ஏன் பிடிவாதமாக உங்கள் பெயருடன் அய்யரை ஒட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? - ஜனனியிடம் ஒரு கேள்வி

A Question Janani Ayyar

பல படங்களில் நடித்திருந்தாலும் பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் எனக்கு ஒரு புதுமுகம் போலத்தான் தெரிந்தார், என்கிறார் ஜனனி (அய்யர்).

அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அடுத்து நடிக்கும் படம் பாகன்.

அஸ்லம் இயக்க, விபி புரொக்டஷன்ஸ் தயாரிப்பில் வேந்தர் மூவீஸ் வெளியிடும் பாகனில் நடித்த அனுபவங்களை செய்தியாளர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டார் ஜனனி.

ஜனனியுடன் ஒரு பேட்டி:

முதல் படம் நடித்ததற்கும் இந்தப் படத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

முதல் படம் பாலா சார் இயக்கத்தில் நடித்தேன். அது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். ஆனால் அந்த அனுபவம்தான் இந்தப் படத்தில் எனக்கு கை கொடுத்திருக்கிறது. எனது கேரக்டரை ரொம்ப ஈஸியாகச் செய்தேன்.

ஸ்ரீகாந்துடன் நடித்த அனுபவம்?

மிகவும் திறமையான நடிகர் அவர். எனக்கு அவரது நடிப்பு ரொம்பப் பிடிக்கும். இத்தனை படங்கள் செய்திருந்தாலும், பாகன் செட்டில் ஒரு புதுமுக நடிகரைப் போன்ற ஆர்வத்துடனும் அ்டக்கத்துடனும் அவர் இருந்தார். அது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்.

சரி, ஏன் பிடிவாதமாக உங்கள் பெயருடன் அய்யரை ஒட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? அது ஒரு உறுத்தலாக இல்லையா?

எனக்கு அப்படித் தெரியவில்லை. இது என் பெற்றோர் வைத்த பெயர். இதில் எனக்கு எந்த உறுத்தலும் இல்லை.

எந்தக் காட்சியில் ரொம்ப கஷ்டப்பட்டீர்கள்?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை அப்படி எந்தக் கஷ்டமும் நான் படவில்லை. எனக்கு எல்லா காட்சிகளும் சுவாரஸ்யமாக இருந்தன. இயக்குநர் அஸ்லம் அத்தனை திறமைசாலி. சேரன், அமீருடன் பணியாற்றியவர் என்பதால், நன்றாக திட்டமிட்டு காட்சிகளை முன்கூட்டியே விளக்கி என்னிடம் வேலை வாங்கினார்.

 

சந்திரமுகி பாகம் 2: அஜீத்துடன் பேசுகிறார்கள்!

Ajith Chandramuki 2   

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத்துடன் நடிக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே.

பி.வாசு இயக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இந்தப் படம் வெளியானது.

தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க மாட்டேன் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜீத்திடம் பேசி வருகிறார்களாம்.

சந்திரமுகி படம் கன்னடத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ஆப்தமித்ராவின் ரீமேக். இதன் அடுத்த பகுதியை ஆப்தரக்ஷகா என உருவாக்கினார் வாசு. இந்தப் படத்தைத்தான் ரீமேக் செய்யப் போகிறார்களா.. அல்லது அது வேறு கதையா என்பது தெரியவில்லை.

பி வாசு இயக்கத்தில் ஏற்கெனவே பரமசிவன் படத்தில் நடித்திருந்தார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபு சாலமன், சீனு ராமசாமி வெளியிட்ட பீட்சா பட இசை!

அட்டகத்தி படத்தைத் தயாரித்த சிவி குமாரின் அடுத்த படம் பீட்சாவின் இசையை வெளியிட்டனர் இயக்குநர்கள் பிரபு சாலமன் மற்றும் சீனு ராமசாமி.

prabhu solomon seenu ramasamy pizza audio launch
Close
 
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். புதுமுகம்.

தென்மேற்குப் பருவக்காற்று பட நாயகன் விஜய் சேதுபதி நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

வியாழக்கிழமை நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் சீனுராமசாமி, படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியை வெகுவாகப் புகழ்ந்தார்.

தன்னைப் போன்ற புதிய இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புத் தரும் தயாரிப்பாளர் குமாரைப் பாராட்டினார் இயக்குநர் சுப்புராஜ்.

