தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன்.
தமிழில் ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி. இரண்டுமே ரசிகர்களை ஏமாற்றிவிட்டன.
அதன் பிறகு ஸ்ருதிஹாஸன் தமிழில் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் நடித்ததெல்லாம் தெலுங்கு மற்றும் இந்தியில்தான். பலுபு, ஏவடு, ராமய்யா வஸ்தாவையா, ரேஸ்குராம் நான்கு பெரிய பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் யாரிடமும் கதை கேட்கக் கூட மறுப்பதாக கூறப்பட்டது. எனவே அவர் இனி தமிழில் நடிக்கமாட்டார் என செய்தி பரவியது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் ஏன் தமிழை புறக்கணிக்கப் போகிறேன். அப்படிச் சொல்வதே முட்டாள்தனம். நடிகர்கள்தான் குறிப்பிட்ட மொழியோடு நின்று போவார்கள். ஆனால் நடிகைகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை.
இப்போதைக்கு தெலுங்கு, இந்தியில் பிசியாக உள்ளேன். தமிழில் நான் விரும்புகிற மாதிரி கதை அமைந்தால நடிப்பேன்," என்றார்.