ஜான் ஆபிரகாமிற்கு தோள் கொடுத்த தீபிகா


பிபாஷாவை பிரிந்த சோகத்தில் இருக்கும் ஜான் ஆபிரகாமிற்கு தனது சோகத்தை பகிர்ந்து கொள்ளும் தோழியாக கிடைத்துள்ளார் தீபிகா படுகோன்.

நீண்ட காலமாக ஒன்றாக இருந்த நடிகர் ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் அன்மையில் பிரிந்துவிட்டனர். தனது சோகத்தைப் பகிர்ந்துகொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என்று நினைத்த ஜான் ஆபிரகாமுக்கு நான் இருக்கிறேன் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளார் தீபிகா.

தீபிகாவும், ஜானும் தேசிபாய்ஸ் என்ற படத்தில் முதன்முதலாக ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்தது. அப்போது தான் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். தானும் பிபாஷாவும் பிரிந்தது பற்றி தீபிகாவிடம் கூறும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஒன்றாக காபி குடிக்கப் போவது, வெளி இடங்களுக்குப் போவது என்று இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே சிரிப்பும், பேச்சுமாய் இருந்த இவர்களைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனராம்.

நெருக்கமாக இருந்த ஒருவரைப் பிரியும்போது ஏற்படும் வேதனை என்னவென்று தீபிகாவுக்கும் தெரியும். அந்த உணர்வு தான் இவர்களை நண்பர்களாக்கியுள்ளது.

தீபிகாவும், ரன்பீர் கபூரும் காதலித்தனர். பின்பு ஆளுக்கொரு வழியைப் பார்த்து சென்றவிட்டனர். அந்த சோகத்தை தாண்டி வந்த தீபிகா ஜானுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தீபிகாவுக்கு முன்பு ஜான் ஆபிரகாமுக்கு 'ஆறுதல் கூறியவர்' சிரிப்பழகி ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது.


 

முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!


ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காஞ்சனா. அவர் இதற்கு முன் நடித்து இயக்கி வெளியிட்ட முனி படத்தின் இரண்டாம் பாகம் இது.

இந்தப் படத்தின் ஹைலைட்டே, முனியாக வரும் சரத்குமார்தான். இந்த முனி சாதாரண முனி அல்ல... திருநங்கை.

நடிகர் சங்கத் தலைவராக, எம்எல்ஏவாக, கட்சித் தலைவராக தனக்கென ஒரு இமேஜ் கொண்ட சரத்குமார், சற்றும் தயங்காமல் இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் இப்படிச் சொல்கிறார்:

"காஞ்சனா படத்தில் சரத்குமாரின் கேரக்டர், படத்தில் ஹைலைட்டாக அமைந்துவிட்டது. இமேஜ் பார்க்காமல் இந்த வேடத்தை அவர் செய்ததால் படத்துக்கே புதிய மரியாதை கிடைத்துள்ளது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

படத்தில் நடித்தது குறித்து சரத்குமார் கூறுகையில், "நான் ஒரு நடிகனாக என் வேலையைச் செய்தேன். சவாலான வேடங்களைச் செய்வது எனக்கு பிடித்தமான விஷயம். காஞ்சனா பாத்திரத்தில் என் பங்கை சரியாகச் செய்திருப்பது, ரசிகர்களின் ரியாக்ஷனிலிருந்து தெரிகிறது," என்றார்.
 

மீண்டும் மம்முட்டி, மோகன்லாலை 'வறுத்தெடுக்கும்' வருமான வரித்துறை!


கொச்சி: வரி ஏய்ப்பு, அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பு போன்ற புகாரிகளின் அடிப்படையில்  நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலிடம் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவர் மீதும் வரி ஏய்ப்பு செய்தததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய 4 இடங்களில் நடிகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பல லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக கொச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருவரும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ஆஜரான இருவரிடமும் அதிகாரிகள் நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் உள்ள மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் இந்த தொடர் கிடுக்கிப் பிடி நடவடிக்கையால் இருவருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 

பாலா சொன்னா நிர்வாணமா கூட நடிப்பேன்: விஷால்


இயக்குனர் பாலா தன்னை நிர்வாணமாக நடிக்கச் சொன்னால் நிச்சயம் அவ்வாறே நடிப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படம் விஷாலுக்கு திரையுலகில் புதிய அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளது. அவன் இவன் படத்தை பார்த்த திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவரது நடிப்பைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இதனால் விஷால் உச்சி குளிர்ந்து போயுள்ளார். தன் உழைப்பு வீண் போகவில்லை என்று பெருமிதம் அடைந்துள்ளார். இத்தனை புகழும் கிடைக்க பாலா தான் காரணம் கூறி வருகிறார்.

