'புத்தகம்' மூலம் இயக்குநராகும் விஜய் ஆதிராஜ் - ஆர்யா தம்பி சத்யா ஹீரோ!


பெரிய திரையில் பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டு, பின்னர் சின்னத் திரை வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டவர் விஜய் ஆதிராஜ்.

ஆனால் தொலைக்காட்சி வட்டாரத்தில் இவர் படு பிஸி. நடிகர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவர் பல நிலைகளிலும் பணியாற்றியவர். இப்போது புதிதாக படம் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'புத்தகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் மட்டும் புதுமுகம் அல்ல. நடிகரும்தான். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாதான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

காதலும், காமெடியும் கலந்த கதை இது. விஜய் ஆதிராஜ் கதை எழுதி இயக்குகிறார். வசனத்தை குஹன் ஸ்ரீனிவாசன் எழுதுகிறார்.

விஜய் ஆதிராஜின் நண்பர் ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, நா. முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார்.
Posted by: Shankar
 

கர்ப்பிணி வேஷத்துக்கு காத்திருக்கும் அனுஷ்கா!


அனுஷ்காவுக்கு இப்போது கவனமெல்லாம் வித்யா பாலன் செய்யும் வேடங்கள் மீதுதான்.

அவரைப் போல தமிழிலும் போல்டான வேடங்களில் நடிக்க விரும்புகிறாராம் அனுஷ்கா.

முன்பு டர்ட்டி பிக்சர் வெளியானபோது, வித்யா பாலன் நடித்த சில்க் வேடத்தில் தான் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரது அடுத்த குறி, வித்யா பாலனின் கஹானி படத்தின் மீதுதானாம்.

விக்ரமுடன் 'தாண்டவம்', சூர்யாவுடன் 'சிங்கம் 2', ஆர்யாவுடன் 'இரண்டாம் உலகம்', கார்த்தியுடன் 'அலெக்ஸ் பாண்டியன்' என வரிசையாக படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து யாராவது கஹானியை தமிழில் ரீமேக் செய்தால், அதில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்து இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ' கஹானி'. நிறைமாத கர்ப்பிணி பெண் தனது கணவனைத் தேடி இந்தியா வருவது போல தொடங்கி, அந்த பெண் எப்படி தனது கணவரை கண்டுபிடிக்கிறாள் என்பதாக அந்தப் படம் போகிறது.

அனுஷ்கா ஆசைக்காகவாவது கஹானியை ரீமேக் செய்ய மாட்டார்களா என்ன?
Posted by: Shankar
 

ரூ 20 கோடி நில மோசடி: உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்ததாக சான்றிதழ் வாங்கிய பிரபல நடிகர்!


Vignesh
சென்னை: ரூ 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க, உயிரோடு இருக்கும் 85 வயது மூதாட்டியை இறந்துவிட்டதாக சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார் நடிகர் விக்னேஷ்.

சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள் (85). இவருக்கு கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் 5 கிரவுண்ட் நிலம் உள்ளது. அதன் இன்றைய சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய். வீரம்மாளுக்கு சின்னத்தம்பி என்ற மகன் இருந்தார். அவர் இறந்து விட்டார்.

சின்னதம்பியின் மனைவி கீதா. இவருடைய சகோதரி சுதா. சுதாவும், கீதாவும் சகோதரிகள் என்பதால், உயிரோடு இருக்கும் வீரம்மாள் இறந்ததுபோல, போலியான ஆவணங்களை தயார் செய்து, சட்டப்பூர்வமான முறையில் அதற்கான லீகல் ஒப்பீனியனையும் வாங்கி நிலத்தை தங்கள் பெயருக்கு பதிவு செய்து கொண்டனர்.

பின்னர் கீதாவை இதிலிருந்து மெதுவாக கழற்றிவிட்ட சுதா, தன்னுடைய மருமகனும், பிரபல நடிகருமான விக்னேஷ் என்கிற அந்தோணி சாமி உதவியுடன் இறந்துபோன சின்னதம்பியின் பிள்ளைகள் அரவிந்த், வசந்த் ஆகியோருடைய கையெழுத்துக்களையும் வாங்கி இந்த நிலத்தை முழுமையாக விக்னேஷ் உறவுமுறைகளுக்கும் விக்னேஷ் பெயருக்கும் மாற்றிக்கொண்டுவிட்டனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட வீரம்மாள் 2011 இறுதியில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடவடிக்கை கேட்டு புகார் மனு கொடுத்தார். ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வீரம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் மோசடிக்கு உதவியவர்கள் அத்தனை பேர் மீதும் எப்ஐஆர் போட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சுதா, விக்னேஷ், உமாமகேஷ்வரி, வசந்த், வீரபாண்டியன், ரவிக்குமார் ஆகியோர் மீது கிண்டி போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர்.
Posted by: Shankar
 

மே 1-ல் கமலின் விஸ்வரூபம் ட்ரைலர் ரிலீஸ்!!


Kamal Hassan
சாதனை நடிகர் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டக் காட்சி வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் பொருட்செலவில் கமல்ஹாஸன் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம்.

இந்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாத அளவு ரகசியம் காத்து வருகிறார் கமல் ஹாஸன். எந்தத் தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது என படத்தில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அட, படத்தின் பிஆர்ஓவே விஸ்வரூபம் என்றதும் உதடுகளை இறுக்க மூடிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

அன்று உழைப்பாளர் தினம் என்பதால், அன்றே தனது படத்தின் டிரைலரை கமல் வெளியிடப் போகிறாராம்.

விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்தது. இப்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. கமல் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளதாக சொல்கிறார்கள்.

முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.

30 நொடிகள் ஓடும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
Posted by: Shankar
 

சோனாக்ஷியைப் பிடித்தார் பிரபுதேவா!


பிரபு தேவாவின் காதல் கதைகள் கிட்டத்தட்ட சிந்துபாத் கதை மாதிரி 'முற்றும்' விழாமல் தொடர்ந்து கொண்டே உள்ளன.

நயன்தாராவும் அவரும் பிரிந்த பிறகு, இந்த நடிகையுடன் காதல், அந்த நடிகையுடன் நெருக்கம் என செய்திகள் வருகின்றன.

ஹன்ஸிகாவைத்தான் பிரபு தேவா காதலிப்பதாக கிசுகிசு பரவியது. அதனை மறுத்த ஹன்ஸிகா, கரகாட்டாக்காரன் கோவை சரளா பாணியில், பிரபு தேவா என் அண்ணன் மாதிரி என்று ஒரு போடு போட்டார்.

அடுத்து சமீபத்தில் பிரபு தேவாவுடன் நள்ளிரவுப் பார்ட்டியில் பங்கேற்று நெருக்கமாக நடனம் ஆடி பத்திரிகைப் பக்கங்களைச் சூடேற்றியிருந்தார் த்ரிஷா.