பாடகர் கானா பாலாவின் நகைச்சுவைப் பேச்சு, விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.

இசையை பிரபு சாலமனும் சீனு ராமசாமியும் இணைந்து வெளியிட்டனர். தயாரிப்பாளர்கள் டி சிவா, பி எல் தேனப்பன், இயக்குநர்கள் பா ரஞ்சித், செந்தில் மோகன், கவிஞர் மதன் கார்க்கி, அட்டகத்தி தினேஷ் ஆகியோரும் நிழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

மனதில் நிற்கும் மனோ, சித்ரா பாடல்கள்!

Super Singer Junior Mano Chitra

பின்னணிப் பாடகர் மனோவும், பாடகி சித்ராவும் பாடிய பாடல்களை கேட்க, கேட்க திகட்டாத இன்பமாக இருக்கும். அதுவும் இளையராஜாவின் இசையில் இந்த ஜோடி பாடிய பாடல்கள் அனைத்தும் எவர்கிரீன் ரகம்.

நாயகன் படத்தில் இந்த ஜோடி பாடிய நீயொரு காதல் சங்கீதம்... பாடல் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம். 25 வருடத்திற்கு முன்பு பாடப்பட்ட அந்த பாடலை இப்பொழுது மனோவும் சித்ராவும் பாடினால் எப்படி இருக்கும்? அந்த அதிசயம் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் மனோவும், சித்ராவும் ரசிகர்களை மகிழ்விக்க நீயொரு காதல் சங்கீதம்... பாடலை பாடினார். அதே ரொமான்ஸ் உடன் பாடி ரசிகர்களின் செவிகளுக்கு இசை விருந்து படைத்தனர்.

மழலைகள் பாடினால் அவர்களை மகிழ்விக்க சாக்லேட் மழை பொழிவதைப்போல மனோ, சித்ராவை மகிழ்விக்க சாக்லேட் மழை பொழிய வேண்டும் என்று கட்டளையிட்டார் மற்றொரு நடுவர் மால்குடி சுபா. உடனே குஷியாகி விட்டனர் மனோவும், சித்ராவும்.

சாக்லேட் மழையின் நனைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செவிக்கினிய பாடலை கேட்ட மகிழ்ச்சியோடு இருந்த நேரத்தில் மிதமான உறக்கம் கண்களை தழுவியது.

 

‘நான் ஈ’ சுதீப்புக்கு வெள்ளிக்கிழமைன்னா நடுக்கமாம்!

Sudeep Scared Friday

நான் ஈ வில்லன் நடிகர் சுதீப் இன்றைக்கு மோஸ்ட் வான்டட் வில்லன். முதல் படம் ப்ளாப் ஆனவுடன் சீரியல் பக்கம் ஒதுங்கியவரை சேது படத்தின் கன்னட ரீமேக் ஆன கிச்சா மீட்டெடுத்தது. இதனால் கன்னட திரையுலகமே கிச்சா சுதீப் என்று கொண்டாடியது. வாலி, ஆட்டோகிராப், சிங்கம் ரீமேக்கில் நடித்து பிஸியான ஹீரோவாக இருந்தவரை தெலுங்கில் ஈகா படம் மூலம் சிறந்த வில்லனாக்கினார் எஸ். எஸ். ராஜமௌலி. இது தமிழில் டப்பிங் செய்யப்பட்டாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

நான் ஈ படத்தில் ஈயிடம் நடுங்கும் சுதீப்புக்கு உண்மையிலேயே வெள்ளிக்கிழமை என்றால் நடுக்கமாம். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதானாம். வெள்ளிக்கிழமை சுதீப் நடித்த படம் ரிலீஸ் ஆனால் அன்றைக்கு முழுக்க மரணபயத்தில் இருப்பாராம் சுதீப்.

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான பயம்!.

 

85 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாய் அனுஷ்கா அசராமல் பணியாற்றினார் - ஆர்யா

Arya Praises Anushka S Braveness   

இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்காக 85 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாய் நின்று அசராமல் பணியாற்றினாராம் நடிகை அனுஷ்கா.

செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா.

இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டன.

