கிசு கிசு - தயாரிப்புக்கு இயக்குனர் டிமிக்கி

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

தயாரிப்புக்கு இயக்குனர் டிமிக்கி

7/20/2011 4:39:10 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

80களுக்கு முன்னால பிறந்த ஹீரோயினுங்க வாய்ப்பு இல்லாம தவிக்கிறாங்களாம்… தவிக்கிறாங்களாம்… வயசு அதிகமான ஹீரோக்கள் கூட புது ஹீரோயின்களைத்தான் தேடுறாங்களாம். கேரக்டர் ரோலுக்கும் அந்த ஹீரோயின்களை தேடுறதில்லையாம். சீனியர் ஹீரோயின்களுக்கு ஏன் வாய்ப்பு தர்றதில்லைன்னு இயக்குனருங்கிட்ட கேட்டா 'அக்கா வேஷம், அண்ணி வேஷத்துக்கு கேட்டா மறுக்கிறாங்க. அப்புறம் எப்படி அவங்களுக்கு வாய்ப்பு தர்றதுÕன்னு வெளிப்படையாவே பேசுறாங்களாம்… பேசுறாங்களாம்…

பைய இயக்குனரை அறிமுகப்படுத்திய சூப்பரான தயாரிப்பு, தன்னோட பேனருக்கு மறுபடியும் படம் செய்யச் சொல்லி கேட்கிறாராம்… கேட்கிறாராம்… ஆனா இயக்கமோ 'இப்போ பண்றேன், அப்போ செய்றேன்'னு டிமிக்கி கொடுக்கிறாராம்… கொடுக்கிறாராம்…

மேரேஜுக்கு பிறகும் ஜோ ஹீரோயின் உடல் எடை கூடாம பார்த்துக்கிட்டாரு. ஆனா அவருக்கு பிறகு இல்லறத்துல நுழைஞ்ச மீன் நடிகை படு வேகமா குண்டாயிட்டாரு. இதனால திடீர்னு ஜோ நடிகைக்கு போன் பண்ணின மீன் நடிகை, அவர்கிட்ட பிட்னஸ் ஐடியா கேட்டாராம்… கேட்டாராம்… அவரும் நிறைய டிப்ஸ் கொடுத்தாராம்… கொடுத்தாராம்…

 

ஸ்ரேயாவிடம் ஜொள்ளுவிட்ட ஹீரோக்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஸ்ரேயாவிடம் ஜொள்ளுவிட்ட ஹீரோக்கள்

7/20/2011 4:36:11 PM

'ரவுத்திரம்’ பட பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜீவா, ஸ்ரேயா, ஆர்யா, ஜெயம் ரவி என நட்சத்திரங்களுடன் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், வெற்றி மாறன், லிங்குசாமி, ராஜேஷ் என டைரக்டர்கள் பட்டாளமும் வந்த¤ருந்தது. இதில் ஆர்யா பேசும்போது, '’எல்லோரும் ஜீவா, டெக்னிஷீயன்கள் பற்றி பேசிவிட்டார்கள். நான் ஸ்ரேயாவை பற்றி பேசுகிறேன். அவர் கடின உழைப்பாளி. அவருடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். எந்த காட்சியாக இருந்தாலும் அதை விரிவாக கேட்டு நடிப்பார்” என்று ஐஸ் வைத்தார். அதை கேட்ட ரவிகுமார், '’ஸ்ரேயா பக்கத்துல கொஞ்ச நேரம் தானய்யா உட்கார்ந்தே, அதுக்குள்ள இவ்வளவு பில்டப்பா?” என்று தமாஷ் செய்தார்.