அந்த சூடு குறையும் முன் இப்போது பிரபு தேவாவுடன் கிசுகிசுக்கப்படுபவர் மும்பை அழகுப் புயல் சோனாக்ஷி சின்ஹா. பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா மகள் இவர்.

பிரபு தேவா இயக்கியுள்ள ரவுடி ரதோர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தமாகி ஐதராபாத்துக்கும் கோடம்பாக்கத்துக்குமாய் போய் வந்து கொண்டு இருக்கிறார்.

பெங்களூர் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை காண பிரபுதேவாவும் சோனாக்ஷியும் ஜோடியாக வந்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரது கண்களும் அவர்களையே மொய்த்தன. எதிர்பாராதவிதமாக மழை பெய்து போட்டியை நடக்க விடாமல் செய்தது. இதனால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மும்பை திரையுலகில் இவர்களின் நெருக்கம் பற்றி கிசுகிசு பரவியுள்ளது.

மும்பை நட்சத்திர ஓட்டல்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளிலும் பிரபுதேவா - சோனாக்ஷி ஜோடியாகப் பங்கேற்று, மீடியாவுக்கு ஏக சென்சேஷனல் செய்திகளைத் தந்து வருகிறார்கள்.

இது எங்கே போய் முடியப் போகிறதோ...
Posted by: Shankar
 

யார்ட்லி விளம்பரத்தில் எமி ஜாக்ஸன்!


யார்ட்லி அழகு சோப் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் மதராசப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸன்.

பிரிட்டனைச் சேர்ந்த எமியை, மதராசப்பட்டினம் பட நாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் விஜய்.

இந்த ஒரே படத்தில் அவர் ஓஹோவென்று உயரத்துக்குப் போய்விட்டார். அடுத்து ஏக் தீவானா தா இந்திப் படத்தில் நடித்தார்.

இப்போது தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் எமி.

இதற்கிடையே பெரிய பட்ஜெட் தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்த வாய்ப்புகள் அவரை அகில இந்திய அளவில் பெரிய நடிகையாக உயர்த்திவிட்டன. இதன் பலன், இந்திய அளவில் விளம்பர வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்துள்ளன.

எடுத்த எடுப்பில், அவரை யார்ட்லி சோப்பின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கான விளம்பரப் படங்களில் ஒய்யாரமாகத் தோன்ற ஆரம்பித்துள்ளார் அவர். யார்ட்லி பிரிட்டிஷ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவங்க ஊரு தயாரிப்புக்கு அவங்க ஊரு பொண்ணா பாத்து புடிச்சிட்டாங்க போல!
Posted by: Shankar
 

17 ஆண்டுகள்... பல சீரியல்கள்... ஒரு சேனல்! - அபிநயா கிரியேஷன்ஸ் ஜேகேயின் அனுபவங்கள்

Abhinaya Creations JK
சி‌ன்‌னத்‌தி‌ரை‌ உலகி‌ல்‌ பல வெ‌ற்‌றி‌த்‌ தொ‌டர்‌களை‌த்‌ தயா‌ரி‌த்‌து, தனக்‌கெ‌ன ஒரு தனி‌ முத்‌தி‌ரை‌யை‌ப்‌ பதி‌த்‌தி‌ருக்‌கும்‌ அபி‌நயா‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸ்‌ நி‌றுவனத்‌துக்‌கு, இந்‌த ஆண்‌டு முக்‌கியமா‌ன ஆண்‌டு. பதி‌னா‌று ஆண்‌டுகளை‌க்‌ கடந்‌து பதி‌னே‌ழா‌வது ஆண்‌டி‌ல்‌ அடியெடுத்து வைக்கிறது இந்த நிறுவனம்.

அந்‌நி‌றுவன ஆக்‌கத்‌ தலை‌வர்‌‌ மற்‌றும்‌ கதை‌யா‌சி‌ரி‌யர்‌ ஜே‌.கே‌. தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்...

பதி‌னே‌ழா‌ம்‌ ஆண்‌டி‌ல்‌ அடி‌யெ‌டுத்‌து வை‌த்‌தி‌ருக்‌கி‌றீ‌ர்‌கள்‌? எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌‌?

நல்‌ல கதை‌ இருந்‌தா‌ல்‌ வெ‌ற்‌றி‌ பெ‌றுவோ‌ம்‌, அதே‌ போ‌ல‌ நண்‌பர்‌களா‌க இணை‌ந்‌து ஒரு பி‌ரா‌ஜக்‌ட்‌ செ‌ய்‌யு‌ம்‌ போ‌து. பலருடை‌ய ஒத்‌துழை‌ப்‌பு‌ம்‌ நமக்‌கு கி‌டை‌க்‌கி‌றது. எந்‌த ஒரு தொ‌ழி‌லி‌லும்‌ அதி‌கா‌ரம்‌ செ‌ய்‌ய கூடா‌து. நட்‌பு‌தா‌ன்‌ சா‌தி‌க்‌கும்‌ என்‌பதை‌ நா‌ன்‌ உணர்‌ந்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.

உங்‌கள்‌ அபி‌நயா‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸ்‌ எத்‌தனை‌ தொ‌டர்‌கள்‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌றது‌?

1996 ஆம்‌ ஆண்‌டு மே‌ 7-ம்‌ தே‌தி‌ எங்‌களது முதல்‌ தயா‌ரி‌ப்‌பா‌க‌ கோ‌வை‌ அனுரா‌தா‌வி‌ன்‌ ‘கா‌ஸ்‌ட்‌லி‌ மா‌ப்‌பி‌ள்‌ளை’ என்‌கி‌ற முதல்‌ தொ‌டர்‌ ஒளி‌பரப்‌பா‌னது. அதி‌லி‌ருந்‌து தொ‌டர்‌ச்‌சி‌யா‌க ‘மா‌ண்‌பு‌மி‌கு மா‌மி‌யா‌ர்’, ‘மகா‌ரா‌ணி‌ செ‌ங்‌கமலம்‌’, ‘கி‌ரீ‌‌ன்‌ சி‌க்‌னல்’, ‘செ‌ல்‌லம்‌மா’, ‘மங்‌கள அட்‌சதை’, ‘கே‌ள்‌வி‌யி‌ன்‌ நா‌யகனே’, ‘என்‌ பெ‌யர்‌ ரங்‌க நா‌யகி’ என வா‌ரா‌ந்‌தி‌ர தொ‌டர்‌களா‌க எட்‌டு தயா‌ரி‌த்‌தோ‌ம்‌.

