வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க நீளமாக டைட்டில் வைத்த படக்குழு காரணம் என்ன?

சென்னை: ஆர்யா - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க. இந்தப் படத்தின் சுருக்கமான டைட்டிலாக வி.எஸ்.ஓ.பி என்று பெயர் வைத்திருந்த படக்குழுவினர், சமீபகாலமாக விளம்பரங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

காரணம் என்னவென்று விசாரித்தால் பயத்தில் இந்த வார்த்தையை நீக்கி இருக்கின்றனர் என்று கூறுகிறார்கள், அப்படி என்ன பயம் இந்த படக்குழுவினருக்கு காரணத்தை நீங்களும் கேளுங்கள்.

Vasuvum Saravananum Onna Padichavanga Movie

வி.எஸ்.ஓ.பி என்பது ஒரு பிரபலமான மதுபானத்தின் பெயர் இந்தப் பெயரை வைத்தால் படத்திற்கு சுலபமாக விளம்பரம், கிடைத்து விடும் என்ற நல்லெண்ணத்தில் இந்தப் பெயரை தொடர்ந்து விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அது தொடர்பான விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, பூரண மதுவிலக்கை( மதுவே இல்லாத தமிழ்நாடு) தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மதுவகையை குறிக்கும் வி.எஸ்.ஓ.பி என்ற வார்த்தையை படத்தின் விளம்பரங்களில் பயன்படுத்தினால் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் படம் வெளியாகும் நேரத்தில் கண்டிப்பாக பிரச்சினையைக் கிளப்புவார்கள்.

எனவே இந்த மாதிரி பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாது என்று எண்ணிய படக்குழுவினர் தற்போது இந்த சுருக்கமான தலைப்பை பயன்படுத்தாமல், அடக்கி வாசித்து வருகின்றனர்.

டைட்டில்ல பிரச்சினை இல்ல ஆனா படம் முழுக்க "தண்ணி" ஆறா ஓடுதுன்னு பிரச்சினை வந்தா என்ன பண்ணுவீங்க ராஜேஷ் சார்?

 

உத்தம வில்லன் நஷ்டத்தைச் சரிகட்ட லிங்குசாமிக்கு கை கொடுக்கும் கமல் ஹாஸன்!

ஒரு தயாரிப்பாளராக லிங்குசாமியின் வளர்ச்சியைப் பார்த்து கடந்த ஆண்டு வியந்தவர்களைவிட, பொறாமைப்பட்டவர்களே அதிகம்.

ஆனால் அவர்களின் வாய்க்கு அவல் மாதிரி அமைந்தது அஞ்சான் தோல்வி. அதிலிருந்து நிச்சயம் மீண்டு விடுவார் லிங்கு என்று அவரது நலம் விரும்பிகள் பலரும் எதிர்ப்பார்த்த நேரத்தில் இடியாய் இறங்கியது உத்தம வில்லன்.

Lingusamy to release Kamal's Thoongavanam

அந்தப் படத்தை வெளியிடுவதற்குள் லிங்குசாமியின் விழி பிதுங்கிவிட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்போது, குறைந்த செலவில் ஒரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார் கமல் ஹாஸன்.

இன்னொரு பக்கம் உத்தம வில்லன் பெரும் பாராட்டுக்களைப் பெற்றும், அதற்கான வசூலைக் குவிக்காமல் போனதால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார் லிங்கு.

இப்போது லிங்குசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல், சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. இரண்டு படங்களுக்குமே நல்ல மவுத் டாக்கை ஏற்படுத்தியுள்ளன. இது லிங்குசாமிக்கு தெம்பைத் தந்துள்ளது.

இந்த நிலையில் கமலும் தன் பங்குக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார். குறைந்த செலவில் தான் பண்ணித் தருவதாக வாக்குறுதி அளித்த படம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது தான் நடித்து வரும் தூங்கா வனம் படத்தின் வெளியீட்டு உரிமையை உங்களுக்கே தருகிறேன் என்று கூறி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘தூங்காவனம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், கிஷோர், பிரகாஷ் ராஜ், சம்பத், யூகி சேது உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்துக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாலு சிக்கல்... அஜீத் ரசிகன் சிம்புவுக்கு விஜய் செய்த பேருதவி!

சிம்பு தன்னை அஜீத் ரசிகன் என வெளிப்படையாகச் சொல்லிக் கொள்பவர். ஆனால் அதையெல்லாம் பார்க்காமல், அவருக்கு காலத்தே ஒரு பேருதவி செய்திருக்கிறார் விஜய் .

வாலு படம் வெளியாக முடியாமல் எந்த அளவு திண்டாடி வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். அந்தப் படம் இப்போது நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபட்டுள்ளது. ஆனால் நிதிச் சிக்கல் தீரவில்லை.

விஷயத்தைக் கேள்விப்பட்ட விஜய், எவ்வளவு தொகை என்பதை விசாரித்து அதைத் தானே முழுவதும் செலுத்துவதாகவும், ஆனால் படத்தை தான் சொல்லும் விநியோகஸ்தருக்கு மட்டுமே தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

Vijay's big help to release Simbu's Vaalu

மேலும் தான் செய்யும் இந்த உதவியை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி அமைதியாக ஒதுங்கிக் கொண்டாராம்.

