முப்பெரும் தேவியரின் வரவால்... 'உஸ்' ஆகிப் போன 'புஸு புஸு' நடிகையின் மார்க்கெட்!

சென்னை: புஸு புஸு நடிகை கைவசம் படங்கள் இல்லாததால் வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடிக்க முன்வந்துள்ளாராம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் புஸு புஸு நடிகை. கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடு நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தான் தெலுங்கு திரை உலகில் செட்டில் ஆன சமத்து, முட்டைக் கண்ணழகி, வாரிசு நடிகை ஆகிய மூவரும் சொல்லி வைத்து போன்று ஒன்றாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.

A leading actress' worry

அந்த 3 நடிகைகளின் வரவால் புஸு புஸு நடிகையின் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இத்தனை நாட்களாக வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் புஸு புஸு நடிகை. தற்போது கையில் வெறும் 2 படங்கள் மட்டுமே உள்ளதால் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிக்க நான் ரெடி என்னை வைத்து படத்தை தயாரிக்க நீங்க ரெடியா என்று தயாரிப்பாளர்களுக்கு தூதுவிடுகிறாராம்.

இது தவிர இத்தனை நாட்கள் தெலுங்கு திரை உலகில் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறி வந்தார் நடிகை. ஆனால் தற்போதோ நான் கவர்ச்சியாக நடிக்கிறேன் என தெரிவித்து வருகிறாராம் புஸு புஸு.

ஓஹோ என இருந்த மார்க்கெட் இவ்வளவு சீக்கிரம் டல்லடிக்கும் என்று நடிகை எதிர்பார்க்கவில்லையாம்.

 

விஷாலுடன் இணையும் பாண்டிராஜ்

ஹைக்கூ படத்தை முடித்துவிட்ட பாண்டிராஜ் அடுத்து விஷாலுடன் இணைகிறார்.

பசங்க படத்துக்குப் பிறகு பரபரவென படங்களை இயக்கிக் கொண்டிருந்த பாண்டிராஜ், சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் சிக்கினார். அந்தப் படம் இன்னமும் வருமா வராதா என்ற இழுபறியில் கிடக்கிறது.

Pandiraj to join with Vishal

சரி, இந்தப் படம் வேலைக்காகாது என முடிவெடுத்த பாண்டி, அடுத்தடுத்த படங்களை இயக்கப் போய்விட்டார்.

சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஹைக்கூ படத்தை விறுவிறுவென எடுத்து முடித்துவிட்ட பாண்டிராஜ், அடுத்து விஷாலின் சொந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பிடவில்லை.

விஷால் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் பாயும்புலி படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

 

ஜூன் முதல் தேதியிலிருந்து தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகள் அமல்

சிறு முதலீட்டுப் படங்களைக் காக்கும் நோக்கில், பட வெளியீட்டில் தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வாரம்தோறும் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் வெற்றி பெறும படங்கள் மிகச் சிலதான்.

New regulations to release big budget movies from June 1st

சிறு முதலீட்டுப் படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும தெரியாமல் காணாமல் போகும் நிலை உள்ளதால், பட வெளியீட்டை முறைப்படுத்த சில கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. ஆனால் அவை இன்னமும் அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் க்யூப் மற்றும் யுஎப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக வரும் மே 10-ம் தேதி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளன.

இந்த உண்ணாவிரதத்தின்போது, பட வெளியீட்டுக்கான கட்டுப்பாடுகளை அமல் படுத்துவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறதாம் தயாரிப்பாளர் சங்கம்.

வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். இதன்படி ஜூன் முதல் தேதியிலிருந்து ஆண்டுக்கு 10 பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் மட்டும் பெரிய படங்களை வெளியிட முடியும். மற்ற நாட்களில் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுப் படங்கள் வெளியாகும்.

 

மீண்டும் 'காக்கிச் சட்டை' கமல்!

தனது அடுத்த படமான காக்கிச் சட்டையில் மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிக்கிறார் கமல் ஹாஸன்.

