விராத் கோஹ்லியுடன் காதலா?: நடிகை சாரா மறுப்பு

I Have Never Met Virat Kohli Sarah Jane Dias

விராத் கோஹ்லியை காதலிப்பதாக பேசப்பட்டு வரும் நடிகை சாரா ஜென் தியாஸ், அவரை நேரில் கூட சந்தித்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருப்பவர் விராத் கோஹ்லி. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நடிகை சாரா ஜென் தியாஸை ஒரு விருந்தில் வைத்து சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் காதலர்களாக மாறி, அவ்வப்போது சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விராத் கோஹ்லியுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை நேரில் சந்தித்தது கூட கிடையாது என்று சாரா ஜென் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்த கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்து நான் களைத்து போய்விட்டேன். விராத் கோஹ்லி உடன் ஒரே அறையில் நான் தங்கவில்லை. மேலும் அவருடன் போனில் பேசுவதும் இல்லை. அவரை சந்திக்கவோ, கை குலுக்கவோ இல்லை.

இது குறித்து நான் செய்திகள் கேள்விப்படும் போதெல்லாம், எனக்கு கோபம் தான் வருகிறது. விராத் கோஹ்லி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவருடன் எனக்கு எந்த உறவும் இல்லை.

தற்போது இந்தி மொழி மற்றும் ஜீப் ஓட்ட கற்று வருகிறேன். மேலும் மதுபான கடையில் சரக்கு விற்கும் பெண் வேடத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

 

இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம்

Superstar Rajesh Khanna Passes Away

இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா(69) கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேது உடல்நலக்குறைவு காரணாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே 2 வாரங்கள் இருந்தார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 14ம் தேதி மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருடன் அவரது மனைவி டிம்பிள் கபாடியா, இளைய மகள் ரிங்கி ஆகியோர் துணையாக இருந்தனர். கர்ப்பமாக இருக்கும் மூத்த மகள் டிவிங்கிள் தனது கணவரும் , பாலிவுட் நடிகருமான அக்ஷய் குமாருடன் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றார். நேற்று ராஜேஷ் கண்ணா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. உடனே உறவினர்கள் அனைவரும் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.

இதற்கிடையே அவரது உடல்நிலை மேலும் மோசமாகி பிற்பகலில் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு தகனம் செய்யப்படுகிறுத. அவரது மறைவிற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ஆளாளுக்கு ஒரு ஹிட் கொடுக்கவே போராடுகின்றனர். ஆனால் கடந்த 1969ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து 15 ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த 1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை லோக் சபா உறுப்பினராக இருந்துள்ளார்.

Read: In English
 

கிளிசரின் போட்டு அழ மாட்டேன்: 'சீரியல்' சந்தோஷி

I Love Comedy Role Actress Santhoshi

சன் டிவியில் ஒளிபரப்பாகும் இளவரசி தொடரில் அழுவது ஒன்றே குறியாக வைத்து நடித்து வருகிறார் சந்தோஷி. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று மீண்டும் சின்னத்திரைக்கு வந்தவர்களில் சந்தோஷியும் ஒருவர். தன்னுடைய மீடியா பயணம் பற்றி அவர் கூறுவதை படியுங்களேன்.

அம்மா பூர்ணிமா முன்னாள் டிவி நடிகை. நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். 13 வயதில் வாழ்க்கை சீரியலில் நடித்தது இன்னமும் என்னை அடையாளப்படுத்துகிறது. எனக்கு குறும்புத்தனமான கேரக்டர் பண்ண ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழுது நடிக்கிற மாதிரி கேரக்டர் பிடிக்காது. ஆனா எனக்கு கிடைப்பது எல்லாம் அழுகை சீரியல்தான் கிடைக்கின்றன. நம் தமிழ்நாட்டு பெண்களை பொறுத்தவரை கிளிசரின் போட்டு அழுறவங்களைத்தான் பிடிக்குது.

தமிழ் சீரியலைப் பொருத்தவரை இன்னும் நிறைய வளரணும், மாற்றங்கள் வரணும்னு நினைக்கிறேன். அதே மும்பை சீரியல் எல்லாம் பார்த்தா ரொம்ப கலர் ஃபுல்லா இருக்கும். இந்த மாதிரி தமிழ்லயும் வரணும்னு அடிக்கடி நினைப்பேன். அதனாலயே என் காஸ்டியூம், என் மேக்கப் எல்லாத்துக்கும் நிறைய அக்கறை எடுத்துக்குவேன்.

