கிசு கிசு -நடிகை கவலை…நடிகர் பயம்…

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகை கவலை…நடிகர் பயம்…
2/26/2011 10:47:58 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
தமிழ்ப் பட நடிகருக்கு திடீர் திருமணம்னு வந்த செய்தியை பார்த்து நடிகர் பதறிட்டாராம்… பதறிட்டாராம்… 'இதுக்கெல்லாம் நடிகைங்கதான் பயப்படுவாங்க. நீ ஏன் கவலப்படுறேÕன்னு நண்பருங்க ஆறுதல் சொன்னாங்களாம்… சொன்னாங்களாம்… 'எனக்கு யாரோடும் காதல் இல்லை. இன்னும் 2 வருஷத்துக்கு கல்யாணம் கிடையாது. யாரோ கிளப்பிவிடுறாங்கÕன்னு அவசர அவசரமா ஸ்டேட்மென்ட் விடுறாராம்… விடுறாராம்..
பெல் நடிகை ரொம்பவே கவலையில இருக்க¤றாராம்… இருக்க¤றாராம்… 'நிறைய ஹீரோக்களோடு நடிச்சாலும் இன்னும் டாப் ஹீரோவோடு சோலோ ஜோடியாவோ, பெரிய பட்ஜெட் படத்திலோ நடிக்க முடியலங்கிறதுதான் கவலைக்கு காரணமாம்… காரணமாம்… இனிமே அதுக்கான முயற்சியில இறங்கப்போறேன்னு நெருங்கியவங்ககிட்ட சொல்றாராம்… சொல்றாராம்…
அபிஷேகமான நடிகர் திடீர்ன்னு டைரக்டர் அவதாரம் எடுத்து, ஸ்டோரிங்கிற பெயர்ல படத்தை இயக்கினாரு. படம் ஓடாம தயாரிப்புக்கு கைய கடிச்சிது. Ôஇந்த படம் போனா பரவாயில்லை. அடுத்த படத்தை தமிழ், இந்தியில ஒரே நேரத்துல இயக்கி பேர் எடுப்பேன்Õனு சொல்றாராம்… சொல்றாராம்… இதுக்கு தோதான தயாரிப்புக்கு வலை வீசுறாராம். நடிகரை பார்த்தாலே தயாரிப்புங்க பயந்து ஓடுறாங்களாம்… ஓடுறாங்களாம்…


Source: Dinakaran
 

அகராதி பாடல் காட்சிக்கு எதிர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அகராதி பாடல் காட்சிக்கு எதிர்ப்பு

2/26/2011 10:16:04 AM

வர்னிகா மூவி மேக்கர்ஸ், கே.எஸ்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'அகராதி'. பிரதீப், மோனிகா, ஓவியா நடிக்கின்றனர். படத்தை இயக்கும் நாகா வெங்கடேஷ், நிருபர்களிடம்  கூறியதாவது: படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டது. சென்சார் குழுவினர், முதலில் 'யு' சான்றிதழ் அளித்தனர். பிறகு வாலி எழுதி பிரதீப், அர்ச்சனா நடித்த ஒரு பாடல் காட்சியை பார்த்துவிட்டு, 'ஏ' சான்றிதழ் கொடுத்தனர். நாய் வரும் காட்சிக்கும் எதிர்ப்பு வந்தது. பிறகு போராடி, யு/ஏ சான்றிதழ் பெற்றோம். கிரைம், பேமிலி சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள இப்படம், மார்ச் 4-ம் தேதி ரிலீசாகிறது. அண்ணன், தங்கையின் பாசத்தை சொல்லும் இக்கதை, கிளைமாக்ஸில் தடாலென மாறும். அண்ணனாக பவன், தங்கையாக மோனிகா நடித்துள்ளனர்.


Source: Dinakaran
 

இசை அமைப்பாளர்கள் சங்க பொன் விழா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இசை அமைப்பாளர்கள் சங்க பொன் விழா

2/26/2011 10:15:13 AM

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கப் பொன்விழா, சென்னையில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறது. இதுபற்றி இச்சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சங்கரன், பொருளாளர் ராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மார்ச் 5-ம் தேதி காலை தொடங்கி இரவுவரை நடக்கிறது. விழாவில் 50 இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர், பாடகிகள், 250 இசைக்கலைஞர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்துகொள்வார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா முதல் ஜி.வி.பிரகாஷ்குமார் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவுக்காக, 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை.