உத்தம வில்லன் படத்துக்குப் பிறகு பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய இரு கமல் படங்கள் வெளிவரவுள்ளன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து விட்டன. ஜூன் மாதமே பாபநாசம் வரவிருக்கிறது.

Kamal to wear police uniform again

தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், விஸ்வரூபம் 2 படத்தின் நிலை என்னவென்பது தெரியவில்லை. ஒருவேளை கமலே அதை மீண்டும் கையிலெடுத்து வெளியிடுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.

இந்த நிலையில்தான் கமலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேஷ் இயக்கும் 'ஓர் இரவு' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதில் போலீஸாக நடிக்கிறார் கமல். இதற்கும் ஜிப்ரான்தான் இசையமைக்கிறார்.

த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

வேட்டையாடு விளையாடு படத்துக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் போலீஸ் வேடம் போடுகிறார் கமல்.

 

யார் கூப்பிட்டாலும் எனக்கு ஓகேதான்... !

சென்னை: சினிமா ஹீரோயினாக இருந்து சீரியல் ஹீரோயினாக வந்தவர் அந்த இசை நாயகி. சூரிய டிவியில் 5 ஆண்டுகளாக ஒரே சீரியலில் நடித்தவருக்கு அந்த பெயரே நிலைத்துவிட்டது. போகும் இடமெங்கும் ரசிகர்கள் அதே பெயரைச் சொல்லியே அழைத்தனர்.

எதற்கும் இருக்கட்டும் என்று வந்த வாய்ப்பை தவற விடாமல் நட்சத்திர சேனலில் அலுவலக தொடரில் நடித்தார். அதிலும் நல்ல பெயரே கிடைத்தது. சூரிய டிவியில் ஒருவழியாக சீரியலுக்கு என்ட் கார்டு போட்டு விட்டனர்.

இனி அவ்வளவுதான் போல சொந்த ஊருக்கு பெட்டியைக் கட்டலாம் என்று நினைத்தவருக்கு கை மேல் பலனாக ஆங்கில எழுத்து கொண்ட சேனல் மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது. கதை என்னவோ 5 ஹீரோயின் சப்ஜெக்ட்தான் என்றாலும் முக்கிய கதை என்னவோ இவரை சுற்றி வருவதால் ஹேப்பியாகிவிட்டாராம் நாயகி.

சினிமாவில் அக்கா, தங்கை வேடம்தான் கிடைக்கும். அதற்கு சீரியல் கதாநாயகி வாய்ப்பே போதும் என்று எந்த சேனல் அழைத்தாலும் ஒப்புக்கொள்கிறாராம் இசையான நாயகி.

மாடர்ன்... குடும்ப பாங்கினி... அசத்தும் நாயகி

ஒரே நேரத்தில் ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்க யாருக்குத்தான் கசக்கும். சூரிய தொலைக்காட்சியில் தெய்வமான தொடரில் நாயகியாக நடிப்பவருக்கு இப்படித்தான் அடித்துள்ள லக்கி ப்ரைஸ்.

ஏர் ஹோஸ்டஸ் ஆக இருந்து மாடலாக சின்னத்திரைக்குள் நுழைந்தவரை சீரியலுக்கு அழைத்து வந்தவர் அண்ணாமலை இயக்குநர். அதன் மூலம் பிரபல நிறுவனம் தயாரிக்கும் சீரியலில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. இதுவே போகும் இடமெங்கும் அடையாளத்தை தந்தது.

ஒரு சீரியல் மட்டுமே போதும் என்று இருந்த அந்த சத்தியமான நாயகிக்கு மீண்டும் குருநாதர் மூலம் அந்த ஆங்கில எழுத்து சேனலில் நடிக்க வாய்ப்பு வரவே ஒத்துக்கொண்டாராம். மங்களகரமான பெயரில் ஒளிபரப்பாகும் அந்த தொடரின் கதை நாயகியே இவர்தானாம். குடும்ப பாங்கினி கதாபாத்திரமாம்.