2002 மே‌ மா‌தம்‌ ‘மங்‌கல்‌யம்‌’ என்‌ற முதல்‌ மெ‌கா‌ தொ‌டரை‌‌ எடுத்‌தோ‌ம்‌. அது 330 எபி‌சோ‌ட்‌கள்‌ ஒளி‌பரப்‌பா‌னது, அதை‌யடுத்‌து ‘ஆடுகி‌றா‌ன்‌ கண்‌ணன்’, ‘தீ‌ர்‌க்‌க சுமங்‌கலி’, ‘செ‌ல்‌லமடி‌ நீ‌ எனக்‌கு’, ‘தி‌ருப்‌பா‌வை’, ‘அனுபல்‌லவி’, இப்‌போ‌து ஒளி‌பரப்‌பா‌கி‌ வரும்‌ ‘வெ‌ள்‌ளை‌தா‌மரை‌’ என தொ‌டர்‌கி‌றது.

எனக்‌கு ஒவ்‌வொ‌ரு தொ‌டரி‌லும்‌ ஒவ்‌வொ‌ரு அனுபவம்‌. கா‌ஸ்‌ட்‌லி‌ மா‌ப்‌பி‌ள்‌ளை‌ தொ‌டரை‌ப்‌ பொ‌ருத்‌தவரை‌ அது கா‌மெ‌டி‌ தொ‌டர்‌தா‌ன்‌. இருந்‌தா‌லும்‌ ஒவ்‌வொ‌ரு வரி‌யி‌லும்‌ ஒரு மெ‌ஸே‌ஜ்‌ இருக்‌கும்‌. இந்‌தி‌யா‌வி‌ல்‌ பீப்‌பில்‌ஸ்‌ மீ‌ட்‌டர்‌ என்‌று மக்‌கள்‌ ரசனை‌ அறி‌யு‌ம்‌ ஒன்‌று இருக்‌கி‌றது. அதன்‌ கணக்‌குப்‌ படி‌ இந்‌தி‌யா‌வி‌லே‌யே‌ அந்‌த சீ‌ரி‌யல்‌ கடை‌சி‌‌ வரை‌ நம்‌பர்‌ ஒன்‌ சீ‌ரி‌யலா‌கவே‌ இருந்‌தது.

ஒரு தொ‌டர்‌ வரதட்‌சனை‌ கொ‌டுமை‌யை‌ மை‌யப்‌படுத்‌தி‌யது, மற்‌றொ‌ன்‌று தீ‌ண்‌டா‌மை‌யை‌ப்‌ பற்‌றி‌, மா‌மி‌‌யா‌ர்‌ மருமகள்‌ சண்‌டை‌ ஏன்‌‌ உருவா‌கி‌றது என்‌பதை‌யு‌ம்‌, பு‌ரி‌தல்‌ இல்‌லா‌மை‌யே‌ இப்‌படி‌ப்‌பட்‌ட‌ கருத்‌து வே‌றுபா‌டுகள்‌ ஏற்‌படக்‌ கா‌ரணம்‌ என்‌பைதையு‌ம்‌ இன்‌னொ‌ரு தொ‌டர்‌ சொன்‌னது. குடும்‌ப உறவு‌களை‌ மதி‌க்‌க வே‌ண்‌டும்‌, வெ‌‌றுக்‌க கூடா‌து என்‌பது போ‌ன்‌ற உணர்வு‌களை‌ ஒரு தொ‌டர்‌ சொ‌ன்‌னது.

கணவன்‌‌ மனை‌வி‌க்‌குள்‌ள இருக்‌கும்‌ மெ‌ல்‌லி‌ய கா‌தலை‌ சொ‌ன்‌னது மகா‌ரா‌ணி‌ செ‌ங்‌கமலம்‌, ஒருவருக்‌கு ஒருவர்‌ உதவி‌யா‌க இருக்‌க வே‌ண்‌டும்‌ என்பதை‌‌ மை‌யப்‌படுத்திச்‌‌ சொன்‌னது கீ‌ரி‌ன்‌ சி‌க்‌னல்‌, கணவன்‌ மனை‌வி‌க்‌குள்‌ள ரகசி‌யங்‌கள்‌ கூடா‌து என்‌பதை‌ சொ‌ன்‌னது மங்‌கள அட்‌சதை. இப்‌படி‌ எங்‌களுடை‌ய ஒவ்‌வொ‌ரு தொ‌டரி‌லும்‌ ஒரு வி‌த்‌தி‌யா‌சமா‌ன நல்‌ல கதை‌‌ இருக்‌கும்‌, கண்‌டி‌ப்‌பா‌க மக்‌களுக்‌கு நல்‌ல மெ‌ஸெ‌ஜ்‌ இருக்‌கும்‌.

உங்‌கள்‌ தொ‌டர்‌களுக்‌கா‌ன கதையை‌ எங்‌கி‌ருந்‌து எடுக்‌கி‌றீர்‌கள்‌? நீண்ட நாட்கள் சொல்வது போரடிக்காதா?

மக்‌களி‌டம்‌ இருந்‌ததுதா‌ன்!‌ நா‌ன்‌ பா‌ர்‌க்‌கும் மனி‌தர்‌கள்தா‌ன்‌ என்‌ கதை‌களுக்‌கு வி‌தை‌கள்‌. சந்‌தி‌க்‌கும்‌ ஒவ்‌வொ‌ரு மனி‌தனை‌யு‌ம்‌ மனதி‌ல்‌ பதி‌வு‌ செ‌ய்‌து கொள்‌வே‌ன்‌. உங்‌களை‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து உங்‌களி‌டம்‌ உள்‌ள நல்‌ல வி‌ஷயங்‌களை‌க்‌ கி‌ரகி‌த்‌துக்‌ கொ‌ள்‌வே‌ன்‌. பு‌து வி‌‌ஷயங்‌களைப்‌‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌தும்‌, கே‌ட்‌கும்‌ போ‌தும்‌ இப்‌படி‌ இருந்‌தா‌ல்‌ இது நல்‌லா‌ இருந்‌தி‌ருக்‌குமே‌ன்‌னு நி‌னை‌க்‌கி‌றோ‌மே‌ அந்‌த உணர்‌வி‌ன்‌ வெ‌ளி‌ப்‌பா‌டுதா‌ன்‌ என்‌ கதை‌கள்‌. நாங்கள் தொடர்களை நீண்ட நாட்களுக்கு இழுப்பதில்லை. சுவாரஸ்யம் குறையாமல் தருகிறோம்.

கி‌ட்‌டதட்‌ட 17 வருடங்‌களா‌க ஒரே‌ சே‌னலி‌ல்‌ உங்‌கள்‌ இடத்‌தை‌ தக்‌க வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றீ‌ர்‌கள்‌? எப்‌படி‌ சா‌த்‌தி‌யமாச்சு?

