சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினி!

Tags:



சிங்கப்பூர்: சென்னையில் அறிவித்தது போல, சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெறவில்லை. சிங்கப்பூரில் மிகப் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த மருத்துவமனையில் இந்தியாவின் அமர்சிங் உள்ளிட்ட பிரபல விஐபிக்கள் சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய ரஜினியை, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இப்போது சேர்த்துள்ளனர் அவரது மகள்களும் மருமகன்களும்.

இன்று இரவு விமானத்தில் செல்லும் லதா ரஜினி, மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்துக் கொள்கிறார். அவருடன் ரஜினியின் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவும் செல்கிறார்கள்.

ரஜினியை சிக்ச்சைக்காக சேர்த்திருப்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதுகுறித்த எந்த விவரமும் சொல்வதற்கில்லை என்றும், நோயாளிகளின் தனிமை மற்றும் ரகசியத்தைக் காப்பது தங்களின் முக்கிய கடமை என்றும் தெரிவித்தனர்.

 

சஞ்சய் தத்துக்கு பிடிவாரன்ட்!

Tags:


மும்பை: கடந்த மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக நடிகர் சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

கடந்த 2009 தேர்தலின்போது, சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலராக இருந்த சஞ்சய் தத், அர்ஷத் ஜமால் என்ற தங்கள் கட்சி வேட்பாளருக்கு பிரசாசாரம் செய்தபோது தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்காக பல முறை நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவே இல்லை.

எனவே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருஷ்ணகுமார் சஞ்சய் தத்துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார். சமாஜ்வாடி வேட்பாளரான அர்ஷத் ஜமாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 

எந்திரன் கதை விவகாரம்: சன் பிக்சர்ஸ், ஷங்கருக்கு சம்மன்

Tags:


சென்னை: எந்திரன் படத்தின் கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் எந்திரன். ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் 2010-ல் ரிலீசானது.

எந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று சென்னை ராயப் பேட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் 1996-ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை தமிழ் மாத இதழில் வெளியானது. 2007-ல் அக்கதையை ஒரு புத்தக நிறுவனம் அதனுடைய புத்தகத்தில் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன.

அந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். இதையடுத்து ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

ஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் புகார் முடித்து வைக்கப்பட்டது. எனவேதான் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளேன், என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை 13-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் விசாரித்தார். ஆரூர் தமிழ்நாடன் சார்பில் சார்பில் வக்கீல் எட்விக் ஆஜரானார். இந்த வழக்கில் அடுத்த மாதம் 24-ந்தேதி இயக்குனர் ஷங்கரும், தயாரிப்பாளரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்
 

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Tags:


ரெடி படத்தில் சல்மான்கானுக்கு ஒரு காட்சியில் முத்தம் கொடுத்தது உண்மைதான் என நடிகை அசின் கூறியுள்ளார்.

சல்மான்கான், அசின் ஜோடியாக நடித்த ரெடி படம் வருகிற 3-ந்தேதி ரிலீசாகிறது. இதில் இருவரின் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளதாக செய்தி பரவியுள்ளது.

இதுகுறித்து அசின் கூறுகையில், "ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில் சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன். அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வார்.

அவர் திறமையான நடிகர். படப்பிடிப்பில் அடிக்கடி ஜோக் அடித்து சிரிக்க வைப்பார். இமேஜ் பார்க்க மாட்டார். பிரதிபலன் எதுவும் பார்க்காமல் மற்ற வர்களுக்கு உதவி செய்வார். கேமரா முன்னால் வந்து விட்டால் வேறு மாதிரி மாறிவிடுவார். அவருக்கு நிகர் அவரேதான். ஸ்ரீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு படப்பிடிப்புக்காக போனோம். சல்மான்கானுடன் சேர்ந்து அந்த நாடுகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டோம், " என்றார்.

ரெடி படத்துக்கு இலவச விளம்பரம் தொடர்கிறது....!
 