பாலா மீது இமாலய நம்பிக்கை வைத்திருக்கிறார் விஷால். அதனால் பாலா சொன்னால் நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.

இது என்ன கூத்து....
 

இலங்கைக்கு ஏமாற்றி அழைத்துப் போனதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் சினிமா பாடகி!


திரைக்குப் பின்னால் படு ஜோராகவே நடிப்பவர்கள் சினிமாக்காரர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

சிங்கள ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை சற்றுத் தாமதமாக உணர்ந்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையை போர்க்குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளனர் உலக மக்கள். குறிப்பாக ராஜபக்சே எந்த நேரமும் சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நேரம் நெருங்கி வருகிறது.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டுக்குழு ஏற்கனவே தடை விதித்துள்ளது. நடிகர் சங்கமும் இந்தத் தடையை வலியுறுத்தி வருகிறது. சீமானின் நாம் தமிழர் இயக்கம் இதுகுறித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இவை எல்லாம் தெரிந்த பிறகும், 'போர்க்குற்றவாளி' ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஆடிப் பாடி தேர்தல் பிரச்சாரம் பண்ணத்தான் மனோ, பாடகி சுசித்ரா, கிரிஷ் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன் ரகசியமாக இலங்கைக்குப் போனார்கள்.

இவர்களின் கெட்ட நேரம், இந்தப் பயணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. வைகோ மற்றும் நெடுமாறன் இருவரும் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர். நடிகர் சங்கமும் உடனே நாடு திரும்புமாறு இவர்களுக்கு செய்தி அனுப்பியது.

ராஜபக்சே தரும் பணத்துக்காக இலங்கைக்கு இவர்கள் மேற்கொண்ட திருட்டுப் பயணம் அம்பலமாகிவிட்டதால், அவமானப்பட்டு நிற்கிறார்கள் மனோ உள்ளிட்ட அத்தனை பேரும்.

இப்போது இழந்துவிட்ட பெயரை எப்படியாது மீட்க, தங்களுக்குத் தோன்றிய பொய்களை அவிழ்த்துவிட்டவண்ணம் உள்ளனர்.

இதில் பாடகி சுசித்ரா சொல்லியிருப்பதுதான் உச்சகட்ட காமெடி. இலங்கையில் தேர்தல் நடப்பதே தெரியாது என்றும், பணத்துக்காக இலங்கைக்குப் போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:

"எங்களை விளையாட்டு மைதான பூமி பூஜைக்காக சொல்லித்தான் இலங்கைக்கு அழைத்தனர். அரசியல் தொடர்புள்ள நிகழ்ச்சியா என்று விசாரித்தோம். இல்லை என்றனர். அதன் பிறகு இலங்கை புறப்பட்டுச் சென்றோம்.

கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியதும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதற்கு நாங்கள் வந்திருப்பதாக லோக்கல் தமிழ் டி.வி. சேனலில் செய்தி சொன்னார்கள். அதை பார்த்ததும் அதிர்ச்சியானோம். அதன் பிறகுதான் அங்கு தேர்தல் நடப்பதே எங்களுக்கு தெரிந்தது (உலக மகா நடிப்புடா சாமி!).

மனோ உடனடியாக சென்னைக்கு தொடர்பு கொண்டு நடிகர் சங்க நிர்வாகிகளிடம் பேசி என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார். அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பும்படி கூறினர். நாங்களும் வந்து விட்டோம். இலங்கைக்கு எங்களை ஏமாற்றி அழைத்து போய் விட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் உணர்வுபூர்வமாக நான் ஒன்றி இருக்கிறேன். இலங்கையில் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் மனதை ரொம்ப பாதித்தது. இலங்கைக்கு பணத்துக்காக நாங்கள் போகவில்லை. எங்களை அழைத்தவர்களிடம் ஒரு காசுகூட வாங்காமல் திரும்பி விட்டோம்," என்று கூறியுள்ளார் சுசித்ரா.

