வந்துவிட்டீர்களே!

‘என் உயிர் தோழன்' என்று பெயர் வைத்து விட்டு என் நண்பனின் பரிவாரங்களோடு பாட வருகிறேன்' என்று மார்தட்டிக் கொண்டீர்களே. அது நீங்கள் சொன்ன அந்த பிரிவுக்கு பின்தானே நடந்தது. அதுமட்டுமில்லாமல் உங்களின் அடுத்தடுத்த படங்களில் ரகுமான், அம்சலேகா, தேவா, சிற்பி, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், ஹிமேஸ் ரேஷ்மையா என்று இத்தனை இசையமைப்பளர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்களே ஏன் அப்போது தேவேந்திரன் நினைவுக்கு வரவில்லையா?

குறைந்தபட்சம் சின்னத்திரைகளில் நீங்கள் இயக்கிய தொடர்களுக்குக்கூட அவரை பயன்படுத்தியிருக்கலாமே ஏன் செய்யவில்லை.

ஒருமுறை இளையராஜாவிடம், "பாரதிராஜா படங்களில் பாடல்கள் இன்னும் ஸ்பெஷலாக இருக்கிறதே என்ன ரகசியம்," என்று கேட்டதற்கு, ராஜா சிரித்துக்கொண்டே, "சின்ன வயசிலிருந்தே ஒரே இடத்தில் விளையாண்டிருக்கோம். ஒண்ணாவே சாப்பிட்டிருக்கோம், தூங்கியிருக்கோம். அவருக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா. இதுதான் ரகசியம்..." என்றார் சிரித்தபடி. இதுதானே நட்பு.

இயக்குநர்கள் பாலா, அமீர் போன்றவர்கள் தங்களின் ஒரு படத்திலேயே இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள். இதற்காக உங்களையும் அவர்களையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்க முடியுமா?

ஒரு விஷயம் பாரதிராஜா சார். ஒருவருக்கு ஞானம் இருப்பது என்பது வேறு. அந்த ஞானத்தை வைத்து அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள். நாட்டிற்கு என்ன பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இளையராஜாவும் நீங்களும் இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்த ரத்தினங்கள். உங்களின் தனிப்பட்ட கோபதாபங்களை வெளிக்காட்டி சராசரி மனிதர்களாகி விடக்கூடாது என்பதுதான் என் போன்ற ரசிகர்களின் கவலை.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இசையமைப்பாளர் தேவேந்திரன் சென்னை வில்லிவாக்கம் பகுதியில்தான் இருக்கிறார். உங்களின் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து அவருடைய வாழ்வை வளமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

இப்படிக்கு

உங்கள் ரசிகன்.

 

"அடங்காதவன்".. அஜீத் படத்துக்கு இந்தப் பெயர் நல்லாருக்குமா?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது, ஆனால் இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

படத்தில் அஜீத் - சுருதிஹாசன் இடையிலான சில பாடல் காட்சிகளை மட்டும் படம் பிடித்தால் படம் ஒட்டுமொத்தமாக முடிந்து விடும் என்று கூறுகிறார்கள்.


படத்தின் முக்கியமான ஆக்க்ஷன் காட்சிகளை சமீபத்தில் படம் பிடித்து முடித்திருக்கின்றனர், படத்தின் வில்லன்களில் ஒருவரான ராகுல் தேவ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தெரிவித்திருக்கிறார்.

மொத்த படப்பிடிப்புமே இன்னும் சில தினங்களில் முடிவடையவிருக்கிறது. எனினும் இன்னும் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

Ajith Next Movie Title Confirmed?

தொடக்கத்தில் இந்தப்படத்துக்கு வரம் என்றொரு பெயர் சொல்லப்பட்டது.அதன்பின் வெட்டிவிலாஸ் என்றொரு பெயர் சொல்லப்பட்டது. ஆனால் அது பற்றிய எந்த அறிவிப்பும் வரவில்லை.

படப்பிடிப்புக்கு நடுவே படத்துக்குப் பெயர் தேடும் வேலையும் சத்தமில்லாமல் நடந்து கொண்டு இருக்கின்றது, இந்நிலையில் தற்போது படத்திற்கு அடங்காதவன் என்றொரு பெயர் சொல்லப்படுகிறது.