இலியானா-பிரியங்கா மோதல்

Tags:


bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

இலியானா-பிரியங்கா மோதல்

5/28/2011 12:42:53 PM

இரண்டு முன்னணி ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிக்கும்போது போட்டி என்பது சகஜம். சில நேரம் அது மோதலாக மாறி விடுகிறது. இந்தியில் அனுராக் பாசு இயக்கும் 'பார்பி' என்ற படத்துக்கு பிரியங்கா சோப்ரா, இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். முதல் ஷெட்யூல் சுமூகமாக முடிந்தது. அடுத்த ஷெட்யூல் தொடங்கும் நிலையில் இரு ஹீரோயின்களுக்குள்ளும் மோதல் உருவாகி உள்ளது. பிரியங்கா சோப்ராவுக்கு மனநிலை பாதித்தவர் வேடம். இலியானாவுக்கு கிளாமர் வேடம். ஸ்கிரிப்ட் கேட்டபிறகே இருவரும் ஒப்புக்கொண்டபோதிலும் இப்போது பிரச்னை எழுந்துள்ளது.

'பிரியங்காவுக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடம் என்பதால் உன்னை எளிதில் தூக்கி சாப்பிட்டுவிடுவார்' என்று இலியானாவிடம் தோழிகள் உசுப்பி விட, அவர் முரண்டு பிடிக்க ஆரம்பித்தார். 'இதுதான் எனக்கு இந்தியில் முதல்படம். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாமலிருந்தால் எனது கேரக்டர் அடிபட்டுவிடும். எனவே கூடுதல் காட்சிகள், கூடுதல் பாடல் சீன்கள் வேண்டும்' என்று இலியானா குரல் உயர்த்தி உள்ளார். இதையறிந்த பிரியங்கா தனக்கும் கூடுதல் சீன்கள் தர வேண்டும் என்றார். இதையடுத்து ஷூட்டிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், 'ஷூட்டிங் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை' என்று இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டாலும் இரு ஹீரோயின்களுக்கும் கூடுதல் சீன்கள் உருவாக்குவதற்காக நேரம் தேவைப்படுவதால் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஓய்வுக்காக சிங்கப்பூர் பயணம் : சீக்கிரம் திரும்புவேன் கண்ணா... : ரஜினி பேட்டி!

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஓய்வுக்காக சிங்கப்பூர் பயணம் : சீக்கிரம் திரும்புவேன் கண்ணா... : ரஜினி பேட்டி!

5/28/2011 10:20:36 AM

நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்த தேவையில்லாத செய்திகளை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். லதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்பதை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சீக்கிரம் திரும்புவேன் கண்ணா...

நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விமான நிலையத்துக்கு ரஜினிகாந்த் அழைத்துச் செல்லப்பட்டார். நள்ளிரவில் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, ஆடியோ அறிக்கை மூலம் ரஜினியின் பேச்சு வெளியிடப்பட்டது. அதில் ரஜினியின் பேச்சு: ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன்..(சிரிப்பு). ஹேப்பியா போய்ட்டு வந்துகிட்டு இருக்கேன். எவ்வளவு சீக்கிரமா வரணுமோ அவ்வளவு சீக்கிரமா வந்துருவேன் ராஜாக்களா.. பணம் வாங்கிட்டு நடிக்கிற என்மேலே இவ்வளவு அன்பு காட்டுறீங்களே... அதை உங்களுக்கு எப்படி திருப்பி தர போரேணு தெரியல. தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி நடந்துக்கிறேன் கண்ணா. கடவுள் ரூபத்துல இருக்கிற உங்களோட அன்பு எனக்கு எப்போதும் இருக்கும். சீக்கிரமா திரும்பி வந்துடுவேன். ஓகே பை. இதனிடையே, ஓய்வுக்காகவும் குறிப்பிட்ட பரிசோதனைக்காகவும் ரஜினி வெளிநாடு செல்வதாக  ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.




 

கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!

