4/15/2011 4:01:44 PM
அசின் கூறியது: பாலிவுட் போட்டி நிறைந்த உலகம். என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன் போட்டியில் ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற ஹீரோயின்கள் எத்தனை படங்களில் நடிக்கிறார்கள். நான் எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பதில் கூட அக்கறை கிடையாது. எனக்கு ஸ்கிரிப்ட், தயாரிப்பு நிறுவனம்தான் முக்கியம். பின்னர் ஹீரோ. இந்த பாலிசியுடன்தான் எனது படங்களை தேர்வு செய்கிறேன். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. சில காரணங்களால் ஏற்கவில்லை. அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. சில ஐ.பி.எல் டீமில் என்னை தூதராக இருக்கக் கேட்டார்கள். எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். ஆனால் தூதராக இருக்க விரும்பவில்லை. அதற்கும் காரணங்கள் இருக்கிறது. ஒரு படம் ஒப்புக்கொள்ளும்போது அதில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று முக்கியமாக பார்க்கிறேன். ஹீரோவின் கைப்பாவையாக மட்டுமே வந்துபோக விரும்பவில்லை. மணிரத்னம், பிரியதர்ஷன், ராஜ்குமார் ஹிரானி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை. சமீபகாலமாக நான் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது. நிச்சயமாக அப்படி நடிக்க மாட்டேன்.