கட்டிப்பிடித்து கிஸ்ஸடித்து நட்பை விளம்பரப்படுத்திக் கொண்ட நயன் - திரிஷா!

Nayan Trisha Patch Up With Hug Lots

அவர் வாய்ப்பை இவர் பறித்தார்... இவர் வாய்ப்பை அவர் தட்டிவிட்டார்... அவருடைய ஆளை இவர் கரெக்ட் பண்ணிட்டார்.... இவருடைய லவ்வரை அவர் லவட்டிக் கொண்டார்....

-நயன்தாரா மற்றும் த்ரிஷா பற்றி மீடியாவில் தொடர்ந்து வந்த செய்தி மற்றும் கிசுகிசுக்கள் இவை. அதற்கேற்ற மாதிரிதான் இருவரும் நடந்து கொண்டனர். தத்தமக்கு வேண்டப்பட்ட நிருபர் & நிருபிகளை ரகசியமாக அழைத்து இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுத்ததெல்லாம் நடந்தது!

அட ஏதாவது விழாக்களில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் நடந்த தனியார் அவார்ட் ஷோவில் இருவரும் அப்படி இழைந்தார்கள். திடீரென்று இருவரும் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என்ற ரேஞ்சுக்கு கட்டிப் பிடித்து கூடிக் குலாவினார்கள்.

விழா முடிந்ததும் வழக்கமாக நடக்கும் சரக்கு பார்ட்டியில் வழிந்த சரக்குகளை விட 'செம ஹாட் மச்சி' எனும் அளவுக்கு இவர்களின் ஷோ நடந்ததாம்.

இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிய, 'த பார்றா கூத்தை' என்று வேடிக்கைப் பார்த்தார்களாம் சக கலைஞர்கள்.

நயன்தாரா - த்ரிஷா சண்டை முட்டிக் கொண்டது விஜய் நடித்து சிறகொடிந்து போன குருவியிலிருந்துதான் என்பது கோலிவுட்டை அக்குவேறாகப் பிரித்து மேயும் வாசகர்களுக்கு தெரியும்தானே!

 

'அவ எனக்கே சொந்தம்' - டாப்ஸிக்காக அடிதடி ரகளையில் இறங்கிய மகத் -மஞ்ச் மனோஜ்!

Magath Manoj Fight Tapsi Public   

டாப்சியை காதலிக்கும் போட்டியில் நடிகர்கள் மனோஜ் மஞ்சுவும், மகத்தும் விருந்தில் ஒருவரோடு ஒருவர் அடித்து சண்டை போட்டுக் கொண்டனர்.

மங்காத்தா படத்தில் நடித்தவர் மகத். என்னைத் தெரியுமா படத்தில் அறிமுகமானவர் மஞ்ச் மனோஜ். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் அடுத்து வருவான் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகத்துக்கும், டாப்சிக்கும் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு இருந்தது. படப்பிடிப்புக்காக டாப்சி சென்னை வரும்போதெல்லாம் அவரை பிக்கப் செய்வது மகத்தானாம்.

ஆனாலஸ் மஞ்ச் மனோஜை சந்தித்த பிறகு மகத்தை தொங்கலில் விட்டாராம் டாப்ஸி.

மனோஜும், டாப்சியும் ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்கள் எனும் அளவுக்கு தெலுங்குப் படவுலகில் செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

டாப்சியை தன்னிடம் இருந்து அபகரித்து கொண்டதாக மனோஜ் மீது மகத் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சென்னை நட்சத்திர ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் தெலுங்கு, தமிழ், நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர். இதுவும் சரக்குப் பார்ட்டிதான். அப்போது மகத்தும் - மனோஜும் சந்தித்துக் கொண்டனர்.

உடனே, டேய் டாப்ஸி என் ஆளு.. நீ அவகிட்ட பேசாதே என ஒருவருக்கொருவர் சவுண்ட் விட ஆரம்பித்துள்ளனர்.

ஆவேசப் பேச்சு சீக்கிரமே ஆபாசப் பேச்சாக மாற, ஒரு கட்டத்தில் கைகலப்பில் இறங்கினர். மகத் சட்டையை பிடித்து இழுத்து மனோஜ் அடித்து உதைத்தார். பதிலுக்கு மகத்தும் தாக்கினார். விருந்துக்கு வந்திருந்தவர்கள் இருவரையும் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதுகுறித்து மகத்திடம் கேட்டபோது, தகராறு நடந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. மனோஜ் என்மேல் ஏன் கோபமாக இருக்கிறார் என்று புரியவில்லை. இந்த சண்டைக்கு நான் காரணமில்லை, என்றார்.

ஆனால் மனோஜ் மஞ்சுவின் சகோதரி, லட்சுமி மஞ்சு இருவருக்கும் தகராறு நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார். தகராறு நடந்த இடத்தில் லட்சுமியும் இருந்தார் என சண்டையை விலக்கிவிட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சண்டையை விட மகா சுவாரஸ்யம்., சண்டையை விலக்கிவிட்ட ஒரு இளம் இயக்குநர் விட்ட கமெண்ட்: 'ஒரு சப்ப பிகருக்கே இந்த சண்டையாடா?'

 

திருப்பதியில் அஜீத் - பில்லா 2 வெற்றிக்காக வேண்டுதல்!

Ajith Prays At Tirupati Billa 2 Suc

ரஜினியைப் பின்பற்றுவது என்று முடிவு செய்தாகிவிட்டது. படம் நடிப்பதில் ஆரம்பித்து, பேட்டி கொடுப்பது, விருது வாங்குவது என அனைத்திலுமே ரஜினி பாணிக்குத் திரும்பிவிட்டார் போலிருக்கிறது அஜீத்.

அடுத்து சாமி கும்பிடுவதிலும் அவர் பாதையிலேயே நடக்க ஆரம்பித்துள்ளார்.

ரஜினி தன் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அல்லது வெளியான பின்னரும் திருப்பதிக்குப் போய் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இப்போது அஜீத்தும் அந்த வழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். பார்வதி ஓமனகுட்டன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

பில்லா-2 படம் வருகிற 13-ந்தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நாளை துவங்குகிறது.

இந்த நிலையில் படம் வெற்றிபெற திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார் அஜீத். அவருடன் உறவினர்கள் சென்றிருந்தனர்.

அஜீத் வந்திருப்பது தெரிந்ததும் வழக்கம்போல, சாமியை விட்டுவிட்டு, அஜீத் பின்னால் பெரும் கூட்டம் ஒன்று சுற்ற ஆரம்பித்தது. பின்னர் தரிசனம் முடித்துவிட்டு கிளம்பினார் அஜீத்.

 

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு - விருந்து!

Vijay Honours Top Scorers Sslc Plus   

பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

சென்னையில் உள்ள அவரது ஜேஎஸ் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த இந்த விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி, சால்வை அணிவித்தார். அதோபோல தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களையும் கவுரவித்தார்.

மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு தனது இயக்கத்தின் நிர்வாகிகள் இதே போல பரிசுகள் வழங்கி உதவுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

பின்னர், வந்திருந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விருந்தளித்த விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆனந்த், செயலாளர் ரவிராஜா, மக்கள் தொடர்பாளர் பிடி செல்வகுமார் உள்பட பலரும் பங்கேற்றனர்.

 

நடிகையின் பலே டெக்னிக் - மகா கடுப்பில் முக்கிய ஹீரோக்கள்!

கொஞ்ச நாளாக எந்த இணையதளம் அல்லது செய்தித் தாளைத் திறந்தாலும் முக்கிய செய்தி, 'வாரிசு நடிகை விக்ரமுடன் ஜோடியாமே...', 'அடுத்து விஜய்யுடன் ஆடிப் பாடுவாரா?' 'மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாமே..?' என்கிற கேள்விக்குறி செய்திகள்தான்.

என்ன மேட்டர் என்று விசாரித்த போதுதான், நடிகையின் பிரமாதமான வேலை இது என்று தெரிந்தது. இப்படியொரு யோசனையே இல்லாதவர்கள்கூட, இந்த மாதிரி செய்திகளைப் படித்துவிட்டு, நடிகையை கேட்டுப் பார்க்கலாமா என யோசிக்க வேண்டும். இதுதான் இத்தகைய செய்திகளின் நோக்கம் என்பது தெரிய வந்தது.

சமீபத்தில் மெகா இயக்குநரின் படத்தில் இவர் நடிப்பதாக வந்தது. அவரைக் கேட்டால், என் படத்துலதான் ஏற்கெனவே ஹீரோயின் போட்டாச்சே... என் கதைப்படி இன்னொரு ஹீரோயினுக்கு சான்ஸே இல்லையே..., என்று கிண்டலாகச் சொன்னாராம்.

துப்பறியும் படத்தில் ஜோடியாமே, என்று அந்தப் பட இயக்குநரைக் கேட்டால், அவர் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகளின் தலையாய வார்த்தையை சத்தமாகச் சொல்லி, இதே வேலையாப் போச்சு... என்கிறார்.

சம்பந்தப்பட்ட ஹீரோக்களோ மகா கடுப்புடன், அந்த நடிகை மட்டும் எனக்கு வேண்டவே வேண்டாம் என்கிறார்களாம்.

ஆனால் நடிகையோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமனைப் போல, இவருக்கு தான் ஜோடி என இவரே பரப்பி வருகிறார் கேள்விக் குறி செய்திகளை!

 

தரணி படத்துக்காக கூத்துப்பள்ளியில் பயிற்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : மெலோடி மூவீஸ் சார்பில் வி.ஜி.எஸ்.நரேந்திரன் தயாரிக்கும் படம், 'தரணி'. ஆரி, கர்ணா, குமரவேல், சான்ட்ரா, சுசித்ரா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு: ஆர்.பிரகாஷ், வினோத் காந்தி. இசை, பி.என்சோன். குகன் சம்பந்தம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: தோல்விக்குப் பின்னுள்ள மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் படம் இது. கலிபோர்னியா தத்துவக் கவிஞர் ராபர்ட் பிராஸ்ட் எழுதிய 'பயணிக்கப்படாத சாலை' என்ற கவிதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இரண்டு கூத்துப்பாடல்களுக்கு குமரவேல் அடவுகட்டி நடனம் ஆடியுள்ளார். இதற்காக செய்யாறு புரிசையிலுள்ள கண்ணப்ப தம்பிரானின் கூத்துப்பள்ளியில் பயிற்சி பெற்றார். கண்ணப்ப தம்பிரானின் மகன் கண்ணப்ப சம்பந்தம் குழுவினருடன் நடித்துள்ளார். தெருக்கூத்து புலவர் செ.மு.திருவேங்கடம், கூத்துப்பாடல்களை எழுதியுள்ளார்.


 

புதுமுகங்கள் தேவை காமெடி படமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், 'புதுமுகங்கள் தேவை'. இதில் சிவாஜி தேவ், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், பானு, விஷ்ணுப்பிரியா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ், ஆர்.சரவணன். இசை, ட்வின்ஸ் டியூன்ஸ். கதை, திரைக்கதை: எஸ்.ஏ.அபிமான். வசனம், கவிதா பாரதி. படம் பற்றி இயக்குனர் மனீஷ்பாபு கூறும்போது, 'படம் இயக்க வேண்டும் என்பது, உதவி இயக்குனர் சிவாஜி தேவின் ஆசை. தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பது, ஓட்டல் சூபர்வைசர் ராஜேஷ் யாதவின் ஆசை. இவர்கள் சந்திக்கின்றனர். கையில் பணம் இல்லாமல் படம் தயாரித்து, இயக்க முற்படும் அவர்களின் ஆசை நிறைவேறியதா என்பது கதை. இது முழுநீள காமெடிப் படம்'' என்றார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.


 

நள்ளிரவில் காம்னாவை துரத்திய வாலிபர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மும்பை, : தமிழில், 'இதயத் திருடன்Õ, Ôமச்சக்காரன்Õ, 'காசேதான் கடவுளடா' படங்களில் நடித்தவர் காம்னா ஜெத்மலானி. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துவருகிறார். மும்பையில் வசிக்கும் காம்னா, கடந்த வெள்ளிக்கிழமை அந்தேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் போரிவிலியில் உள்ள தன் வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சில இளைஞர்கள், காரில் பின்தொடர்ந்தனர். கார் ஜன்னல் வழியாக தலையை நீட்டி ஆபாசமாக கிண்டல் செய்தனர். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக தங்களது காரை ஓட்டி வழிமறிக்க பார்த்தனர். இதில் நடுங்கிப்போன காம்னா பலமுறை சாலையோர நடைபாதை மேடையில் காரை மோதினார். ஆனால் நிறுத்தவில்லை. 40 நிமிடம் அவர்கள் துரத்திக்கொண்டே வந்தனர். ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தார். பிறகு அவர்களின் கார் நம்பரை குறித்துக்கொண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஈவ் டீசிங் வழக்கில் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதுபற்றி காம்னாவிடம் கேட்டபோது, Ô'என் வாழ்வில் இப்படியொரு பயத்தை அனுபவித்தது இல்லை. ஆபாசமாக கத்தியபடி அவர்கள் துரத்தி வந்தனர். எனது காரை தடுத்து நிறுத்துவதில் குறியாக இருந்தார்கள். அப்போது எனக்கு ஏற்பட்ட பயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது'' என்றார்.


 

பிரபுதேவா இயக்கத்தில் ஸ்ருதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிரபுதேவா இயக்கும் இந்திப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.
'ரவுடி ரத்தோர்' படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு அடுத்தும் இந்தி படம் இயக்குகிறார் பிரபு தேவா. அடுத்த மாதம் தொடங்கப்போகும் இந்தப் படத்தில், இந்தி படத் தயாரிப்பாளர் குமார் தவ்ரானியின் மகன் கிரிஷ் ஹீரோ. அவர் ஜோடியாக நடிக்க புதுமுகங்களைத் தேடி வந்தனர். இப்போது ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுபற்றி பிரபுதேவா கூறும்போது, ''இந்த கேரக்டருக்கு ஸ்ருதி பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்ததால் அவரை நடிக்கக் கேட்டோம். சம்மதித்துள்ளார். இது இனிமையான காதல் கதை. கமர்சியலாக இருக்கும்'' என்றார். தொடர்ந்து மூன்று படங்களை இயக்கப் போகும் பிரபுதேவா, இப்போது மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு ஸ்ரீதேவியின் பங்களாவில் வசிக்கிறார்.


 

சினிமாவில் கதைதான் ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகும் படம், 'சந்திரா'. இதில், ஸ்ரேயா ஹீரோயின். கணேஷ் வெங்கட்ராம் ஹீரோ. இவர்கள் தவிர பிரேம், விவேக் நடிக்கிறார்கள். ரூபா அய்யர் இயக்குகிறார். கவுதம் இசை அமைக்கிறார். படம் பற்றி நிருபர்களிடம் ஸ்ரேயா கூறியதாவது:
மன்னர் பரம்பரையின் இப்போதைய வாரிசுகளுக்கு இடையேயான காதல்தான் கதை. இதில் இளவரசியாக நடிக்கிறேன். சின்ன வயதில் கதை கேட்கும்போது என்னை இளவரசியாக கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது என்னை இளவரசி போல அலங்கரித்து நடிக்க வைக்கிறார்கள். இது சந்தோஷமாக இருக்கிறது. நிறைய நகைகள் போட்டு விதவிதமான சேலைகள் அணிந்து நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் வளரும் ஹீரோவுடன் நடிக்கிறேன். அதனால் என் இமேஜ் பாதிக்காது. எப்போதுமே படத்தின் ஹீரோ யார் என்று பார்ப்பதில்லை. கதை¬யும், அதில் என் கேரக்டரையும் மட்டும்தான் பார்ப்பேன். காரணம் எந்த ஒரு படத்திலும் கதைதான் ஹீரோ. கதைதான் அதற்கேற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்கிறது. இந்தப் படத்தின் இளவரசி கேரக்டருக்கு கதை என்னை தேர்வு செய்திருக்கிறது. தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசைதான். அதற்காக வருகிற படங்களில் எல்லாம் நடித்து எண்ணிக்கையை உயர்த்துவதால் என்ன பயன்? நல்ல படமாக அமையும்போது தொடர்ந்து நடிப்பேன்.


 

அர்ஜுனன் காதலி புராண கதையின் தழுவலா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : எஸ்.எஸ்.மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் படம் 'அர்ஜுனன் காதலி'. ஜெய், பூர்ணா ஜோடி. படத்தை இயக்கும் பார்த்தி பாஸ்கர் கூறியதாவது:
படத்தின் தலைப்பை பார்த்து விட்டு இது புராண கதையா என்று கேட்கிறார்கள். அப்படி  இல்லை. இது முற்றிலும் இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த காதல் கதை. சிலரின் பெயரால் சிலர் அடையாளம் கணப்படுவதைப்போல படத்தின் நாயகி அர்ஜுனன் காதலி என்று அறியப்படுகிறாள். அதனால் இந்தப் பெயர். ஒரு மாணவனுக்கும் குறிப்பிட்ட மாணவிக்கும் எப்படி காதல் உருவாகிறது? உருவான பிறகு அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள், பெற்றவர்களிடம் இருந்து விலகி அவர்கள் நெருங்குவது எப்படி என்பதை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் முயற்சி.
பொதுவாக இடி இடிக்கும்போது, 'அர்ஜுனா...அர்ஜுனா' என்பார்கள். அப்படி சொல்லும் வழக்கமுடைய ஹீரோயின், அர்ஜுனா என்ற பெயர் கொண்ட ஹீரோ. இருவருக்கும் காதல் வருவதற்கு இடி முக்கிய காரணமாக இருக்கும். இதனால் படத்தின் பல காட்சிகளில் இடி, மழை இருக்கும்.


 

கல்வி உதவித்தொகை விஜய் வழங்கினார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுமை மாநிலத்தில் ப்ளஸ் டூ மற்றும் 10&ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித் தொகைகளை நடிகர் விஜய் வழங்கினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜய், ''கல்விக்கு உதவுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். மற்ற இயக்கங்களைப் போல இதுவும் கல்வி இயக்கமாக வளரும் என நினைக்கிறேன். இந்த உதவிகளுக்கு வேறு நோக்கம் ஏதும் இல்லை'' என்றார். விழாவுக்கு விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் என்.ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர்ர் ரவிராஜா, துணைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

இயக்குனருடன் சுஜிபாலா நிச்சயதார்த்தம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்' உட்பட பல படங்களில் நடித்தவர், சுஜிபாலா. தற்போது 'உண்மை' என்ற படத்தில் நடிக்கிறார். இதை இயக்கி நடிக்கும் ரவிகுமாரும் சுஜிபாலாவும் முதலில் நட்பாகப் பழகினர். இந்த நட்பு காதலானது. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததை அடுத்து  நாகர்கோவில், கொய்யன்விளை திருமண மண்டபத்தில் இரு தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதுபற்றி சுஜிபாலா கூறும்போது, 'இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அக்டோபரில் திருமணம் நடக்கும்' என்றார்.


 

வில்லியாக நடிக்கிறாரா விஜயலட்சுமி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : 'ரெண்டாவது படம்' படத்தில் வில்லி வேடத்தில் நடிப்பதாக வந்த தகவல் பற்றி விஜயலட்சுமி கூறியதாவது:
இதுவரை நான் நடிக்காத கேரக்டர் என்பதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது வில்லி வேடமா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. வீரப்பன் வாழ்க்கை வரலாறான 'வன யுத்தம்' படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தமிழ்ப் பதிப்புக்கு நான் டப்பிங் பேசியுள்ளேன். என் திருமணம் பற்றி கேட்கிறார்கள். இப்போது அதற்கு அவசரம் இல்லை. சினிமாவில்  சாதித்த பிறகுதான் அதுபற்றி யோசிப்பேன்.




 

தீவிரவாதத்தை அழிக்கும் சுழல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : ஒயிட் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'சுழல்'. பாரீஸ், சாரு, ரோஸின், ஜோதி, அதுல் குல்கர்னி, பிரதாப் போத்தன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் ஆர்.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக சர்வதேச தீவிரவாத கும்பல் ஊடுருவுகிறது. அவர்களை அழித்து, நாட்டை பாதுகாக்கும் கதை. துப்பறியும் அதிகாரியாக அதுல் குல்கர்னி நடிக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைக்க, 80 இசைக்கலைஞர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். கடலில் நின்ற கப்பலில், 500 துணை நடிகர்களுடன், 10 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. 27&ம் தேதி படம் ரிலீசாகிறது.


 

அதிசய காதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : அம்மா மூவீஸ் சார்பில் டி.சடகோபன் தயாரிக்கும் படம், 'அதிசய காதல்'. புதுமுகங்கள் ரவிசங்கர், அல்லுசியான், ஷெனிஷா, ரித்திகா, கலாரஞ்சனி நடிக்கிறார்கள். சக்தி காந்த் ராஜன் இசையமைத்து இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, 'இந்தியாவிலேயே மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மாணவன், தான் விரும்பும் நடிகையின் குளோனிங்கை உருவாக்குகிறான். பின்பு அவளுடன் வாழத் தொடங்குகிறான். இந் நிலையில் நிஜ நடிகை மாணவனை தேடி வர, எல்லாமே விபரீதமாகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பெறும்' என்றார்.


 

சிறுத்தை புலி பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தெலுங்கில் ரிலீசான 'சிறுத்தா' படம் 'சிறுத்தை புலி' யாக தமிழில் 'டப்' ஆகிறது. ராம் சரண், நேகா சர்மா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, பிரம்மானந்தம் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 3 கே என்டர்டெயின்மென்ட் சார்பில் கே.லோகேஷ்தத் தயாரித்துள்ளார். இசை, மணிசர்மா. பாடல்கள்: சுதந்திரதாஸ், தமிழமுதன், ஜெயமுரசு. வசனம், ஏ.ஆர்.கே.ராஜராஜா. கதை, திரைக்கதை எழுதி பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார்.
இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, பி.எல்.தேனப்பன், காட்ரகட்ட பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

எதிர்ப்பார்த்த ஸ்ரீப்ரியா குடும்பம் - வராத சிவாஜி குடும்பம்

Ramkumar Absents His Son S Film Event

சிவாஜி தேவ் -

சிவாஜி குடும்பத்து வாரிசுகளுள் ஒருவர். ஸ்ரீப்ரியாவின் அக்கா மீனாவுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கும் பிறந்தவர். ஊர் உலகறிய மீனா தன் மனைவி என்றும், சிவாஜி தேவ் தன் மகன் என்றும் ராம்குமாரே மேடை போட்டு அறிவித்தும் விட்டார்.

சிவாஜி தேவ் முதலில் நடித்த படம் சிங்கக்குட்டி. இந்தப் படத்தின் வெளியீடு ஏக தடபுடலாகத்தான் நடந்தது. இந்தப் படவிழாக்களில் நேரடியாக ராம்குமார் பங்கேற்காவிட்டாலும், செய்தியாளர்களிடம் தன் மகனுக்காக பேசவே செய்தார்.

அந்தப் படம் சரியாகப் போகவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு சிவாஜி தேவ் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று 'புதுமுகங்கள் தேவை'.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேபில் நடந்தது. விழாவுக்கு ஸ்ரீபிரியா, அவர் அக்கா மீனா ராம்குமார் ஆகியோர் வந்திருந்தனர். தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆஜராகியிருந்தனர்.

விழாவுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டவர் ராம்குமார்தான். கடைசி வரை அவர் வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஏனோ ராம்குமார் வரவே இல்லை!

 

குடும்பத்திற்காக நடிப்பதை விட்டேன்– சினிமா செய்திகள் அர்‌ச்‌சனா‌

No Acting Only Anchoring Cinima Seithigal Archana

‘அரசி' சீரியலில் நடிக்கும்போதே நடிப்பிற்கு பை சொன்ன அர்ச்சனா இப்போது சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி வருகிறார். காம்பயரிங் மட்டும் போதும் என்று முடிவு செய்தது ஏன் என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் மடக்கினோம்.

நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே இந்தத் துறையில்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் மீடியாத்துறைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டுதான் வந்தேன். எனக்கு நடிப்பதைவிட, காம்பியரிங் செய்வதில்தான் அதிக விருப்பம்.

ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு இயக்குனர் சமுத்திரக்கனி முதன்முதலில் அரசி தொடரில் நடிப்பதற்கு அழைத்தார். எனக்கு நடிப்பெல்லாம் வராது என்று பயந்தேன். அவர்தான் உன்னால முடியும் தைரியமா செய் என்று என்கரேஜ் செய்தார். ராதிகா மேடத்தோடு நடிக்கிற வாய்ப்பு வேறு. ஏன் வீண் செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் அரசி தொடர் மூலம் மக்கள் மனதில் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

அந்த நேரத்தில் எனக்கு திருமணம் ஆனதினால் பாதியில் விலகிவிட்டேன். நடிப்பு, காம்பியரிங், குடும்பம் என எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. நேரம் இருக்காது என்பதினால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன்.

என் திருமணம் பெற்றோர் பார்த்து முடிவு செய்த பின்புதான் காதலித்தோம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையே ஆறுமாத இடைவெளி இருந்தது அப்போதுதான் காதலித்தோம். குடும்பம் என்று வந்தபிறகு அதைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். அதனால் நடிப்பதை விட்டு விட்டேன். தற்போது காம்பியரிங் மட்டும் செய்கிறேன்.

ரசிகர்கள் என்மீது அதிக அளவில் அன்பும் அக்கறையும் கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பு என் கணவர் அமெரிக்காவில் இருந்தார். என் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து பார்த்து உடனுக்குடன் விமர்சிப்பார். அப்போதே ஏதாவது ஒரு ஷோ வந்தால் கூட அதைப் பார்த்துவிட்டு இப்படி பண்ணலாமே.. அப்படி பண்ணலாமே என்று சொல்லுவார்.

எந்த தவறு என்றாலும் வெளிப்படையாகச் சொல்வார். என் முதல் ரசிகரும், முதல் விமர்சகரும் என் கணவர்தான் என்று கூறி மகிழ்ச்சியோடு புன்னகை பூத்தார் அர்ச்சனா.

 

நீங்க நல்லா இருக்கணும்: பந்தல் முதல் பந்தி வரை!

Wedding Special Program Neenga Nalla Irukkanum

திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. திருமணம் செய்வது சாதாரண விசயமில்லை. அதனால்தான் வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று கூறுவார்கள். திருமணம் செய்து கொள்பவர்களின் சிரமத்தை தெரிந்துதான் தற்போது நிறைய மேட்ரிமோனியல் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சிகளிலும் திருமண சேவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திருமணம் என்பது வெளிநாடுகளில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேர நிகழ்ச்சியாக நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் இந்திய கலாசாரத்தில் மட்டும்தான் திருமணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த கொண்டாட்டத்தை மனதில் கொண்டு ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் `நீங்க நல்லா இருக்கணும்' நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.பொதுவாக திருமணம் என்றால் வரன்களை அறிமுகப் படுத்துவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் வரன்கள் அறிமுகத்தோடு திருமணத்திற்கு தேவையான, திருமண மண்டபங்கள் இந்தியா முழுவதும், ஒவ்வொரு ஊரிலும், சிறியது முதல் பெரியது வரை எங்கெங்கு எத்தனை திருமண மண்டபங்கம் இருக்கின்றன என்ற புள்ளி விவரங்கள் வரை தரப் படுகின்றன.

திருமணம் முடிந்தபின் மணமக்கள் தேனிலவு சென்று வர எளிதான விமான சேவையுடன் வெளிநாடுகளில் தரமான ஹோட்டல்களில் குறைந்த செலவில் தங்கவும், ஏற்பாடு செய்து தருகிறார்கள். திருமணத் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை என்றால் அவர்களது பிரச்சினைகளை மருத்துவர்கள் மூலம் சரி செய்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு மனிதனின் முழு வளர்ச்சியை உருவாக்கும் ஆரோக்கியமான நிகழ்ச்சித் தொடராக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை திருவிஷன் மீடியா சார்பில் ரவிகுமார் தயாரித்து இயக்குகிறார்.

 

ஆயிரமாவது எபிசோடை நோக்கி ‘பெண்ணே உனக்காக’

Penne Unakkaka Reaches 1000th Episode

பொதிகை தொலைக்காட்சியில் திங்கம் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி `பெண்ணே உனக்காக...'1000-வது எபிசோடை எட்டவிருக்கும் இத்தொடர், பெண்களின் வரவேற்பை பெற்ற தொடராகி இருக்கிறது.

பெண் தன் வாழ்க்கையில் தாயாய், தாரமாய், மகளாய், பல வகைகளில் பரிணமிக்கிறாள். அவள் உடல் நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை. அப்பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றம் அனைத்திற்கும் மகிழ்ச்சி என்பது உலகம் அறிந்த ஒன்று.

"பூப்பு முதல் மூப்பு வரை'' என்கிற நிகழ்ச்சியில் ஒரு பெண் பூப்பு எய்துவது முதல் மூப்பு முடியும் வரை நிகழக்கூடிய அனைத்து விதமான நிகழ்வுகளையும் விளக்கமாக எடுத்து உரைப்பதும், "என் கேள்விக்கு என்ன பதில்?'' நிகழ்ச்சியில் கணவன் மனைவிக்கும் ஏற்படுகிற ஐயங்களையும், அதனை தீர்ப்பது எப்படி என்பதை எடுத்து சொல்வதும் நிகழ்ச்சியின் தனிச்சிறப்பம்சம்.

குறிப்பாக பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளவும், சரியான மருத்துவரை அணுகவும், சரியான சிகிச்சையை பெறவும், சரியான தருணங்களில் சரியான முடிவுகளை எடுக்க இந்நிகழ்ச்சி பெண்களுக்கு உதவி வருகிறது. நிகழ்ச்சியை பிரபல மகப்பேறு மருத்துவ பேராசிரியர் ஜெயம் கண்ணன் வழங்கி வருகிறார். ஏ.கே.கம்யூனிகேஷன் சார்பில் நிகழ்ச்சியை தயாரித்து வழங்குபவர் அரசு கிருத்திகா.

 

நானும் இளையராஜாவும் பார்ட்டிக்கு போனவங்கதான்.. பார்ட்டி கொடுத்தவங்கதான்!- கங்கை அமரன்

Ilayaraaja Me Attending Liquor Partties At Once

"இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெற்றால் போதும். உடனே அந்த படம் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். 'பார்ட்டி' கொடுக்கும் கலாசாரம் இப்போது அதிகமாகி வருகிறது.

என் மகன்களும் அடிக்கடி 'பார்ட்டி'களுக்கு போகிறார்கள். திரும்பி வரும்போது, பிரச்சினையையும் இழுத்து வந்து விடுகிறார்கள்.

நானும், எங்க அண்ணன் இளையராஜாவும் ஒரு காலத்தில் 'பார்ட்டி'க்கு போனவர்கள்தான். 'பார்ட்டி' கொடுத்தவர்கள்தான். ஒரு 'பார்ட்டி'யில் பிரச்சினை ஆகிவிட்டது. அதில் இருந்து 'பார்ட்டி'க்கு போவதையும் நிறுத்தி விட்டோம். 'பார்ட்டி' கொடுப்பதையும் நிறுத்தி விட்டோம்.

கண்ணதாசனை இழிவுபடுத்துவதா...

இப்போதைய பாடல் ஆசிரியர்கள் கவிஞர் கண்ணதாசனை இழிவுபடுத்துவது போல், "கண்ணதாசன் காரைக்குடி...பேரைச் சொல்லி ஊற்றிக் குடி'' என்று பாட்டு எழுதுகிறார்கள்.

கவிஞர் கண்ணதாசனுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. இருப்பினும் அவர், ``காலங்களில் அவள் வசந்தம்...கலைகளிலே அவள் ஓவியம்...மாதங்களில் அவள் மார்கழி...மலர்களிலே அவள் மல்லிகை...'' என்று அழகான தமிழில் பாடல் எழுதவில்லையா? அதுபோல் நல்ல தமிழில் பாடல் எழுதுங்கள்.''

-சனிக்கிழமை நடந்த, உதயன் இசையமைத்த மன்னாரு இசை வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் சொன்னது...

 

குடிகாரி விவகாரம்: மாஜி கணவருக்கு ஊர்வசி நோட்டீஸ்

Urvasi Sends Legal Notice Manoj K Jayan

தன்னை குடிகாரி என்று கூறியதை ஒரு வாரத்திற்குள் வாபஸ் பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நடிகை ஊர்வசி தனது முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகை ஊர்வசிக்கும், நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குஞ்ஞட்டா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஊர்வசி தன்னுடைய கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். அவர்களது மகள் குஞ்ஞட்டா மனோஜுடன் அனுப்பப்பட்டார். ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மனோஜ் கே. ஜெயன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 6ம் தேதி முதல் ஒரு வாரத்திறகு மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது. இதன்படி மனோஜ் மகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தார். சிறிது நேரத்தில் ஊர்வசியும் அங்கு வந்தார். ஆனால் குஞ்ஞட்டா தாயுடன் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். ஊர்வசி எப்போதும் போதையில் இருப்பதால் அவரை நம்பி மகளை ஒப்படைக்க முடியாது. இப்போதும் அவர் குடிபோதையில் தான் இருக்கிறார் என்று மனோஜ் கே ஜெயன் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னை குடிகாரி என்று கூறியதை ஒரு வாரத்தில் வாபஸ் பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று ஊர்வசி மனோஜ் கே. ஜெயனுக்கு வக்கீல் நோட்டீஸ அனுப்பியுள்ளார்.