இப்போது இந்தப்பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள், இதையாவது அறிவிப்பார்களா? அல்லது இதிலும் மாற்றம் இருக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் இரண்டையுமே படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடங்காதவனா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில்....தெரிந்துவிடும்.

 

பாலிவுட் படத்தில் பாட்டு பாடும் சுரேஷ் ரெய்னா

மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பாலிவுட் படத்தில் பாட்டு பாட உள்ளார்.

இந்தி நடிகர் ஜீஷான் காத்ரி மீரூதியான் கேங்ஸ்டர்ஸ் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தில் நடித்ததுடன் திரைக்கதையையும் எழுதியிருந்தார் ஜீஷான். இந்நிலையில் ஜீஷானின் படத்திற்காக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஒரு பாடல் பாடுகிறார்.

Suresh Raina to croon for Bollywood film

இது குறித்து ரெய்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆமாம், நான் திரைப்படத்தில் பாட்டு பாடுகிறேன். மும்பைக்கு வந்து பாடலை பதிவு செய்ய உள்ளேன். எனக்கு பழைய இந்தி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மீருதியான் கேங்ஸ்டர்ஸ் படத்தில் மெலடி பாட்டை பாடுகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தனது நண்பர் ரெய்னா பற்றி ஜீஷான் கூறுகையில்,

என் படத்தில் பாடல் பாட ரெய்னா சம்மதித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிசியாக இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கிய அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.

மீருதியான் கேங்ஸ்டர்ஸ் வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமாவின் துணிச்சலான கிளைமேக்ஸ் பார்க்கனுமா.. 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' பாருங்க!

சென்னை: "தமிழ் சினிமாவின் தில்லான மற்றும் துணிச்சலான கிளைமாக்ஸாக த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும்" என்று படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Trisha Illana Nayanthara Boldest Climax in Tamil Cinema - Says Adhik Ravichandran

இவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் கயல் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர், படத்தை அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை பற்றி இயக்குநர் ரவிச்சந்திரன் " தமிழ் சினிமாவின் மிகவும் துணிச்சலான கிளைமாக்ஸ் என்று இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாராட்டப்படும்.

இந்த மாதிரி படத்தின் முடிவை எடுக்க ஒரு தைரியம் வேண்டும், படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த முடிவை ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

Trisha Illana Nayanthara Boldest Climax in Tamil Cinema - Says Adhik Ravichandran

மேலும் இந்தப் படத்திற்காக சுமார் 78 காட்சிகளை நான் கட் செய்தேன், கடைசியில் படம் சென்சார் போர்டுக்கு சென்றபோது மேலும் 2 முத்தக் காட்சிகளை நீக்கினால் படத்திற்கு யூ சான்றிதழ் அளிப்பதாகக் கூறினார்கள்.

ஆனால் நான் மறுத்து விட்டேன், நான் மறுத்ததால் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. சென்சார் போர்டின் இந்த முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் நயனின் மாயா மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்துல யாரு த்ரிஷா யாரு நயன்தாரா...

 

என் குழந்தைகள் தான் என்னோட தற்போதைய டீச்சர்ஸ்... ஷாரூக் பெருமிதம்

மும்பை: தன் குழந்தைகள் தான் தன்னுடைய ஆசிரியர்கள் எனத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்.

ஆசிரியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நேரிலும், சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் தங்களது ஆசிரியர்களை மக்கள் நினைவு கூர்ந்தனர்.

My kids are my teacher: Shah Rukh Khan

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், ‘எனது குழந்தைகள் தான் தற்போது என் ஆசிரியர்கள். அவர்கள் தான் எனக்கு எவ்வாறு பொறுமையாக, மென்மையாக இருப்பது, அளவில்லாத அன்பு செலுத்துவது, வெட்கமில்லாமல், காரணமில்லாமல் சிரிப்பது போன்றவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்' என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 49 வயதாகும் ஷாரூக், கடந்த 1991ம் ஆண்டு கௌரியை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஆர்யன் (17), சுஹானா (15) மற்றும் அப்ராம் (2) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஷாரூக்கின் இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள ரசிகர் ஒருவர், "நீங்கள் தான் என் ஆசிரியர். உங்கள் படங்களைப் பார்த்து தான் நான் எவ்வாறு வாழ்வது எனக் கற்றுக் கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

விமலுடன் கைகோர்க்கும் பூபதி பாண்டியன்!

தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, பட்டத்து யானை என வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் பூபதி பாண்டியன் அடுத்து விமலுடன் கை கோர்க்கிறார்.

காமெடி ஆக்ஷன் படங்களில் தனி பாணியில் தருபவர் பூபதி பாண்டியன். பட்டத்து யானை படத்துக்குப் பிறகு தான் உருவாக்கிய ஒரு கதையை இவர் விமலுக்குச் சொல்ல, அவரும் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

Boopathy Pandian joins with Vemal

இப்போது நடித்து வரும் அஞ்சல படம் முடிந்ததும் விமல் இந்தப் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பூபதி பாண்டியனின் முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் காதல் மற்றும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்கிறது படக்குழு.

நாயகி மற்றும் இதர கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.

 

தெலுங்கிலும் புலி.. பிரமாண்ட இசை வெளியீடு!


ஜில்லா படத்துக்கு தெலுங்கு தேசத்தில் கிடைத்த வெற்றியைப் பார்த்த விஜய் அன்ட் கோ, தங்களின் இப்போதைய படமான புலியையும் அங்கு பெரிய அளவில் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

தமிழில் செய்ததைப் போலவே தெலுங்கிலும் பிரமாண்டமாக ஆடியோ ரிலீசை நடத்தப் போகிறார்களாம்.

Puli Telugu audio on Sep 10

சிம்புதேவன் இயக்கதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாக நடித்துள்ள புலி அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.

இப்படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். படத்தின் டிரெய்லர் தென்னிந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் டீஸராக மாறியுள்ளது. இப்போது ‘புலி' படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது.

'ஜில்லா' படம் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழை விட தெலுங்கில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர் என்பதால் இந்த இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக முன்னணி நட்சத்திரங்களை வைத்து நடத்தப் போகிறார்களாம்.

 

பூந்தமல்லியிலும் ஈசிஆரிலும் கபாலிக்காக உருவாகும் பிரமாண்ட அரங்குகள்!

ரஜினியின் கபாலி படத்தின் ஷூட்டிங்குக்கான பணிகள் பரபரவென நடந்து வருகின்றன.

முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற 17-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. ஏவிஎம்மில் பூஜை முடிந்த பிறகு முதல் காட்சி சென்னை விமான நிலையத்தில் நடைபெறுகிறதாம்.

Mega sets for Kabali at Poonamallee

தொடர்ந்து சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இதற்காக பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஸ்டூடியோ மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டூடியோ ஆகியவற்றில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பூந்தமல்லியில் உள்ள ஈவிபி அரங்கில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதால், இங்கே ரஜினிக்கென தனி கெஸ்ட் அவுஸே ரெடி பண்ணி வருகிறார்களாம்.

 

ரேவதி இடத்துக்கு கீர்த்தி சுரேஷ்தான் கரெக்ட்- கோலிவுட் மக்களின் புதிய ஆருடம்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ரேவதியின் இடத்தை தமிழில் பிடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு எல்லா தகுதிகளும் உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தமிழ் திரை உலகில் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் ரேவதி. பாரதிராஜாவின் "மண்வாசனை" படத்தில் அறிமுகமாகி சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். தனக்கொன்று தனி பாணியை அமைத்து அசத்திய ரேவதியின் இடத்தை நிரப்ப இதுவரை யாரும் வரவில்லை.

Keerthi will get Revathi's place soon?

சமீபத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக தமிழ் பட உலகில் அடியெடுத்து வைத்தவர் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து பல தமிழ் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள "ரஜினி முருகன்" படம் விரைவில் திரைக்கு வருகிறது. இது நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதில் முக்கியமான காட்சிகளில் ரேவதி போல பிரமாதமாக உணர்ச்சி மயமாக நடிக்கிறாராம். அவரது நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டு கிடைத்திருக்கிறது. இதனால் இது போன்ற அழுத்தமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.

முன்னாள் நாயகி மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் அடுத்து ரேவதியின் இடத்தை பிடிப்பார் என்று படக்குழுவினர் சொல்கிறார்களாம். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர் அந்த லட்சியத்தை நோக்கி நடைபோட தயாராகி வருகிறார்.