பாலிவுட்டிலேயே நான் தான் பெஸ்ட் 'ஐட்டம்': கஷ்மிரா ஷா


பாலிவுட்டிலேயே நான் தான் சிறந்த ஐட்டம் டான்ஸர் அதாவது குத்துப் பாட்டு நாயகி என்று இந்தி நடிகை கஷ்மிரா ஷா தெரிவித்துள்ளார்.

புதுமுக பாலிவுட் இயக்குனர் ரிக்ஷித் மத்தாவின் மிஸ்டர் மணி படத்தில் நடிகை கஷ்மிரா ஷாவும், அவரது காதலர் க்ருஷ்ணா அபிஷேக்கும் சேர்ந்து போன்லெஸ் பிரியாணி என்ற பாட்டிற்கு குத்தாட்டம் போடுகின்றனர். தாபா செட்டில் எடுக்கப்படும் இந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் விஷ்ணு தேவா.

கஷ்மிரா ஷாவை நடிகை என்பதைவிட குத்தாட்ட நாயகி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

இந்த பிரியாணி பாடல் குறித்து கஷ்மிரா கூறுகையில்,

இனிமேல் மக்கள் ஒரு பிளேட் பிரியாணி கொடுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக ஒரு பிளேட் காஷ்மிரா கொடுங்கள் என்றே கேட்பார்கள். தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஹீரோயின்களுமே குத்தாட்டம் போட விரும்புகின்றனர். ஆனால் பாலிவுட்டிலே நான் தான் சிறந்த ஐட்டம் டான்ஸர். ஹெலன்ஜிக்கு அடுத்ததாக 7 முதல் 8 ஹிட் குத்தாட்டப் பாடல்கள் கொடுத்தது நான் தான் என்றார்.

நாட்டுக்கு நல்லதுதானே...!
 

அம்மாவாகிறார் ஸ்வேதா மேனன்!


Shweta Menon
மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கர்ப்பமாக உள்ளாராம்.

மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்குபவர் நடிகை ஸ்வேதா மேனன். அவருக்கு வெயிட் போட்டுவிட்டதால் அதை குறைக்க அமெரிக்கா செல்லப்போவதாகவும், அதனால் 1 வருடம் படங்களில் நடக்கப் போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

அவருக்கு வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். ஸ்வேதா மேனனுக்கும் மும்பையில் பணிபுரியும் ஸ்ரீவல்சன் மேனனுக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி கேரளாவில் வைத்து திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகிறார். கேட்டதற்கு கணவர் அனுமதியுடன் தான் கவர்ச்சியாக நடிப்பதாகத் தெரிவித்தார். அவரது தொழிலை கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளதால் கவர்ச்சியாக நடிப்பதற்கு அனுமதித்து, ஊக்கமளிப்பதாகவும் வித்தியாசமாக விளக்கமளித்திருந்தார்.

குழந்தை பெற அமெரிக்கா போகத் தான் உடல் எடையைக் குறைக்க செல்வதாகக் கூறினாரோ?

1994ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட அவர் சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராயக்கு அடுத்தபடியாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அஜீத்தைப் பற்றி எப்படிச் சொல்றதுன்னே தெரியலே... உருகும் புருனா!


Bruna Abdullah
அஜீத் குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2 நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹைட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது.

அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பாகப் பழகுவார். அமைதியானவர். அவரோட வேலை செய்வது ரொம்ப ஈசி. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர் எனக்கு தமிழில் பேச கற்றுக் கொடுத்தார். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்றார்.

கோலிவுட்டில் இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் பிறந்த நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. புருனா அப்துல்லா, நதாலியா கௌர், தற்போது நர்கிஸ் பக்ரி என்று பட்டியல் நீள்கிறது.
 

மோத்வானியை 'டிஸ்மிஸ்' செய்த ஹன்சிகா!