பலே மனோ...

இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வரை இலங்கைக்கே போகக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் கூறிவரும் நேரத்தில், இனி பல முறை யோசித்துவிட்டே இலங்கை செல்வேன் என்று கூறியுள்ளார் மனோ.

அவர் கூறுகையில், "நாங்கள் பாடகர்கள் இலங்கையில் தமிழர்கள் உள்ளனர். அவர்களை சந்தோஷப்படுத்தும் நோக்கத்திலேயே அங்கு சென்றோம். பணத்துக்காக செல்லவில்லை. அதில் அரசியல் இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சியனோம். இனி இலங்கை செல்ல பல தடவை யோசிப்போம்," என்றார்.

விளையாட்டரங்க பூமி பூஜைக்கு சென்றோம் என்ற இவர்களின் வாதத்தை ஏற்றாலும் கூட, அது தமிழர் நிகழ்ச்சியல்லவே. இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி. ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று வேறு அழைப்பிதழ் தந்திருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்த பிறகுதானே இவர்கள் தேதி கொடுத்து, அட்வான்ஸ் வாங்கி கொழும்பு புறப்பட்டார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அல்லவா இந்தப் பயணத்தை செய்திருக்கிறார்கள்.

"இப்போ நாம இலங்கை போறது மட்டும் தெரிஞ்சா, கறுப்புக் கொடியோட சீமான் எதிர்ல வந்து நிப்பாரு' என்று விமான நிலையத்தில் இவர்கள் கமெண்ட் அடித்துச் சிரித்துள்ளனர். ஆகவே, தெரியாமல் போய்விட்டோம் என்பதோ, ஏமாத்தி கூட்டிட்டுப் போயிட்டாங்க என இவர்கள் கூறுவதோ உண்மையல்ல.

ராஜபக்சே நிகழ்ச்சி இது எனத் தெரிந்தே இவர்கள் பயணம் மேற்கொண்டனர். அதற்கு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும் ஆயிரம் பொய்க் காரணங்களை அடுக்க ஆரம்பித்துள்ளனர்!", என்கிறார் தமிழ் உணர்வாளரான அந்த நடிகர்.
 

ரஜினி எனக்கு அப்பா மாதிரி: நடிகை மானு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு அப்பா மாதிரி என்று அவரை சிங்கப்பூரில் கவனித்துக் கொண்ட நடிகை மானு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை மானு கூறியதாவது, சிங்கப்பூர் சினிமா தயாரிப்பாளர் ஜெயகுமார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். அவர் என்னை அழைத்து ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் வருவதாகவும், அவர் திரும்பிச் செல்லும் வரையில் உடனிருந்து நல்லபடியாக கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

நானும், சிங்கப்பூர் நடிகர் புரவலன், தமிழ்செல்வன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரும் ரஜினியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அருகேயே அவருக்கு வீடு பார்த்துக்கொடுத்தேன். அங்கு ரஜினி அவரது மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தங்கியிருந்தனர்.

அவர் மருத்துவரீதியாக 3 வாரங்களிலேயே குணமடைந்துவிட்டார். முன்புபோல் சகநிலைக்குத் திரும்ப அவர் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் தினமும் கொஞ்ச தூரம் வாக்கிங் போவார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருக்க ஆட்களை நியமித்தேன். ஆனால் தனக்கு பாதுகாப்பாளர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார். இருப்பினும் அவருக்குத் தெரியாமலேயே ஆட்களை அனுப்பினேன். அதைக் கண்டிபிடித்து நிறுத்தச் சொல்லிவிட்டார்.

ஒரு நாள் இட்லி, வடை கேட்பார், மறு நாள் மசாலா தோசை கேட்பார். சில படங்களின் டிவிடிகளைப் போட்டு பார்த்து ரசித்தார். தனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் யோகாவின் மகத்துவம் பற்றி அடிக்கடி பேசுவார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி வரையாவது இருங்களேன் என்று கேட்டோம். ஆனால் அவர் நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும், எனது நாட்டையும், ரசிகர்களையும் மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

அவர் சென்னை புறப்படும் முன்பு எங்களை அழைத்து நன்றி தெரிவித்தார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒரு பெரிய நடிகரை கவனித்துக் கொள்கிறோம் என்றே இல்லை. அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வீட்டுப் பெண் போல் தான் நடத்தினர்.

