அரை நிர்வாண போஸ்டர்: சிரஞ்சீவி மகன், ஏமி ஜாக்சன் மீது வழக்கு

கர்ணூல்: யவடு படத்தின் போஸ்டர் ஆபசமாக இருந்ததாகக் கூறி ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து ஹீரோ ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போஸ்டரில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, ஸ்ருதி ஹாஸன், ஏமி ஜாக்சன் நடித்துள்ள தெலுங்கு படமான யவடு கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படத்தின் போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அரை நிர்வாண போஸ்டர்: சிரஞ்சீவி மகன், ஏமி ஜாக்சன் மீது வழக்கு

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த கே. நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

அரை நிர்வாண போஸ்டர்: சிரஞ்சீவி மகன், ஏமி ஜாக்சன் மீது வழக்கு

யவடு பட போஸ்டர்கள் பார்க்க ஆபாசமாக உள்ளன. அதில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில் ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க கரீனா கபூரை அணுகிய இயக்குனர்?

மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க இயக்குனர் ருபேஷ் பால் முதலில் கரீனா கபூர் கானை தான் அணுகினாராம்.

ஷெர்லின் சோப்ராவை வைத்து ருபேஷ் பால் இயக்கியுள்ள படம் காமசூத்ரா 3டி. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் ஷெர்லின் ஆடையின்றி வருகிறார்.

படப்பிடிப்பில் அவர் ஆடையின்றி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர் ருபேஷ் பால் காமசூத்ரா படத்தில் நடிக்க முதலில் கரீனா கபூர் கானை தான் அணுகினாராம். கரீனாவுக்கு கதை பிடித்திருந்தாலும் படத்தில் நிர்வாண காட்சிகள் அதிகம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம்.

 காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க கரீனா கபூரை அணுகிய இயக்குனர்?

இதையடுத்து தான் ஷெர்லின் சோப்ரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். காமசூத்ரா படத்திற்கு ஏற்கனவே கண்டனங்கள் கிளம்பிய நிலையில் 66வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அதற்கு பாராட்டும் கிடைத்துள்ளது.

இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

 

சன் டிவியில் 10 மணிக் கதைகள்...

சன் டிவியில் 10 மணிக் கதைகள்...

நெடுந்தொடர்களை பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்காக சன் டிவியில் குறுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான தேனிலவு தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து அந்த நேரத்தில் மாதம் ஒரு கதைகள் ஒளிபரப்பாக உள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘10 மணி கதைகள்' தொடரில் முதல் கதையாக இடம் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது, ‘எதிர் வீட்டுப் பையன்'. வி.சி.ரவி இந்த தொடரை இயக்குகிறார்.

தொடர்ந்து மாதம் ஒரு இயக்குனரின் படைப்பு சின்னத்திரையை அலங்கரிக்கும். சின்னத்திரையில் இது புதுமுயற்சி என்ற விதத்தில், தொடர்கள் மீதான எதிர்பார்ப்பும் நேயர்களிடையே அதிகரித்திருக்கிறது.

மாதம் ஒரு கதைத்தொடர் என்ற வரிசையில் ஒரு தொடர் அந்த மாதத்துடன் நிறைவு பெற்று விடும். இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த தொடர் ஏற்படுத்தும் என்கின்றனர் தொடர் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் இந்த தொடர், ஜனவரி மாதம் 18 எபிசோடுடன் முடிவுக்கு வந்து விடும். பிப்ரவரி மாதம் அஸ்வின் பாஸ்கர் இயக்கும் 18 எபிசோடுகள் கொண்ட புதிய தொடர் இடம் பெறுகிறது.

இந்த குறுந்தொடரினை திரு பிக்சர்ஸ் திருமுருகன் தயாரிக்க, யுகபாரதி பாடல் எழுதியுள்ளார். சஞ்சீவ் ரத்தன் இசையமைத்துள்ளார்.

 

'வீரம்' ஓடும் தியேட்டரில் மோதல்: திருவண்ணாமலை சிலம்பரசன் குத்திக் கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வீரம் படம் ஓடும் அன்பு தியேட்டரில் நடந்த தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலையில் உள்ள அன்பு தியேட்டரில் வீரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை காட்சியின் இடைவேளையின்போது கழிவறைக்கு சென்ற இடத்தில் திருவண்ணாமலை சின்னக்கடை தெரு வாலிபர்களுக்கும், ஆடையூர்காலணி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது திருவண்ணாமலை வாலிபர்கள் ஆடையூர்காலணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் தலையில் காயம் அடைந்த அவர் நேராக தனது ஊருக்கு சென்று தனது நண்பர்களிடம் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை அடித்தவர்களை தாக்க 10 பேர் கிளம்பி அன்பு தியேட்டருக்கு வெளியே சவுக்கு கம்புகளுடன் காத்திருந்தனர்.

படம் முடிந்து கூட்டம் வெளியே வந்தபோது ஆடையூர்காலணி வாலிபரை தாக்கியவர்களை காணவில்லை. இதையடுத்து அந்த 10 பேரும் அவர்களை தேடி அலைந்து இறுதியில் தியாகி அண்ணாமலை நகர் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.

மைதானத்தில் இருதரப்பும் மோதிக் கொண்டது. இதையடுத்து ஆடையூர்காலணி வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பிறகு தான் திருவண்ணாமலை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சிலம்பு என்கிற சிலம்பரசன் கத்திக்குத்து பட்டு உயிருக்கு போராடியது தெரிய வந்தது. மேலும் கோவிந்தன் என்ற வாலிபருக்கும் கத்திக்குத்து விழுந்தது தெரிய வந்தது.

உடனே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிலம்பரசன் வழியிலேயே உயிர் இழந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்த ஆடையூர்காலணி ஆட்கள் 6 பேரில் 3 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொலையாளிகளில் ஒருவர் கல்லூரி மாணவன் என்று கூறப்படுகிறது.

 

சிவாஜிவை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு

சென்னை: மறைந்த நடிகர் ‘செவாலியே' சிவாஜியை சினிமாவில் அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு சென்றார் நடிகர் பிரபு

நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் பெருமாள் முதலியார் தான் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடித்த காட்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் வீட்டுக்கு, ஆண்டுதோறும் பொங்கல் சீர் கொண்டு செல்வது சிவாஜி கணேசனின் வழக்கமாக இருந்தது. தனது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் சென்று சீர்வரிசை அளித்து பெருமாள் முதலியாரிடம் சிவாஜி ஆசி பெற்று வருவார்.

சிவாஜிவை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு

சிவாஜி கணேசன் மறைவை தொடர்ந்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் இவ்வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் பிரபு, அவருடைய மனைவி புனிதா மற்றும் மகன் விக்ரம் பிரபு ஆகியோருடன் காட்பாடி காந்தி நகர் கிழக்குப் பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு சென்றனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையைப் பெற்றுக் கொண்ட மீனாட்சியம்மாள் அவர் களுக்கு பொங்கல் பரிசு அளித்து ஆசி அளித்தார்.