உதயநிதி ஜோடியாக காஜல் அகர்வால்.. வழக்கமான 'ஜோடி' சந்தானமும் உண்டு!

உதயநிதி ஜோடியாக காஜல் அகர்வால்.. வழக்கமான 'ஜோடி' சந்தானமும் உண்டு!

உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த படத்துக்கு நாயகியாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார். வழக்கம் போல இந்தப் படத்தில் படம் முழுக்க வரும் நண்பராக சந்தானம் நடிக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளரான உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் ஹீரோவானார்.

முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

தன்னுடைய முதல் மற்றும் இரண்டு படங்களிலும் முன்னணி நாயகிகளுடன் நடித்த அவர், மூன்றாவது படத்துக்கும் ஒரு முன்னணி ஹீரோயினை ஒப்பந்தம் செய்துள்ளார்.

புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கும் ‘நண்பேண்டா' படத்தில் ஹீரோவாக நடிக்கும் உதயநிதிநடிக்கவிருக்கிறார் உதயநிதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் உதயநிதியின் இன்னொரு ஜோடி.... வழக்கம் போல சந்தானம்தான். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

 

மோடி 'மச்சானை'த் தேடிப் போகும் 'கும்' நடிகை.. குஜராத் அரசியலில் குதிக்கிறார்....!

குதிரை நடிகைக்கு அரசியல் ஆசை வந்து விட்டதாம். புதிதாக படமெதுவும் இல்லாததால் அரசியலில் குதித்து விடலாம்

கொஞ்ச நாட்கள் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்து, ஆடைப் புரட்சி செய்தார். இப்போது அவர் நடித்த பழைய படத்தின் இரண்டாம் பாகத்திலும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எத்தனை நாளைக்கு கடைத் திறப்பு விழாவிற்கு மட்டும் சென்று வருவது என யோசனையில் இருக்கிறாராம் நடிகை.

எனவே, அடுத்த ஆண்டில் தன் சொந்த மண்ணான குஜராத்தில் காவி மச்சான்களுக்காக மேடை ஏற திட்டமிட்டுள்ளாராம் இவர்.

பல நடிகைகள் லோக்கல் பாலிட்டிக்ஸை கலக்கிக் கொண்டிருக்க இந்த 'மச்சி' மட்டும் குஜராத்துக்கு் கொடி பிடிக்கப் போவது ஆச்சரியம்தான்!

 

தனுஷ்-காக ’காடுகளம்’ தேடி அலையும் வெற்றிமாறன்

தனுஷ்-காக ’காடுகளம்’ தேடி அலையும் வெற்றிமாறன்

சென்னை: தேசிய விருது வாங்கிய ஆடுகளத்தை தனுஷுக்காக உருவாக்கித் தந்த வெற்றிமாறன், தற்போது தனுஷிற்காக புதிய காடுகளம் ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

பலத்த யோசனைகளுக்குப் பிறகு தந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ள வெற்றிமாறன், படத்தின் கதாநாயகனாக தனுஷையும் பிடித்து விட்டார். அதற்கும் மேலே, ஷங்கர் மூணு கோடி ரூபாய் கொடுத்து ரஜினிக்கு வில்லனாக நடிக்கச் சொன்னபோது, ஒரேயடியாக மறுத்து விட்டேன். ஏனெனில் நான் நெகடிவ் ரோல்களே பண்ண மாட்டேன்' என கர்ஜித்த ராஜ்கிரண் தான் படத்தின் வில்லனாம்.

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ‘வேங்கைச்சாமி' என பெயரிட இருப்பதாக தகவல். ஆடுகளம் மாதிரி இப்படத்தின் பெரும்பகுதியை காடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.

அதற்காக, படப்பிடிப்புக்கு பொருத்தமான காடு தேடும் படலம் தொடங்க இருக்கிறதாம்.

 

தலைவா... அட என்னதான் கொடுத்தாங்க சென்சார்ல?

யுஏ சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போய் சில கட்களுடன் யு சான்று பெற்றது தலைவா படம் என்று வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் படத்தின் பிஆர்ஓ.

அந்தப் படம் என்ன சான்றிதழ் பெற்றது என்பதை நாங்களாக சொல்லும் வரை காத்திருக்கவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது. விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

தலைவா... அட என்னதான் கொடுத்தாங்க சென்சார்ல?

இந்தப் படத்துக்கு சென்சாரில் யுஏ சான்று தரப்பட்டது. இதனால் அரசின் வரிச்சலுகைகள் கிடைக்காது என்பதால் படத்துக்கு யு சான்று கோரி ரிவைசிங் கமிட்டிக்கு போனார் தயாரிப்பாளர்.

அதன்படி நேற்று முன்தினம் இந்தப் படத்தைபப் பார்த்தது ரிவைசிங் கமிட்டி. படசத்தில் சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் காட்சிகளுக்கு கட் கொடுத்து, யு சான்று தந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் மறுத்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டரில், ' தலைவா சென்சார் சான்று குறித்து வந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அதுகுறித்து விரைவில் அப்டேட் செய்யப்படும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

படம் பார்த்து முடிந்ததும் எப்படியும் ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்திருப்பார்களே...!