டார்லிங் பேய்க்காக காத்திருக்கும் கோஸ்ட் கோபால் வர்மா!

சென்னை: சில டிரைலர்கள் சிரிப்பை வரவழைத்து படம் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும், சில டிரைலர்கள் எரிச்சலை ஏற்படுத்தும், இதில் டார்லிங் படம் முதல் ரகம்.

ஜி.பி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள டார்லிங் படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது. ஐ வருமா வராதா என்று சிலர் சீட்டு குலுக்கி பார்த்துக்கொண்டிருக்க சத்தமே இல்லாமல் பொங்கல் ரேஸில் இணைந்து விட்டது டார்லிங்.

டார்லிங் பேய்க்காக காத்திருக்கும் கோஸ்ட் கோபால் வர்மா!

இப்படத்தின் ட்ரைலர் டிவியில் அரைமணிக்கு ஒருமுறை ஒளிபரப்பாகிவருகிறது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த விளம்பரம் வரும்போது யாரும் ரிமோட்டை மாற்றுவதில்லையாம்.

நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன் பேயை விரட்ட "கோஸ்ட் கோபாலாக" வருகிறார்.

ட்ரைலரில் கருணாஸ் பேசும் "எண்ணமா இப்படி பண்றீங்களேமா?" என்ற வசனத்தில் ஆரம்பித்து, அதன் பிறகு வரும் அனைத்து வசனமும் சிரிப்பு சரவெடி.

இந்த கோஸ்ட் கோபல் வர்மா என்னைத் தாண்டி ஏதாவது பேய் வருமா? என்கிறார் ராஜேந்திரன்.

இறுதியில் தலைவிரி கோலமாய் வரும் பேய்,"ஐ யம் கம்மிங் பார் யூ" என்று கூற அதற்கு தலையை ஆட்டிக்கொண்டே ராஜேந்திரன் ‘ஐயம் வெயிட்டிங்' என்று கூறுவது செம கலாட்டா.

ட்ரைலர் பார்த்த அனைவருக்கும் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

டார்லிங் பேயை பார்க்க போறவங்க கோஸ்ட் கோபால்வர்மாவை பார்த்து சிரித்துவிட்டு வாங்க.

 

ஆவேச ரசிகர்கள்... அமைதிகாக்கச் சொல்லும் ரஜினி!

இன்றைக்கு ரஜினி ரசிகர்களைப் போல மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் யாரும் இருக்க முடியாது. காரணம் அவர்கள் ரஜினியை வெறும் திரைப் பிம்பமாக மட்டும் பார்ப்பவர்கள் இல்லை. பெரும்பாலானவர்கள் ரஜினியை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பவர்கள்.

அப்படிப்பட்ட ரஜினிக்கும் அவரது படத்துக்கும் எதிராக மிகக் கச்சிதமாக திட்டமிடப்பட்ட ஒரு சதி அரங்கேறுகிறதோ என்ற எண்ணம் அவர்களை மனக் கொதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

ஆவேச ரசிகர்கள்... அமைதிகாக்கச் சொல்லும் ரஜினி!

லிங்கா படம் வெளியான நாளிலிருந்தே நஷ்டம் என்றும் படம் சரியில்லை என்றும் ஒரு கூட்டம் கிளம்பியது. உலகிலேயே படம் வெளியான மூன்றாம் நாள் நஷ்டம் என்று கூறிய விநியோகஸ்தர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள் என அதிர்ச்சியோடு பார்த்தது திரையுலகம்.

அன்று ஆரம்பித்த எதிர்மறைப் பிரச்சாரம் கடந்த 30 நாட்களாகத் தொடர்ந்தது. இன்று அதே கூட்டம் உண்ணாவிரதம் என்று வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்தபோதுதான், இந்த பிரச்சாரத்தின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்தது.

நாம் தமிழர் கட்சியை நடத்தி வரும் சீமானும், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் அரசியல் செய்துவரும் பண்ருட்டி வேல்முருகனும் இவர்களுக்கு பக்க பலமாய் நிற்கிறார்கள் என்பது தெரிய வந்ததுமே, சினிமாவிலிருப்பவர்களும், சினிமாவைப் பார்ப்பவர்களும் நிஜம் என்ன என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக மீடியா, சீமானுக்கும வேல் முருகனுக்கும் இங்கென்ன வேலை? என்ற கேள்வியை வெளிப்படையாகவே கேட்டுவிட்டது. இவர்கள் தூண்டிவிட்டுத்தான் ரஜினி எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்துகிறீர்களா என்று கூடக் கேட்டுவிட்டார்கள்.

மீடியாவே இப்படி என்றால், ரஜினியின் ரசிகர்கள் எப்படி நினைப்பார்கள்?

தங்கள் தலைவரின் புகழைக் கெடுக்கவும், வேறு ஒரு நடிகரை முதன்மைப்படுத்தவும்தான் சீமான் இந்த வேலையில் இறங்கியிருக்கிறார் என அவர்கள் சமூக வலைத் தளங்களில் கொந்தளிப்புடன் விவாதித்து வருகின்றனர்.

அதே நேரம் இந்த ஆன்லைன் போராளிகள் ஒருபோதும் களத்துக்கு வருவதில்லை.

ஆனால் ரஜினிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அடிமட்ட ரசிகர்கள் இப்போது கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

சென்னையில் லிங்கா படத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததுமே, பதிலுக்கு பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு தயாரானார்கள் சென்னை மாவட்ட ரசிகர்கள். திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்ட ரசிகர்களும் தயாரான போது, ரஜினி தரப்பில் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.

ரசிகர்கள் யாரும் இப்போதைக்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்க வேண்டாம். தலைவர் பார்த்துக் கொள்வார் என்பதே மேலிடத்திலிருந்து வந்த தகவல் என்றார்கள் மன்ற நிர்வாகிகள்.

 

இன்று 'கான கந்தர்வன்' கே ஜே யேசுதாஸ் பிறந்த நாள்!

ஏழு முறை தேசிய விருது பெற்றவரும் கான கந்தர்வன் என அழைக்கப்படுபவருமான கே ஜே யேசுதாசுக்கு இன்று 75 வது பிறந்த நாள்.

கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸின் (கே.ஜே. யேசுதாஸ்) கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர்.

இன்று 'கான கந்தர்வன்' கே ஜே யேசுதாஸ் பிறந்த நாள்!

ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார். திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார்.

முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை' பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார்.

மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து, 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார். 5 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வன்... இவையெல்லாம் யேசுதாசுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்.

இன்றும் தன் குரல் வளத்தை அப்படியே வைத்திருக்கும் 'தாசேட்டன்', தாமாகவே பாடுவதைக் குறைத்துக் கொண்டார். முக்கியமான பாடல்களை மட்டும் மறுக்காமல் பாடித் தருகிறார்.

 

டார்லிங்குக்கு 175 தியேட்டர்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து, பொங்கலுக்கு வெளியாகும் பேய்ப்படம் டார்லிங்குக்கு 175 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு புதுமுகம் என்ற வகையில் ஜிவி பிரகாஷுக்கு இது பெரிய விஷயமாகும்.

டார்லிங்குக்கு 175 தியேட்டர்கள்

நிக்கி கல்ராணி, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள இந்தப் படத்தை கே.இ.ஞானவேல்ராஜா, அல்லு அரவிந்த் இணைந்து நடித்துள்ளனர். சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

பொங்கலுக்கு ஐ, ஆம்பள படங்கள் அதிக அரங்குகளில் வெளியாவதால், டார்லிங் படத்துக்கு 100 அரங்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது 175 அரங்குகள் கிடைத்துள்ளதை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

ஜனவரி 14-ம் தேதி டார்லிங் வெளியாகிறது.

 

சிம்பு தம்பியால் தாமதமாகிறதா இது நம்ம ஆளு?

சிம்பு - நயன்தாரா நடிக்க, பாண்டியராஜ் இயக்கும் இது நம்ம ஆளு படத்துக்கு ஆரம்பத்தில் ஏக பரபரப்பு கிளப்பப்பட்டது. ஆனால் அத்தனையும் புஸ்ஸாகிப் போனது... காரணம், படம் அடுத்த கட்டத்துக்குப் போகவே இல்லை.

படப்பிடிப்பும் நடக்காமல், ரிலீஸ் பற்றிய எந்த செய்திகளும் இல்லாமல் அமைதியாகிவிட்டது இது நம்ம ஆளு வட்டாரம். படப்பிடிப்புக்கு படு தாமதமாக வரும் சிம்புவுடன் இயக்குநர் மோதல் என்ற ஆரம்பத்தில் செய்திகள் வந்தன.,

சிம்பு தம்பியால் தாமதமாகிறதா இது நம்ம ஆளு?