அடுத்து பேச வந்த ராஜேஷ், '’ஆர்யா எப்போது பேசினாலும் ஹீரோயினை பற்றித்தான் பேசுவார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஜீவாவை கேட்டேன். பலமுறை சந்திப்புக்கு பிறகு ஓ.கே. சொன்னார். ஷூட்டிங் நேரத்தில் ஜீவாவும், ஆர்யாவும் பேச ஆரம்பித்தார்கள். ‘ரவுத்திரம்’ படத்தில் நடிக்கும் ஸ்ரேயா பற்றி ஜீவா சொல்ல ஆரம்பித்தார். உடனே ஆர்யா, 'ஆமாம் மச்சான். அவங்க இப்படி டான்ஸ் ஆடுவாங்க, அப்படி நடிப்பாங்க. எவ்ளோ அழகு தெரியுமா?’ என்று மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஷூட்டிங் நடக்கவில்லை. பொறுக்க முடியாமல் நான் இடையில் புகுந்து 'ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் நடிக்க வாங்க’ என்று சத்தம் போட்டபிறகுதான் நடிக்கும் மூடுக்கு வந்தார்கள்ÕÕ என்று கிண்டலடித்தபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

 

அம்மாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்! - அஜீத் பேட்டி


அம்மா (முதல்வர் ஜெயலலிதா) வுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அவரை நான் நேரில் போய் பார்க்காவிட்டாலும், எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்வார் அவர், என்று கூறியுள்ளார் அஜீத்குமார்.

திமுக ஆட்சியின் போதே ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்டவர் நடிகர் அஜீத். தேர்தலில் அவர் சொல்லாமலேயே அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர் பெரும்பாலான அவரது ரசிகர் மன்றத்தினர். சிலர் மட்டும் திமுகவை ஆதரித்தனர். இது காதுக்கு வந்ததும், உடனடியாக மன்றங்களையே கலைத்துவிட்டார் அஜீத்.

இந்த நிலையில் தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வரானார். தேர்தலின்போது அமைதியாக இருந்த விஜய் கூட, ஓடிப் போய் ஜெயலலிதாவைச் சந்தித்து, 'நான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றேன் அப்படியே நடந்துவிட்டது' என அதிமுக வெற்றிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார்.

இன்னொரு பக்கம் கமல்ஹாஸன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மங்காத்தா படம் வெளியாவதையொட்டி, குறிப்பிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும் ஆங்கில சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து வருகிறார் அஜீத்.

சமீபத்தில் ஒரு டிவி பேட்டியின் போது, ஏன் நீங்கள் முதல்வரைப் பார்க்கப் போகவில்லை என்று கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், "முதல்வர் மேடம் எந்த அளவு பிஸியாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களை அநாவசியமாக தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இன்று அவரை நான் ஏன் பார்க்கப் போகவில்லை என்று கேட்பவர்கள், ஒருவேளை நான் போய் பார்த்தாலும் ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிப்பார்ரகள். மங்காத்தா படத்தை சிக்கலில்லாமல் ரிலீஸ் செய்ய ஜெயலலிதாவை நான் போய் பார்த்தாகக் கூட கூறுவார்கள். இவங்க பேசறதுக்கேத்த மாதிரி நான் ஆட வேண்டுமா என்ன?

அம்மாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். எது உண்மை எது உண்மை இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர் அம்மாதான். எனவே என்னைப் பற்றி குறை கூறுபவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. இவர்கள் என்ன எனது அடுத்த படத்தை தயாரிக்கவா போகிறார்கள்?", என்றார்.
 

வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!


சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்காக கிளிநொச்சியில் இசை நிகழ்ச்சி நடத்த சென்ற பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட இசைக் குழுவினர், வைகோ உள்ளிட்ட தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக சென்னை திரும்பினர்.

இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனை ஏற்று இன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரத்து செய்தனர்...

இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

பின்னர் இதுகுறித்து மனோ விடுத்துள்ள அறிக்கையில், "என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, தமிழ் மக்களுக்கு உங்கள் மனோ, பாடகர் கிரிஷ், பாடகி சுசித்ரா சார்பில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இப்போது நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம்.

கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி", என்று கூறியுள்ளார்.
 

போயஸ் கார்டனில் ரஜினி!


இந்த நிமிடத்தில் ரஜினி இருக்கும் இடம் எது தெரியுமா... அவரது அதே போயஸ் கார்டன் பிருந்தாவனம்தான்!

ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் போயஸ் கார்டன் செல்வார், கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் செல்வார் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், திடீரென மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்குவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது கிடைத்துள்ள உறுதியான தகவல்களின்படி, ரஜினி தங்கியிருப்பது வேறு எங்கும் அல்ல... அதே போயஸ் கார்டன் வீட்டில்தான்.

இந்த வீட்டில் மராமத்துப் பணிகள் மற்றும் வாஸ்து மாற்றப்பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இப்போது வீடு முழுக்க புதிய வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இவற்றை பார்வையிடுவதோடு, வீட்டுக்கு வரும் பேரன்களையும் கொஞ்சி மகிழ்கிறாராம்.

இன்றைய தேதிக்கு ரஜினியை தினசரி வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு விஐபி, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்தான்.

ராணாவின் கதையமைப்பில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று சொல்லிட்ட ரஜினி, காட்சிகளை கிட்டத்தட்ட ஒரு ஒத்திகையாகவே செய்து பார்க்கிறாராம்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் எல்லாமே செட்டிலாகிவிடும் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தினர்.
 

'போதும் திருமண வாழ்க்கை... இனி சலிக்கும் வரை சினிமாதான்' - சோனியா அகர்வால்!


சோனியா செல்வராகவனாக இருந்து, மீண்டும் சோனியா அகர்வாலாக மாறிவிட்டதில் ஏக சந்தோஷம் தெரிகிறது சோனியாவிடம். அந்த சந்ததோஷம் அவர் உருவத்திலும் பளிச்சென்று எதிரொலிக்கிறது.

விவாகரத்துக்குப் பிறகு வானம் படத்தில் நடித்த சோனியா, இப்போது 'சோலோ ஹீரோயினாக' நடிக்கும் படம் ஒரு நடிகையின் கதை.

ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார். தலைப்பிலேயே படத்தின் கதை தெரிந்திருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு.

படம் பார்க்கும் நடிகைகள் அத்தனை பேருக்குமே இது நம்ம கதையோ என்ற நினைப்பை ஏற்படுத்துமாம். அந்த அளவு சினிமாவில் பொதுவான சில விஷயங்களை பற்றி இந்தப் படம் பேசவிருக்கிறதாம்.

இந்தப் படத்தில் மிகக் கவர்ச்சியான காட்சிகள் எல்லாம் உண்டாம். சோனியா அகர்வால் அத்தனைக்கும் சம்மதித்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்துவருகிறாராம்.

மீண்டும் மணவாழ்க்கை குறித்து சோனியாவிடம் கேட்டபோது, "மீண்டும் கல்யாணமா... சான்ஸே இல்லை. அந்த நாள்களை நினைத்துப் பார்க்க்க கூட விரும்பாத அளவுக்கு வாழ்க்கை கசந்துவிட்டது.

இனி சினிமாதான். சலிக்கச் சலிக்க சினிமாவில் நடிக்கப் போகிறேன். என் தேவையெல்லாம் நல்ல வேடம், சவாலான பாத்திரங்கள், அதற்கேற்ற சம்பளம்... அவ்வளவுதான்," என்றார்.
 

மக்கள் ரசனையை வெல்வதே சிறந்த விருது! - விக்ரம்


வெறும் விருதுக்காக நான் நடிப்பதில்லை. அதில் அர்த்தமும் இல்லை. மக்கள் ரசனையை திருப்தி செய்யும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதுதான் சிறந்த விருது, என்றார் நடிகர் விக்ரம்.

விக்ரம் நடித்துள்ள தெய்வத் திருமகள் படம் நல்ல வசூலுடன் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டுள்ளது.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ரசிகர்களைச் சந்திக்க கோவை கேஜி - பிக் சினிமாவுக்கு வந்தார் விக்ரம். அவருடன் படத்தின் இயக்குநர் விஜய்யும் வந்திருந்தார்.

ரசிகர்களைச் சந்தித்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த விக்ரம் கூறுகையில், " இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டது. 5 வயது குழந்தை என்னென்ன செய்யும் என்பதை உடன் இருந்து பார்த்து காட்சிகளை உருவாக்கினார் இயக்குநர் விஜய்.