ஒரு வி‌ஷயத்‌தை‌ ஒழுங்‌கா‌கச்‌ செ‌ய்‌தா‌ல்‌ எங்‌கே‌யு‌மே‌ ஒழுங்‌கா‌ இருக்‌கலா‌ம்‌. சொ‌ல்‌ல வந்‌ததை‌ நே‌ர்‌த்‌தி‌யு‌டன்‌ சொ‌ன்‌னா‌ல்‌ எல்‌லா‌ம்‌ சா‌த்‌தி‌யமே‌. சன்‌ டி‌வி‌யை‌ப்‌ பொ‌ருத்‌தவரை‌ எல்‌லோ‌ருக்‌கும்‌ கருத்‌துச்‌ சுதந்‌தி‌ரம்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அதைச்‌‌ சரி‌யா‌க பயன்‌படுத்‌து‌றே‌ன்‌. ரசி‌கர்‌கள் மனநி‌லை‌ பு‌ரி‌ந்‌து அவர்‌களுக்‌கு இதுதா‌ன்‌ வே‌ணும்‌ என்‌று நா‌ன்‌ பி‌க்‌ஸ்‌ பண்‌ணி‌க்‌குவே‌ன்‌. அதனா‌ல டி‌ஆர்‌பி‌யி‌ல எந்‌த பா‌தி‌ப்‌பு‌ம்‌ ஏற்‌படா‌து. சே‌னலும் எங்களை உற்சாகப்படுத்தறாங்க.

உங்‌கள்‌ தொ‌டர்‌களி‌ன்‌ டை‌ட்‌டி‌ல்‌ சா‌ங்‌ ஒவ்‌வொ‌ன்‌றும்‌ நல்‌ல வரவே‌ற்‌பு‌ப்‌ பெ‌றுவதன்‌ கா‌ரணம்‌ என்‌ன?

அதற்‌குக்‌ கா‌ரணம்‌ ஒவ்‌வொ‌ரு பா‌டலி‌லும்‌ கி‌ளா‌சி‌க்‌கல்‌ டச்‌ இருக்‌கும்‌. அதனா‌லதா‌ன்‌ என்‌ பா‌டல்‌கள்‌ வெ‌ற்‌றி‌ பெ‌றுகி‌றது. அதுதா‌ன்‌ ஒவ்‌வொ‌ருவரை‌யு‌ம்‌ முணுமுணுக்‌கச்‌ செ‌ய்‌கி‌றது.

ஸ்‌டுடி‌யோ‌க்‌களுக்‌கு உள்ளே‌ இருந்‌த தொ‌‌டர்‌களை‌ அவு‌ட்‌டோ‌ருக்‌கு‌ கொ‌ண்‌டு போ‌னவர்‌ நீ‌ங்‌கள்‌. அந்‌த அனுபவம்‌ பற்‌றி‌?

ஐந்தா‌று தொ‌டர்‌களுக்‌குப்‌ பி‌றகுதா‌ன், நா‌ன்‌ அவு‌ட்‌டோ‌ர் போ‌னே‌ன்‌. என்‌னை‌ அறி‌யா‌மல்‌ எனக்‌கு அங்‌கு ஒரு செ‌ல்‌வா‌க்‌கு இருந்‌தது. அதற்‌குக்‌ கா‌ரணம்‌ சன்‌ டி‌வி‌. ஏனென்‌றா‌ல்‌ என்‌னுடை‌ய தொ‌டர்‌கள்‌ எல்‌லா‌ம்‌ ஆடி‌யன்‌ஸ்‌க்‌கு நல்‌லா‌ ரீ‌ச்‌ ஆ‌கி‌ அபி‌நயா‌ கி‌ரி‌யே‌ஷன்‌சை‌‌ தங்‌களுடை‌ய வீ‌ட்‌டுக்‌ கம்‌பெ‌னி‌‌ போ‌ல மக்‌கள்‌ பா‌வி‌க்‌க ஆரம்‌பி‌த்‌தா‌ர்‌கள். அதை‌ நா‌ன்‌ கண்‌ கூடா‌கப்‌ பா‌ர்‌த்‌தே‌ன்‌.

கொ‌டை‌க்‌கா‌னலி‌ல்‌ ஒரு முறை‌ சூ‌ட்‌டி‌ங்‌ போ‌னோ‌ம். சூ‌ட்‌டி‌ங்‌ எடுக்‌க அனுமதி‌யே‌ கி‌டை‌க்‌கல. ஒருத்‌தர்‌ என்‌ன தொ‌டர்‌ என்‌று கே‌ட்‌க, கம்‌பெனி‌‌ பே‌ரைச்‌‌ சொ‌ல்‌லி‌, தொ‌டரி‌ன்‌ பே‌ர்‌, தீ‌ர்‌க்‌க சுமங்‌கலி‌ என்‌று சொ‌ன்‌னதும்‌, உடனே‌, “தீ‌ர்‌க்‌க சுமங்‌கலி‌யா? சூ‌ப்‌பர்‌ கதை‌யா‌ச்‌சசே‌?. நீ‌ங்‌க தா‌ரா‌ளமா‌ சூ‌ட்‌டி‌ங்‌ எடுத்‌துக்‌கோ‌ங்‌க”ன்‌னு சொ‌ன்‌னாங்‌க. ரொ‌ம்‌ப குஷி‌யா‌கி‌டுச்‌சு. அதே‌போ‌ல ஆடுகி‌றா‌ன்‌ கண்‌ணன்‌ தொ‌டருக்‌கா‌க டெ‌ல்‌லி‌ போ‌ய்‌ ஸா‌‌ங்‌ சூ‌ட்‌ பண்‌ணி‌னோ‌ம்‌‌. ‌ அதன்‌ பி‌றகு கும்‌பகோ‌ணம்‌, தஞ்‌சா‌வூ‌ர்‌, தி‌ருவை‌யா‌று, தி‌ருவா‌ரூ‌ர்‌, மும்‌பை‌, ஊட்‌டி‌, கோத்‌தகி‌ரி‌, கொ‌டை‌க்‌கா‌னல்‌ என பல இடங்‌களி‌ல்‌ எடுத்‌தி‌ருக்‌கோ‌ம்‌. எல்‌லா‌ இடங்‌களி‌லும்‌ நல்‌ல மரி‌யா‌தை‌யு‌ம்‌ ஒத்‌துழை‌ப்பும்‌ கி‌டை‌த்‌தது. அதெ‌ல்‌லா‌ம்‌ மறக்‌க முடி‌யா‌த அனுபவங்‌கள்‌.

முன்‌பு‌ தொ‌லை‌க்‌கா‌ட்‌சி‌த்‌ தொ‌டர்‌கள்‌ எடுத்‌தற்‌கும்‌‌, இப்‌போ‌தை‌ய கா‌லகட்‌டத்‌தி‌ற்‌கும்‌ நி‌றை‌ய மா‌ற்‌றங்‌கள்‌ ஏற்‌பட்‌டி‌ருக்‌கி‌றது. எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌?