Tags:


சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மகன் விஜய் ஸ்ரீ ஹரி விஷயத்தில் இன்னும் தீர்வு கிடைக்காததால், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று உண்ணாவிரதமிருக்க முயற்சி செய்தார் நடிகை வனிதா.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அந்த சிறுவன் தாயிடம் வர மறுக்கிறான். அவனுக்கு வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ் மூளைச் சலவை செய்துள்ளதாக குற்றம்சாட்டி வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உளவியல் நிபுணர்களிடம் ஆலோசித்தபிறகு, வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என வனிதா குற்றம்சாட்டியுள்ளார். எனவே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வனிதா புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர் ஆலோசனையின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஜெயகர்சாலி நேற்று மாலை வனிதாவிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆகாஷின் வீட்டுக்கு பெண் போலீசார் வனிதாவுடன் சென்றனர். அங்கிருந்த விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.

வனிதாவும் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று இரவு 11.30 மணி அளவில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வனிதா திடீரென வந்தார். எனது மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறிய அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறினார்.

இதையடுத்து போலீசார் மீண்டும் ஆகாஷின் வீட்டுக்கு வனிதாவை அழைத்துச் சென்றனர். அப்போதும் விஜய் ஸ்ரீஹரி அவருடன் செல்ல மறுத்து விட்டான். இதுதொடர்பாக வனிதா கூறுகையில், "வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி, திங்கள்) விஜய் ஸ்ரீஹரி என்னுடன் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை நான் ஓயமாட்டேன். ஆகாசிடமிருந்து அவனை மீட்காமல் விடமாட்டேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்", என்றார் அவர்.
 

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்த ரசிகர்கள்

Tags:


சிங்கப்பூர்: சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைப் பார்க்க அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்துடன் திரண்டுவிட்டனர்.

ஆனாலும் ரஜினி தனி வழியில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சென்றுவிட்டதால் அவரை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.

சென்னையிலிருந்து இரவு 11.30-க்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டார் ரஜினி. விமானம் வரை அவரது ஆம்புலன்ஸ் செல்ல சிறப்பு அனுமதி தரப்பட்டிருந்தது.

ரஜினி வருவது முன்கூட்டியே சிங்கப்பூரில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிட்டதால், ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து அந்த அதிகாலை நேரத்தில் காத்திருந்தனர்.

ஆனால் அதிகாலை 6 மணிக்கெல்லாம் ரஜினி தனி வழியில் விமான நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸே இதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ரஜினி வேறு வழியில் போய்விட்டார் என்பது தெரிந்ததும், சற்றும் அதிருப்தியடையாமல், அவர் விரைந்து உடல்நலம் பெற பிரார்த்தனை செய்தபடி ரசிகர்கள் கலைந்து சென்றதாக, சிங்கப்பூரில் உள்ள ரஜினி ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

ரஜினியுடன் 7 டாக்டர்கள் அடங்கிய குழு பயணித்துள்ளது. ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், உதவியாளர் சுப்பையா ஆகியோரும் அவருடன் பயணித்தனர்.

பேரன்களுடன் இன்று சனிக்கிழமை சிங்கப்பூர் பயணமாகிறார் லதா ரஜினிகாந்த்.

சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷனில் அவர் சிகிச்சைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அவர் செல்லக்கூடும் என்றும் தகவல் பரவியுள்ளது.
 

ஊத்தங்கரை முரளிக்கு குறும்பட ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது !

Tags:


ஊத்தங்கரை: சிறந்த குறும்பட ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த புனே திரைப்படக் கல்லூரி மாணவர் ஜி. முரளிக்கு கிடைத்துள்ளது.

கடந்த வருடத்திற்கான திரைப்பட, குறும்பட விருதுகள் கடந்த வியாழனன்று (மே 19) அறிவிக்கப்பட்டது. இதில் அருனிமா ஷர்மா இயக்கிய ஷயம் ராத் ஷெகர் என்ற குறும்படத்திற்குச் சிறந்த இயக்கம் மற்றும் ஒளிப்பதிவுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இக் குறும் படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றுள்ள ஜி. முரளி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர்கள் கே.சி. கோவிந்தராஜூம், சரோஜாவும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர்.

சிறந்த குறும்பட ஒளிப் பதிவாளருக்கான வெள்ளித்தாமரை விருதுடன் ரூ 50 ஆயிரம் பரிசுத் தொகை குடியரசுத் தலைவரால் முரளிக்கு வழங்கப்பட உள்ளது.
 