இந்த படத்தில் நடித்த நிலா என்ற சிறுமி நடிப்பில் என்னை தூக்கி சாப்பிட்டு விட்டது.

ஒரு பக்கம் சாமி, தூள் போன்ற படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். மறுபக்கம் தெய்வத் திருமகன் படத்துக்கும் அமோக ஆதரவு தருகிறார்கள். ஆக கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் மக்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என்பது நிரூபணமாகியுள்ளது.

வழக்கமாக தெய்வத் திருமகள் போன்ற படங்களை கல்லூரி மாணவர்கள் பார்க்க மாட்டார்கள் என சிலர் கூறினார்கள். ஆனால் இப்படம் வெளியாகி 3 நாட்களாக கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் பேர் விரும்பிப் பார்ப்பதாக தியேட்டர் ரிபோர்ட் கூறுகிறது.

அடுத்து ராஜபாட்டை என்கிற ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளேன். விருதுக்காக படம் நடிக்கவில்லை. மக்கள் ரசனைதான் சிறந்த விருது," என்றார்.
 

'இங்கிலீஷ் வி்ங்கிலீஷில்' ஸ்ரீதேவி!!


போனி கபூருடனான திருமணத்துக்குப் பிறகு முதல்முறையாக வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார் நடிகை ஸ்ரீதேவி.

படத்தின் பெயர் "இங்கிலீஷ் விங்கிலீஸ்".

சீனி கம், பா புகழ் இயக்குநர் பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்கும் படம் இது.

கதைப்படி, ஸ்ரீதேவி நடுத்தர குடும்பத் தலைவியாக வருகிறார். அரைகுறை ஆங்கிலம் தெரிந்த அவர் பின்னர் சந்தர்ப்ப சூழல் காரணமாக அமெரிக்கா சென்று மொழி பிரச்னையில் சி்க்கித் தவிக்கிறார். அவருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் அங்குள்ளவர்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள்.

இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு நாளடைவில் ஆங்கிலத்தை முறைப்படி கற்றுக் கொள்கிறார். பின்னர் ஆங்கிலம் பேசி அமெரிக்கர்களையே ஆச்சரியத்தில் அசத்துகிறார் என்று போகிறது கதை.

இதற்காக பயிற்சியாளர் ஒருவரிடம் அமெரிக்க ஆங்கிலத்தை முறைப்படியாக கற்று வருகிறாராம் ஸ்ரீதேவி.

திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்தப் படத்தில் ஹீரோயினாகவே நடிக்கிறார் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
 

தெலுங்கில் வில்லனாகிறார் அஜ்மல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெலுங்கில் வில்லனாகிறார் அஜ்மல்

7/20/2011 11:56:59 AM

தெலுங்கு படத்தில், வில்லனாக அறிமுகமாகிறார் அஜ்மல். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'கோ' படம் எனக்கு திருப்புமுனையைக் கொடுத்திருக்கிறது. இது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ஹிட்டாகியுள்ளது. இதன் மூலம் தெலுங்கில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ராம் சரண் தேஜா, தமன்னா நடிக்கும் 'ராச்சா' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறேன். ஆனந்த் சாய் இயக்குகிறார். ஸ்டைலான வில்லன் கேரக்டர். படத்தில் மோட்டார் பந்தய வீரனாக நடிக்கிறேன். ராம் சரண், தமன்னா மற்றும் எனக்கு நடக்கும் பிரச்னைதான் படம். கல்லூரி நாட்களில் பைக் ரேஸில் கலந்திருக்கிறேன்.
இப்போது வீலிங் போன்ற பயிற்சிகளை படத்துக்காக செய்து வருகிறேன். அடுத்து 'கோ' படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க, பேச்சு நடக்கிறது. தமிழில் 'கருப்பம்பட்டி'யில் இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். 'கதிர்வேல்' ஜனரஞ்சகமான ஆக்ஷன் படம்.