டெ‌‌க்‌னா‌லஜி‌ முன்னேற்றம்தான். அதா‌வது தி‌ரை‌ப்‌படங்‌கள்‌ மா‌தி‌ரி‌தா‌ன்‌. 1948-ல்‌ சி‌னி‌மா‌ வந்த‌தற்‌கும்‌ பி‌றகு 60-ல்‌ வந்ததற்கும் இருந்த மாற்றத்தைப் போலத்தான். அடுத்‌து 80-களி‌ல்‌ ஒரு மா‌ற்‌றம்‌, 90-ல்‌ ஒரு மா‌ற்‌றம்.‌ இப்‌போ‌து ஒரு மா‌ற்‌றம்‌. இப்‌படி‌ ரசி‌கர்‌களி‌ன்‌ ரசனை, கா‌லத்‌தி‌ற்‌கு ஏற்‌ப மா‌றிக்‌‌கி‌ட்‌டே‌ இருக்‌கி‌றது. அதற்‌கு ஏற்‌றா‌ற்‌ போ‌ல்‌ நா‌ங்‌களும்‌ மா‌ற்‌றி‌க்‌ கொ‌ள்‌கி‌றோ‌ம்‌. ஒரு நே‌ரத்‌தி‌ல்‌ சி‌னி‌மா‌கா‌ரர்‌கள்‌ டி‌வி‌யி‌னா‌லதா‌ன்‌ எங்‌களுக்‌கு நஷ்‌டம்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க, ஆனா‌ல்‌ இன்‌றை‌ய சூ‌ழ்‌நி‌லை‌யி‌ல்‌ டி‌வி‌யி‌னா‌லதா‌ன்‌ அவர்‌கள்‌ படமே‌ ஓடுதுன்‌னு சொ‌‌ல்‌றா‌ங்‌க. அதுதா‌ன்‌ சி‌ன்‌னத்‌தி‌ரை‌.

உங்‌கள்‌ தொ‌டர்‌களி‌ல்‌ பணி‌பு‌ரி‌ந்‌த பல டெ‌க்‌னீ‌ஷி‌யன்‌கள்‌ அடுத்‌த லெ‌வலுக்‌கு உயர்‌ந்‌து இருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அதை‌ எப்‌படி‌ பா‌ர்‌க்‌குறீ‌ங்‌க?

எல்‌லா‌ம்‌ அவு‌ங்‌க தி‌றமை‌தா‌ன்‌. சமுத்‌தி‌ரகனி அபி‌நயா‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸி‌ல்‌ தொ‌டர்‌ இயக்‌கி‌னா‌ர்‌. பி‌றகு நா‌டோ‌டி‌கள்‌ படத்‌தை‌ இயக்‌கி‌ பே‌ரும்‌ பு‌கழும்‌ பெ‌ற்‌றா‌ர்‌. இப்‌பவு‌ம்‌ அடுத்‌தடுத்‌த படங்‌களி‌ல்‌ பிஸியா இருக்‌கி‌றா‌ர்‌. மா‌ங்‌கல்‌யம், ஆடுகி‌றா‌ன்‌ கண்‌ணன்‌‌ தொ‌டர்‌களை‌ இயக்‌கி‌ய பத்‌ரி‌, வீ‌ரா‌ப்‌பு‌, தம்‌பி‌க்‌கு இந்‌த ஊரு போ‌ன்‌ற படங்‌களை‌‌ இயக்‌கி‌னா‌ர்‌. தொ‌டர்‌ந்‌து பட இயக்‌குநரா‌கவு‌ம்‌ வசனகர்‌த்‌தா‌கவு‌ம்‌ இயங்‌கி‌கி‌ட்‌டு இருக்‌கா‌ர்‌. வசனகர்‌த்‌தா‌ பா‌லு இப்‌போ‌ படத்‌துக்‌கு வசனம்‌ எழுதுறா‌ரு. ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ சி‌த்‌தி‌ரை‌செ‌ல்‌வன்‌ இப்‌போ‌து சினி‌மாவு‌க்‌கு ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்கி‌றா‌ர்‌. ஆக்‌ரா‌ என்‌கி‌ற ஒரு படத்‌தையு‌ம்‌‌ இயக்‌கி‌னா‌ர்‌. இப்‌போ‌து தயா‌ரி‌ப்‌பி‌ல்‌ இறங்‌கி‌ இரண்‌டு படம்‌ தயா‌ரித்‌துள்‌ளா‌ர்‌. தீ‌ர்‌க்‌க சுமங்‌கலி‌ தொ‌டரை‌ இயக்‌கி‌ய ப்‌ரி‌யன்‌, ஐவர்‌ என்‌கி‌ற படத்‌தை‌ இயக்‌கி‌னா‌ர்‌. அதே‌ போ‌ல‌ மதி‌ல்‌ மே‌ல்‌ பூ‌னை‌ என்‌ற படத்‌தை‌ இயக்‌கி‌ இருக்‌கும்‌ ஆனந்‌த், எங்‌களி‌டமி‌ருந்‌து போ‌னவர்‌தா‌ன்‌.

எனது தொ‌டர்‌களுக்‌கு இசை‌யமை‌த்‌த சத்‌யா‌, எங்‌கே‌யு‌ம்‌ எப்‌போ‌தும்‌ படத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ தி‌ரை‌ இசை‌யமை‌ப்‌பா‌ளரா‌க அறி‌முகமா‌னா‌ர்‌. என்‌னுடை‌ய மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ பா‌லன்‌, ஒத்‌தவீ‌டு என்‌கி‌ற படத்‌தை‌ இயக்‌கி‌யுள்‌ளா‌ர்‌. இப்‌படி‌ இங்‌கி‌ருந்‌து போ‌னவர்‌கள்‌ எல்‌லா‌மே‌ பெ‌ரி‌ய தி‌ரை‌யி‌ல்‌ நல்‌ல இடத்‌தி‌ல்‌தா‌ன்‌ இருக்கி‌றா‌ர்கள்‌. என்‌னை‌ப்‌ பொ‌றுத்‌தவரை‌ கடவு‌ளை‌ குறை‌ சொ‌ல்‌லக்‌கூடா‌து, அதி‌ர்‌ஷடத்‌தை‌ குறை‌ சொ‌ல்‌லக்‌கூடா‌து. உழை‌ப்‌பை‌ மட்‌டுமே‌ நம்‌ப வே‌ண்‌டும்‌.

இத்‌தனை‌ இயக்‌குனர்‌களை‌ உருவா‌க்‌கி‌ய நீ‌ங்‌கள்‌ ஏன்‌ பெ‌ரி‌ய தி‌ரை‌க்‌குப்‌ போ‌கவி‌ல்‌லை‌?

