பாலு மகேந்திரா... ஒரு சகாப்தத்தின் மரணம்!

தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி பாலு மகேந்திரா மரணித்து விட்டாரா? - நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது திரையுலகமும், அதற்கு வெளியிலிருந்து அவரை நேசிக்கும் உள்ளங்களும்.

பாலு மகேந்திரா என்ன மரணத்துக்கு அப்பாற்பட்டவரா... அல்லது அவர் வயதுதான் மரணம் நெருங்கியிருக்கக் கூடாத ஒன்றா?

இரண்டுமே இல்லைதான். அவர் உடல் நிலை, வயது காரணமாக அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை சில ஆண்டுகளாகவே பலரும் உணர்ந்திருந்தார்கள்.

'பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி
இருக்கின்றதென்பது மெய்தானே..
பேதை மனிதனே உடம்பு என்பது
கனவுகள் வாங்கும் பைதானே!'

-என்ற பாடலைப் படமாக்கிய கலைஞன் அவர்தானே...

ஆனால் பாலு மகேந்திரா போன்றவர்களை அத்தனை சீக்கிரம் மரணம் தீண்டாத மனிதர்கள் பட்டியலில் வைத்துவிட்டது அவரை, அவர் படைப்புகளை நேசித்த ரசிக மனசு!

தமிழ் சினிமாவில் ரசனை மிகுந்த ஒரு இலக்கியவாதியாக திகழ்ந்தவர் அவர். சினிமாவைப் புரட்டி எடுக்கும் இலக்கிய விமர்சகக் கூட்டம் கூட, பாலு மகேந்திரா என்றால் பாசத்தோடு அரவணைத்துக் கொள்ளும். காரணம், நிஜத்துக்கும் சினிமாவுக்கும் பெரிய திரை போட்டுக் கொண்டதில்லை அவர்.

சினிமாவைப் படைக்கும் தன்னை ஒரு உத்தமன் என அவர் கூறிக் கொண்டதே இல்லை. சக மனிதனின் அழுக்கும் பொறைமையும் காதலும் காமமும் வன்மமும் தனக்கும் உண்டு. அது தன் படைப்பிலும் உண்டு என்பதை நேர்காணல்கள், மேடைகள், எழுத்துகள் என எதிலும் மறைத்ததில்லை அந்த மாபெரும் படைப்பாளி!

பாலு மகேந்திரா படைத்த பெண் பாத்திரங்கள் மகத்தானவை. பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே அவரது படைப்புகள் அமைந்திருக்கும். கோகிலாவாகட்டும் அழியாத கோலங்களாகட்டும்.. அவரே அவமானமாகக் கருதிய நீங்கள் கேட்டவையாகட்டும். அனைத்திலும் பெண்ணே ஆதாரம்!

சினிமாவை பாலு மகேந்திரா அளவுக்கு நேசித்த இன்னொரு படைப்பாளியை இந்தத் தலைமுறை இனி பார்க்க முடியுமா தெரியவில்லை. சினிமாவை அவர் வெறும் வியாபாரமாகக் கருதவில்லை. செலுலாய்ட் வடிவிலான வரலாறாகத்தான் பார்த்தார். அதற்காகத்தான் தன் இறுதி மூச்சு வரை, திரைப்பட ஆவணக் காப்பகம் வேண்டும் என்பதை தான் கால் வைத்த அத்தனை மேடைகளிலும் சொல்லி வந்தார் அந்த மனிதர்.

பாலு மகேந்திராவின் அத்தனைப் படங்களிலும் ஆதார ஸ்ருதியாகத் திகழ்வது அன்பும்.. அந்த அன்புக்கு நேர்கிற பங்கமும்தான்! 'மறுபடியும்' போன்ற ஒரு படைப்பை இப்போது பார்த்தாலும் கோடம்பாக்க படைப்பாளி ஒருவனின் நூறு சதவீத வாழ்க்கையைப் பார்க்கலாம். அத்தனை நேர்த்தியாக இன்னொருவரால் இதைப் பதிவு செய்வது சாத்தியமா என்பதும் சந்தேகம்தான்.

இலங்கையில் மட்டக்களப்பில் பிறந்த தமிழர் பாலு மகேந்திரா. ஆனால் இலங்கைப் பிரச்சினை பற்றி எதையும் அவர் தன் படைப்புகளில் பதிவு செய்யவில்லையே என்ற ஒரு கேள்வியை பல மேடைகளில் அவர் முன் வைத்திருக்கிறார்கள். அதற்கு பாலு மகேந்திரா சொன்ன பதில்...

'பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கும் உண்டு. ஆனால் அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விடயமிது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார்தான். ஆனால் அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே?' என்றார். அந்தக் கேள்விக்கு மட்டும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை!

ஒரு இயக்குநராக 35 ஆண்டுகள் பணியாற்றிய பாலு மகேந்திரா, 22 படங்களைத்தான் இயக்கினார். அது ஒரு கனாகாலத்துக்குப் பிறகு அவரது அடுத்த படைப்பை வெளியிட அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆகியது. காரணம், யாரையும் தேடிப் போய் எனக்கு படம் கொடுங்கள் என கேட்கத் தயங்கிய அவரது சுயமரியாதை.

