நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா விவகாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வந்த சத்யானந்தா என்ற கன்னடப் படத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
சத்யானந்தாவின் சிறுவயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறிய சூழல், ஆசிரமம் மற்றும் அதற்கு பிராஞ்சுகள் ஆரம்பித்தது, கதவைத் திற காற்று வரட்டும் என உபதேசங்களைத் தொடங்கி, தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டது, கடைசியில் நடிகையுடன் உல்லாசமாக இருந்து கம்பி எண்ணியது போன்றவற்றை நிகழ்வுகளை இந்தப் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்டதுமே தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த மனுவை நீதி்மன்றம் விசாரித்து சத்யானந்தா படத்துக்கு தடை விதித்தது.
தடையை நீக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடிப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்துக்குமே ஆதாரங்கள் உள்ளன. மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் அவை. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர் சத்யானந்தா குழுவினர்.