 

4டி தொழில்நுட்பத்தில் சுட்டி உளவாளிகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

4டி தொழில்நுட்பத்தில் சுட்டி உளவாளிகள்

7/20/2011 11:54:09 AM

ஹாலிவுட் குழந்தைகள் படமான 'ஸ்பை கிட்ஸ்', இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளது. இதன் 4வது பாகம், '4-டி' தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. தமிழில் இதற்கு, 'சுட்டி உளவாளிகள்' என்று பெயர் வைத்துள்ளனர். பொதுவாக 3-டி படம் என்பது காட்சிகளை முப்பரிமாணத்தில் பார்க்கும் முறை. 4டி என்பது காட்சியின் தன்மையை உணர்வது. இதை, '4டி அரோமா ஸ்கோப்' என்கிறார்கள். அதாவது படம் பார்க்க செல்வதற்கு முன், 'அரோமா அட்டை' ஒன்றை தருவார்கள். அதில் 8 எண்கள் இருக்கும். படம் பார்க்கும்போது, சில காட்சிகளில், எண்கள் திரையில் தோன்றும். அதே எண்ணை அட்டையில் உரசினால், அந்த காட்சி தொடர்பான வாசனை வரும். இப்புதிய முயற்சி இப்போதுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜெசிகா ஆல்பா, ஜெரிமி பிவென், ஜோல் மிகேலே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, ராபர்ட் ராட்ரிக்ஸ் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 

போலிசாமியார்கள் பற்றிய படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போலிசாமியார்கள் பற்றிய படம்

7/20/2011 11:53:08 AM

பூவப்பா கலைக்கூடம் சார்பில் எஸ்.எம்.மாணிக்கம், பெரப்பேரி திலீபன் இணைந்து தயாரிக்கும் படம், 'வெங்காயம்'. அலெக்சாண்டர், பவீனா ஜோடி. முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பரணி இசையில் சுப.வீரபாண்டியன், அறிவுமதி, எஸ்.எம்.மாணிக்கம் பாடல்கள் எழுதுகின்றனர். சங்ககிரி ராச்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. ஜானய்யா என்ற துப்புரவுத் தொழிலாளியும் ஏழுமலை என்ற விவசாயியும் பாடலை வெளியிட்டனர். விழாவில் சத்யராஜ் பேசும்போது, 'இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜாக வருகிறேன். புரட்சிகரமான பாடல் காட்சியிலும் நடித்துள்ளேன். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. போலிசாமியார்களின் முகத்திரையைக் கிழிக்க வருகிறது இப்படம். இதுபோன்ற படங்களை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்' என்றார். விழாவில் சுப.வீரபாண்டியன், கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் வ.கவுதமன், தயாரிப்பாளர் மணிவண்ணன், பவீனா, அலெக்சாண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நடிப்புக்கு ஷம்மு முழுக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிப்புக்கு ஷம்மு முழுக்கு

7/20/2011 11:48:35 AM

தமிழில் 'தசாவதாரம்', 'காஞ்சிவரம்', 'மலையன்', 'மாத்தியோசி' படங்களில் நடித்தவர், ஷம்மு என்கிற சிரின் ஷர்மிலி. அவர் நடித்துள்ள 'மயிலு', 'பாலை' படங்கள் விரைவில் ரிலீசாகிறது. இந்நிலையில், திடீரென்று அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஷம்முவின் தாயார் கூறியதாவது: அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில், 'யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழகம்' இருக்கிறது. இங்கு டாக்டர் படிப்பை தொடர்வதற்காக, நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார் ஷம்மு. வெளிநாட்டில் வசிக்கும் நாங்கள், அவள் ஆசைப்பட்டதற்காகவே சென்னை வந்தோம். ஏதோ ஒன்றிரண்டு படத்தில் நடித்தால் போதும் என்று நினைத்தோம். அவளது ஆசை நிறைவேறியது. இனி ஷம்மு நடிக்க மாட்டாள்.




 

திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடியாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடியாது

7/20/2011 11:47:44 AM

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி, பி.சுரேஷ் இணைந்து தயாரிக்கும் படம் 'ரவுத்திரம்'. ஜீவா, ஸ்ரேயா ஜோடி. சண்முகசுந்தரம், ஒளிப்பதிவு. பிரகாஷ் நிக்கி, இசை. தாமரை, லலிதானந்த் பாடல்கள். கோகுல் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, 'திருட்டு சி.டியை ஒழிக்க எவ்வளவோ போராடுகிறார்கள். இது விஞ்ஞான வளர்ச்சி. அதை எப்படி பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றுதான் பார்க்க வேண்டும். இதை பலமுறை சொல்லிவிட்டேன். தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களை ரிலீஸ் செய்யும்போதே வீடியோ உரிமையையும் கொடுத்து விட வேண்டும். இதனால், அதிகபட்ச பணம் கிடைக்கும். ஈசல், ஈ, கொசு மாதிரி திருட்டு சி.டி வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதை ஒழிக்க முடியாது. இந்த விஷயத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கவனத்தில் கொண்டு, ஆவன செய்ய வேண்டும்' என்றார். விழாவில், ஜெயம் ரவி, ஆர்யா, விக்ரமன், எஸ்.பி.ஜனநாதன், வெற்றிமாறன், ராசு மதுரவன், என்.லிங்குசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆர்.பி.சவுத்ரி வரவேற்றார். இயக்குனர் கோகுல் நன்றி கூறினார்.




 

படமாகும் நடிகைகளின் கதைகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
படமாகும் நடிகைகளின் கதைகள்

7/20/2011 11:00:20 AM

தமிழ், மலையாளம், இந்தி சினிமா துறையில் நடிகைகளின் வாழ்க்கையை படமாக்கும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் ரிலீசான 'திரக்கதா' படம், மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை பற்றிய கதையாக கூறப்பட்டது. பிருத்விராஜ், பிரியாமணி நடித்த அப்படம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சில இயக்குனர்கள், வாழ்ந்து மறைந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகளின் வாழ்க்கையைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சில்க் ஸ்மிதாவுக்கு முன்னுரை தேவையில்லை. அவரது சொந்த வாழ்க்கையிலும், காதல் விவகாரத்திலும், திடீர் தற்கொலையிலும் ஏராளமான ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை 'டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகின்றனர். சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இப்படம் ரிலீசான பின், சில்க் ஸ்மிதா குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்கின்றனர், சினிமா ஆர்வலர்கள். இதேபோல, தற்போது மலையாளத்தில் உருவாகும் படம், 'நாயிகா'. இது, பழம்பெரும் நடிகை சாரதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் இளமைகால சாரதா வேடத்தில் பத்மப்பிரியா நடிக்கிறார். முதுமைகால கேரக்டரில் சாரதாவே நடிக்க இருக்கிறார். திடீரென்று புகழின் உச்சிக்கு சென்று சிலவருடங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போனார் சாரதா. பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சினிமாவிலிருந்து அவர் விலக காரணமாக இருந்தது எது என்பது உள்பட, மலையாள சினிமாவின் பல திரைமறைவு ரகசியங்கள் இந்தப் படம் மூலம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, கவர்ச்சி பிளஸ் காமெடி வேடங்களில் நடித்து வரும் சோனா, தமிழில் தன் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். 3 பருவங்களில் வரும் அவரது கேரக்டரில், ஒரு கேரக்டரில் அவரே நடிக்கிறார். இப்படத்தில் தன்னை ஏமாற்றிய, தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த பலருடைய முகமூடியை கிழித்து எறிவேன் என்று ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார். தவிர, டைரக்டர் செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்டு, நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தும் சோனியா அகர்வால், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது பிரபல நடிகை ஒருவரின் வாழ்க்கை கதை என்கிறார்கள்.

ஆனால், அந்த நடிகை யார் என்பதை இப்போது சொல்ல மறுக்கின்றனர். ''சினிமாவில் விரைவிலேயே புகழின் உச்சிக்கு சென்று, திடீரென்று தற்கொலை செய்துகொண்ட நடிகைகளின் வாழ்க்கை புரியாத புதிராகவே உள்ளது. ரசிகர்களுக்கு அவர்களின் கதைகள், தினந்தோறும் ஆயிரம் ரகசியங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறது. என்ன நடந்திருக்கும், எப்படி நடந்திருக்கும் என்பது போன்ற விஷயங்கள் ரசிகனை தூண்டிக்கொண்டே இருப்பதால், சம்பந்தப்பட்ட நடிகைகளின் கதைகளைப் பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் ஆவல்தான். அதனால்தான் நடிகைகளின் கதைகளை படமாக்கி வருகின்றனர்'' என்கிறார் மூத்த இயக்குனர் ஒருவர்.




 

அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி!


தமிழ் சினிமாவில் அதிக முதலீட்டை இறக்குகிறது சோனி மியூசிக் நிறுவனம். அஜீத் நடிக்கும் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆகிய படங்களின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், 4 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக சத்யம சினிமாஸின் திங்க் மியூசிக் நிறுவனத்தின் வசமிருந்த 146 படங்களின் ஆடியோ உரிமையையும் சோனி கையகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமா ஆடியோ உரிமையில் 50 சதவீதம் சோனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.

அதேநேரம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரமின் தெய்வத் திருமகள் படங்களின் ஆடியோ உரி்மை திங்க் மியூசிக் வசமே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் மேலும் பல படங்களின் ஆடியோக்களை திங்க் மியூசிக் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

குண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா? - கமிஷனர் பேட்டி


சென்னை: சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவி்ட்டது. இதுகுறித்து விசாரணை அதிகாரி முடிவு செய்வார் என்று கமிஷனர் திரிபாதி தெரிவித்தார்.

இது குறித்து அவர், செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், "சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன.

இப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவில் ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பிரிவு போலீஸார் புகாரின் உண்மைத் தன்மையை பொருத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

சக்சேனாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த விசாரணை அதிகாரிதான்", முடிவு செய்வார் என்றார்.

சக்சேனாவுக்கு மீண்டும் போலீஸ் காவல் ?

இதற்கிடையே வல்லகோட்டை படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியதில் ரூ.55 லட்சம் மோசடி செய்து விட்டதாகக் கூறப்பட்டுள்ள புகாரில் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பன், அழகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சக்சேனாவை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி, போலீஸ் தரப்பில் சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சக்சேனா 'போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை' என்று கூறினார்.

இந்த வழக்கில் போலீஸ் காவல் மற்றும் ஜாமீன் மனுக்கள் மீதான 2 தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி, 20-ந்தேதி (இன்று ) மாலை மனுக்கள் மீதான உத்தரவை வழங்குவதாக அறிவித்தார்.
 

ராணா படத்தின் பெயரை மாற்றுவது பற்றி ரஜினியுடன் பேசவில்லை- கே.எஸ்.ரவிக்குமார்


ராணா படத்தின் பெயரை மாற்றுவது பற்றி ரஜினியுடன் பேசவில்லை. பெயர் மாற்றம் குறித்த செய்திகளில் உண்மையில்லை, என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம், 'ராணா.' கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

'ராணா' படத்தின் படப்பிடிப்பு தொடக்க நாளன்றே ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டதை படக் குழுவினர் அபசகுனமாக கருதுவதாகவும், அதனால் படத்தின் பெயர் மாற்றப்படுவதாகவும் தகவல் பரவியது.

இதுபற்றி கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, "ராணா படத்தின் பெயர் மாற்றப்படவில்லை. பெயரை மாற்றுவது பற்றி ரஜினியுடன் நான் பேசவில்லை.

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ரஜினி, இப்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரை நான் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். 'ராணா' படம் பற்றி பேசி வருகிறேன். பெயர் மாற்றம் செய்யப்படுவது பற்றி நாங்கள் இருவரும் இதுவரை பேசவில்லை. அதுகுறித்த செய்திகளில் ஆதாரமில்லை,'' என்றார்.