விசாரித்ததில் படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணமே சிம்பு தம்பி குறளரசன்தான் என்கிறார்கள்.

குறளரசன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். அவருக்கு அறிமுகப் படம்.

குறளரசனால்தான் படம் தாமதமாகிறது என்பதை வெளிப்படையாகவே பாண்டிராஜ் கூறியுள்ளார். ட்விட்டரில், 'பொங்கலன்று இது நம்ம ஆளு டீசர் வரும். ஆனால் இசை இல்லாமல்... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?' என்று கிண்டலடித்துள்ளார். அதில் குறளரசன் மற்றும் சிம்புவை டேக் செய்துள்ளார்.

இந்தப் படம் கடந்த 2013 ஜனவரியில் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் ட்ரைலர் கூடத் தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

படகு விபத்தில் உயிர் தப்பினார் ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் முன்னணி நடிகையான படகு விபத்தில் உயிர் தப்பினார் ப்ரியங்கா சோப்ரா

திடீரென அந்த படகு பவளப்பாறையொன்றில் பயங்கரமாக மோதியது. இதில் படகு உடைந்தது. எல்லோரும் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். இதைப் பார்த்ததும் கடலோர காவல் படையினர் அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

உடைந்த படகை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை வேறு படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். இந்த விபத்தில் பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

 

என்னை அறிந்தால் படத்தின் வியாபாரம் தொடங்கியது!

என்னை அறிந்தால் படத்தின் தமிழக உரிமையை வாங்கியது எம்கே என்டர்பிரைசஸ் நிறுவனம். இதற்கு முன் விஷாலின் சமர் படத்தை இந்த நிறுவனம் வெளியிட்டது.

இம்மாத இறுதியில் வெளியாகவிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் கேரள உரிமையை எம்ஜி நாயரும், கர்நாடக உரிமையை காவேரி தியேட்டர்ஸும் பெற்றுள்ளன.

என்னை அறிந்தால் படத்தின் வியாபாரம் தொடங்கியது!  

வெளிநாடுகளில் படத்தை வெளியிடும் உரிமைய ஐங்கரன் பெற்றுள்ளது. அமெரிக்காவில் அட்மஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

ஆந்திரா மற்றும் இதர நகரங்களில் வெளியிடும் உரிமையை விலை பேசி வருகின்றனர்.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு வருவதாக இருந்த படம் திடீரென 1 மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

மாமா ஐ லவ் யூ…..

லவ்ன்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கடுப்பாகுது... ஆனா நானே ஐ லவ் யூ சொல்ல வேண்டியிருக்கே.

இது பாமக தலைவர் ராமதாஸ் இல்லைன்னா அன்புமணி ராமதாஸ் சொன்ன வார்த்தையோ இல்லை. தென்றல் தொடரில் காதலுக்கு எதிராக கொடி பிடிக்கும் ஜாதி வெறி பிடித்த கவுன்சிலர் சொல்லும் வார்த்தை..

காதலர்களை பிரித்து வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யும் கவுன்சிலர் கணேசபாண்டியனின் மகளே காதலிக்கிறாள். இந்த காதலை சேர்த்து வைக்க தமிழ், துளசி ஜோடி முயற்சி செய்கிறது.

மாமா ஐ லவ் யூ…..

இதற்காக கணேச பாண்டியனின் மனைவி, மகள், என அனைவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துதான் சில எபிசோடுகளாக போய்க்கொண்டிருக்கிறது.

ஓட ஓட விரட்டுறோம்

உங்களை ஓட விட்ட ஜி.பியை ஓட ஓட விரட்டுறோம். ஜி.பி. மகளோட காதலை சேர்த்து வைக்கிறோம் என்று துளசி ஆவேசமாக கூற தமிழ் உற்சாகமடைகிறார்.

காதலிங்க ப்ளீஸ்

இதற்காக அவர்கள் செய்யும் முதல் காரியம் ஜி.பி எனப்படும் கணேச பாண்டியனின் மனைவியை கடத்துகின்றனர்.