"ரசிகர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்...சீக்கிரம் வருவேன்"-கலங்க வைத்த ரஜினி

Tags: hellip


சென்னை: ரஜினி சிங்கப்பூர் கிளம்பும் முன் தன் ரசிகர்களுக்காக பேசியதன் ஆடியோவை அவரது இளைய மகள் செளந்தர்யா நேற்று இன்டர்நெட்டில் வெளியிட்டார்.

அந்த ஆடியோவில், தன் உடல் வலிகளையும் மறைத்துக் கொண்டு தனக்கேயுரிய சிரிப்பை உதிர்த்தபடி, 'சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா' என்று அவர் ரசிகனுக்கு தனிப்பட்ட முறையில் உடைந்த குரலில் சொன்னது… அத்தனை ரசிகர்களையும் உலுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

தங்கள் தலைவரின் குரலைக் கேட்டு மனம் கலங்கி அழுதவண்ணம் உள்ளனர் ரஜினியின் பல ரசிகர்கள்.

அந்த ஆடியோவில் உள்ள ரஜினியின் வாய்ஸ் இது தான்:

“ஹலோ… நான் ரஜினிகாந்த் பேசறேன்… ஹாஹாஹாஹா…. ஹாப்பியா போய் வந்துக்கிட்டிருக்கேன் நான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…

நீங்க கொடுக்கிற இவ்வளவு அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…?.

பணம் வாங்கறேன், ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்வளவு அன்பு கொடுக்கறீங்கன்னா… இதுக்கு எதை நான் கொடுக்கிறது?.

டெஃபனிட்டா நீங்க எல்லாரும், உலகம் முழுக்க இருக்கிற நம்ம பேன்ஸ் எல்லாரும் தலைநிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் செய்வேன் கண்ணா.

கடவுள் கிருபை எனக்கு இருக்கு. குரு கிருபை இருக்கு. எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்கிற உங்க கிருபை என் மேல இருக்கு… நான் சீக்கிரம் வந்துடறேன். ஓகே… பை… குட்".

மகிழ்ச்சியாக இருக்கிறார்-ராமச்சந்திரா:

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
நடிகர் ரஜினிகாந்த் மே 13ம் தேதி நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக மார்ச் மாதம் முதல் அவருடைய குடும்ப டாக்டர்கள் தொடக்கத்தில் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். இரு முறை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்த 13ம் தேதியில் இருந்து ரஜினிகாந்துக்கு முறைப்படி பொறுப்பாக பல தரப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அவரே உணவை உட்கொள்கிறார். உலாவுகிறார். குடும்பத்தினருடன் பொழுது போக்குகிறார். அவர் ஒரு மாற்றத்திற்காவும், ஓய்வு எடுக்கவும் சில குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

ரஜினியைக் காணத் துடித்த கமல்.. ஒரு உருக்கமான பின்னணி!

Tags:


திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத்தில் ஆயிரம் கருத்துவேறுபாடுகளைத் தாண்டிய நண்பர்கள். தமிழ் சினிமாவின் இரு பெரும் சிகரங்கள். இந்திய சினிமாவுக்கு புதிய கவுரவம் தந்த சாதனையாளர்கள். பெயர்களைச் சொல்வதில் கூட இவர்களை பிரித்து உச்சரிக்க முடியாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் தன்னிச்சையாக வரும்... அந்தப் பெயர்கள் ரஜினி - கமல்!

கடந்த ஒரு மாத காலமாக ரஜினி மருத்துவனையில் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காண அத்தனை விவிஐபிக்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் அனுமதிதான் கிடைத்தபாடில்லை. வெளியிலிருந்து நோய்க் கிருமிகள் ரஜினியைத் தாக்கக் கூடும் என்பதால் சிறப்பு வார்டில் அவர் வைக்கப்பட்டிருந்தார். மனைவி, மகள்கள், மருமகன் தவிர வேறு யாரும் ரஜினியைப் பார்க்க முடியவில்லை.

