வந்தியத் தேவனாக விஜய்,பொன்னியின் செல்வனாக விக்ரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வந்தியத் தேவனாக விஜய், பொன்னியின் செல்வனாக விக்ரம்
2/22/2011 12:51:59 PM
இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் பல நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை படக்குழு தான் தெரிவிக்க வேண்டும். நமக்கு கிடைத்த சில தகவல்கள் எல்லாம் கோலிவுட்டில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக இளைய தளபதி விஜய் நடிக்கிறாராம். அதே போல் பொன்னியின் செல்வனாக விக்ரமும், தலையாய பாத்திரமான ஆதித்த கரிகாலன் வேடத்தில் விஷாலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர்களில் இத்தனைப் பேரையும் சந்தித்துப் பேசி, ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்தாலும், கதாநாயகி தேர்வுதான் பெரும் சவாலாக உள்ளதாம். இது ஒருபுறம் இருக்க, இசை துறையில் இரு சிகரங்களான இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானை இந்தப் படத்தில் இணைய வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம் மணிரத்னம்.


Source: Dinakaran
 

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்

2/22/2011 2:56:28 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா; படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 'ராணா' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

இதில், ரஜினிகாந்த் 3 மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். அவர் ஏற்கனவே மூன்று முகம் படத்தில் 3 வேடத்தில் நடித்தார். அதன்பின் இப்போது 3 வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவும். பட தொகுப்பை ஆன்டணியும் கவனிக்கின்றனர். டெக்னிக்கல் ஸ்பெஷல் எபக்ட்ஸ் விஷயங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனிக்கிறார். இந்நிலையில் ரஜினியின் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக மாதுரி தீட்சித் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்க அமெரிக்கா செல்வதால் ரஜினியுடன் 'ராணா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் மாதுரி தீட்சித்.





Source: Dinakaran
 

டான் 2 vs பில்லா 2

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டான் 2 vs பில்லா 2

2/22/2011 1:43:11 PM

எண்பதுகளில் இந்தியில் அமிதாப் நடித்து வெளியான ‘டான்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. டான் படத்தை தமிழில் ரஜினியை வைத்து பில்லாவாக எடுத்தனர். தமிழிலும் படம் பிளாக்பஸ்டர். பல ஆண்டுகள் கழித்து, பழைய டான் படத்தை, ஷாரூக்கை வைத்து புதிதாக எடுத்தனர். படம் சூப்பர் ஹிட். தமிழில் பில்லாவை அஜீத்தை வைத்து எடுத்தனர். சரிந்து கிடந்த அஜீத் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது அந்தப் படம்.

தற்போது தல அஜீத் முன்பே ‘டான் 2′ படத்தில் நடிக்க ஆரம்பத்திவிட்டார் ஷாரூக் கான். தமிழிலும் அஜீத் வைத்து ‘பில்லா 2′ இயக்க திட்டமிட்டுருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். ‘மங்காத்தா’ முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ‘பில்லா 2′ வில் நடிக்கிறார் அஜீத். தற்போது ரீமேக் ஆகி வருமட ‘டான் 2′ படத்தில் நீண்ட தலைமுடியுடன் மிக வித்தியாசமாகக் காணப்படுகிறார் ஷாரூக்கான். அவருக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா மற்றும் லாரா தத்தா நடிக்கின்றனர். பர்ஹான் அக்தர் இயக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுள்ளது.


Source: Dinakaran
 

ரஜினிக்கு ஜோடியாக சினேகா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்கு ஜோடியாக சினேகா?

2/23/2011 3:12:17 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா; படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 'ராணா' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவும். பட தொகுப்பை ஆன்டணியும் கவனிக்கின்றனர். ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜினியின் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக மாதுரி தீட்சித் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்க அமெரிக்கா செல்வதால் ரஜினியுடன் ‘ராணா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் மாதுரி தீட்சித். இதனையடுத்து ராணா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள். ஏற்கெனவே ரஜினி மகள் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோ தயாரித்த கோவா படத்தில் நாயகியாக நடித்தவர் சினேகா. எனவேதான் மீண்டும் சினேகாவையே அணுகியுள்ளனராம்.


Source: Dinakaran
 

சூர்யாவுக்கு ஜோடியாகிறார் சோனா சின்கா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சூர்யாவுக்கு ஜோடியாகிறார் சோனா சின்கா?