ரவுடிகளின் மனைவிகள்

கணேசபாண்டியனின் அடியாட்களின் மனைவிகளை காதலிக்க சொல்கின்றனர். இதனால் அடியாள் வேலையை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு போவதாக சொல்கின்றனர் அடியாட்கள்.

மாமா ஐ லவ் யூ

அதை விட ஒரு ஜாலி என்னவெனில் கணேசபாண்டியனின் மனைவியை காதலிக்க சொல்வதுதான். திகட்ட திகட்ட காதலிங்க... காதல் போதை கணேச பாண்டியனின் தலைக்கு ஏறனும் என்று அட்வைஸ் சொல்லி அனுப்பி வைக்கிறது துளசி அன் கோ.

ஐயோ... கொல்றாளே

இதே சூட்டோடு வீட்டுக்கு வந்த ஜி.பியின் மனைவி ஒவ்வொரு முறையும் ஐ லவ் யூ சொல்லச் சொல்ல கணேச பாண்டியன் மெர்சலாவதுதான் சீரியலின் ஹிட்.

சிரிக்க வைக்கும் தென்றல்

எது எப்படியோ 9 மணியானால் அழ வைத்த தென்றல் சில எபிசோடுகளாய் சிரிக்க வைக்கிறது. அணையப்போகும் விளக்கும் பிரகாசமாய் எரியும் என்பது இதுதானோ. அதான் இன்னும் சில நாட்களில் சீரியல் முடியப்போகுதோ அதுவரைக்கும் சிரிச்சுக்கங்க என்கின்றனர்.

 

சமந்தாவின் புதிய காதல்...

கடந்த இரு தினங்களாகவே சமந்தாவின் காதல் முறிவு பற்றி செய்திகள்தான் உலா வருகின்றன. சமந்தாவை சித்தார்த் கைவிட்டு விட்டார் என்று பரிதாபம் காட்டினால், அது தனது சொந்த விசயம் என்று சமந்தாவின் புதிய காதல்...

கருப்பு உடையில் காரை விட்டு ஸ்டைலாக இறங்கும் சமந்தாவிடம் பேட்டி எடுக்கும் செய்தியாளர் கூட புதிய காதல் பற்றியே கேட்கிறார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொல்லும் சமந்தா கூடிய விரைவில் சொல்கிறேன் என்று கூறிவிட்டுப் போகிறார்.

இது எந்த விளம்பரத்திற்கு தெரியலையே? விளம்பரம்தான் என்றாலும் இப்போது சமந்தாவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கும், இதற்கும் முடிச்சு போட்டுதான் பேசுகின்றனர்.

 

ஐ பட வழக்கு வாபஸ்... பொங்கலுக்கு படம் ரிலீஸ்!

கடன் பிரச்சினை காரணமாக ஐ பட வழக்கு வாபஸ்... பொங்கலுக்கு படம் ரிலீஸ்!

ஜனவரி14ஆம் தேதி பொங்கலன்று வெளிவரும் 'ஐ' படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சமூகமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டது.

திரைபடத் துறையின் நலனை முன்னிட்டே இந்த முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே 'ஐ' படம் குறிப்பிட்ட தேதியில் வெளி வர தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரியப் படுத்துகிறோம். இந்த படத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த குறிப்பு மூலம் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஐ படம் பொங்கலுக்கு வருவதில் எந்தத் தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

 

புலி படத்தில் விஜய்- ஸ்ருதி சொந்தக் குரலில் பாட்டு!

தமிழ் சினிமாவில் சொந்தக் குரலில் பாடும் நடிகர் - நடிகைகளுக்குப் பஞ்சமில்லை. விஜய்யும் ஸ்ருதிஹாஸனும் அவ்வப்பது சொந்தக் குரலில் பாடி வருபவர்கள்.

இப்போது இருவரும் முதல் முறையாக ஜோடி சேரும் புலி படத்தில் இருவருமே ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடப் போகிறார்களாம்.

புலி படத்தில் விஜய்- ஸ்ருதி சொந்தக் குரலில் பாட்டு!

சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா இன்னொரு நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். அதில் ஒரு பாடலுக்காக ஈசிஆரில் பிம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கியுள்ளனர். இன்னும் மூன்று பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார் தேவிஸ்ரீபிரசாத். இந்த மூன்று பாடல்களில் ஒரு பாடலுக்கு விஜய்-சுருதியை பாட வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.