ரஜினி மீது ஏன் பல லட்சம் பேர் பாசமாக இருக்கின்றனர் என்பது எனக்கு அன்று தான் புரிந்தது. அவர் குடும்பத்தை நேசிக்கும் சிறந்த மனிதர் என்றார்.
 

ஈசிஆர் ரோட்டில் லாரி-கார் மோதல்: இயக்குனர் மகள் உள்பட 3 பேர் பலி


திருப்போரூர்: கிழக்குக் கடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (24). பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள். அதே ஊரைச் சேர்ந்தவர் ராதிகா (24). திருச்சூரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24). இவர்கள் 3 பேருமே சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.

சென்னை ஊரப்பாக்கத்தில் தங்கி மறைமலைநகர் அருகே இருக்கும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

நேற்று விடுமுறை என்பதால் மகாபலிபுரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர். இதையடுத்து அர்ஜுனின் காரில் ஐஸ்வர்யா, ராதிகா, அவர்கள் உடன் வேலைப்பார்க்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த யேசுதாஸ்(24), அஸ்வின்(27) ஆகிய 5 பேர் மகாபலிபுரத்திற்கு சென்றனர்.

நாளைக் கொண்டாட்டமாகக் கழித்துவிட்டு இரவு ஊரப்பாக்கம் திரும்பினர். காரை அர்ஜுன் ஓட்டினார். அவர்கள் கார் இரவு 11 மணியளவில் கிழக்குகடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் செல்கையில் மணல் எடுக்க மகாபலிபுரத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி அவர்கள் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா, ராதிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த யேசுதாஸ், அஸ்வினை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அந்த லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்து குறித்து குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ரஜினி நலமடைந்ததால் திருமலையில் சாமி தரிசனம் செய்த சௌந்தர்யா அஸ்வின்!


திருமலை: விவிஐபி தரிசன நேரம் முடிந்த பிறகு சாமி கும்பிட திருமலைக்கு வந்த சௌந்தர்யா ரஜினிக்கு நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

ஆனால் நடிகர் மோகன் பாபு தலையிட்டதால், உடனடியாக அவரை அனுமதித்தனர் கோயில் நிர்வாகத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலமடைந்ததால், அவரது மகள் சௌந்தர்யா தனது கணவர் அஸ்வினுடன் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார்.

நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோரது பெயர்களில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு மூலம் வி.வி.ஐ.பி. தரிசனத்துக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனவே, ரஜினிகாந்த் திருமலைக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் நேற்று அதிகாலையிலேயே மலையில் குவிந்துவிட்டனர். ஆனால், ரஜினிகாந்த் வரவில்லை. சௌந்தர்யா, அஸ்வின் ஆகியோர் மட்டுமே நேற்று காலையில் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் வந்தனர். அதற்குள் வி.வி.ஐ.பி.க் கள் தரிசன நேரம் முடிந்து விட்டதால், இருவரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால், அரைமணி நேரம் கோயில் வெளிப்பகுதியில் இருவரும் காத்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நடிகர் மோகன்பாபு, தேவஸ்தான உயரதிகாரிகளுக்கு போனில் பேசினார். பின்னர் சௌந்தர்யாவும், அஸ்வினும் விஐபி டிக்கெட் மூலம் தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த சவுந்தர்யா நிருபர்களிடம் கூறுகையில், "எனது தந்தையின் உடல்நிலை குணமடைந்ததும் ஏழுமலையானை தரிசிக்க பிரார்த்தனை செய்திருந்தோம். அதன்படி தரிசிக்க வந்தோம்", என்றார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி திருமலைக்கு வரும் ரஜினி

மேலும் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யவிருப்பதாகவும் சௌந்தர்யா தெரிவித்தார்.

ரஜினி மகள்-மருமகனுக்கு திருப்பதி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவர்களுக்கு ஏழுமலையான் படங்களை பரிசாக வழங்கினார்.
 