ஒரு காலத்தில் ரஜினியின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்து, பின்னர் ரஜினி வழியில் நடிகராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ள விஜயகாந்த் கூட ரஜினியை நேரில் சந்திக்க முடியாத நிலை. ஐசியுவிலிருந்த ரஜினியை கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு வந்து, "அண்ணன் ரஜினி நலமுடன் இருக்கிறார். திரும்ப பழையபடி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று உருக்கத்துடன் கூறினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரால் ரஜினியை பார்க்கக் கூட முடியவில்லை. எனவே அவர் ராகவேந்திரர் கோயிலில் ரஜினிக்காக பிரார்த்தனை செய்து, மக்களுக்கு தன் கையால் அன்னதானம் செய்தார். "இன்றைய சினிமாவில் அனைவருமே ரஜினிக்கு ரசிகர்கள்தான். பிறகுதான் நடிகர்கள். எங்கள் அன்புக்குரிய ரஜினி விரைந்து நலம்பெற்று வரவேண்டும்," என்றார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் எழுப்பிய கேள்வி, "கமல் சார் ஏன் இன்னும் பார்க்கவில்லை. அவரை விட உரிமையுள்ளவர் யார் இருக்கிறார்கள்...?" என்றே கேட்டு வந்தனர்.

உண்மையில் ரஜினியைக் காண மூன்றுமுறை கமல் முயற்சித்துள்ளார். ஆனால் அவர் ஒவ்வொரு முறை பார்க்க முயன்றபோதும், ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது டயாலிஸிஸ் சிகிச்சையில் இருந்ததால், பார்க்க முடியவில்லையாம்.

ரஜினியைப் பார்த்தாக வேண்டும் என லதா மற்றும் ஐஸ்வர்யாவிடம் அவர் சார்பில் கேட்கப்பட்டபோது, இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைள் காரணமாக நாங்களே அவரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே மருத்துவர்கள் அனுமதி அளித்ததும் உங்களுக்கு உடனே சொல்கிறோம்," என்று மிகுந்த தயக்கத்துடன் கூறியுள்ளனர்.

'பக்கத்திலிருந்தும் என் நண்பன் ரஜினியைப் பார்க்க முடியவில்லையே... அவரைச் சந்திக்கும் சூழலை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுங்கள்', என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் கலைஞானி.

கமல் 50 என்ற பெயரில் விஜய் டிவி விழா கொண்டாடியபோது, முதல் ஆளாய் அதில் கலந்து கொண்டு கடைசி ஆளாய் வெளியேறி நட்புக்கு மரியாதை செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. விழாவில் தன்னைப் பற்றி ரஜினி பேசியதைக் கேட்டு கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்ட கமல், அவரைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார். "எவன் சொல்வான் இந்த மாதிரியெல்லாம்... ரஜினி என் உண்மையான நண்பன்... பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்" என்றெல்லாம் கமல் புகழ்ந்தது நினைவிருக்கலாம்.
 

கவலைப்படாதீங்க, சீக்கிரம் திரும்பி வருவேன்-ஆடியோ மூலம் ரஜினி பேச்சு

Tags:


சென்னை: சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் காரணமாக அவதிப்பட்டு வரும் ரஜினிகாந்த்துக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூருக்கு நேற்று அவரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

நேற்று இரவு எட்டரை மணியளவில் முதலில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் விமான நிலையம் சென்றனர்.

பின்னர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 10 மணியளவில் ராமச்சந்திரா மருத்துவமனையி்ன் பின்புறம் வழியாக கீழே அழைத்து வரப்பட்டார். சக்கர நாற்காலியில் வைத்து அவரை கூட்டி வந்தனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் வெள்ளை நிற உடையில் அவர் இருந்தார்.

அதன் பின்னர் அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது வேனின் விளக்குகளை அணைத்து விட்டனர். ரஜினியை வேனில் ஏற்றிய பின்னர் வேன் கிளம்பிச் சென்றது. அப்போது மருத்துவமனைக்கு வெளியே பலத்த கெடுபிடிகளையும் தாண்டி கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினிகாந்த்தை வாழ்த்திக் கோஷமிட்டனர். அவரைப் பார்க்கவும் முண்டியடித்தனர். பலர் வேனுக்குப் பின்னால் ஓடவும் செய்தனர்.