நடிகை ஹன்சிகா நியூமராலஜி படி தனது பெயருக்கு பின்னால் உள்ள மோத்வானியை நீக்கியுள்ளார்.

தனுஷின் மாப்பிள்ளை மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானிக்கு ஆரம்ப காலம் அகோரமாக இருந்தாலும், தற்போது அதிர்ஷ்ட காலம் என்றே சொல்லலாம். அவர் விஜயுடன் நடித்த வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த ஓ.கே.ஓ.கே. ஆகிய படங்கள் நன்றாக ஓடியதால் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

சிம்புவுடன் வேட்டை மன்னன், சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளார் ஹன்சிகா.

நடிகர், நடிகைகள் நியூமராலஜி படி தனது பெயரில் சில எழுத்துக்களை சேர்ப்பதும், நீக்குவதுமாக உள்ளார்கள். அதற்கு ஹன்சிகாவும் விதிவிலக்கல்ல. நியூமரலாஜிபடி தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மோத்வானியை நீக்கியுள்ளார். இனி நான் வெறும் ஹன்சிகா தான் என்று தெரிவி்த்துள்ளார்.

தெலுங்கில் ஓ மை பிரண்ட் என்று வெளியான படம் தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. அதில் சித்தார்த், ஸ்ருதி ஹாசன், நவ்தீப்புடன் ஹன்சிகாவும் நடித்துள்ளார். இந்த பட ஷூட்டிங்கின் உங்களுக்கும் ஸ்ருதிக்கும் லடாய் ஏற்பட்டதாமே என்று கேட்டதற்கு, நாங்கள் ஏன் மோதிக்க வேண்டும். அதெல்லாம் சும்மா யாரோ சொல்றது. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்றார்.
 

மகேஷ் பாபுவின் 'அண்ணி'யாகிறார் அஞ்சலி!


நடிகை அஞ்சலி தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவின் அண்ணியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு. அவரது படத்தில் ஒரு அண்ணி கேரக்டர் உள்ளது. அதற்கு பொருத்தமான அதேசமயம், பிரபலமான நடிகையைத் தேடி வந்தனர். பல நடிகைகளும் அவருக்கு ஜோடியாக வேணும்னா நடிக்கிறோம், ஆனால் அண்ணி்யாக எல்லாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள அமலா பால் அந்த வேடத்தை முதலில் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் அவர் ஜகா வாங்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கு புது அண்ணி கிடைச்சாச்சு என்ற செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் புது அண்ணி நம்ம அங்காடித் தெரு அஞ்சலி தான் என்றார்கள். மகேஷுக்கு அண்ணியாக நடிக்க சம்மதித்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுவிட்டாராம்.

தைரியமான பொண்ணு தான். இப்பத்தான் தனக்கென்று தமிழில் ஒரு இடத்தை பிடித்துள்ள நிலையில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அண்ணியாக நடித்தால் என்ன, மகேஷ்பாபுவுக்கு அண்ணி என்றால் பேசப்படும் விதத்தில்தானே கேரக்டரும் இருக்கும்...
 

பெரியப்பா அழகிரி பாராட்டினார்... ஸ்டாலின் மகன் உதயநிதி மகிழ்ச்சி


OK OK Movie
மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே நிழல் யுத்தம் நடந்து வந்தாலும் அடுத்த தலைமுறையை அது பாதிக்கவில்லை என்பது கருணாநிதி குடும்பத்தினருக்கு நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம்தான். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை மு.க.அழகிரி பாராட்டியுள்ளாராம். இதை உதயநிதியே மகிழ்ச்சியுடன் கூறியுளள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டுள்ள படத்தில் உதயநிதியே ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது தொடங்கப்பட்ட இந்தப் படம் அதிமுக ஆட்சிக்காலத்தில் சமீபத்தில் வெளியானது. ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடியைப் பெரும் பலமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மதுரை வந்த உதயநிதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தாத்தா படத்தைப் பார்த்து விட்டு பத்து படங்களில் நடித்ததைப் போன்ற நடிப்பைக் காட்டியிருக்கிறாய் என்று பாராட்டினார்.