அனுபவங்களிலிருந்து பாடம் கற்றேன்: ஜெய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அனுபவங்களிலிருந்து பாடம் கற்றேன்: ஜெய்

7/25/2011 10:55:23 AM

கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று ஜெய் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த காலங்களில் எனது சில படங்கள் வெற்றி பெறாததற்கு நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். காரணம் நானே விரும்பி நடித்த படங்கள் அவை. ஆனாலும் அந்த படங்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன். 'எங்கேயும் எப்போதும்Õ அழகான காதல் கதை. 'வேட்டை மன்னன்Õ படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன். எனக்கு சிம்புவை சின்ன வயதிலிருந்தே தெரியும் என்பதால் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறேன். எனக்கு மிக முக்கிய படமாக இது இருக்கும். அடுத்து 'வால்Õ என்ற படத்தில் நடிக்கிறேன். இது முழுநீள காமெடிப் படம். இன்னொரு ஜெய்யை இதில் பார்க்கலாம். இப்படி வெரைட்டியாக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.




 

இடைவேளையில் தொடங்கும் திருப்பங்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இடைவேளையில் தொடங்கும் திருப்பங்கள்

7/25/2011 10:54:38 AM

'கண்டேன்' படத்தை தொடர்ந்து ஸ்ரீசிவசெல்வநாயகி அம்மன் மூவீஸ் சார்பில் டி.சி.எஸ் தயாரிக்கும் படம், 'திருப்பங்கள்'. நந்தா ஹீரோ. ஆண்ட்ரியா, சுர்வின் ஹீரோயின்கள். மற்றும் பாலிவுட் நடிகர் கவுதம் குரூப், சாம்ஸ், பேபி தாரணி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மது அம்பாட். இசை, வித்யாசாகர். பாடல்கள், நா.முத்துக்குமார். சாரதா ராமநாதன் இயக்குகிறார். இவர் 'சிருங்காரம்' படத்தை இயக்கியவர். படம் பற்றி நந்தா கூறும்போது, ''இது சைக்கோ த்ரில்லர் படம். ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சிகரமாக இருக்கும். இடைவேளையில் தொடங்கும் இப்படத்தின் கதை, திடீர் திருப்பங்களுடன் நகரும். இடைவேளை வரும்போது, வேறொரு கதை தொடங்கும். மீசையில்லாமல் நடிக்கிறேன். ஆண்ட்ரியா, சுர்வின் இருவரும் எனக்கு ஜோடி'' என்றார்.

 

என்னை சீண்டிப்பார்ப்பதா : சோனாவுக்கு நமீதா எச்சரிக்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னை சீண்டிப்பார்ப்பதா : சோனாவுக்கு நமீதா எச்சரிக்கை

7/25/2011 10:53:22 AM

நடிகை நமீதா நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே எனது படம், பெயரை பயன்படுத்தி சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்தனர். ரசிகர் மன்றம் என்ற பெயரில் எனது பெயரைப் பயன்படுத்தினார்கள். இது ஒரு பிரபல நடிகைக்கு நேரும் சங்கடம் என்று கண்டும் காணாமல் இருந்து விட்டேன். ஆனால் சோனா என்பவரின் செயல் அநாகரீகமானது. என்னை கிண்டல் செய்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் எனக்கு அதுகுறித்து எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அதற்கு நான் பதில் அனுப்பவில்லை என்றும் கூறி வருகிறார். அவர் எந்த எஸ்எம்எஸ்சும் எனக்கு அனுப்பவில்லை. என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்கிறார். யார் இந்த சோனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். அவருக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். அடிப்படை நாகரீகம் தெரியாதவராக இருக்கிறார். என்னை கொச்சைப்படுத்தி கோ படத்தில் நடித்ததற்காக அவரல்லவா வெட்கப்பட வேண்டும். உண்மையிலேயே என்மீது மரியாதை இருந்தால் அந்தப் படத்தில் நடிக்க அவர் மறுத்திருக்க வேண்டும். அமைதியாக இருக்கும் என்னை அவர் சீண்டிப் பார்ப்பது ஏன்? என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதை சோனா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நமீதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

நிஜ கேரக்டரில் நடிப்பது சவால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நிஜ கேரக்டரில் நடிப்பது சவால்