2/22/2011 12:08:01 PM

கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அட இதிலென்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று கேட்பவர்கள் காத்திருக்கிறது அதிசயம். இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து கெட்டப்புகளில் சூர்யா வருகிறார். இந்த ஐந்தில் ஒன்று ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்று மீடியாவில் செய்தி கசிந்து பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் அதனை கே.வி.ஆனந்த் மறுத்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ‘தபாங்’ படத்தில் சல்மான் கானுக்கு  ஜோடியாக நடித்த சோனா சின்கா நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை, இந்த செய்தியை தயாரிப்பாளர் தரப்போ, இயக்குனரோ உறுதி செய்யவில்லை.


Source: Dinakaran
 

மீனவர்கள் மீது தாக்குதல் :நாகையில் நடிகர் விஜய் இன்று ஆர்ப்பாட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீனவர்கள் மீது தாக்குதல் : நாகையில் நடிகர் விஜய் இன்று ஆர்ப்பாட்டம்

2/22/2011 10:23:53 AM

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதுபற்றி நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும், சிறைப்பிடித்து சென்று சித்ரவதை செய்வதும் அவர்களின் தொழில் உபகரணங்களை பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. அவர்களின் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து, அவர்களுக்காக குரல் கொடுக்க நினைத்தேன்.  அதற்காக, இன்று மாலை, 4 மணியளவில் நாகப்பட்டினம் காடம்பாடி வி.டி.பி கல்லூரி மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. உலகின் கவனத்தை மீனவ சமுதாயம் மீது திசை திருப்ப, ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.  எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், நிதியுதவி வழங்கி விஜய் பேசுகிறார்.


Source: Dinakaran
 

யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோசர் பேர் தயாரிப்பில் கமல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோசர் பேர் தயாரிப்பில் கமல்

2/22/2011 12:13:56 PM

பூ, ராமன் தேடிய சீதை, அவள் பெயர் தமிழரசி போன்ற தரமான படங்களை வழங்கிய மோசர் பேர் தற்போது யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோசர் பேர் படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு முதல்கட்டமாக செல்வராகவனின் கமல் நடிக்கும் ஒரு படத்தை கூட்டாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். விக்ரம் படமென்றை தயாரிக்கும் திட்டமும் இவர்களுக்கு இருக்கிறது.





Source: Dinakaran
 

மலையாளப் படமொன்றை இயக்கிறார் கௌதம் மேனன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாளப் படமொன்றை இயக்கிறார் கௌதம் மேனன்!

2/22/2011 12:17:27 PM

தமிழ் மற்றும் இந்தி படங்களை இயக்கி வந்த கௌதம் மேனன், தற்போது மலையாள திரையுலகத்திலும் இயக்க திட்டமிட்டுள்ளாராம், இதற்காக கேரளாவில் உள்ள திரையலகினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் கௌதம். கண்டிப்பாக இந்த வருடம் மலையாளப் படமொன்றை இயக்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.


Source: Dinakaran
 

சரண்யா மோகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சரண்யா மோகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

2/22/2011 2:53:06 PM

விஜய் தங்கச்சியாக ‘வேலாயுதம்’ படத்தில் சரண்யா மோகன் நடித்து வருகிறார். சமீபத்தலி (பிப் 20ந் தேதி) அவரது பிறந்தநாள் பட ஷூட்டிங்கில் கொண்டாடப்பட்டது. ‘வேலாயுதம்’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, சரண்யா மோகனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி மெகா கேக் வரவழைத்து அசத்தினார்.


Source: Dinakaran
 

தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்

2/22/2011 2:59:01 PM

'நந்தா நந்திதாÕ பட இயக்குனர் ராம் ஷிவா கூறியது: ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் பெறுவது, தயாரிப்பாளருக்கு கதை சொல்லி ஒ.கே. பெறுவது போன்ற நடைமுறைதான் உள்ளது. இப்படத்திற்கு கதையை தயாரித்துக்கொண்டு பாடலாசிரியர்கள் வாலி, விவேகா, கபிலன், ஜெயந்தா ஆகியோரைத்தான் முதலில் சந்தித்தேன். அவர்கள் எழுதிய 6 பாடல்களை இசை அமைப்பாளர் எழில் இசையில் ஒலிப்பதிவு செய்து கொண்டேன். அதன்பிறகே தயாரிப்பாளரை தேடிப்பிடித்தேன். ஹேம சந்திரன் ஹீரோ, மேக்னா ஹீரோயின். இப்படத்துக்காக ஒகேனக்கல் அருகில் உள்ள தொல்லாக்காது என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்தது. 15 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கொட்டும் நீர் வீழ்ச்சியில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.