உணர்ச்சிப் பெருக்குடன் ரசிகர்கள் காணப்பட்டதால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

யார் யார் சென்றனர்?:

ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஸ்வின், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரக மருத்துவ நிபுணர் பி.சௌந்தர்ராஜன், எலெக்ட்ரோ பிஸியாலஜிஸ்ட் டி.ஆர்.முரளீதரன் உள்ளிட்டோர் சென்றனர்.

இரவு 11.30 மணிக்கு புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினி புறப்பட்டுச் சென்றார்.

சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜி.கே.வாசன் உதவி:

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு ரஜினியும் அவரது குடும்பத்தினர், மருத்துவக் குழுவினர் செல்ல உடனடி விசாவுக்கும், விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை ஆம்புலன்ஸ் செல்வதற்கான சிறப்பு அனுமதி பெறவும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உதவி செய்துள்ளார்.

உற்சாகத்துடன் இருக்கிறார் ரஜினி-லதா:

சிங்கப்பூர் செல்லும் முன் லதா ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.

ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தனிமையில் இருக்க விரும்புகிறார்-ஐஸ்வர்யா:

ரஜினிகாந்த் குறித்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா கூறுகையில், அப்பா மற்ற பயணிகளுடன் தான் சிங்கப்பூர் செல்கிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. உடலில் உபரியாக இருக்கும் நீர்ச்சத்தை குறைக்கவும், புத்துணர்வுக்காகவும்தான் சிங்கப்பூர் போகிறார். அவர் கொஞ்ச காலம் குடும்பத்தினருடன் தனிமையில் இருக்க விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் அவர் ஓவ்வொரு வீட்டிலும் நேசிக்கப்படுபவராக-அந்த வீட்டில் ஒருவராக இருக்கிறார். அவரை பற்றி வரும் வதந்திகள் காரணமாக பொதுமக்கள் பீதியடைவது, அப்பாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரையும் அது வருத்தப்பட வைத்திருக்கிறது என்றார்.
 

ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா? - டாக்டர்கள் விளக்கம்

Tags: ldquo


சென்னை: ரஜினிக்கு மாற்று சிறுநீரக ஆபரேஷனுக்கான வாய்ப்புகள் குறைவு. அவரது சிறுநீரகங்கள் இயல்பான செயல்பாட்டுக்குத் திரும்பும் வாய்ப்புள்ளது, என அவருக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினிகாந்தின் உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்ததில், அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் காரணமாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை டாக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள்.

ரஜினிகாந்துக்கு மேலும் சிகிச்சை அளிப்பதற்காக அவர் வெள்ளிக்கிழமை இரவு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இது குறித்து அவருக்கு சென்னையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறியதாவது:

“ரஜினிகாந்தின் சிறுநீரகத்தில், கிரியாட்டினின் அளவு கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக துறை டாக்டர்கள் குழு, அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் சிறுநீரக கோளாறு தொடர்பான உயர் சிகிச்சை அளித்தார்கள்.

ஆபரேஷன் தேவையில்லை

அதன்பிறகு, சிறுநீரக கோளாறில் இருந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவருடைய சிறுநீரகம் 50 சதவீதம் இயங்கி வருகிறது. இப்போது அவருக்கு மாற்று சிறுநீரக ஆபரேஷன் அவசியத்துக்கான வாய்ப்புகள் குறைவு. தொடர்ந்து அவருக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த், ஒரு தனிமை விரும்பி. அவர் ஓய்வு கலந்த மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காகவே சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தனர்.

மருத்துவர் குழு பயணம்

அதன்படி, சிங்கப்பூர் செல்லும் ரஜினிகாந்துடன் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சௌந்தரராஜன் தலைமையில் மருத்துவ குழுவினரும், இருதய சிகிச்சை நிபுணரும் உடன் சென்றுள்ளனர்.

அவர்கள், சென்னையில் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் பற்றி சிங்கப்பூர் டாக்டர்களிடம் தங்கள் ஆலோசனைகளை தெரிவிப்பார்கள்," என்றனர்.