"இளவரசி' தொடருக்கு மக்கள் கிட்டே இருந்து நல்ல வரவேற்பு இருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நிலையை சொல்லும் கதை. இதில் எனக்கு ரொம்ப ஹோம்லியான கேரக்டர்.

சன் டிவியில் "பொண்டாட்டி தேவை' என்ற காமெடி தொடர் செய்தது எனக்கு பிடித்திருந்தது. அதேமாதிரியான கேரக்டரைத்தான் நான் விரும்புகிறேன். சீரியலில் நடிப்பது தவிர எனக்கு புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்வா பண்ணணும்னு ஆசையிருக்கு. அதை தவிர ஓய்வு நேரத்தில் வெளியில் சுத்துவது ரொம்ப பிடிக்கும். எனக்கு சின்னத்திரையில் தேவிப்ரியாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும்னு ஒரு பேர் இருக்கு. என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிடுவாங்க.

"அரசி' தொடரை பொறுத்தவரை பத்து சீரியல்ல நான் நடிப்பதை ஒரே சீரியல்ல நடித்தேன். ஒன்பது கேரக்டர் அந்த ஒரு சீரியல்ல கிடைச்சது. அந்த எல்லா கேரக்டருமே ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. சமுத்திரகனி இயக்கிய தொடர் எப்படி பட்டவங்களா இருந்தாலும் அவர் வேலை வாங்கிடுவார்.

ராதிகாவைப் பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு துணிச்சலான, திறமையானவங்களோட பக்கத்தில் இருந்தது பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க துணிவும், திறமையும் எதையாவது சாதிக்கணும்னு இன்ஸ்பரேஷனா இருந்தது நானும் சாதிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்குள் ஏற்படுத்தியவர் ராதிகா.

சீரியல் பண்றதை விட ரியாலிட்டி ஷோ பண்றது ரொம்ப கஷ்டம். என்று நன்றியுடன் கூறினார் சந்தோஷி. 5 நிமிட டான்ஸ் நிகழ்ச்சிக்காக பல மணிநேரம் உழைக்கணும். ஆனா அதுதான் இளைஞர்களிடம் அதிகமாக ரீச் ஆகுது என்று சந்தோஷமாக சொன்னார் சந்தோஷி.

 

சீரியலே போதும் சினிமா வேண்டாம்: மகேஸ்வரி

No Cinima Only Serial Actress Maheswari

கருத்தம்மாவில் அறிமுகமாகி உல்லாசம், நேசம் என பெரிய திரையில் வலம் வந்தவர் மகேஸ்வரி. ஸ்ரீதேவியின் சகோதரி என்ற அடித்தளம் வேறு அவருக்கு இருந்தது. பெரியதிரையில் வாய்ப்புகள் குறைந்து போனதால் திருமணமாகி செட்டில் ஆனவர் திடீரென ‘சௌந்தரவள்ளி' சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆனார். தற்போது மெகா டிவியில் ‘மை நேம் இஸ் மங்கம்மா' தொடரில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். குடும்ப வாழ்க்கைக்கு இடையே தன்னுடைய சின்னத்திரை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.

பெரியதிரையில் ஒரு படம் நடித்தால் மூன்று மணி நேரம் தான் ஆடியன்ஸ் மனதில் நிற்போம். ஆனால் சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்தால் இரண்டரை வருடம், மூன்று வருடம் என்று ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும். எனவேதான் திருமணத்திற்குப்பின்னர் சின்னத்திரையை நான் தேர்ந்தெடுத்தேன். இது தவிர வேறு எந்த சிறப்புக் காரணம் எதுவுமில்லை.

நல்ல கதையாக இருந்தால் சின்னத்திரை பக்கம் வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்ததேன். அப்பொழுது கிடைத்ததுதான் "சௌந்தரவள்ளி' வாய்ப்பு. ஏற்கனவே விஜய் டிவியில் தொடர்கள் எல்லாம் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். இப்பொழுது மை நேம் இஸ் மங்கம்மா தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இது ஏற்கனவே தெலுங்கில் "மை நேம் இஸ் மதர்தெராஸா' என்ற பெயரில் நான் நடித்த தொடர்தான்.

இந்த மாதிரியான காதாபாத்திரம் என்றெல்லாம் தேடி நடிப்பதில்லை. கதை கேட்கும் பொழுது பிடித்திருந்தால் செய்கிறேன். நெகடிவ் ரோல் கிடைத்தாலும் நடிப்போன். என் கணவர் ஜெயகிருஷ்ணா சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார். எனவே ஆபிஸ், குடும்பம், நடிப்பு என இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் வேறு துறை பக்கம் கவனம் செலுத்துகிற எண்ணம் எல்லாம் இப்போதைக்கு இல்லை. சின்னத்திரையே முழு திருப்தியாக இருப்பதனால், இப்போதைக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் இல்லை என்று கூறிவிட்டு மலர்ச்சியோடு சூட்டிங்கிற்கு செல்ல தயாரானார் மங்கம்மா ( மகேஸ்வரி)

 

இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா காலமானார்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பழம்பெரும் நடிகரும் முன்னாள் இந்தி சூப்பர் ஸ்டாருமான, ராஜேஷ் கண்ணா உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும். புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த, நடிகர் ராஜேஷ் கண்ணா மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ராஜேஷ் கண்ணா உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரத்தினர் தகவல் தெரிவித்தனர். ஆராதனா, கட்டிபதங் உள்ளிட்ட 180 படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ் கண்ணா ஆவார். 1966ல் தொடங்கி கடந்த ஆண்டு வரை திரைபடங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

ஸ்லிம்மாக மாறும் அஜீத்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பில்லா' ரீமேக்கிற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்-ஆர்யா நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை. படத்தை ஏ.எம்.ரத்னம் வழங்கும் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கிறார். நயன்தாரா, டாப்ஸி ஹீரோயின்கள். கதை, திரைக்கதையை சுபா, விஷ்ணுவர்தன் எழுதுகின்றனர். ஒளிப்பதிவு, பி.எஸ்.வினோத். இசை, யுவன்சங்கர்ராஜா. வசனம், சுபா. இதனையடுத்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பை நகரில் பரபரப்பாக நடந்து வருகிறது. 'தல' இந்த படத்திற்காக படு ஸ்லிம்மாக மாற இருக்கிறாராம். இதற்காக தினமும் பல மணி நேரங்களை ஜிம்மில் இருக்கிறாராம் நம்ம தல.


 

புது ஹீரோயின்கள் உருவாக்குவோம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ஹீரோயின்கள் நடிக்க மறுத்தால் புது ஹீரோயின்களை அறிமுகம் செய்வோம் என்றார் கருணாஸ். கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் மச்சான். ஷக்தி சிதம்பரம் டைரக்ஷன். படம் பற்றி கருணாஸ் கூறியதாவது: இயக்குனர் ஷக்தி சிதம்பரமும், நானும் 10 ஆண்டு நண்பர்கள். நட்பை மையமாக வைத்து மச்சான் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க நகைச்சுவை இடம்பெறுகிறது. ஷூட்டிங்கிற்கு நாய், குதிரைகளை வாடகைக்கு விடும் அனிமல் அரசு என்ற வேடத்தில் நடிக்கிறார் விவேக். புதுச்சேரியில் இப்படத்தின் ஷூட்டிங் 35 நாட்கள் நடந்துள்ளது. பாடல் காட்சிகள் மலேசியா, ஹாங்காங், பாங்காக், புக்கட் ஆகிய இடங்களில் படமாக உள்ளது. கதைப்படி  சிவப்பான ஹீரோயின் தேவைப்பட்டது.  ஷெரில் பிரின்டோ நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த், மயில்சாமி, மூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தயாரிப்பு கே.பாலமுருகன். இசை ஸ்ரீகாந்த் தேவா. ஏற்கனவே திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தேன். தற்போது மச்சான், ரகள, சந்தமாமா உள்பட 5 படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன். காமெடி நடிகர்களுக்கு பிரபல ஹீரோயின் ஜோடியாக நடிக்க மறுத்து விடுவதுண்டு. எனக்கும் அப்படி நடந்திருக்கிறது. இப்போது அது உல்டாவாகி விட்டது. ஹீரோயின்கள் நடிக்க மறுத்தால் டி.ராஜேந்தர் பாணியில் புது ஹீரோயின்கள் உருவாக்குவோம்.