 

எனக்குப் பிடிச்சமாதிரிதான் ஹீரோயின் இருக்கணும் - தண்ணி பேர்டுக்கு சிக்கல் ஆரம்பம்...!

தலைப்பை படிச்சதும் தெரிஞ்சிருக்கும், அது என்ன படம் என்று. இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கும் நடிகை, படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் ஸ்ட்ராங் சிபாரிசாம் (உறவுக்கார ஃபீலிங்கோ...). இதனால் நாயகிக்கும் இயக்குநருக்கும் ஒத்தே போகவில்லையாம்.

இதனால் கடும் கோபமடைந்த இயக்குநர், தன் 'வசதி'க்கேற்ப இன்னொரு நாயகியை படத்தில் நுழைக்க முயற்சித்து வருகிறாராம். இது தயாரிப்புத் தரப்பை கடுப்பேற்றிவிட்டதாம்.

சொன்ன கதையை எந்த மாற்றமும் இல்லாமல் எடுத்துத் தர வேண்டும் என்று கறாராகக் கூறிவிட்டார்களாம்.

இந்த தகராறில் படப்படிப்பே தடுமாற, தயாரிப்பு நிறுவனத்துக்கு கடும் கோபம் வந்துவிட்டதாம். இனி இவருக்கு படமே தரவேண்டாம் என மற்ற நிறுவனங்களுக்கு 'சிபாரிசு' பண்ணும் அளவுக்குப் போய்விட்டதாம் நிலைமை.

அடடா... பறவை விண் முட்டிப் பறக்கும்னு பார்த்தா, மண் தட்டி நிற்கும் போலிருக்கே!

 

ஃபெட்னா 2012: எஸ்ரா, அமலா பால், சிவகார்த்திகேயனால் களைகட்டிய தமிழ் திருவிழா!

Fetna 2012 Mega Tamil Event Us

பால்டிமோர்: அமெரிக்கா கனடாவிலிருந்து இரண்டாயிரம் தமிழர்கள் ஒன்று கூடி வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வெள்ளி விழாவை மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடினர்.

பால்டிமோர் சிம்போனி அரங்கத்தில் மினி தமிழகத்தையே பார்க்க முடிந்தது.

தமிழகத்திலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன், மறைமலை இலக்குவனார், தமிழச்சி தங்கபாண்டியன், திரை நட்சத்திரங்கள் பரத், அமலா பால், சிவ கார்த்திகேயன், பிண்ணனி பாடகி சித்ரா, சின்னத்திரை ப்ரியதர்ஷினி, மதுரை முத்து, இந்திய கம்யூனிஸ்ட் நல்லகண்ணு, சகாயம் ஐஏஎஸ் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மூன்று தினங்களாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மேரிலாண்ட் மாகாண அட்டார்னி ஜெனரல் டக் கான்ஸ்லர் கலந்து கொண்டார். இவர் மேரிலாண்டின் அடுத்த கவர்னர் (முதல்வர்) ஆகும் வாய்ப்புள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மேரிலாண்ட் மெஜாரிட்டி லீடர் குமார் பார்கவே, மாண்ட்கோமரி கவுண்டி தலைவர் இக் லெக்கெட், மலேசிய துணை முதல்வர் பினாங்கு ராமசாமி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகசாமி மற்றும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் டாக்டர் தண்டபாணி வரவேற்றுப் பேசினர்.

ராஜன் நடராஜன்

தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்று உயர்ந்த அரசியல் பதவி பெற்ற முதல் தமிழரான, மேரிலாண்ட் மாகாண திட்ட மற்றும் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் (அமைச்சர்) ராஜன் நடராஜன், கவர்னர் மார்டின் ஓ'மலே அவர்களின் மாநாட்டு பிரகடனத்தை அறிவித்தார்.

கவர்னர் குறிப்பிடுகையில் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுத்திறனையும் கடின உழைப்பையும் பாராட்டியிருந்தார். தமிழர் உள்ளிட்ட பல்வேறு இன மக்களின் பங்களிப்பு அமெரிக்காவின் முக்கிய அங்கமாகிவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மெஜாரிட்டி லீடர் குமார் பார்கவே, பேரவையின் வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொள்வது தனக்கு கிடைத்த கௌரவம் என்று குறிப்பிட்டார். மேலும் மேரிலாண்டில் தமிழ்ச் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பேசுகையில், "இலங்கையில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காக, அடக்குமுறையை கண்டித்து உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்" என்றார்.

ருத்திரகுமாரன்

'லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததன் மூலம், உலகெங்கும் உள்ள ஐம்பது மில்லியன் தமிழர்களையும் போராளிகளாக இலங்கை அரசு மாற்றிவிட்டது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உரிமைக்காக 'நாடுகடந்த தமீழீழ அரசாங்கம்' போராடும் என அதன் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

இலக்கிய நேரம்

மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சிறப்புரை ஆற்றினார்.

'இதயங்கள் இணையட்டும்' என்ற தலைப்பில் அமெரிக்கத்தமிழர்கள் படைத்த கவிதைகளை, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் திறனாய்வு செய்ய கவியரங்கம் நடைபெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையேற்று, 'நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை நடத்தினார்.

