சென்னை: தங்கத்தின் பெயரை கொண்ட 2 எழுத்து கவர்ச்சி நடிகை தனது சுயசரிதையில் ரம்ஜான் ஸ்பெஷல் உணவு படம் கொடுத்த இயக்குனரை காய்ச்சி எடுக்க முடிவு செய்துள்ளாராம்.
ஏற்கனவே ஒரு கவர்ச்சி நடிகை சுயசரிதை எழுதியுள்ளார். இந்நிலையில் தங்கத்தின் பெயரை கொண்ட 2 எழுத்து கவர்ச்சி நடிகையும் சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளார். என் சுயசரிதையில் உங்கள் முகத்திரையை எல்லாம் கிழிக்கப் போகிறேன் என்று சிலரிடம் அவர் கூறி வருகிறாராம். அப்படி யார், யார் சாயத்தை வெளுப்பது என்று ஒரு பட்டியலே போட்டு வைத்துள்ளாராம்.
கவர்ச்சி நடிகையும் ரம்ஜான் ஸ்பெஷல் உணவு படம் கொடுத்த இயக்குனரும் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது அவர் நடிகை போன் செய்தால் கட் பண்ணிவிடுகிறாராம். இதனால் அந்த இயக்குனர் மீது காட்டத்தில் இருக்கும் நடிகை சுயசரிதையில் அவர் மற்றும் அவரது நண்பர்களை காய்ச்சி எடுக்க முடிவு செய்துள்ளாராம்.
சுயசரிதையை நள்ளிரவு பார்ட்டிகளில் நடக்கும் கூத்துகளில் இருந்து தான் துவங்கவிருக்கிறாராம்.