Source: Dinakaran
 

போலீஸ் ஆனார் சிம்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போலீஸ் ஆனார் சிம்பு!

2/23/2011 10:27:05 AM

இந்தியில் ஹிட்டான 'தபாங்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து இந்தியில் ஹிட்டான படம் 'தபாங்'. இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, இப்போது 'உத்தமபுத்திரன்' படத்தை தயாரித்த பாலாஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் ரீமேக்கில் சல்மான் நடித்த கேரக்டரில் சிம்பு நடிக்கிறார்.

அவர் ஜோடியாக நடிக்க, இந்தி நடிகைகள் சோனம் கபூர் மற்றும் கேத்ரினா கைஃபிடம் பேசியுள்ளனர். இதில் ஒருவர் நிச்சயம் சிம்பு ஜோடியாக நடிப்பார் என்று பட வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்குகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். தெலுங்கில் 'தபாங்' படம், 'கபர் சிங்' என்ற பெயரில் தயாராகிறது. பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். சிம்பு நடிப்பில் இந்த வருடம் 'வானம்', 'போடா போடி', தபாங் ரீமேக் ஆகிய 3 படங்கள் வெளியாக இருப்பதாக சிம்புக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தபாங் படத்தில் சல்மான் கான் போலீசாக வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


Source: Dinakaran
 

கவர்ச்சி சினிமா வேண்டாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவர்ச்சி சினிமா வேண்டாம்

2/23/2011 10:30:20 AM

தனது பெயரில் இணையதளம் தொடங்கியுள்ளார் பாமா. ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ளவும், சமூக பிரச்னைகளில் தனது கருத்தை பதிவு செய்யவுமே இணையதளம் தொடங்கியுள்ளதாக கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சேவற்கொடி' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக 25 நாட்கள் திருச்செந்தூர் பகுதி கிராமங்களில் தங்கியிருந்து நடித்தேன். சினிமா படப்பிடிப்புக்காக அந்த பகுதி மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை எங்கும் பார்த்ததில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் படம் வெற்றி பெற கிராம மக்கள் திரண்டு வந்து கோவிலில் விசேஷ பூஜை நடத்தியது மறக்க முடியாத அனுபவம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்கச் செல்லும் கேரக்டர். இந்த படம் எனக்கு தமிழில், ரீ என்ட்ரி கொடுக்கும் என்று நம்புகிறேன். கவர்ச்சியாக நடிக்க தயங்குவதால்தான் தமிழ் பட வாய்ப்புகள் வருவதில்லை என்று சொல்வதில் உடன்பாடில்லை. மலையாளத்திலிருந்து அறிமுகமான நதியா, ரேவதி போன்றவர்கள் கடைசி வரை கவர்ச்சியாக நடிக்கவில்லை. அதேபோலத்தான் நானும் கவர்ச்சி வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.


Source: Dinakaran
 

கமர்சியல் ஆர்வம் இல்லை :நித்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமர்சியல் ஆர்வம் இல்லை : நித்யா

2/23/2011 10:32:45 AM

தமிழில் 'வெப்பம்', '180' படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நித்யா மேனன். அவர் கூறியதாவது: நடிகையானது எதிர்பார்த்தல்ல. சிறுவயது முதலே நடிக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைப்பேன். ஆனால், சூழ்நிலை என்னை ஹீரோயினாக்கி விட்டது. தெலுங்கில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தபோது, பூனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு படிக்க இருப்பதாக அந்த இயக்குனரிடம் சொன்னேன். ஆனால், அவர் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துவிட்டார். அந்த படம் ஹிட்டானது. எனக்கு கிளாமர், கமர்சியல் போன்ற விஷயங்களில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. மலையாள ரசிகர்களுக்கு என்னை ஆர்ட் படங்களில் நடிப்பவர் என்றுதான் தெரியும். அங்கு ஆர்ட் படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளேன். அதில் நடிக்கும்போது ஆத்ம திருப்தி இருப்பதாக உணர்கிறேன். சந்தோஷ் சிவன் இயக்கும் 'உருமி' படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ளேன். இளவரசி வேடம். '180' படத்தில் சித்தார்த்துடன் நடித்துள்ளேன். இந்த இரண்டு கேரக்டர்களும் பேசப்படும் விதமாக இருக்கும். இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.