 

காஜல் அகர்வால் மீது தாணு புகார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காஜல் அகர்வால் கால்ஷீட் பிரச்னை செய்வதால் விஜய் பட ஷூட்டிங் தாமதமாவதாக தயாரிப்பாளர் புகார் கூறுகிறார். தமிழில் சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தியில் ஒரு படத்திலும் தெலுங்கில் 2 படங்களிலும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு படங¢களில் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென வந்த இந்தி வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் காஜல். இதனால் அவரது கால்ஷீட் தேதிகளில் குளறுபடி ஏற்பட்டது. மாற்றான், துப்பாக்கி என 2 படங்களிலும் காஜல் நடிக்க வேண்டிய பாடல் காட்சிகள் பாக்கி உள்ளது. ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் ஷூட்டிங்கிற்கு காஜல் போகாததால் அந்த பாடல் காட்சிகளை படமாக்க முடியாமல் படக்குழு தவித்ததாம். சூர்யாவுடன் காஜல் டூயட் பாடும் பாடலை மாற்றான் படத்துக்காக வெளிநாட்டில் படமாக்க கே.வி.ஆனந்த் திட்டமிட்டார். இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் காஜலின் கால்ஷீட் வாங்கியிருந்தார். ஆனால் சொன்ன தேதியில் அவர் வரவில்லை.
இந்தி பட ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். ஸாரி, கொஞ்சம் அட்ஜெட் பண்ணிக்குங்க என்று மட்டும் காஜலிடமிருந்து பதில் வந்ததாம். இதனால் அந்த பாடல் காட்சியை சென்னை ஸ்டுடியோவிலேயே படமாக்க யோசித்திருக¢கிறார் ஆனந்த். இதேபோல் துப்பாக்கி படத்தில் 2 பாடல்கள் பாக்கி உள்ளது. இதில் பங்கேற்க தனது கால்ஷீட் தேதியை மாற்றி கொடுத்துள்ளாராம் காஜல். இது குறித்து பட தயாரிப்பாளர் தாணு கூறும்போது, துப்பாக்கி படம் தாமதம் ஆவது உண்மைதான். காஜல் கொடுத்துள்ள தேதிகளில் பாடல் காட்சிகளை படமாக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆகஸ்டில்தான் ஷூட்டிங் நடத்த முடியும் என்றார்.


 

இரட்டையருக்கு வலைவீசும் இயக்குனர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவரது இளமை தோற்றத்துடன் கூடிய வேடத்துக்குஇரட்டை சிறுவர்களை தேடுகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிக்கும் படம் மாற்றான். இரட்டையர்களை தேடுவது குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இதுவரை தமிழில் வராத கதையான ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. எப்போதும் சவாலான வேடங்களை விரும்பி செய்வார் சூர்யா. இவரின் சிறுவயது காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. அதற்காக இரட்டை சிறுவர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதற்காக இரட்டையர்கள் என் வீட்டுக்கு வந்து வாய்ப்பு கேட்கின்றனர். அப்படி வருபவர்கள் சூர்யா சாயலில் இருக்கிறார்களா, அவரது பாடி லாங்வேஜ் வருகிறதா என்பது போன்ற விஷயங்கள் உன்னிப்பாக பார்க்க¤றேன். இதற்கான தேர்வு போட்டியில் பங்கேற்க எனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். சிறுவர்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.


 

விஜய் ஜோடியாக பாலிவுட் நடிகை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கும் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்கயிருக்கிறார். இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது. இதனையடுத்து, தற்போது தயாரித்து இயக்கி வரும் 'நீ தானே என் பொன்வசந்தம' படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட கௌதம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளாராம். முதல் வேலையாக விஜய்-க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தேர்வு செய்ய இருக்கிறாராம். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் அல்லது கரீனா கபூர் இவர்களில் யாரோ ஒருவர் தேர்வு ஆகலாம் என தெரிகிறது.


 

ஆகஸ்ட்டில் வெளியாகிறது தாண்டவம் பாடல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'தாண்டவம்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. தாண்டவம் படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். 'தெய்வதிருமகள்' படத்திற்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, தாண்டவம் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டாக வெளியிட படக் குழு முடிவு செய்துள்ளதாம். படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.



 

ஒரே சீனில் 40 முறை நடித்த நடிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரணம் படத்தில் சுவாசிகா நடித்த காட்சி 40 முறை படமாக்கப்பட்டது. பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் ரணம். இது பற்றி அவர் கூறியதாவது: வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகி இருக்கும் இதில் புதுமுகம் வீரா ஹீரோ. ஹீரோயின் சுவாசிகா. முக்கிய வேடத்தில் சரத், கார்த்தி கேயன் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் வில்லன் ராஜேந்திரன், சுவாசிகா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. சுவாசிகாவை சுவற்றில் இடித்து மோதும் காட்சி படத்தில் முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது. இதற்காக சுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறை வெவ்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியை சுவாசிகா தாங்கிக்கொண்டு நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன் மற்றும் மலேசியா நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பாலகிருஷ்ணன். இசை மரியா மனோகர். இவ்வாறு விஜயசேகரன் கூறினார்.


 

ஆர்யா பட வாய்ப்பு பிருத்விக்கு கைமாற்றம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆர்யா நடிக்கவிருந்த பட வாய்ப்பு பிருத்வி ராஜுக்கு கைமாறுகிறது. விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் மலையாளத்தில்'சன் ஆப் அலெக்ஸாண்டர் என்ற படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆர்யாவிடம் பேசப்பட்டது. ஆனால் மலையாள படவுலகில் ஆர்யாவுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதால் இப்படத்தை அவரை வைத்து எடுக்க தயாரிப்பாளர் விரும்பவில்லை. மலையாள படவுலகில் பிரபலமாக இருக்கும் பிருத்வி ராஜ் இக்கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்ததையடுத்து அவரையே ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பிருத்வியிடம் பேசி வருகிறார் பேரரசு. தற்போது பிருத்வி ராஜ் மலையாள படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் தமிழ் படங்களில் அவரை நீண்ட நாட்களாக காண முடியவில்லை. கடைசியாக அவர் ராவணன் படத்தில் நடித்தார். அதன்பிறகு ஒரு வருடத்துக்கு முன்பு அவர் நடித்த 'உருமி' என்ற படம் சமீபத்தில் தமிழில் திரைக்கு வந்தது. இப்போது பேரரசு இயக்கினாலும் அது மலையாள படம் என்பதால் பிருத்வி நடிப்பார் என கூறப்படுகிறது.


 

விஐய், அஜித் ரசிகர்கள் மோதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருப்பூரில் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சிலர் நேற்று முன்தினம் சந்தித்துள்ளனர். விஜய், அஜித் நடித்த படங்கள் குறித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே 'தலையா, தளபதியா' என்று வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி திடீரென்று இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். ஆவேசமடைந்த இரு தரப்பினர் ரீப்பர் கட்டைகளை எடுத்து ஓட, ஓட விரட்டி தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த விஜய் ரசிகர் கருப்பையா (37), அஜித் ரசிகர்கள் சிவா (25), மோகன் (24) ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ராமராஜ், அன்பு, கருப்பையா, அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிவா, பழனியப்பன், மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரசிகர்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


 

விஜய்யுடன் பாட்டு பாடிய ஆன்ட்ரியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ள விஜய், இன்னொரு பாடலை பாடியுள்ளாராம். இவருடன் ஆன்ட்ரியா சேர்ந்து பாடியுள்ளாராம். மதன் கார்க்கி  வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல், செம ஹிட்டாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்ள்ளது.


 

அமிதாப்புக்கு ஜோடியாகும் குஷ்பு!

Kushboo Play Against Amitabh

இந்திப் படம் ஒன்றில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமிழ் நடிகை குஷ்பு.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையான குஷ்பு, இப்போது தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார்.

நல்ல வாய்ப்புகளாக இருந்தால் மட்டுமே அவர் படங்களில் நடிக்கிறார். அதே நேரம், கணவர் இயக்கத்தில் படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் 'மேட் டாட்' (Mad Dad) என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம்.

அமிதாப்புடன் நடிக்க வந்திருக்கும் இந்த வாய்ப்பு, தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

'சிறு வயதிலிருந்தே அமிதாப்பின் தீவிர ரசிகை நான். அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வந்துள்ள வாய்ப்பு சந்தோஷத்தின் உச்சிக்கு கொண்டு போய்விட்டது," என்றார்.

 

சாமியார் மடங்களைத் தேடி ஓடும் பிரபல நடிகைகள்!

Top Actress Rushing Ashrams

போலிச்சாமியார்கள், பிரம்மச்சரியம் பேசியபடி நடிகைகளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீகவாதிகள் பற்றியெல்லாம் தொடர்ந்து செய்தி வந்தாலும், ஏனோ நடிகைகளும் ஆன்மீகமும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன(ர்)!

சரி அது அவர்கள் பாடு...

பிரபல நடிகைகள் ஸ்ரேயாவும் தனுஸ்ரீ தத்தாவும் இப்போது ஆன்மீகத்தில் ஏகத்துக்கும் மூழ்கிவிட்டார்கள்.

இருவரும் தற்போது அதிகமாக காணப்படும் இடம் கோவையில் உள்ள ஒரு தியான மையம்.

ஸ்ரேயா ரொம்ப நாட்களாகவே இந்த தியான மையத்துக்கு வந்து தங்குகிறார். மன அமைதிக்காக இங்கே வருவதாகவும் திரையுலகை தாண்டிய புது உலகை இந்த இடம் அவருக்கு காட்டுவதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இப்போது, புதிதாக சந்நியாசத்துக்கு மாறியுள்ள தீராத விளையாட்டுப் பிள்ளை பட நாயகி தனுஸ்ரீ தத்தாவும் இந்த தியான மையத்துக்கு வர ஆரம்பித்துள்ளாராம்.

தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ள தனுஸ்ரீ, சினிமாவில் எவ்வளவோ துரோகங்கள், கொடூரங்களைப் பார்த்து வெறுத்துப்போன தனக்கு இந்த யோக மையத்தில் நிம்மதி கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

பூமிகா ஏற்கெனவே பாதி சாமியாராகிவிட்டார்,

இவர்கள் பட்டியலில் விரைவிலேயே நயன்தாரா, லட்சுமி ராய் ஆகியோரும் சேரக்கூடும் என்கிறார்கள்.

ரஞ்சிதா, ராகசுதா லிஸ்ட்ல சேராம இருந்தா சரி...!

 

சத்ருகன் சின்ஹாவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

Shatrughan Shotgun Sinha Undergoes Bypass Surgery

நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹாவுக்கு(66) மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து கடந்த 2ம் தேதி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவர்களின் அறிவுறைப்படி கடந்த 17ம் தேதி மாலை அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ள அவர் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மனைவி பூனம் சின்ஹா கூறுகையில்,

எங்கள் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்தபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருப்பது தெரிந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார் என்றார்.

சத்ருகன் சின்ஹா பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை ஆவார்.

 

பில்லா 2 குறித்து அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

Ajith Vijay Fans Attack Each Other In Tirupur

திருப்பூரில் நடிகர்கள் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூரில் உள்ள அப்பாச்சி நகர் பகுதியில் நேற்று விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் பில்லா 2 படம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். சாதாரண பேச்சு காரசார வாக்குவாதமாகி மோதலில் முடிந்தது. விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் ஒருவரையொருவர் கையாலும், கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர்.

இதில் விஜய் ரசிகர் கருப்பையா (37), அஜீத் ரசிகர்கள் சிவா (25), மோகன் (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அந்த 3 பேரும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரு தரப்பும் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. அவர்களது புகாரின்பேரில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ராமராஜ், அன்பு, கருப்பையா, அஜீத் ரசிகர்கள் சிவா, பழனியப்பன், மோகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராஸல் கைமாவைக் கடந்த வைகைப் புயல்!

Vadivelu Ras Al Khaimah

துபாய் அருகே உள்ள ராஸல் கைமாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் வைகைப் புயல் வடிவேலு.

துபாயிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸல் கைமா நகர்.

இங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

தன்னை நகைச்சுவை நடிகனாக்கியது எது என்பதற்கு வடிவேலு சொன்ன பதில் இயல்பாக இருந்தது. தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த சம்பவங்களை நகைச்சுவையுடன் பார்த்த விதம்தான் தன்னை நகைச்சுவை நடிகராக மாற்றியதாகக் கூறினார் வடிவேலு.

வாழ்வில் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், எவரையும் ஏய்த்துப் பிழைப்பது நல்ல வாழ்க்கையல்ல என்ற தத்துவத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க கேட்டுக் கொண்டார்.

மதுரையில் உங்களுக்குப் பிடித்த இடம் எது என்று கேட்டபோது, மீனாட்சி அம்மன் கோவில் என்றார் வடிவேலு.

தனக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வு அடுத்த கட்டத்திற்கு முழுமையாகத் தயாராவதற்குத்தான் என்றும், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் என்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து யுடிஎஸ் சினர்ஜி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வினை குணா மற்றும் கங்கா தொகுத்து வழங்கினர்.

 

அம்ம்மாடி... ஏக்தா டைகரின் சேட்டிலைட் உரிமை மட்டும் ரூ 75 கோடியாம்!!

Ek Tha Tiger Satellite Rights Sold 75 Crore   

சல்மான்கான் நடிப்பில் அடுத்து வெளிவரும் ஏக் தா டைகர் படம் பல்வேறு காரணங்களுக்காக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

லேட்டஸ்டாக இந்தப் படம் கிளப்பியிருக்கும் பரபரப்பு... படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டுமே ரூ 75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்பதுதான். சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம்.

இந்த செய்தி மட்டும் நிஜமாக இருக்கும்பட்சத்தில், இது ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும்.

யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இந்த ஏக் தா டைகர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சமீபத்தில்தான் விலைபேசியது சோனி என செய்தி வெளியானது.

ஆனால் இதனை மறுத்துள்ள சோனி நிறுவனம், "நாங்கள் 15 மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டோம். அப்போது இந்த விலையை கொடுத்திருப்போமா என்பதை செய்தி வெளியிட்டவர்கள் யோசிக்க வேண்டும்," என அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் சினேக ரஞ்சனி தெரிவித்தார்.

இந்தியில் வெளியான சிங்கத்துக்கு ரூ 18 கோடியும், ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 2க்கு ரூ 38 கோடியும், அக்னீபாத் ரூ 41 கோடியும் சேட்டிலைட் ரைட்ஸாக கிடைத்தது. இதுவரை எந்த நடிகரின் படத்துக்கும் ரூ 50 கோடி சேட்டிலைட் உரிமைத் தொகையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Ajith Works Hard Look Slim

அடுத்த படத்துக்காக படு வேகமாகத் தயாராகி வருகிறார் அஜீத். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இப்போது அவர் முன்னிலும் ஸ்லிம்மாக, தொப்பையே, எக்ஸ்ட்ரா சதையோ இல்லாமல் பிட்டாக மாறியுள்ளார்.

அஜீ்த்தை விமர்சிப்பவர்கள் அவரது உடல் தோற்றத்தை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த அஜீத், என் நடிப்பைப் பார்க்காமல், உடல் தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா எனக் கேட்டிருந்தார்.

ஆனால் இன்னொரு பக்கம், இந்த விமர்சனத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என நினைத்தாரோ என்னமோ.. ஜிம்முக்குப் போய் தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார்.

அடுத்து ஏஎம் ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நயன்தாராவுடன் தான் நடிக்கும் படத்துக்காகத்தான் இத்தனை பயிற்சிகளும்.

இந்தப் படத்தில் முற்றிலும் ஸ்லிம்மான அஜீத்தை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ள இயக்குநர் விஷ்ணு வர்தன், அஜீத் ஜிம்மிலிருக்கும் இரு படங்களையும் அனுப்பியுள்ளார்!

அந்தப் படங்களில் அஜீத்தின் உடல் ப்ளாட்டாக, ஃபிட்டாக உள்ளது. விமர்சகர்கள் கிண்டலடிக்கும் தொப்பை கூட போயே போச்! விட்டால் சிக்ஸ் பேக்குடன் வந்து நின்றாலும் நிற்பார் மனிதர்...

வெற்றியும் தோல்வியும் கலைஞர்களின் ஆர்வத்தை பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!!