வாலு படம் ஆகஸ்ட் 14-ல் வெளியாகப் போவதாக அறிவிப்பு வந்ததன் பின்னணி விஜய் செய்த இந்த பெரும் உதவிதான் என்கிறார்கள்.

 

பெப்சி விவகாரம்... படப்பிடிப்புகளை இன்று ரத்து செய்தது தயாரிப்பாளர் சங்கம்!

சென்னை: பெப்சி அமைப்புடன் சுமூக முடிவு ஏற்படும் வரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா பட தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே கடந்த சில நாட்களாக சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் நடந்து வந்தது. இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

Producers Council announced to stop all shootings

இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்கள், சினிமா தயாரிப்பாளர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக திருத்தியமைக்கப்பட்ட சம்பள உயர்வை அறிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்தபின், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே நடைபெற்று வந்த சம்பள பேச்சுவார்த்தையில் சுமூகமான நிலை ஏற்படாதவரை, படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பது போல், சினிமா தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கிணங்க இந்த பிரச்சினையில் ஒரு சுமுகமான நிலை திரும்பும் வரை, உள்ளூர்-வெளியூர் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ‘எடிட்டிங்', ‘டப்பிங்', பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கமல், அஜீத், சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி படப்பிடிப்புகள் ரத்து!

பெப்சி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் 'படப்பிடிப்பு ரத்து' அறிவிப்பைத் தொடர்ந்து கமல், அஜீத், சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வரும் படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பெப்சி அமைப்புடனான சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படும் வரை எந்தப் படப்பிடிப்பும் நடக்காது, பெப்சி தொழிலாளர் யாரையும் வைத்து பணியாற்ற முடியாது என்பதில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக உள்ளது.

30 movies including Kamal, Ajith starrer shooting cancelled

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹைதராபாத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தூங்காவனம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் கொல்கத்தாவில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் சூர்யா நடித்து வரும் ‘24‘ என்ற படத்தின் படப்பிடிப்பு, பல்கேரியா நாட்டில் நடந்து வந்த பெயர் சூட்டப்படாத கார்த்தி படத்தின் படப்பிடிப்பு மற்றும் சென்னையில் விஜய்சேதுபதி நடித்து வரும் ‘இறைவி' ஆகிய படத்தின் படப்பிடிப்பு உள்பட 30 தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுக்கும் இடையே சென்னையில் உள்ள பிலிம் சேம்பரில் இன்று(திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்றாவது முடிவுக்கு வருமா பிரச்சினை என திரையுலகம் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

 

இதுவரை நடிக்காத வேடத்தில் ஜெய்.. புகழ் படத்துக்காக!

சென்னை: தொடர்ந்து அப்பாவி வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஜெய் தற்போது ஆக்க்ஷன் அவதாரம் எடுத்து வருகிறார், ஆக்க்ஷனை ஏற்கனவே நடித்த வலியவன் திரைப்படம் ஜெய்க்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

எனினும் அதனைப் பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளாமல் தற்போது புகழ் படத்தில் இவன் வேற மாதிரி சுரபியுடன் இணைந்து நடித்து வருகிறார். புகழ் படத்தில் இதுவரையில் நடிக்காத ஒரு வேடத்தில் நடித்து வருகிறார் ஜெய்.

Pugazh Story Based on Political Back Drop?

ஆமாம் இந்தப் படத்தில் முதன்முறையாக அரசியல் சார்ந்த கதைக் களத்தில் நடித்து வருகிறார் ஜெய். உதயம் NH 4 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணிமாறன் இயக்கும் இந்தப் படம் ரொமாண்டிக், எமோஷன், ஆக்க்ஷன் மற்றும் த்ரில்லர் என எல்லாம் கலந்த கலவையாக இருக்குமாம்.

Pugazh Story Based on Political Back Drop?

"புகழ்" ஜெய்யின் அப்பாவித் தனத்தை மறைத்து ஆக்க்ஷன் ஹீரோவாக வெளிக்காட்டுமா? என்று பார்க்கலாம்..

 

'நைட் ஷோ'வாக வருகிறது மலையாள ஷட்டர்.. ட்ரைலரை வெளியிட்ட எஸ்ஜே சூர்யா!

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியையும் பாராட்டுக்களையும் குவித்த ஷட்டர் திரைப்படம், தமிழில் தி நைட் ஷோ என்ற பெயரில் வெளியாகிறது.

ஷங்கர், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த ஆன்டனி முதல் முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

மலையாஷத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தை, நைட்ஷோ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஆன்டனி.

Night Show trailer launch

இப்படத்தில் சத்யராஜ், அனுமோல், கல்யாணி நடராஜன், வருண் ஐசரி, தீட்சிதா கோத்தாரி, யூகி சேது உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ட்ரைலர் சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது. இந்த விழாவில், நடிகர் சத்யராஜ், சூர்யா, யூகி சேது, உதயா, இயக்குனர்கள் கௌதம் மேனன், கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா, ஜாய் மேத்யூ, ஏ.எல்.விஜய், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், ஐசரி கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் டிரைலரை சூர்யா வெளியிட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.