7/25/2011 10:52:01 AM

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் லூர்து மேரி என்ற நிஜ கேரக்டரில் நடித்துள்ளார் அஞ்சலி. இதுகுறித்து அவர் கூறியதாவது: படத்தின் இயக்குனர் வடிவுடையான் கதையை சொன்னதும் ஒப்புக் கொண்டேன். லூர்து மேரி என்ற கேரக்டர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக இயக்குனர் சொன்னதும் அவரை சந்திக்க விரும்பினேன். இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவரின் பேச்சு, மேனரிசம் போன்றவற்றை அழகாகச் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே செய்தேன். வழக்கம்போல நடிப்பதென்றால் எளிதானது. ஆனால், நிஜ கேரக்டர் போன்று உணர்வுகள் வரவேண்டும் என்பதற்காக, சிரமப்பட்டு நடித்தேன். அப்போதுதான் நிஜ கேரக்டரில் நடிப்பது சவாலான விஷயம் என்று தெரிந்தது. மலையாளம் கலந்த தமிழ் பேசி நடித்திருக்கிறேன். சீனியர் ஆர்ட்டிஸ்ட் கரணுடன் சேர்ந்து நடிக்க முதலில் பயந்தேன். பின்னர் அவரின் எளிமையான பேச்சு, அந்த பயத்தை போக்கியது. 'அங்காடித் தெரு'வுக்கு பிறகு எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் படமாக இது அமையும்.

 

சிங்கம் இயக்குனர் மீது காஜல் 'கடு கடு'!


இந்தி சிங்கம் படத்தில் காஜல் வரும் ஒரு முக்கிய காட்சி நீக்கப்பட்டுள்ளது. இதனால் காஜல் இயக்குனர் மீது கடுப்பில் உள்ளார்.

வட இந்தியர் என்றாலும் காஜல் அகர்வாலுக்கு திரையுலகில் ஒரு அந்தஸ்து கொடுத்தது டோலிவுட் தான். பாலிவுட்டில் தன்னை யாரும் அழைக்கமாட்டார்களா என ஏங்கிய காஜலை ரோஹித் ஷெட்டி தனது சிங்கம் படத்தில் நடிக்க அழைத்தார்.

அய்யய்யோ… என்னை பாலிவுட்டில் அழைத்துவிட்டார்கள் என்று ஏக குஷி அடைந்தார் காஜல். இந்த சிங்கம் படம் நம்ம சூர்யா நடித்த சிங்கம் படத்தின் ரீமேக் ஆகும். இந்தி சிங்கத்தில் அஜய் தேவ்கன் தான் ஹீரோ. பாலிவுட்டில் நுழைந்த குஷியோடு படத்தை முடித்துக் கொடுத்தார் காஜல்.

படமும் திரைக்கு வந்தது. ஆனால் படத்தை பார்த்ததும் காஜல் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. காரணம் படத்தில் தான் வரும் ஒரு முக்கிய காட்சியை நீக்கிவிட்டது தான். எடு போனை, கூப்பிடு ரோஹித்தை என்று காஜல் இயக்குனரை தொடர்பு கொண்டால் அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லையாம்.

நான் தெலுங்கில் எவ்வளவு பெரிய நடிகை ஆனால் இங்கு என்னவென்றால் என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்களே என்று காஜல் ஆத்திரப்பட்டு்ள்ளார். இதையடுத்து சிங்கம் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் காஜலோ?

 

தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.


ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. வசூலில் இந்தப் படம் புதிய சாதனை படைத்தது. இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் எந்திரன்தான்.

இப்போது இந்தப் படத்தை, இதுவரை வெளியாகாத நாடுகளில் மறுவெளியீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமையை ஈராஸ்தான் பெற்றுள்ளது.

முதல்கட்டமாக தென் கொரியாவில் மட்டும் 50 திரையரங்குகளில் எந்திரனை வெளியிடப் போவதாக ஈராஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் குமார் அகுஜா கூறுகையில், “இதுவரை நாங்கள் கால் பதிக்காத புதிய பகுதிகளில் இந்தியப் படங்களை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்தியப் படங்களே வெளியாகாத தைவானில் முதல் முறையாக ஷாரூக்கான் நடித்த ‘ரா ஒன்’ படத்தை வெளியிடுகிறோம்.

அடுத்து தென் கொரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை 50 திரையரங்குகளில் வெளியிடுகிறோம். எந்திரனின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் இந்த அரங்குகளில் வெளியாகும்,” என்றார்.

தென் கொரிய மக்களுக்கு ரஜினி படம் புதிதல்ல. அங்கு ஏற்கெனவே ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி தி பாஸ் படங்கள் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன.