4/11/2011 12:27:31 PM
யானைகள் பற்றிய ஆய்வுக்கு இயக்குனர் பிரபு சாலமன் 3ஆயிரம் கி.மீ பயணம்!
4/11/2011 12:27:31 PM
அஜீத் ஜோடி மும்பை மாடல்
4/11/2011 12:10:38 PM
'பில்லா 2' படத்தில் அஜீத் ஜோடியாக மும்பை மாடல் ஹூமா குரேஷி நடிக்கிறார். ரஜினிகாந்த் நடித்த 'பில்லா' படம், அதே பெயரில் அஜீத் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கின்றனர். இதில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது. இப்போது மும்பை மாடலும் நாடக நடிகையுமான ஹூமா குரேஷி நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்தை இயக்கிய சாக்ரி இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஹூமா, அனுராக் காஷ்யப் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
காதலும் பிரச்னைகளும் :அதர்வா!
4/11/2011 12:12:46 PM
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் நடித்து வரும் அதர்வா கூறியதாவது: முதல் படத்தில் ரசிகர்களிடத்தில் நல்ல இடம் கிடைத்ததும் அடுத்த படத் தேர்வில் கவனமாக இருக்க முடிவு செய்தேன். சிறிது இடைவெளிவிட்டு நடிக்கும் படம் இது. சாஃப்ட்வேர் என்ஜினீயர் கேரக்டர். எனக்கு வரும் காதலும், பிரச்னைகளும் கதை. இன்னும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறேன். மெதுவாக வளர்ந்தால் போதும் என கருதுகிறேன். இயக்குனர்கள் விரும்பும் நடிகராக வளர ஆசை.
இயக்குனர் ஆகிறார் சிம்ரன்
4/11/2011 12:21:29 PM
ஜூன் மாதம் பட தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக சிம்ரன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜுன் மாதம் இந்தி படம் ஒன்றை ரீமேக் செய்கிறேன். இதை இயக்குபவர் பற்றி விரைவில் அறிவிப்பேன். அடுத்து நானே படம் இயக்குகிறேன். இதற்கான கதையை உருவாக்கி வருகிறேன். பல கமர்சியல் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் எதை ரசிப்பார்கள் எனத் தெரியும். அதற்கேற்ற வகையில் எழுதி வருகிறேன். விரைவில் தயாரிப்பாளர் சிம்ரனையும், இயக்குனர் சிம்ரனையும் பார்க்கலாம்.
தமிழ்,தெலுங்குக்கு மீண்டும் திரும்பும் பாலிவுட்
4/11/2011 12:25:30 PM
தமிழ், தெலுங்கு படங்களை ரீமேக் செய்வது மட்டுமல்லாமல் தென்னிந்திய டெக்னீஷியன்களைப் பயன்படுத்துவதும் இந்தி சினிமாவில் தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு மொழியில் ஹிட்டாகும் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றுதான். இது பல வருட காலமாக நடந்து வருகிறது. தென்னிந்திய மொழிப் படங்களை இந்தியில் ரீமேக் செய்வது ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன், இந்த போக்கு திடீரென்று குறைந்தது. இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட சில படங்கள் சரியாக ஓடாததால் ரீமேக் மவுசு குறைந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்போது தமிழ், தெலுங்கு படங்களை ரீமேக் செய்வது இந்திப் பட உலகில் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல், தென்னிந்திய டெக்னீஷியன்களைப் பயன்படுத்தும் போக்கும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆமிர்கான் தமிழ் 'கஜினி'யை ரீமேக் செய்த போது, தமிழில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாசையும் அந்த படத்தில் நடித்த அசினையும் இந்திக்கு கொண்டு வந்தார். இந்தப் படத்தில் நடித்ததால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் புகழடைந்தார் அசின். அடுத்து, தமிழில் வெளியான 'போக்கிரி', சல்மான் கான் நடிப்பில் 'வான்டட்' என்ற பெயரில் ரீமேக் ஆகி ஹிட்டானது. இதை தமிழில் இயக்கிய பிரபுதேவாவே இந்தியிலும் இயக்கி இருந்தார். இந்தப் படங்கள் ஹிட்டானதை அடுத்து, இப்போது 'உத்தமபுத்திரன்' படம் 'ரெடி'யாகவும் 'சிங்கம்' அஜய்தேவ்கன் நடிப்பிலும் 'காக்க காக்க' ஜான் ஆபிரகாம் நடிப்பிலும் 'சுப்ரமணியபுரம்' படம் 'கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்' என்ற பெயரிலும் ரீமேக் ஆகி வருகின்றன. இதே போல நான்கு தெலுங்கு படங்களும் இந்தி ரீமேக்கில் இருக்கின்றன. தமிழ் ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தியில் நடித்துள்ளனர். சித்தார்த், தெலுங்கு ஹீரோ ராணா, நடிகைகள் ஜெனிலியா, காஜல் அகர்வால், இலியானா, நேகா சர்மா, டாப்ஸி ஆகியோர் இந்தியில் இப்போது நடித்து வருகின்றனர். தீபிகா படுகோன், தமிழில் வெளியான 'சினேகிதியே' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் 'ஐஸ்வர்யா' என்ற கன்னடப் படத்தில் நடித்தார். இப்போது முழுவதும் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி பட வர்த்தக ஆலோசகர் அமோத் மெஹ்ரா கூறும்போது, 'வைஜயந்திமாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு தென்னிந்திய படங்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் பாலிவுட்டில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால், இடையில் திடீரென்று அந்த போக்கு மறைந்தது. இப்போது, 'கஜினி', 'வான்டட்' படங்கள் ஹிட்டானதை அடுத்து மீண்டும் தென்னிந்திய படங்களுக்கான மவுசு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது' என்றார்.
7 கேமராவுடன் வேட்டை மன்னன் சண்டைக்காட்சி
4/11/2011 12:28:41 PM
சிம்பு நடிக்கும் 'வேட்டை மன்னன்' படத்தின் சண்டைக்காட்சி, 7 கேமராவில் படமாக்கப்பட்டு வருகிறது. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், 'வேட்டை மன்னன்'. சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் ஜெய், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை. 'ரேனிகுன்டா' சக்தி ஒளிப்பதிவு. நெல்சன் இயக்குகிறார். 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஒருவர் இந்தி நடிகை. தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் இந்தப் படம் பற்றி சிம்பு கூறியதாவது: நான் நடித்துள்ள 'வானம்', 'போடா போடி' படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. இப்போது 'வேட்டை மன்னன்' படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ளோம். இது மிகவும் ஸ்டைலான படம். அமெரிக்கா, மெக்ஸிகோவில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. ஹாலிவுட் சண்டைக்கலைஞர்களும் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். தற்போது பின்னி மில்லில் சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறோம். இதில் 7 கேமரா பயன்படுத்தப்படுகிறது. 60 சண்டைக்கலைஞர்கள் நடிக்கின்றனர். ஹீரோயினாக நடிக்க முன்னணி இந்தி நடிகையிடம் பேசி வருகிறோம். இவ்வாறு சிம்பு கூறினார்.
தயாரிப்பாளருடன் தமன்னா தகராறா?
4/11/2011 10:10:16 AM
தெலுங்கில் நாக சைதன்யாவுடன் '100% லவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. படத்தின் தயாரிப்பாளர் தமன்னாவுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாகவும் இதனால், அவர் டப்பிங் பேச மறுத்துவிட்டதாகவும் தெலுங்கு பட உலகில் செய்திகள் பரவியுள்ளது. இதுபற்றி தமன்னா கூறியதாவது: சினிமாவுக்கு வந்த புதிதில் என்னைப் பற்றி ஏராளமான வதந்திகள் வந்தது. அதை நான் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது தயாரிப்பாளருக்கும் எனக்கும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்றே சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். தமிழ், தெலுங்கு பட உலகில் நடித்து வருகிறேன். இதுவரை யாரிடமும் எந்த பிரச்னையும் செய்ததில்லை. தயாரிப்பாளருடன் பிரச்னை என்ற செய்தியில் உண்மையில்லை. இவ்வாறு தமன்னா கூறினார்.