திரிஷாவைப் பார்க்க 13 படி... ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம்!

Trisha S Lavish Staircase   

திரிஷா பிறந்தபோதே சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர். பிறந்தபோதே வசதியாக இருந்த அவர் இப்போது திகட்டும் அளவுக்கு செல்வச் செழிப்புடன் சீமாட்டியாக வாழ்ந்து வருகிறார்.

இவர் தனது வீட்டில் தன் விருப்பத்திற்கேற்ப பல அலங்காரங்களை செய்திருக்கிறார். அதில் லேட்டஸ்டாக தனது வீட்டுக்குள்ளிருந்து தனது அறைக்குப் போக உள்ள 13 மாடிப்படிகளையும் பெரும் பொருட் செலவில் மார்பிள் கற்களால் தகதகக்க வைத்துள்ளாராம்.

திரிஷாவின் அறை உள்ள மாடிக்குப் போக கீழ் தளத்திலிருந்து 13 படிகளைக் கடக்க வேண்டுமாம். இந்தப் படிகளை விலை உயர்ந்த மார்பிளால் அலங்கரித்துள்ளாராம் திரிஷா. ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மார்பிளைப் போட்டு ஜொலிக்க விட்டுள்ளாராம் திரிஷா.

இதுதவிர இவரது அறையையும் கூட மார்பிள் கற்கள் பளபளப்பாக மாற்றியுள்ளதாம். எல்லாமே திரிஷாவின் விருப்ப்படி ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாம்.

அறைக்குள் யாருடைய போட்டோவை மாட்டி வைத்திருக்கிறீர்கள் திரிஷா...!!

 

அமிதாப் பச்சனின் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி: பரபரப்பு

Unidentified Man Breaks Into Amitab Bachchan House

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருடன் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஜல்சா என்ற வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீ்ட்டிற்கு பாதுகாவலர்கள் இருந்தும் நேற்று மர்ம ஆசாமி ஒருவன் புகுந்துவி்ட்டான்.

இது குறித்து அமிதாப் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,

மர்ம நபர் அத்துமீறு வீட்டுக்குள் நுழைந்ததால் நேற்று பரபரப்பாக இருந்தது. அந்த நபர் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பான ஜல்சாவுக்குள்ளேயே நுழைந்துவி்ட்டார். என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் எதுவும் பாதுகாப்பில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பச்சன் குடும்பத்திற்கு ஜுஹு பகுதியில் மட்டும் ஜல்சா, பிரதீக்ஷா மற்றும் ஜனக் ஆகிய 3 வீடுகள் உள்ளன. அதில் ஜல்சாவில் அமிதாப் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரதீக்ஷாவில் அமிதாபின் தம்பி அஜிதாப் வசிக்கிறார். ஜனக் பச்சன் குடும்பத்தாரின் அலுவலகமாக உள்ளது. அந்த வீட்டில் உள்ள ஜிம்மைத் தான் பச்சன் குடும்பத்தினர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

 

அன்டோனியோ வாழ்க்கையில் குண்டைப் போட்ட மல்லிகாவின் ஆட்டம்!

Mallika Sherawat Cracks Antonio Banderas   

கேன்ஸ் பட விழாவுக்குப் போன நேரத்தில் ஹாலிவுட் நடிகர் அன்டோனியோ பன்டரஸுடன், இணைந்து மல்லிகா ஷெராவத் ஆடிய காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவியான நடிகை மெலனி கிரிபித் தற்போது அன்டோனியோவை விட்டுப் பிரிந்து விட்டாராம்.

2 மாதங்களுக்கு முன்பு கேன்ஸ் பட விழா நடந்தது. அதில் இந்திய நடிகையான மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார். கலக்கலான கவர்ச்சி டிரஸ்ஸில் வந்த அவரைப் பார்த்து அன்டோனியோவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. இதையடுத்து அவரை நெருங்கிய அன்டோனியோ, மல்லிகாவின் இடுப்பைப் பிடித்து இழுத்து ஆடத் தொடங்கினார். மல்லிகாவும், அன்டோனியோ இழுத்த இழுப்புக்கு மறுப்பு தெரிவிக்கால் மூவ்மென்ட்ஸ் கொடுத்தார். இதை சுற்றிவளைத்து வீடியோ, ஸ்டில் கேமராக்களில் படம் பிடித்து விட்டனர் பத்திரிக்கையாளர்கள்.