டி.கே.எஸ். கலைவாணன் மற்றும் குழுவினரின் தமிழிசை அரங்கம் என்ற பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்கத்தமிழர்கள் பங்கேற்ற இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு தமிழ் இலக்கிய கேள்விகளுக்கு எந்த தடுமாற்றமும் இல்லாமல் சரளமான பதில்களால், பார்வையாளார்களை அதிசயப்படுத்தினர்.

‘Spelling Bee' என்ற ஆங்கில வார்த்தை விளையாட்டுக்கு நிகராக தமிழ்த்தேனீ என்ற சிறப்பு வினாடி வினாவும் நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டத்தின் கீழ் கொண்டு வரும் பணியை அமெரிக்க தமிழ்க் கல்வி கழகம் எவ்வாறு செய்து வருகிறது என்பதை செந்தில் சேரன், சிவானந்தன் ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.

வாசிங்டன் தமிழ்ச்சங்கம், பனைநில தமிழ்ச் சங்கம், சிலம்ப அரசி நகர தமிழ்ச்சங்கம், அட்லாண்டா பெரு நகர தமிழ்ச் சங்கம், நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், பாஸ்டன் தமிழ்ச் சங்கம், நியூயார்க் தமிழ்ச் சங்கம், கரோலைனா தமிழ்ச் சங்கம், டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை சார்பாக, இசை, நடனம், நாடகங்கள் இடம் பெற்றன.

எஸ் ராமகிருஷ்ணனின் கதை நேரம்

எழுத்தாளார் எஸ். ராமகிருஷ்ணன் பல்வேறு கதைகளைக்கூறி, நாம் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவைகள் என்று விவரித்தார். யாரிடமாவது எதையாவது கேட்கும் போது ‘ஒன்னும் இல்லை' என்ற பதில்கள் எரிச்சலை உண்டாக்கும். ஆனால், மருத்தவ பரிசோதனைகள் முடிந்து டாக்டர் 'ஒன்னும் இல்லை' என்று சொல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியடைகிறோம். அன்றாட வாழ்வில் வார்த்தைகளை சரியாக கையாழும் போது, ஒருவருக்கு ஏற்றத்தை தரும் என்பதை ஒரு பிச்சைக்காரர் கதை மூலம் சொன்ன போது பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.

சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எழுத்தாளார்களுக்கும் வார்த்தைகளை சரியாக கையாழ்வது மிகவும் முக்கியமான விஷயம் என்று எஸ். ராமகிருஷ்ணன் விளக்கமாகக் கூறினார்.

வேலு நாச்சியார்

சென்னை ஸ்ரீராம் சர்மா குழுவினரின் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் நடந்தது. மணிமேகலை சர்மா, ஓ.ஏ.கே.சுந்தர், சின்னத்திரை ப்ரியதர்ஷினி, ஜான் ஜாக்சன் ஆகியோருடன் பெருவாரியான அமெரிக்கத் தமிழர்களும் பங்கேற்றனர்.

மதுரை முத்துவும் மல்லிகையும்

ஒரு பக்கம் மதுரை முத்து அவ்வப்போது தோன்றி அரங்கத்தை சிரிப்பொலியால் ஆர்ப்பரிக்க செய்தார். இன்னொரு பக்கம் பாரம்பரிய உடையுடன் தமிழ்ப்பெண்கள் நிஜமான மதுரை மல்லிகைப்பூவை சரம் சரமாக தலையில் சூடிக்கொண்டு, அழகுக்கு அழகு சேர்த்து பால்டிமோர் நகரை மதுரையாக்கி விட்டார்கள்.

நடிகர்கள் பரத், அமலா பால், சிவகார்த்திகேயன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர்முக நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பரத் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார். துபாய் நிகழ்ச்சியை போலில்லாமல், நாகரீகமான உடையில் அமலா பால் இருந்தார்.

எளிமை, நேர்மைக்கு பாராட்டு

நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட எளிமையான அரசியல்வாதியான இந்திய கம்யூனிஸ்ட் முக்கிய தலைவர் நல்லகண்ணு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற மாவட்ட கலெக்டர் சகாயம் ஐஏஎஸ் ஆகிய இருவரும் தான் விழாவின் நாயகர்கள் ஆக அலங்கரித்தார்கள். திரை நட்ச்த்திரங்களை விட இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிகம் பேர் முண்டியடித்துக் கொண்டிருந்தனர் என்றால் அவர்களின் எளிமைக்கும் நேர்மைக்கும், பார்வையாளர்கள் கொடுத்த முக்கியத்துவம் புரிகிறதல்லவா?

மனுதாரர்கள், அரசு அதிகாரிகளிடம் வலியுத்தி அவர்களை எவ்வாறு தமிழில் கையெழுத்து போட வைக்கிறார் என்பதை பல சுவாராஸ்யமான தகவலகளுடன் பகிர்ந்து கொண்டார்.

சின்னக்குயில் சித்ரா

விழாவின் முக்கிய பகுதியாக பிண்ணனி பாடகி சித்ரா பங்கேற்ற ஐங்கரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. குழலூதும் கண்ணனுக்கு என்று ஆரம்பித்த் அவரது குயிலோசை நள்ளிரவு தாண்டினாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தினரின் கரவோசையுடன் தொடர்ந்தது.

மாநாட்டிற்காக உழைத்த வாசிங்டன் வட்டார தமிழ்சங்கத்தை சார்ந்த 120 குடும்ப உறுப்பினர்களையும் மேடைக்கு வரவழைத்து நன்றி செலுத்தியது நெகிழ்ச்சியாக இருந்தது.