எதை‌ச்‌ செ‌ய்‌தா‌லும்‌ அதை‌ தி‌ருந்‌தச்‌ செ‌ய்‌ய வே‌ண்‌டும்‌ என்‌று நா‌ன்‌ நி‌னை‌ப்‌பே‌ன்‌. எல்‌லா‌வற்‌றி‌லும்‌ கால் வை‌ப்‌பது எனக்‌கு பி‌டி‌க்‌கா‌து. அதுதா‌ன்‌ கார‌ணம்‌. கி‌டை‌த்‌த இடத்‌தி‌ல்‌ சி‌றப்‌பா‌க செ‌ய்‌வதை‌க்‌ கற்‌றுக்‌கொ‌ண்‌டவன்‌.

எங்‌களுடை‌ய நி‌றுவனத்‌தி‌ல்‌ ஆரம்‌ப கா‌லம்‌ முதல்‌ இப்‌போ‌தும்‌ பல டெ‌ன்‌னீ‌சி‌யன்‌கள்‌ பணி‌பு‌ரி‌கி‌றா‌ர்‌கள்‌. அவர்‌களுக்கு வே‌று இடம்‌ என எதுவு‌ம்‌ கி‌டை‌யா‌து. கலை‌ இயக்‌குநர்‌ அசோ‌கன்‌, கா‌ஸ்‌டி‌யூ‌மர்‌ பழனி‌வே‌லன்‌, லை‌ட்‌ பா‌ய்‌ஸ்‌, எடி‌ட்‌டர்‌ என என்‌னை‌ நம்‌பி‌ பல பே‌ர்‌ இங்‌கு பல வருடங்‌களா‌க பர்‌மனன்‌ட்‌டா‌க என்‌ கூடவே‌ இருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அவர்‌களோ‌டு கலந்‌தா‌லோ‌சி‌த்‌துதா‌ன்‌ வே‌லை‌களை‌ச்‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.

எங்‌கள்‌ நி‌றுவனத்‌தி‌ன்‌ முதல்‌ ஹீ‌ரோ‌ வே‌ணு அரவி‌ந்‌த, அதே‌ போ‌ல அபி‌ஷே‌க்‌ இருவரும்‌‌ ஆரம்‌ப கா‌லம்‌ முதல்‌ எங்‌கள்‌ நண்‌பர்‌கள்‌. இவர்‌கள்‌ இயக்‌குநரா‌கவு‌ம்‌ தங்‌களை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌க்‌ கொ‌ண்‌டவர்‌கள்‌. ஸ்ரீம‌ன்‌, கா‌யத்‌தி‌ரி‌ ப்‌ரி‌யா‌, யு‌வஸ்ரீ என பலர்‌‌ எங்‌கள்‌ அபி‌நயா‌வி‌ல்‌‌ இருந்‌து வந்‌தவர்‌கள்‌தா‌ன்‌.

இப்‌போ‌து ஒளி‌பரப்‌பா‌கி‌ வரும்‌ வெ‌ள்‌ளை‌த்‌தா‌மரை‌ தொ‌டர்‌ பற்‌றி‌?

வெ‌ள்‌ளை‌த்‌தா‌மரை‌ மி‌க நன்‌றா‌க போ‌ய்க்‌‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றது. ஒரு சஸ்‌பெ‌ன்‌ஸை‌ வை‌த்‌தா‌ல்‌ அதற்‌கு உடனே‌ வி‌டை‌ கொ‌டுத்‌துவி‌டுவோ‌ம்‌. அதனா‌ல ரசி‌கர்‌களை‌ நன்‌கு கவர்‌ந்‌து வருகி‌றது. ஒவ்‌வொ‌ரு எபி‌சோ‌டு‌ம்‌ பொழுதுபோக்காகவும் இருக்‌கணும்‌, அதே‌ சமயத்‌தி‌ல்‌ நல்‌ல மெ‌ஸே‌ஜு‌ம்‌ கொ‌டுக்‌கணும்‌, அதை‌வி‌ட்‌டுவி‌ட்‌டு குடம்‌ குடமா‌ய்‌ அழுகை‌யை‌க்‌ கொ‌டுக்‌க எனக்‌கு வி‌ருப்‌பமி‌ல்‌லை‌.

இந்‌த பதி‌னே‌ழு வருட அனுபவங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

இன்‌னும்‌ எதை‌யு‌ம்‌ சரி‌யா‌ செ‌ய்‌யலை‌யேனுதா‌ன்‌‌ தோ‌ணுது. இன்‌னும்‌ நல்‌லா‌ செ‌ய்‌யணும்‌னு உத்‌வே‌கத்‌தை‌ கொ‌டுக்‌குது. மக்‌களுக்‌கு ரீ‌ச்‌சா‌கி‌ற நே‌ரத்‌துக்‌கு கொ‌ண்‌டு போ‌கணும்‌. இப்‌போ‌ இருக்‌கி‌ற மி‌ன்‌வெ‌ட்‌டு சரி‌யா‌கணும்‌. எங்‌களுடை‌ய தி‌றமை‌ குடத்‌தி‌ல்‌ இட்‌ட வி‌ளக்‌கு போ‌லதா‌ன்‌ இன்‌னும்‌ இருக்‌கி‌றது. வெ‌ள்‌ளைத்‌தா‌மரை‌ போ‌ன்‌ற கதை‌கள்‌ கண்‌டி‌ப்‌பா‌ மக்‌களுக்‌கு போ‌ய்ச்‌‌ சே‌ரணும்‌. மி‌ன்‌ வெ‌ட்‌டு கா‌ரணமா‌ அது மக்‌களை‌ போ‌ய்‌ சரி‌யா‌ சே‌ரலங்‌கி‌ற வருத்‌தம்‌ இருக்‌கு. டிவி சீரியலுக்கு மெயின் வில்லனே மின்வெட்டுதான் இப்போ. அது எல்‌லா‌ம்‌ மா‌றணும்‌ அப்‌போ‌தா‌ன்‌ எங்‌களுக்‌கு நி‌ஜமா‌ன வெ‌ற்‌றி‌. அதே‌ போ‌ல அடுத்‌தவு‌ங்‌க இடத்‌தை‌ பி‌டி‌க்‌கணும்‌ என்‌கி‌ற என்‌னமெ‌ல்‌லா‌ம்‌ எனக்‌குள்‌ வந்‌தது கி‌டை‌யா‌து. எல்‌லா‌மே‌ நம்‌ம படை‌ப்‌பு‌தா‌ன்‌ மா‌ற்‌றங்‌களை‌ உருவா‌க்‌கனும்‌ என நி‌னை‌ப்‌பே‌ன்‌….!"
Posted by: Shankar
 

வித்யா வேடத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி ஆர்வம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில்க் வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா ஷெட்டி வித்யா பாலன் நடித்த வேடத்தில் நடிக்கிறார்.சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தி படம் 'தி டர்ட்டி பிக்சர்ஸ்'. இதில் சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. இதில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியிடம் கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். 'வேறு நல்ல கதை அம்சமுள்ள படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிப்பேன்' என்று கூறினார். இந்நிலையில் வித்யாபாலன் நடித்த 'கஹானி'  என்ற படம் பாலிவுட்டில் வெளியாகி ஹிட்டானது. கர்ப்பிணி ஒருத்தி கொல்கத்தாவில் காணாமல்போன தனது கணவனை தேடி கண்டுபிடிப்பதே கதை. இப்படத்தை அனுஷ்கா ஷெட்டி பார்த்தார்.