சினிமா வாய்ப்புகளை மறுத்துவிட்டு முழு நேர சீரியல் நாயகியாகவே நடிக்க முடிவு செய்துவிட்டாராம் சத்தியமான நாயகி. நகை விளம்பரம், ஹேர் ஆயில் விளம்பரம், ஜவுளிக்கடை விளம்பரம் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்து விட்டாராம் சத்திய நாயகி.

 

சூர்யாவின் மாஸ்... மே 8-ம் தேதி இசை... 29-ம் தேதி படம் ரிலீஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா- நயன்தாரா நடித்துள்ள மாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 8-ம் தேதி நடக்கிறது. அடுத்த 21 நாட்களில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் சொந்த நிறுவனமான 2 டி தயாரித்துள்ள படம் மாஸ்.

Surya's Mass from May 29th

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 15-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் ஆடியோ வெளியான ஒரே வாரத்தில், படத்தை வெளியிடுவது சரியான முறையில் ரசிகர்களைச் சேராது என்பதால், மேலும் இரு வாரங்களுக்கு படத்தைத் தள்ளிப் போட்டுள்ளனர்.

[மாஸ் படங்கள்]

மேலும், ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை மே 15-ம் தேதி வெளியிடவிருக்கின்றனர். இந்தப் படமும் சூர்யாவின் சொந்தத் தயாரிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சும்மா இருந்தா யாராச்சும் காசு தருவாங்களா பாஸ்...?

சித்திர படத்தில் அறிமுகமான அந்த மலையாள நடிகையின் கைவசம் அதிக பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் பிஸியாக இருப்பது போலவே பீலா விடுகிறாராம்.

இந்தியில் நடிக்கிறேன், தெலுங்கில் நடிக்கிறேன், மலையாளத்திலும் என்று அவர் விடும் கதையைக் கேட்டு கமுக்கமாக சிரிக்கிறார்களாம்.

சரி சரி ஓய்வா இருந்தா காசு வருமா? பேசாம வெளிநாடுகளுக்கு கலைப்பயணம் போனாலாவது நாலு காசு பார்க்கலாம் என்று யாரோ சொன்னதை கேட்டு, அடிக்கடி வெளிநாடுகளுக்கு கலைப்பயணம் சென்று வருகிறாராம் சித்திர நாயகி. எப்படியோ பிஸியாக இருந்தால் சரிதான்.

 

தீபிகாவுடன் மோதும் சன்னி லியோன்

மும்பை: வரும் வெள்ளிக்கிழமை தீபிகா படுகோனே நடித்துள்ள பிக்கு படமும், சன்னி லியோனின் குச் குச் லோச்சா ஹை படமும் ரிலீஸாகின்றன.

பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடிக்கிறது. இந்நிலையில் அவர் சூஜித் சர்கார் இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள படம் பிக்கு. படத்தில் தீபிகாவின் வயதான அப்பாவாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

Must Watch: Sunny Leone VS Deepika Padukone

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. அதே தினத்தில் கவர்ச்சியை நம்பி பாலிவுட்டில் காலம் தள்ளும் சன்னி லியோனின் குச் குச் லோச்சா ஹை படமும் ரிலீஸாகிறது.

இது குறித்து குச் குச் லோச்சா ஹை படத்தில் நடித்துள்ள ராம் கபூர் கூறுகையில்,

பிக்கு மற்றும் குச் குச் லோச்சா ஹை படங்களை ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. இரண்டுமே நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டுமே மிகவும் வித்தியாசமான படங்கள். பிக்கு வியாபாரம் எங்கள் படத்தைோ, எங்கள் படம் பிக்குவின் வியாபாரத்தையோ பாதிக்காது.

பிக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் தீபிகா, அமிதாப் பச்சன், இர்பான் கான் ஆகியோரின் மிகப் பெரிய ரசிகன் என்றார்.