இந்தச அனுபவம் குறித்து நடிகர் ஆர்யா கூறுகையில், "செல்வராகவன் என் அபிமான இயக்குநர். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் எனது கனவுப் படம் என்றால் மிகையல்ல.

என்னை சந்தித்த முதல் நாளிலேயே கதையை சொல்லிவிட்டார் செல்வா சார். கதை மிகவும் பிடித்தது. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் அனைத்துமே இந்தப் படத்தில் உண்டு. ஜார்ஜியாவின் காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம்.

நல்ல ரூம், மின்சார வசதி, தூங்குவதற்கு கட்டில் என எந்த வசதியும் இல்லை. அனுஷ்கா ரொம்ப சிரமப்பட்டார். 85 ஆண்கள் மத்தியில் அவர் மட்டுமே பெண். எதுபற்றியும் குறை சொல்லவில்லை. கடுமையான உழைப்பாளியாக அனைவரையும் அசர வைத்தார்," என்றார்.

ரொமான்டிக் படம் என்பதால், ஏகப்பட்ட நெருக்கமான காட்சிகள் உள்ளனவாம் இருவருக்கும். அது சரி... ஏ வாங்காமல் தப்பிக்குமா?!

 

சைக்கிளுடன் ஒரு காதல் - பாகன் பற்றி ஸ்ரீகாந்த்

He Romances His Bicycle Srikanth Interview   

ஷங்கரின் நண்பனுக்குப் பிறகு என் சினிமா பயணம் புதிய பரிமாணத்துக்கு மாறியிருக்கிறது என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

நண்பனுக்குப் பிறகு, ஸ்ரீகாந்த் நடிப்பில் வரும் படம் பாகன். இதில் அவர் சோலோ ஹீரோ.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்முடன் ஸ்ரீகாந்த் பேசியதிலிருந்து..

பாகன் ஒரு ரொமான்டிக் காமெடி படம். இயக்குநர் அஸ்லம் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படத்தில் தந்திருக்கிறார். நிச்சயமாக நீங்கள் என்ஜாய் பண்ணும் அளவுக்கு படம் இருக்கும்.

பாகன் என்றால் யானை உடனே நினைவுக்கு வரும். ஆனால் இங்கே சைக்கிளுக்குப் பாகனாக இருக்கும் ஒருவனைப் பற்றிய கதை இந்தப் படம். தன் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட ஒரு சைக்கிள் மீது அந்த இளைஞன் வைத்திருக்கும் அன்பு, காட்டும் அக்கறை படத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்குமாறு இயக்குநர் அமீர்தான் சிபாரிசு செய்தார். மிக அழகான ஸ்கிரிப்ட். சேரன், அமீர் படங்களில் வேலை பார்த்த திருப்தியும் அனுபவமும் எனக்கு அஸ்லம் மூலம் கிடைத்தது.

இன்றைக்கு என்னைப் பார்க்கும் அனைவரும் நான் ரொம்ப ஸ்லிம்மாக, பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் இருப்பதாகக் கூறிப் பாராட்டுகிறார்கள். நியாயமாக இதற்கு நான் இயக்குநர் ஷங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். வயதுக்கு ஏற்ற வேடங்களைச் செய்வதுதான் வெற்றியைத் தரும் என்று அவர் எனக்குக் கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன்.

இந்தப் படத்தின் நாயகி ஜனனி, அவன் இவனில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தவர். இந்தப் படம் அவருக்கும் பெரிய பிரேக் கொடுக்கும்", என்றார்.

 

சிறந்த ஜட்ஜ் நமீதாக்கா! இமான் அண்ணாச்சியின் தீர்ப்பு!!

Sollunganne Sollunga Interview With

சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் எல்லோரிடமும் கேள்வி கேட்டு கலாய்க்கும் இமான் அண்ணாச்சியிடம் சின்னத்திரையில் சிறந்த ஜட்ஜ் யார் என்று கேட்டதற்கு நமீதாக்கா என்று பதில் கூறியுள்ளார்.

அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கிய பயணம், மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி பின்னர் ஆதவன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று மக்களை சந்தித்து கலாய்த்து வந்தார்.

நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினைப் பார்த்து சன் டிவியில் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். இதனால் ப்ரைம் டைமில் நிகழ்ச்சி செய்ய கிடைத்த சந்தோசத்தில் இருக்கிறார் இமான் அண்ணாச்சி. அவரிடம் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வார் என்ற ஆர்வத்தில் சில எடக்கு மடக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு இமான் அண்ணாச்சி அளித்த பதில்களை படியுங்களேன்.

கேள்வி : நல்ல காதலுக்கும், கள்ளக்காதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இமான் : நல்ல காதல்னா அவ அப்பன் அரிவாளை எடுத்துட்டு வருவான். கள்ளக்காதல்னா அவ புருஷன் அரிவாளை எடுத்துட்டு வருவான்.

கேள்வி : நயன்தாராவுக்கு பொருத்தமான ஜோடி யாரு?

பதில் : நாலைஞ்சு பேரு இருக்காங்க. அதில ஒருத்தர் இமான். எதிர்காலத்தில எது வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா?

கேள்வி : சின்னத்திரையில் சிறந்த ஜட்ஜ் யாரு?

பதில் : நம்ம நமீதாக்காதான். திறந்த ஜட்ஜ்னு தானே கேட்டீங்க? சிறந்த ஜட்ஜா? எதுவா இருந்தாலும் நம்ம ஓட்டு நமீதாவுக்குதான் என்று கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார் அண்ணாச்சி.

 

ராணாவுடன் திருமணம் நடந்ததா... இல்லையா? - த்ரிஷா விளக்கம்

Trisha Again Denies Marriage News   

சென்னை: தெலுங்கு நடிகர் ராணாவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று நடிகை த்ரிஷா விளக்கம் தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் திருமண விவகாரம் கன்னித்தீவு கதையை விட பெரிதாக இருக்கும் போலிருக்கிறது.

ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என பேட்டி தருவார்... அடுத்த நாளே 'எப்போ அப்படிச் சொன்னேன்... எனக்கு ப்ரெண்ட்ஸ், பார்ட்டிதான் முக்கியம்,' என்பார். அதற்கும் அடுத்த நாள் அவரது அம்மா நான்கு நிருபர்களை மட்டும் கூப்பிட்டு 'மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன்.. இந்த வருஷம் பாப்பாவுக்கு கல்யாணந்தான்,' என்று புதிதாக ஆரம்பிப்பார். மீண்டும் அடுத்த நாள் 'இன்னாருடன் எனக்கு நெருக்கமான உறவிருக்கிறது' என்று த்ரிஷா புதுக் கதை ஆரம்பிப்பார்.

ஏதாவது பெரிய பட வாய்ப்பு கிடைத்ததும், உடனே த்ரிஷா மீண்டும் மறுப்பு புராணம் பாடுவார்.

கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது த்ரிஷாவின் கல்யாண சமாச்சாரம்!

சமீபத்தில் திரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் பரவின. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசு கிசுக்கப்பட்டதால், அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இருவரும் விருந்துகளில் கலந்து கொண்டு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர், அதுவும் கட்டிப்பிடித்தபடி. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது இருவரும் நண்பர்களாக பழகுவதாக சொன்னார். இரு தினங்களுக்கு முன் திரிஷாவுக்கும், ராணாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.

அப்போது திரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரத்தை விரலில் அணிவித்தார் என்றும் நகை பெட்டி ஒன்றையும் திரிஷா கையில் கொடுத்தார் என்றும் கூறினர். இதில் இரு வீட்டு பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து திரிஷாவிடம் கேட்போது வழக்கபோலவே மறுத்தார். "எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுவது வதந்தி. ராணா எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான்," என்றார்.

விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் ஒரு சின்னப் பையன் கல்யாணத்தை பற்றி அடிக்கும் கமெண்டை தலைப்பாக வைக்கச் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது!!