நிபுணத்துவம் பெற்றவர்கள் பெரும்பாலும் அந்த பாண்டித்யத்தை தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்த நினைப்பதோ விரும்புவதோ அரிதினும் அரிது, குறிப்பாக திரைத் துறையில்!

ஆனால் திரைக்கதையாக்கம், சினிமா ஆக்கத்தின் சூட்சுமத்தை தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் உறுதியாக இருந்தார் பாலு மகேந்திரா. அதற்காக அவர் ஆரம்பித்ததுதான் சினிமா பட்டறை.

மிகக் குறைந்த - ஒரு டஜன் - மாணவர்கள் தனக்குப் போதும் என்பதில் தெளிவாக இருந்த அவர், அவர்களிடம் ஒரு நாணயமான தொகையை மட்டும் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு சினிமா சொல்லிக் கொடுத்தார்.

சொல்லிக் கொடுத்து சினிமா கற்பதா.. அது இயல்பானதில்லையே.. என்ற கேள்வியை ஒருமுறை முன்வைத்தபோது, 'உண்மைதான்... சொல்லிக் கொடுத்து சினிமா வருவதில்லை. ஆர்வம், படைப்புத் திறன் என்ற சின்ன பொறி இருக்க வேண்டும். அது இருக்கும் பத்துப் பேரைத்தான் நான் தேர்வு செய்கிறேன். இது கைப்பிடித்து எழுத வைக்கும் கலையல்ல. நான் ஒரு சின்ன கோடுதான் கிழிக்க முடியும். அவர்களின் படைப்புத் திறன் அந்த கோட்டை அழகிய ஓவியமாக பூர்த்தி செய்யும்,' என்றார்.

இந்தத் தெளிவு இருந்ததால்தான், அவரிடம் பயின்றவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பிதாமகனாகத் திகழ்ந்தார்!

என்னை கொல்ல முயன்றார்: சல்மான் நாயகி மீது போஜ்புரி நடிகர் புகார்

மும்பை: சல்மான் கானின் ஜெய்ஹோ பட நாயகி டெய்சி ஷா தன்னை கொலை செய்ய முயன்றதாக போஜ்புரி நடிகர் சத்யேந்திர சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சல்மான் கானின் ஜெய் ஹோ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளவர் டெய்சி ஷா.
இந்நிலையில் போஜ்பூரி நடிகரான சத்யேந்திர சிங் என்பவர் டெய்சி மீது உத்தர பிரதேச மாநிலம் மணிபூரி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,

நானும், டெய்சியும் சேர்ந்து சோடா என்ற படத்தில் நடித்தோம். அந்த படத்தின் டான்ஸ் மாஸ்டராக கணேஷ் ஆச்சார்யா இருந்தார். படத்தை வி.கே. சிங் இயக்கினார். கமலிஸ்தான் ஸ்டுடியோவில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அப்போது டெய்சி பிரபலமான நடிகரை தன்னுடன்நடிக்க வைக்க விரும்பினார். அதனால் என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தேன். அதன் பிறகு தான் அது விபத்து அல்ல என்னை பாலத்தில் இருந்து தள்ளிவிட வேண்டும் என்றே செய்த கொலை முயற்சி என்று தெரிய வந்தது. என்னை கொலை செய்ய முயன்ற டெய்சி ஷா, கணேஷ் ஆச்சார்யா, இயக்குனர் வி.கே. சிங் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பாலு மகேந்திரா உடலைப் பார்த்து கதறியழுத இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா!

சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து கதறி அழுதார் இயக்குநர் மகேந்திரன்.

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற காவியங்களைத் தந்தவருமான மகேந்திரன் இன்று பாலு மகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாலு மகேந்திரா உடலைப் பார்த்து கதறி அழுதார் அவர்.

மகேந்திரன் முதல் முதலாக இயக்கிய முள்ளும் மலரும் படத்துக்கு அற்புதமாக ஒளிப்பதிவு செய்து தந்தவர் பாலு மகேந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா

பாலு மகேந்திராவின் சமகால இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, தனது நண்பரான பாலு மகேந்திராவின் மரணத்தை நம்ப முடியாமலும் தாங்க இயலாமலும் கதறி அழதார். பாலு மகேந்திரா உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி மீது விழுந்து கண்ணீர் விட்டுக் கதறினார் பாரதிராஜா.

பாலு மகேந்திராவுடனான தன் நட்பைச் சொல்லிச் சொல்லி அவர் அழுது புலம்பினார்.

சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பாரதிராஜாவைப் பற்றி மிக நெகிழ்வாகப் பேசியிருந்தார் பாலு மகேந்திரா.

பாலா

பாலு மகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே வந்துவிட்ட பாலா, பின்னர் உடலருகே கலங்கிய கண்களுடன் இறுக்கமாக அமர்ந்திருந்தார்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணமுள்ளனர்.