Source: Dinakaran
 

மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்

2/23/2011 1:07:41 PM

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். 'டெல்லி டு மெட்ராஸ்' படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனால் அவரை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது, 'பதினாறு வயதினிலே' படத்தில் இடம்பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…' பாடல். பிறகு, 'கோடைகால காற்றே', 'அள்ளித் தந்த பூமி', 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி', 'பொன்மானைத் தேடி நானும்…', 'பூங்காத்து திரும்புமா' உட்பட இவர் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவரது குரல் ரஜினிக்கு பொருத்தமாக இருந்ததால், அவர் படங்களில் அதிகமாக பாடி வந்தார். இந்நிலையில் மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல் தெரிவித்ததுடன், 'என் மனதில் இடம்பெற்ற ஒரு சிலரில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்Õ என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.


Source: Dinakaran
 

வெற்றிமாறன் இயக்கத்தில் ‌‌ஜீவா,ஆர்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வெற்றிமாறன் இயக்கத்தில் ‌‌ஜீவா, ஆர்யா

2/23/2011 1:13:41 PM

ஆடுகளத்துக்குப் பிறகு வட சென்னை என்ற படத்தை கார்த்தியை வைத்து இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். இரு ஹீரோ சப்ஜெக்டான இதில் நடிக்க முதலில் ஒத்துக்கொண்ட கார்த்தி பிறகு வேண்டாம் என விலகிக் கொண்டார். இதை கேள்விப்பட்ட ‌‌ஜீவா தானாகவே முன்வந்து நடிக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக நடிக்க ஆர்யாவை அணுக, அவரும் உடனடியாக தனது சம்மதத்தை தெ‌ரிவித்துள்ளார்.


Source: Dinakaran
 

மலையாளத்தில் சரத்குமாருக்கு குவியும் பட வாய்ப்புகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாளத்தில் சரத்குமாருக்கு குவியும் பட வாய்ப்புகள்!

2/23/2011 3:01:44 PM

திலீப் தயாரிக்கும் மலையாள படத்தில், ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார் சரத்குமார். 'பழசிராஜா' படத்துக்கு பிறகு மலையாளத்தில் பிசியாகிவிட்டார் சரத்குமார். மோகன்லாலுடன் 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'ஓரிடத்தோரு போஸ்ட்மேன்' படங்களில் நடித்து வந்த அவர், இப்போது 'மெட்ரோ' என்ற படத்தில் நடிக்கிறார். இதை மலையாள ஹீரோ திலீப்பின் கிராண்ட் புரொடக்ஷன் தயாரிக்கிறது. தற்போது இன்னும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.


Source: Dinakaran
 

பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் :நடிகர் விஜய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் : நடிகர் விஜய்

2/23/2011 3:05:00 PM

இலங்கை பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நாகை காடம்பாடியில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் மைதானத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். நடிகர் விஜய் பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறேன். தாயை அடித்தால் மகன் எப்படி வேகப்படுவானோ அந்த உணர்வோடுதான் நான் வந்திருக்கிறேன்.சென்னை முதல் குமரி வரை 7 கடலோர மாவட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து தொழில் செய்கிறார்கள்.

அவர்களின் உயிரோடு இலங்கை அரசு விளையாடி வருகிறது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டும், 543 மீனவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். நாளைக்கு காலை எல்லாரும் மீனவர் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தந்தி அனுப்புங்க. நீங்க அனுப்புற லட்சக்கணக்கான தந்திகள் பிரதமர் வீட்டு கதவையும், தமிழக முதல்வர் வீட்டு கதவையும் தட்டட்டும். இது தமிழக மீனவர் பிரச்னைக்கு சின்ன ஆதாரமாக இருக்கட்டும். பாண்டியன் குடும்பத்துக்கும், ஜெயக்குமார் குடும்பத்துக்கும் தலா ரூ.50,000 நிதி கொடுக்கிறேன். நாளை காலை நாகை மாவட்ட தலைவர் சுகுமாறன் இதை உரியவர்களிடம் தருவார்.இவ்வாறு நடிகர் விஜய் பேசினார். தடியடி:முன்னதாக, விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் மேடையில் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


Source: Dinakaran
 

இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன்

2/23/2011 3:16:42 PM

நடிப்பை விட்டுவிட்டு படத் தயாரிப்பில் ஈடுபட்ட சோனா, மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: படத் தயாரிப்பில் முழுவதுமாக கவனம் செலுத்தலாம் என்று நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதையடுத்து இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கவர்ச்சி உடைகளில் பொது விழாக்களில் கலந்து கொள்ளவும் மாட்டேன் என்று சோனா அறிவித்துள்ளார்.


Source: Dinakaran