பின்னர் அவர் கூறும்போது, 'வித்யாபாலன் நடித்த இக்கதாபாத்திரம் சவாலானது. இப்படத்தை தென்னிந்திய மொழியில் ரீமேக் செய்தால் நடிக்க தயார். எந்த நேரத்திலும் இதற்கு கால்ஷீட் தருவேன்' என்று கூறினார். இதையடுத்து இப்படத்துக்கு மவுசு கூடியது. தெலுங்கு, தமிழில் இப்படத்தின் உரிமையை வாங்க பிரபல நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன.


 

கார்த்திகாவா? யார் அது? - ஹன்ஸிகா ஆவேசம்


கார்த்திகாவா... யார் அது? அப்படி ஒருவரை எனக்கு தெரியவே தெரியாதே என்று தன் ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஹன்ஸிகா.

ஏன் இந்தக் கோபம்... அதுவும் பிரபல நடிகையான கார்த்திகாவை தெரியாது என்று கூறும் அளவுக்கு?

சுந்தர் சிதான். இவர் அடுத்து இயக்கும் புதிய படத்தில் முதலில் ஹீரோயினாக ஒப்பந்தமானவர் ஹன்ஸிகா. அப்புறம் என்ன நினைத்தாரோ, திடீரென்று ஹன்ஸிகாவை தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இதனால் பயங்கர கடுப்பாகிவிட்டாராம் ஹன்ஸிகா. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்... அப்ப பாத்துக்கறேன் என்று கமெண்ட் அடித்தாராம்.

ஹன்ஸிகாவிடம், சமீபத்தில் இந்த மோதல் குறித்து கேட்டபோது, "கார்த்திகாவா... யார் அது? அவருடன் நான் ஏன் சண்டை பிடிக்க வேண்டும். இது வதந்திதான். நான் தற்போது 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடிக்கிறேன். டெல்லி பெல்லி தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளேன். சினிமாவில் அவரவர்களுக்கென்று தனித்தனி இடங்கள் உள்ளன. அதை யாரும் தட்டி பறிக்க முடியாது," என்றார்.
Posted by: Shankar
 

மகன் நடித்த படத்தை பார்க்க பயந்தேன் : ஸ்டாலின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஊட்டியில் தி.மு,க.பொருளாளர் மு.க., ஸ்டாலின் தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: எனது மகன் உதயநிதி நடித்த படத்தை பார்ப்பதற்கு முன் பயந்தேன். ஆனால், படம் பார்த்த பின் அந்த பயம் இல்லை. நன்றாக நடித்துள்ளார். படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தி.மு.க.,வில் உழைத்தவர்கள் மட்டுமே கட்சி பொறுப்பில் இடம் பெற வேண்டும். நான் கட்சிக்காக உழைக்க வில்லை. எனவே சினிமா துறையை தேர்வு செய்துள்ளேன் என உதயநிதி கூறியுள்ளார். எனவே அவர் அரசியலுக்கு வராமல், கலைத்துறைக்கு சென்றது எனக்கு மகிழ்ச்சி தான். அதில் எந்த வருத்தமும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


 

சம்பளத்தை உயர்த்தினாரா தமன்னா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, தனது சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: சம்பளத்தை நான் உயர்த்திவிட்டதாக சொல்லும் தகவல்களில் உண்மையில்லை. நியாயமான சம்பளத்தைதான் பெறுகிறேன்.  நான் எவ்வளவு வாங்குகிறேன் என்பதை இன்டஸ்ட்ரியில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வளவு வேண்டும் என்று டிமான்ட் பண்ணவும் இல்லை. இந்தி படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் தமிழ், தெலுங்கில் பிசியாக இருப்பதால் இந்தியில் நடிக்க இப்போது முடியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு தமன்னா கூறினார்.


 

அதிகரிக்கிறது இருமொழி படங்கள் டிரெண்ட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இரு மொழி படங்கள் டிரெண்ட் தற்போது தமிழ், தெலுங்கில் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக தமிழ்தெலுங்கு படங்களுக்கு இடையே நெருக்கமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்கள், தெலுங்கில் வசூலைக் கொடுத்து வருகிறது. இதனால் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட தமிழ்ப்படங்கள் கூட டப் செய்யப்பட்டு அங்கு வெளியிடப்பட்டு வருகிறது.
பொதுவாக ஆக்ஷன் மசாலாப் படங்களையே தெலுங்கு ரசிகர்கள் விரும்புவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் கதையம்சம் உள்ள படங்களும் அங்கு வரவேற்பை பெற்றுள்ளன. அதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்ப் படங்களின் உரிமம் பல கோடிகளை எட்டியுள்ளது.

அதேபோல தெலுங்கு ஹீரோக்கள் நடித்த படங்கள் சென்னை போன்ற நகரங்களில் வசூல் குவிக்கிறது. தமிழ் 'காஞ்சனா' தெலுங்கிலும், தெலுங்கு 'அருந்ததி' தமிழிலும் சக்கைபோடு போட்டன. இப்படிப்பட்ட சூழலில் இரு மொழிகளில் படங்களை தயாரிப்பது அதிகரித்து வருகிறது. தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கிய 'மகதீரா', தமிழில் 'மாவீரனா'கப் பேசப்பட்டது. இப்போது அவர், 'நான் ஈ' படத்தை தமிழ், தெலுங் கில் உருவாக்கி வருகிறார். கருணாகரன், 'ஏனென் றால் காதல் என்பேன்' படத்தை தமிழ், தெலுங்கில் உருவாக்கி வருகிறார். கவுதம் வாசுதேவ் மேனன், 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறார். மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு, 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற படத்தை இருமொழிகளில் தயாரித்து வருகிறார்.

வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் 'வனயுத்தம்' தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. ஷாம் நடிக்கும், 'ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்' படமும் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இவை தவிர, சில சிறிய பட்ஜெட் படங்களும் தமிழ்தெலுங்கு, தமிழ்கன்னட மொழிகளில் தயாராகி வருகின்றன.  ''படங்களுக்கான பட்ஜெட், உயர்ந்து வரும் நட்சத்திரங்களின் சம்பளம் போன்றவற்றை சரி கட்ட, வரும் காலங்களில் இரு மொழிகளில் படங்கள் அதிகமாக உருவாவதை தவிர்க்க முடியாது. இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கும்போது ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை படமாக்க வேண்டும் என்பதை தவிர, வேறு கூடுதல் செலவு இல்லை. இரண்டு மாநிலங்களிலும் வியாபாரம் செய்து கொள்ளலாம். ஏதாவது ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றாலும் லாபம்தான். இப்படி பல சாத்தியக் கூறுகள் இருப்பதால் இருமொழி படங்கள் தயாரிப்பு அதிகரிக்கும்'' என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.


 

ஒரு பாடலுக்கு ஆடினார் கோவை சரளா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாபா சினி பிலிம்ஸ் சார்பில் எஸ்.எஸ்.பாபா விக்ரம் தயாரித்து, இசை அமைத்து இயக்கும் படம், 'பொம்மை நாய்கள்'. கருணாஸ், ராதாரவி, பாபிலோனா நடித்துள்ளனர். படம் பற்றி பாபா விக்ரம் கூறும்போது, ''ஒரு வீட்டில் இருக்கும் நாய் பொம்மைகள் உயிர்பெற்று தீயவர்களை அழிப்பது போன்ற கதை. பெரும்பாலான காட்சிகள் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. சாம்ஸ், ஆர்த்தி, கிரேன் மனோகர் துப்பறிவாளர்களாக நடித்துள்ளனர். காமெடி, திகில் கலந்த படம். கோவை சரளாவும், கருணாசும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். அடுத்த மாதம் வெளியாகிறது.


 

படு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்... தப்பான நினைப்போட என்கிட்ட வராதீங்க - அஜீத் ஹீரோயின்!


அஜீத் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டனுக்கு ஏக முன் ஜாக்கிரதை. நடித்த முதல் படமே இன்னும் ரிலீசாகவில்லை. ஆனால் அதற்குள் அவர் ஒரு பலே கண்டிஷன் போட்டுள்ளார்.

அது, "படுகவர்ச்சியாக நடிப்பேன் என்ன நினைப்பிலோ அல்லது தவறான கண்ணோட்டத்துடனோ என்னை யாரும் அணுக வேண்டாம்," என்பதுதான்.

உலக அழகி போட்டியில் இரண்டாவது இடம் பெற்ற பார்வதி ஓமனகுட்டன், 'பில்லா-2' படத்தின் மூலம் சினிமா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தில் இவர்தான் அஜீத்துக்கு ஜோடி.

'பில்லா-2' ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்வதி ஓமனகுட்டன் கூறுகையில், "முதல் படத்திலேயே அஜீத் ஜோடியாக நடித்தது மிகப்பெரிய பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என் முதல் படமே திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.

அஜீத்தை சந்திப்பதற்கு முன்பு அவர் ஒரு பந்தா பார்ட்டியாக இருப்பார் என்று நினைத்தேன். பழகிய பிறகுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு எளிமையானவர் என்று. அவர் ஒரு உதாரணமான மனிதர். நான், அவருடைய மனைவி ஷாலினியின் தீவிர ரசிகை. இதை அவரிடம் சொன்னபோது, அவரும் ஷாலினியின் ரசிகராக இருந்தவர் என்று தெரியவந்தது. அவர் ரசித்த பெண்ணே வாழ்க்கை துணையாக வந்ததற்காக, நான் அவருக்கு வாழ்த்து சொன்னேன்.

'பில்லா-2' படத்தின் கதையை என்னிடம் கேட்காதீர்கள். அதைச் சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும். அஜீத்துக்கு ஜோடியாக, படத்தின் கதையை திசை திருப்பும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கும் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

பார்வதி ஓமனகுட்டன் உலக அழகி என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டுவார் என்ற தவறான கண்ணோட்டத்துடன் யாரும் என்னை அணுக வேண்டாம். நான் நடிக்கிற வேடத்துக்கு எந்த அளவுக்கு கவர்ச்சியும், நெருக்கமும் தேவைப்படுகிறதோ, அதை நான் தயங்காமல் செய்வேன்.

நடிப்பு திறனை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரம் அமைந்து, அந்த கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவைப்பட்டால், நிச்சயம் செய்வேன்.

மிக சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். எவ்வளவு கனமான கதாபாத்திரம் என்றாலும் பார்வதி ஓமனகுட்டன் வெளுத்துக் கட்டுவார் என்ற பெயர் வாங்க வேண்டும். நான் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டு. சிறந்த நடிகையாவதற்காக இரவு-பகலாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.
Posted by: Shankar
 

மெரினா பட இயக்குநர் பாண்டிராஜ் மீது மோசடி புகார் - விசாரணைக்கு உத்தரவு


Pandiraj
சென்னை: பசங்க, வம்சம் மற்றும் மெரினா ஆகிய படங்களின் இயக்குநர் பாண்டிராஜ் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "பசங்க, வம்சம் ஆகிய படங்களின் இயக்குநர் பாண்டிராஜ், மெரினா என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்து நான்தான் தயாரித்தேன். ஆனால் என்னை ஏமாற்றி விட்டு, அந்த படத்தின் தயாரிப்பாளராக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.

அந்த படத்தின் தயாரிப்பு செலவையும், லாபத்தில் பங்கு தொகையும் தருவதாகவும் அவர் சொன்னார். அதில் ரூ.15 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி தொகையை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

விருகம்பாக்கம் போலீஸாரை இதுகுறித்து விசாரணை நடத்தச் சொல்லி, புகார் மனுவை அனுப்பி வைத்தார் கமிஷனர்.

பாண்டிராஜ் மறுப்பு

இந்த புகார் மனு தொடர்பாக டைரக்டர் பாண்டிராஜ் கூறும்போது, தன் மீதுள்ள புகாரை மறுத்தார். பாலமுருகன் ரூ.12.5 லட்சம் கொடுத்தார். அதற்கு ரூ.15 லட்சமாக நீதிமன்றம் மூலம் திருப்பிக் கொடுத்து விட்டேன். மேலும் ரூ.12.5 லட்சம் நீதிமன்றம் மூலம் தருவதாகவும் கூறி இருக்கிறேன்.

இந்த நிலையில் என்மீது பொய் புகார் கொடுத்துள்ள பாலமுருகன் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடருவேன். எனது அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை பாலமுருகன் திருடிச் சென்று விட்டார். அதுதொடர்பாக கமிஷனரிடம் நானே புகார் கொடுக்க உள்ளேன்' என்றார்.
Posted by: Shankar