Source: Dinakaran
 

மும்பை தீவிரவாத சம்பவ கதையில் கணேஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மும்பை தீவிரவாத சம்பவ கதையில் கணேஷ்

2/26/2011 10:13:37 AM

'அபியும் நானும்', 'உன்னைப்போல் ஒருவன்' படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம். இவர் இப்போது 'கூச் லாக்' என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். இது மும்பையில் நடந்த தீவிரவாத சம்பவ கதை. முழுக்க லக்னோவில் நடக்கும் இக்கதையில் அனுபம் கெர், ரதி அக்னிகோதாரி உட்பட பலர் நடிக்கின்றனர். சுஜா அலி இயக்குகிறார். இந்தியில் நடிப்பது பற்றி கணேஷ் கூறும்போது, 'கமல், அமிதாப், மோகன்லாலுடன் நடித்துவிட்டேன். தொடர்ந்து தென்னிந்திய படங்களில்தான் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது முதன்முதலாக இந்திப் பட வாய்ப்பு வந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவன் என்றாலும் மும்பையில்தான் வளர்ந்தேன். அதனால் இந்திப் படத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என நினைக்கிறேன்' என்றார்.


Source: Dinakaran
 

ஹீரோ ஆனார் ஸ்ரீதேவி உறவினர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ ஆனார் ஸ்ரீதேவி உறவினர்

2/26/2011 10:16:46 AM

முன்னாள் ஹீரோயின் ஸ்ரீதேவியின் அக்கா, சூர்யகலா மகன் கார்த்திக். 'கருத்தம்மா'வில் அறிமுகமான மகேஸ்வரியின் தம்பி. 'நடுநிசி நாய்கள்' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ள இவர், தேவா என்று தன் பெயரை மாற்றியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் என்ஜினீயரிங் முடித்து விட்டு, வெளிநாட்டில் எம்.பி.ஏ படித்தேன். நடிப்பு ஆர்வத்தால்,  கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளர் ஆனேன். 'நடுநிசி நாய்கள்' படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளேன். தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். இயக்குனராகும் எண்ணம் தற்போது இல்லை.


Source: Dinakaran
 

மாஜி கணவர் மீது ஊர்வசி வழக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மாஜி கணவர் மீது ஊர்வசி வழக்கு

2/26/2011 10:22:27 AM

நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்றுக்கால் பொங்கல் விழாவுக்கு மகளை அனுப்பாத, மனோஜ் கே ஜெயின் மீது, ஊர்வசி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். ஊர்வசியும் மனோஜ் கே ஜெயினும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் தற்போது நீதிமன்ற உத்தரவுபடி மனோஜ் கே ஜெயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். வாரத்தில் 2 நாட்கள் மகளை ஊர்வசி பார்த்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழாவுக்குச் செல்வதற்காக பிப். 18 முதல் 20 வரை மகளை தன்னுடன் அனுப்பவேண்டும் என ஊர்வசி கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்படி குழந்தையை அனுப்புமாறு மனோஜுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் குழந்தையை ஊர்வசியிடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மனோஜ் மீது ஊர்வசி கொச்சி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.


Source: Dinakaran
 

கதகளி பயிற்சியில் டாப்ஸி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கதகளி பயிற்சியில் டாப்ஸி

2/26/2011 10:42:51 AM

'வந்தான் வென்றான்Õ படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியது: பிடிவாதமான ஒரு வாலிபனும் இளம்பெண்ணும் தங்கள் லட்சியங்களை, வாழ்க்கையில் எதையுமே இழக்காமல் எப்படி அடைக்கின்றனர் என்பதுதான் கரு. ஜீவா, டாப்ஸி ஜோடி. இதன் ஷூட்டிங் இப்போது மைசூர் மேல்கோட்டை காட்டுப் பகுதியில் நடக்கிறது. இதற்கு வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறோம். மரம் வெட்டக்கூடாது,
தீ மூட்டக்கூடாது என்று நிறைய நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக கேரளாவிலிருந்து பெண் நடன கலைஞர்கள் அடங்கிய கதகளி மற்றும் களறி குழுவினர் 20 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தினேஷ் மாஸ்டர் அமைக்கும் இந்த நடன காட்சி பேசப்படுவதுடன், படத்துக்கு ஹைலைட்டாக இருக்கும். கேரள பெண்கள் ஆடும் பாரம்பரிய நடனமும் இடம்பெறுவதால், அதற்காக பயிற்சி பெற கேரளா செல்கிறார் ஹீரோயின் டாப்ஸி. தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் முறைப்படி கதகளி பயிற்சி பெற்ற பிறகே ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இதையடுத்து மும்பையில் பாந்த்ரா, ஒராளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் அருகில் செட் அமைத்து ஷூட்டிங் நடக்கிறது.


Source: Dinakaran
 

தமிழ் படங்களில் நடிக்க நேரமில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் படங்களில் நடிக்க நேரமில்லை

2/26/2011 10:57:00 AM

தமிழில் அந்நியன் படத்துக்கு பிறகு சதா அவ்வபோது ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இனி அவர் தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என வதந்திகள் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்ட போது ‘இது பொய்யான செய்தி 3 இந்தி படங்களில் பிஸியாக இருந்ததால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. அவை ரிலீஸ் ஆகிவிட்டது. தற்போது 2 தமிழ், 1 கன்னட படங்களில் நடிப்பதுடன் தெலுங்கு படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்’ என்கிறார் சதா.


Source: Dinakaran