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க ரூ. 20 கோடி வாங்கும் கமல் ஹாஸன்

சென்னை: த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமல் ஹாஸனுக்கு ரூ. 20 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசபே அதை தமிழில் ரீமேக் செய்கிறார். தமிழில் மோகன்லால் கதாபாத்திரத்தில் கமல் ஹாஸன் நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையில் ஜீத்துவுடன் சேர்ந்து கமல் சில மாற்றங்களை செய்யவிருக்கிறார் என்று இயக்குனரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமலுக்கு ரூ.20 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது.

படத்தில் கமலுக்கு ஜோடியாக நதியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

கோலி சோடா படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

சென்னை: சமீபத்தில் வெளியான கோலி சோடா படத்தைப் பார்த்துப் பாராட்டு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழில் வெளியாகும் புதுப் படங்களை உடனுக்குடன் பார்க்கும் ரஜினி, சம்பந்தப்பட்ட கலைஞர்களை உடனுக்குடன் போனிலோ நேரிலோ அழைத்துப் பாராட்டத் தவறுவதில்லை.

சமீபத்தில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், விஜய் மில்டன் எழுதி இயக்கிய கோலி சோடா படம் வெளியானது. வித்தியாசமான கதைக் களத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிரத்தியேகமாக போட்டுக் காட்டினர்.

படம் பார்த்த அவர், மிகவும் வித்தியாசமான முயற்சி இது என்றதோடு, மிக அருமையாக உருவாக்கியிருக்கிறீர்கள் என்றார்.

'ஆமா..எப்டி.. அவ்ளோ கூட்டமா இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்ல படம் பிடிச்சீங்க? அதுவும் இந்தப் பசங்கள ஒரிஜினல் கோயம்பேடு தொழிலாளர்களாவே மாத்தியிருக்கீங்க.. சூப்பர்' என்றார் இயக்குநர் விஜய் மில்டனிடம். மேலும் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கும் போன் செய்து 30 நிமிடத்துக்கும் மேல் பேசினார் ரஜினி.

ஏற்கெனவே திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த வழக்கு எண் 18/9, கும்கி ஆகிய படங்களையும் ரஜினி பார்த்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்! - ஒரு புதுமுக இயக்குநரின் ஆதங்கம்

‘விஜயகாந்த் நடிக்காதது எங்களைப் போன்ற திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான் ‘என்று சினிமா விழாவில் ஆதங்கப்பட்டார் ஒரு புதுமுக இயக்குநர்.

எண்டர் டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட் சார்பில் சன்ஜய் டாங்கே தயாரித்துள்ள படம் ‘மறுமுகம்‘. கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.

‘மறுமுகம்‘ படத்தின் பத்திரிகை - ஊடகவியாலாளர் சந்திப்பு நேற்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

படத்தின் இயக்குநர் கமல் சுப்ரமணியம் பேசும்போது, "இந்தப் படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாகச் சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் நண்பன் திரைப்படக் கல்லூரியின் சீனியர் மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஹீரோ, ஹீரோயின்கள் உள்பட பலருக்கும் இது முதல் படம். ஆனால் அனுபவசாலிபோல அசத்தியுள்ளார்கள்.

திரைப்படக்கல்லூரி மாணவர்கள் நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லாரது முதல் கனவும் அதுவாகவே இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் செல்லும் இடம் ராஜாபாதர் தெருவாகத்தான் இருக்கும். அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர். அப்போது நான் தயாராக இல்லை. நான் இயக்கத் தயாராக இருந்தபோது அவர் அரசியல், பொது வாழ்க்கை என்று வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் இப்போது நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்," என்றார்.

தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி பேசும்போது, "இது நண்பர்களின் கூட்டு முயற்சி. உழைப்புக்கு கிடைத்த படம்...," என்றார்.

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்

சென்னை: டி ராஜேந்தர் தன் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி ராஜேந்தர் தீவிர அய்யப்ப பக்தராக அறியப்பட்டவர்.

முன்பெல்லாம் தனது படத்தின் விளம்பரங்களில் அய்யப்பன் படத்தை பெரிதாக வெளியிடுவார் டிஆர்.

பின்னர் அவர் முஸ்லிமாக மாறிவிட்டதாக செய்திகள் உலாவின. பின்னர் அதை மறுத்தார் ராஜேந்தர்.

இந்த நிலையில், குடும்பத்தோடு அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிம்பு, குறளரசன் மற்றும் இலக்கியாவும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் மதம் மாறிவிட்டார்கள்.

இந்த மதமாற்றத்துக்கு சாட்சி சமீபத்தில் நடந்த ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம். முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இந்தத் திருமணம் நடந்தது.

டி ராஜேந்தரின் மனைவி உஷா நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே மனதளவில் கிறிஸ்தவராகிவிட்டவர். அதுமட்டுமல்ல, டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவிலேயே சிலுவைக் குறியீடு தொடர்ந்து இடம்பெற்றது நினைவிருக்கலாம்.

பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்  

1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும்.

தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.

சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது.

தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.

இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா.

இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள்.

பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.