 

கறுப்பு கோட் கம்பீரம் தருது: அனுஜா ஐயர்

Dharmayutham Heroine Anuja Iyar

அழகான பெண்கள் லாயராக நடித்தால் எப்படி இருக்கும்? அந்த தொடரை ஆவலாய் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த அனுஜா ஐயர் விஜய் டிவியில் இரவு பத்துமணிக்கு ஒளிபரப்பாகும் தர்மயுத்தம் தொடரில்

லாயர் கோட் போட்டு கம்பீரமாக வருகிறார். அந்த உடையை அணியும் போதே தானாகவே மனதில் கம்பீரம் ஒட்டிக்கொள்கிறாதாம் அனுஜாவிற்கு தன்னுடைய சின்னத்திரை அனுபவங்களை நம்மிடையே பகிரிந்து கொள்கிறார் கேளுங்களேன்.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தாலும் டெல்லியில் தான் அட்வர்டைஸிங் அன்டு பப்ளிக் ரிலேசனில் மாஸ் கம்யூனிகேசன் படித்தேன். மாடலிங் வாய்ப்போடு சினிமாவும் தேடி வந்தது. உன்னைப்போல் ஒருவன் சினிமாவில் ரிப்போர்ட்டராக நடிக்கும் போதே ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் மைக்குமாக தில்லாக நடித்து இருந்தேன். அது பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது அதேபோல் தில்லான கேரக்டர் சின்னத்திரையில் அமைந்திருக்கிறது.

தர்மயுத்தம் தொடரில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்லனும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரைக்கும் கூட சூட்டிங் போனாலும் சோர்வே தெரியாது அந்த அளவுக்கு வேகமாக போகும். அதனால்தான் எங்கள் டீம் இதனை சீரியஸ் என்று சொல்லுவோம்.

ஏழு வருடங்களாக குடும்ப விசயம் ஒன்றிர்க்காக கோர்டுக்கு போனது இப்போது சீரியலில் நடிக்க ஈஸியாக இருக்கிறது என்கிறார் அனுஜா. சின்னத்திரை தொடர்களிலேயே இந்த தொடர்தான் 5 டி கேமராவில் ஷூட் செய்யப்படுகிறது. இது மாறுபட்ட ஃபார்மேட் என்பதால்தான் இந்த தொடரில் நான் கமிட் செய்து கொண்டேன்.

இந்த தொடரைப் பார்த்துவிட்டு என் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. சீரியலுக்காகத்தான் கறுப்பு கோட்டை அணிகிறேன் என்றாலும் மனதில் தானாகவே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கொள்கிறது என்று கூறிவிட்டு ஷூட்டிங்கிற்கு தயாரானார் அழகு அனுஜா.

 

பாகன், மன்னாரு, கள்ளப்பருந்து, அரக்கோணம்... வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்

இன்று வெள்ளிக்கிழமை. வழக்கம் போல, பண்டிகை - விசேஷ நாட்களைவிட அதிக படங்கள் இன்று வெளியாகின்றன.

friday releases kollywood    | மன்னாரு   | கள்ளப்பருந்து   | அரக்கோணம்   
Close
 
பாகன், மன்னாரு, கள்ளப்பருந்து, அரக்கோணம் ஆகியவைதான் இன்று வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்கள்.

இவற்றில் பாகன், வேந்தர் மூவீஸ் எஸ். மதன் வழங்க, வி.பி. புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம். அஸ்லம் இயக்குநராக அறிமுகமாக, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த், ஜனனி, சூரி, பாண்டி நடித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான படம் மன்னாரு. தமிழ் பிக்சர்ஸ், சுஜிஸ் பிலிம்ஸ், ரத்னா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. எஸ்.ஜெய்சங்கர் இயக்க, உதயன் இசையமைத்துள்ளார். படத்தில் பிரதானமாக பேசப்படுவது உதயன் இசை மற்றும் அப்புக்குட்டியின் நடிப்பு.

அடுத்த படம் கள்ளப்பருந்து. பொன்முடி பிக்சர்ஸ் பி.பொன்முடி தயாரிப்பில் இதயன் இயக்கத்தில் சிருஷ்டி இசையமைத்திருக்கும் படம். அம்சவேல், மஞ்சு, ஷோபனா , கலைப்புலி ஜி.சேகரன், கிங்காங் நடித்துள்ளனர்.

காயத்ரி டாக்கீஸ் ரமணா குடிபாட்டி தயாரிப்பில் சிங்கம் சுதாகர் இயக்கியிருக்கும் படம் இந்த அரக்கோணம். இசை - அர்ஜுன். ஸ்ரீமன், பிராச்சி தேசாய், பொன்னம்பலம், சுமன் ஷெட்டி நடித்துள்ளனர்.

இவை தவிர ராம்சரண் தேஜா நடிக்கும் சிறுத்தை புலி, ஷர்வானந்த் நடிக்கும் கோகுலம் ஆகிய மொழிமாற்றுப் படங்களும் களமிறங்கியுள்ளன.