பெரியப்பா மு.க.அழகிரி இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. இருப்பினும், படம் நல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் நல்லாயிருக்கு என்கிறார்கள். நீ நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்லுறாங்க. சந்தோசமா இருக்கு என்று பாராட்டினார் என்றார் உதயநிதி.

பெரியப்பாவின் பாராட்டைப் பெற்று விட்ட சந்தோஷம் உதயநிதியின் முகத்தில் காணப்பட்டதைப் பார்க்க முடிந்தது.
 

கன்னடத்தில் ரீமேக்காகும் டர்ட்டி பிக்சர்: சில்க் வேடத்தில் வீணா மாலிக்


Veena Malik
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான தி டர்ட்டி பிகச்ர் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக் சில்க் வேடத்தில் நடிக்கிறார்.

தென்னிந்திய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான தி டர்ட்டி பிக்சர் தற்போது தமிழைத் தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. கன்னடத்தில் தி டர்ட்டி பிக்சர்: சில்க் ஹாட் மகா என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இதில் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக் சில்க்காக நடிக்கிறார்.

இந்த படத்தை திருஷுல் இயக்குகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக கடந்த 4-5 மாதங்களாக வீணா மாலிக்கை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் லண்டன், துபாய், பாகிஸ்தான் என்று மாறி, மாறி சென்று கொண்டிருந்தால் எங்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. இதற்கிடையே நிகிதா அல்லது பூஜா காந்தியை சில்க்காக நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். அதுவும் சரிவரவில்லை. இதையடுத்து வீணா மாலிக்கை ஒரு வகையாக தொடர்பு கொண்டு சிலக்காக நடிக்க கேட்டோம். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

இந்தியில் வந்த டர்ட்டி பிக்சரில் சில்கின் நிஜ வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்லவில்லை. அதில் மிஸ்ஸான பல விஷயங்கள் என் படத்தில் இருக்கும்.

உதாரணமாக ஒருமுறை சில்க் கடித்து வைத்த ஆப்பிள் ரூ. 1 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதேபோல ஹீரோக்களை விட தானே பெரிய ஆள் என்ற எண்ணம் எப்போதுமே சில்க்குக்கு உண்டு. இதுபோன்றவற்றை நம் ஊருக்கு ஏற்றவாறு காண்பிப்போம்.

சில்க்கின் உண்மை கதையை கேட்டுவிட்டு வீணா உருகிவிட்டார். என் படக் கதையைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டார். போக்குவரத்து செலவு உள்பட வீணாவின் சம்பளம் ரூ.1 கோடி. அவர் முத்தக் காட்சி, டூ பீஸில் நடிக்க சம்மதித்ததோடு தனது குரலிலேயே டப் செய்கிறார்.

இந்த படம் பாலிவுட் படத்தில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்றார்.

இந்த படத்தில் இயக்குனரின் மகன் அக்ஷய் நடிக்கிறார். படம் பற்றி அக்ஷய் கூறுகையில், எனது தந்தை இயக்கும் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் 2 சண்டைக் காட்சிகள் இருக்கும். மேலும் சில்க் படங்களில் நடித்த மூத்த கலைஞர்கள் இதில் கெஸ்ட் ரோலில் வருவார்கள் என்றார்.

வீணா சும்மா வந்தாலே சூடு பறக்கும், இந்த நிலையில் 'ஹாட் மகா' அவதாரம் வேறு எடுக்கிறார்... என்னாகப் போகுதோ...!
 

பிரியங்கா எனக்கு பிரண்டெல்லாம் கிடையாது: இலியானா


நடிகை பிரியங்கா சோப்ராவை தன் பிரண்ட் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் சமீபத்தில் இந்திக்குள் புகுந்தவரான நடிகை இலியானா.