அத்தோடு நிற்காமல் மல்லிகாவை கூட்டிக் கொண்டு காபி கிளப், டான்ஸ் கிளப் என பெரிய ரவுண்டும் அடித்தார் அன்டோனியோ. இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். ஒன்றாக தங்கியதாகவும் கூறப்பட்டது.

இப்போது இந்தப் படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து கடுப்பாகி விட்டாராம் மெலனி. மேலும் மல்லிகாவுடன் ஒட்டி உரசி தனது கணவர் பழகியதையும் கேள்விப்பட்டு தற்போது தனது கணவர் தனக்குப் போட்ட கல்யாண மோதிரத்தை கழற்றி அவரிடமே கொடுத்து விட்டுப் போய் விட்டாராம் மெலனி.

இந்தப் பஞ்சாயத்து குறித்து மல்லிகா கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது நண்பரான இவான் பிட்டன் என்பவர் கூறுகையில், மல்லிகா மீது தப்பில்லை. அவர் பாட்டுக்குத்தான் நின்றிருந்தார். அன்டோனியோதான் பின்னாலிருந்து மல்லிகாவைப் பிடித்து ஆடினார். மல்லிகாவின் கவர்ச்சிகரமான உடம்பு அவரை ஈர்த்து விட்டது என்றார்.

மல்லிகாவைப் பார்த்தால் பாம்புக்கே வியர்க்கும், அன்டோனியோ எம்மாத்திரம்...

 

அம்பாசிடரில் ரோட்டோர இட்லி கடையில் சாப்பிடும் ரஜினிகாந்த்

Rajini Starts Visiting Roadside Idli Shop Again   

போயஸ் கார்டனில் உள்ள ரோட்டோர இட்லி கடையில் அம்பாசிடர் கார் நின்றால் அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் என்று அர்த்தம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பகுதியில் உள்ள ஒரு ரோட்டோர இட்லி கடையில் இட்லி வாங்கி சாப்பிடுவது ரஜினிகாந்துக்கு மிகவும் பிடிக்கும். அதனால் எப்பொழுதெல்லாம் இட்லி சாப்பிட ஆசை வருகிறதோ அப்போதெல்லாம் அம்பாசிடர் காரில் அந்த கடைக்கு சென்றுவிடுவார்.

சமீபத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதையடுத்து அந்த இட்லி கடைக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் அந்த கடை இட்லியின் ருசியை அவரால் மறக்க முடியவில்லை போன்று. அதனால் மீண்டும் அம்பாசிடரில் அந்த கடைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.

நீங்கள் போயஸ் கார்டன் பக்கமாக போகும்போது ரோட்டோர இட்லி கடை அருகே அம்பாசிடர் கார் நின்றால் அதற்குள் கண்டிப்பாக ரஜினிகாந்த் இருப்பார்.

 

நசிருதீன் ஷா மகனுடன் கமல் மகள் காதல்?

Is Akshara Dating Naseer Son Vivaan

இந்தி நடிகர் நசிருதீன் ஷாவின் இளைய மகன் விவானுக்கும், கமல்ஹாசனின் மகள் அக்ஷராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரும் நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருவதாகவும், இது காதலாக உருவெடுத்திருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அக்ஷராவுடன் விவான் அதிக நேரம் செலவிடுவதாகவும் இத்தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் நட்புடன் இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், காதல் புரிந்து வருவது வெகு சிலருக்கே தெரியுமாம். இருப்பினும் இதை விவான் மறுத்துள்ளார். இதுகுறித்து மிட்டேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நிச்சயம் இது காதல் அல்ல. நாங்கள் இருவருமே சிறு வயது முதல் பழகி வருகிறோம். எங்களது வாழ்க்கையில், ரொமான்ஸ் இல்லை என்று கூறியுள்ளார்.

 

மர்லின் மன்ரோவுக்கு ஆண்களை விட் பெண்களையே பிடிக்கும்?

Did Marilyn Monroe Only Love Women

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான மர்லின் மன்ரோவைப் பிடிக்காத ஆண்களே இருக்க முடியாது. ஆனால் அவருக்கோ பெண்களை மட்டுமே பிடிக்குமாம். தன்னைப் போல அழகு படைத் பல பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவு கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார் மர்லின் மன்ரோ. அதைக் கேட்டு உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரைப் பற்றிய செய்திகள்தான் அன்று முழுவதும்.

உலகம் முழுவதும் மர்லின் மன்ரோவுக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருந்தனர்கள். இவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால் மன்ரோவுக்கு ஆண்களை விட பெண்களையே அதிகம் பிடித்ததாம். பெண்களுடன்தான் அவர் நெருக்கமான நட்பையும் வைத்திருந்தாராம். இன்னும் ஒரு படி மேலே போய் சில பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவும் கொண்டிருந்தாராம்.

மூன்று முறை திருமணமாகி, மூன்று முறை விவகாரத்து செய்தவர் மர்லின் மன்ரோ. இதற்கு அவரது லெஸ்பியன் பழக்கம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அவருக்கு ஆண்களுடனான இயற்கையான செக்ஸ் உறவு பிடிக்கவில்லையாம். மாறாக, பெண்களுடன் செக்ஸ் இன்பம் காணவே அவர் பெரிதும் விரும்பினாராம். இதனால்தான் திருமண வாழக்கையில் அவரால் நிலைக்க முடியவில்லை என்கிறார்கள்.

அக்காலத்தில் பிரபலமான ஜோன் கிராபோர்ட், பார்பரா ஸ்டான்விக், மெர்லின் டயட்ரிச், எலிசபெத் டெய்லர் ஆகியோருடன் மன்ரோ லெஸ்பியன் உறவு வைத்திருந்ததாக அவரே ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். இவர்கள் போக நதாஷா லிடஸ், பாலா ஸ்டிராஸ்பெர்க் ஆகியோருடனும் அவருக்கு லெஸ்பியன் உறவு இருந்ததாம்.

இதுதொடர்பான தகவல்களை மிஷல் மார்கன் விரைவில் வெளியிடவுள்ள Marilyn Monroe: Private And Undisclosed என்ற நூலில் தெரிவித்துள்ளார்.

இந்த நூலில், மர்லின் மன்ரோ மீது மோகம் கொண்டு திரிந்தோர் எண்ணிக்கை எண்ணி மாள முடியாதது. ஆனால் அவருக்கோ ஆண்கள் மீது துளியும் ஈடுபாடு வரவில்லை. அவருக்கு ஆண்களுடன் உறவு கொள்வதில் பிடித்தமும் இல்லை, அதை அவரால் சரியாக செய்யவும் முடியவில்லை. மாறாக, அவர் உறவு வைத்திருந்த பெண்களிடம் பெரும் இன்பத்தை துகித்ததாக அவரே கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் மிஷல்.

புத்தகத்தில் இன்னும் என்னவெல்லாம் இருக்கப் போகிறதோ...

 

காஜலுடன் இணையத் துடிக்கும் கோவிந்தா...!

Govinda Wants Pair With Kajal Agarwal   

வயதானாலும் இன்னும் குஷியும், கும்மாளமுமாக இருக்கும் கோவிந்தாவுக்கு புது ஆசை வந்துள்ளது. அதாவது சிக்கென்று இருக்கும் காஜல் அகர்வாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது.

கோவிந்தாவுக்கு இப்போது பாலிவுட்டில் பெரிய மார்க்கெட் இல்லை. கடைசியாக அவர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு ரவுண்டு வர ஆர்வமாக உள்ள கோவிந்தா, இந்த முறை பக்கா இளம் நாயகி ஒருவருடன் இணைந்து காட்சி தர தீர்மானித்துள்ளாராம். இதற்காக அவர் குறி வைத்திருப்பது காஜல் அகர்வாலையாம்.

சிங்கம் இந்திப் படத்தில் நடித்திருந்தார் காஜல். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். இவருடன் இணைய இப்போது துடியாத் துடிக்கிறாராம் கோவிந்தா.

இதுகுறித்து கோவிந்தா தரப்பில் கூறுகையில், துரந்தர் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கப் போகிறார் கோவிந்தா. இதற்கான டைக்டரை தேடி வந்தார். இறுதியில் ரஜ்னிஷ் ராஜ் தாக்கூரை அவர் முடிவு செய்துள்ளார். மேலும் தனக்கு ஜோடியாக காஜல் அகர்வாலைப் போட வேண்டும் என்றும் தீர்மானமாக உள்ளார் கோவிந்தா. இதுதொடர்பாக அவரை பார்த்தும் பேசியுள்ளார். காஜல் இன்னும் ஒன்றும் சொல்ல்வில்லை. அவர் ஓ.கே. சொல்லிவிட்டால் சுறுசுறுப்பாக படப்பிடிப்பைத் தொடங்கி விடுவார் கோவிந்தா என்கிறார்கள்.

காஜல் கோவிந்தாவுடன் சேருவாரா...?