தாய்லாந்து படம் டெக்கன், மரண அடியாக மொழிமாறி வருகிறது.

தமிழ்ப் படங்களுக்கு நிகராக சென்னையில் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது இந்திப் படம் ராஸ் 3. மொத்தம் 19 அரங்குகள்.

நாகார்ஜூனாவின் தெலுங்குப் படம் ஷிர்டி சாய் 27 தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது!!

 

ஏங்க வைக்கும் ‘ஏக் தா டைகர்’ உண்மை கதையா?

Ek Tha Tiger Real Love Story   

பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கச் சென்ற இந்திய உளவுப்படை ஏஜென்ட் ஒருவர் அங்கு ஒரு பெண்ணை காதலித்து செட்டில் ஆவதுதான் ‘ஏக் தா டைகர்' படத்தின் கதை. இது ஒரு உண்மைக்கதை என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

படம் வெளியான ஒரு வாரத்திலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சல்மான்கானின் சம்பளத்தை 100 கோடி ரூபாய்க்கு உயர்த்திய படம் இது. 1970 களில் ரவீந்தர் கவுசிக்கின் நடிப்பை லக்னோ தேசிய நாடக விழாவில் கண்ட இந்திய உளவுப்படை அதிகாரிகள், அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவிற்காக உளவு பார்த்துக்கொண்டே சட்டப்படிப்பு படித்து உளவுப்படையில் சேர்ந்து உயர் அதிகாரியானார்.

அப்போது பாகிஸ்தான் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதும் இந்தியாவிற்கு விசுவாசமாவே வேலை பார்த்தாராம். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அரசு இவரை அடையாளம் கண்டு மரணதண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதுவரை இவரை பயன்படுத்திக்கொண்ட இந்திய உளவுப்படை அவரை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. 2001 ம் ஆண்டு ரவீந்தர் கவுசிக் இறந்துவிட்டார். உளவு வேலையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவருக்கு ‘கருப்பு டைகர்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

இந்தியாவிற்காக தன் வாழ்க்கையையே தொலைத்த ரவீந்தரனின் குடும்பமோ தற்போது வறுமையில் வாடுகிறது. தங்களுக்கு ஏக் தா டைகர் படக்குழுவினர் உதவவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர், இது ரவீந்தரின் கதை அல்ல என்று கூறிவிட்டார். ரவீந்தரின் குடும்பத்தினர் இந்த படத்தை பார்க்க காசு இல்லாமல் படத்தை பார்க்க வேண்டும் உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் அதையும் கூட நிராகரித்து விட்டார்களாம்.

 

இளையராஜாவின் 'நீ தானே என் பொன் வசந்தம்' - ஆடியோ விற்பனையில் சாதனை

Neethane En Ponvasantham Creates Record In Audio Sales

சென்னை: இளையராஜா இசையில் வெளியாகியிருக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் இசைக் குறுந்தகடுகள் விற்பனையில் பெரும் சாதனைப் படைத்துள்ளன.

ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நீ தானே என் பொன் வசந்தம்'. இப்படத்தின் முனோட்டம் இன்டெர்நெட்டில் 3 நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இளையராஜா - கவுதம் மேனன் இந்தப் படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதனால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. அதை நிறைவேற்றும் விதத்தில் இளையராஜா பிரமாதமான இசையை படத்துக்குக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படத்தின் பாடல்கள் கவனத்தை ஈர்த்து அனைவரின் பாராட்டுக்கும் ஆளாகியிருப்பதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

படத்தின் ஆடியோ சிடி சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வெளியாவதற்கு முன்னரே ஒரு லட்சம் சிடிக்கள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் குமார் தெரிவித்தார்.

'பலரும் இந்த சிடியை பொக்கிஷம் போல கருதி பாதுக்காக்கின்றனர். பாடல்களை டவுண்லோடு செய்வதே வழக்கமாக இருக்கும் நிலையில் ஆடியோ சிடியை ரசிகர்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர்.

செயற்கை ஒலிகள் இல்லாமல் லண்டன் ஆர்கெஸ்ட்ரா பங்களிப்போடு இயல்பான மெல்லிசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்துள்ளது', என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.