தமிழில் நடிகையாக அறிமுகமாகி இங்கு வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கிற்கு சென்று அங்கு கொடி கட்டிப்பறக்கும் நடிகை இலியானா தற்போது இந்திக்கும் சென்றுள்ளார்.

பர்பி என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ராவும் உள்ளார். அவருக்கும், இலியானாவுக்கும் ஆகவே மாட்டேன் என்கிறது என்றும், இருவருக்கும் இடையே பிரச்சனை வெடிப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

இதை பிரியங்கா மறுத்ததோடு இலியானா ரொம்ப அழகான, திறமையான பொண்ணு என்று சொல்லி மேட்டரை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் இது குறித்து இலியானா கூறுகையில், பிரியங்கா ஒரு திறமையான நடிகை. ஆனால் அவரும், நானும் பிரண்ட் என்று சொல்ல முடியாது என்று கூறி உள்ளுக்குள் கசமுசா நிலவுவதை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

இந்த நிலையில், பர்பி பட ரிலீஸை பிரியங்கா தான் வேண்டும் என்று தள்ளிப் போட்டு வருவதாக ஒரு செய்தி உலா வருகிறது.

ரெண்டு பொண்ணுங்க சேர்ந்தாலே ரசாபாசம்தான்...ஏன் இப்படி?
 

யாரையும் பார்க்க விடாதீங்க... கண்டிஷன் போடும் தமன்னா!


மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தமன்னா ரெடியாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார். அதாவது, மழைக் காட்சிகளை படமாக்கும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இதற்கு ஒத்துக் கொண்டால், அவருக்கு ஓ.கேதானாம்.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவர் தெலுங்கில் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகரி்த்துள்ளது. விளம்பரப் படங்களில் அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதனால் அவர் ரொம்பவே குஷியாக உள்ளார்.

தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு ராசி. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது அவருக்கு வெள்ளை கலர் டிரஸ் கொடுத்து மழையில் ஆட்டம் போட வைக்கின்றனர். தமிழில் அவர் கார்த்தியுடன் ஆடிய அடடா மழைடா, அடைமழைடா பாட்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

மழைக் காட்சிகளைப் படமாக்கும்போது ஈரம் சொட்ட சொட்ட ஆடும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் இயக்குனர்களுக்கு உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவு போடுவது சரி பார்வையாளர்களை இயக்குனர்கள் எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்களோ?
 

பின்னாடியே வந்து தொல்லை கொடுக்கிறார்...நடிகர் மகள் மீது ஷாஹித் கபூர் புகார்


Vastavikta Pandit
மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமாரின் மகள் தான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக இந்தி நடிகர் ஷாஹித் கபூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமாரின் மகள் வாஸ்தவிக்தா பண்டிட்(33). அவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளார். அவர் கொடுத்த தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் ஷாஹித் மும்பையில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கடந்த சில நாட்களாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகள் வாஸ்தவிக்தா பண்டிட் நான் தங்கியிருக்கும் இடத்தின் காம்பவுண்டுக்குள்ளே வந்துவிடுகிறார். நான் எங்கு சென்றாலும் அவர் தனது காரில் என்னை பின்தொடர்கிறார். சமயத்தில் எனது காரை வழிமறிக்கிறார். பிறகு எனது பாதுகாவலர்கள் சென்று அவரை அங்கிருந்து போகச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாக அந்த பெண் ஷாஹிதுக்கு இவ்வாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் பார்ப்பவர்களிடம் எல்லாம் தான் ஷாஹிதின் மனைவி என்றும் சொல்லி வந்துள்ளார். பொறுமையை இழந்த ஷாஹித் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது வீட்டை பந்த்ரா பகுதிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாஸ்தவிக்தா கடந்த 2006ம் ஆண்டு வெளியான கரண் ராஸ்தானின் எட்டு சனி என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படமும் ஓடவில்லை, அவருக்கும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.