விரைவில் இயக்குனர் ஆகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
40,000 பாடல்களுக்கு மேல் பாடி திரையுலகில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறந்த பிண்ணனி பாடகராக திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நடிகர், பிண்ணனி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர், இப்பொழுது இயக்குனர் என்ற முகத்தை காட்ட காத்திருப்பதாக தெரிகிறது. ஆந்திராவில் உள்ள காகிநாடாவில் மருத்துவமனை திறப்புவிழா ஒன்றிற்கு சென்றிருந்த பாலசுப்ரமணியம், தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக நிரூபர்களிடம் தெரிவித்திருக்கிறார். தற்போது அவர் "கோபுரம்" என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 



 

பாலிவுட் படத்தில் நடிக்கிறார் விக்ரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மணிரத்னம் உதவியாளர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதுபற்றி விக்ரம் கூறியதாவது: தில், தூள் பாணியில் ஆக்ஷனுடன் கூடிய கமர்ஷியல் படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் கமர்ஷியல் கதையில் நடிக்க எண்ணினேன். சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'ராஜபாட்டை' இந்த பாணியிலான படம்தான். இப்படத்தில் 17 கெட்டப்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் சில கெட்டப் சில நொடிகள் மட்டுமே இடம்பெறும். ஆனாலும் அதற்காக நேரம் எடுத்து ஹாலிவுட் வில்லன்களின் லிஸ்ட் தயாரித்து அவர்களைப்போல் மேக் அப் அணிந்தேன்.

மணிரத்னத்தின் 'ராவணன்' படத்துக்கு பிறகு பிஜாய் நம்பியார் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க உள்ளேன். இவர் 'குரு', 'ராவணன்' ஆகிய படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஜனவரிக்கு பிறகு இதன் ஷூட்டிங் தொடங்கும். இவ்வாறு விக்ரம் கூறினார்.


 

லெஸ்பியன் படத்தில் நடித்தது துணிச்சலான முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லெஸ்பியனாக நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு என்றார் நந்திததாஸ். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை நந்திதாதாஸ். இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: பெண்களுக்கிடையேயான நெருக்கமான உறவை மையப்படுத்தி உருவான படம் 'பயர்'. என்னுடைய முதல் படமான இதில் நான் லெஸ்பியனாக நடித்தது துணிச்சலான முடிவு. இதில் நடித்தது பற்றி சர்ச்சை எழுந்தது. அதுபற்றி கவலைப்படவில்லை. பாலிவுட்டை பொறுத்தவரை வர்த்தக ரீதியிலான படங்கள்தான் வருகின்றன. மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து துணிச்சலான கதை அம்சங்களுடன் ஒரு சில படங்கள்தான் வருகிறது. அதனடிப்படையில் உருவான படம்தான் பயர்.

நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. மக்களிடையே உள்ள பிரச்னைகளை எடுத்து சொல்லும் சில கதைகளை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுகிறார்கள். அதுபோல் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமா என்பது வாழ்க்கையை பிரதிபலிப்பது. மக்கள் பிரச்னைகளை மையமாக கொண்ட படங்களில் நான் நடித்துள்ளேன் என்ற திருப்தி இருக்கிறது. இப்போதும் அதுபோன்ற கதைகளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.


 

தமிழக மக்களுக்கு தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன் :- ஏ.ஆர்.ரகுமான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டேம் 999 படம் ஆஸ்கர் விருது பெற வாழ்த்தது தெரிவித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லி ஆக்ராவில் நடைபெற்ற விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பான ஏக் தீவானா தா படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டேம் 999 ப பாடல்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடும்போது சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஆவுசுப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் சிலர் இதனை வேறு விதமாக கூற தொடங்கியுள்ளனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தமிழனாகிய எனக்கு என் வளர்ச்சியில் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாகவும், முக்கியத் தூணாகவும் இருந்து வருகிறார்கள். அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். கடந்த 3 வாரங்களாக நான் ஹாலிவுட் பணியில் அமெரிக்காவில் மூழ்கி இருந்ததால், தமிழ்நாடு, கேரளாவில் நடந்து வரும் முல்லைப் பெரியாறு பிரச்சினை எந்த அளவுக்கு தீவிரமானது என்பதை நான் உணரவில்லை. இந்தப் பிரச்சினையில் முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாமின் நிலைப்பாட்டினை நான் மதிக்கிறேன். இந்தியாவின் வேகமான வளர்ச்சியைப் பார்த்து இன்று உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் நமது ஒற்றுமையே... அதனைக் கட்டிக் காப்பது மிகவும் முக்கியம். என் அருமை ரசிகர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.


 

விஜயை பிடிக்காதவர்களுக்கு, நண்பன் படத்தை பார்த்தால், பிடிக்கும் : ஷங்கர்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
"நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்." என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். கோவையில் நண்பன் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, "த்ரி இடியட்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார். நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும். சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.


 

60 லட்சம் செட் எரிந்ததால் பரபரப்பு !

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பொள்ளாச்சி அருகே நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்கும் தெலுங்கு பட ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக போடப்பட்ட செட் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கணேஷ் தயாரிப்பில், ஹரிஸ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் தெலுங்கு படம் 'கப¢பர் சிங்'. ஹீரோ பவன் கல்யாண், ஹீரோயின் ஸ்ருதி ஹாசன். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த மாசேகவுண்டன்புதூரில் ஷூட்டிங் நடத்த, அக்டோபர் இறுதியில் ரூ.60 லட்சத்தில் போலீஸ் ஸ்டேஷன் போன்ற செட் அமைக்கப்பட்டது. டன் கணக்கில் மரங்கள், பிளைவுட் போன்றவற்றை பயன்படுத்தி, தத்ரூபமாக இந்த செட் உருவாக்கப்பட்டது. தொடர்மழையால் ஷூட்டிங் தள்ளிப்போனது. மழை ஓய்ந்த பிறகு கடந்த 12ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை ஷூட்டிங் தொடர்ந்து நடந்தது. இங்கு மட்டும¤ன்றி அருகில் உள்ள சேத்துமடை உள்ளிட்ட இடங்களிலும் ஷூட்டிங் நடந்தது. பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்று நடித்தனர். அடுத்தகட்ட ஷூட்டிங் ஜனவரி இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென செட்டில் தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி செட் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. படக்குழுவினர் அளித்த புகாரின்பேரில், ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


 

பொங்கல் போட்டி : நண்பன் vs வேட்டை vs 3!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் பொங்கலுக்கு 'நண்பன்', 'வேட்டை', மற்றும் '3' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. இதில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன், லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை மற்றும் ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' படங்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் படத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, தற்போது அவர் இளைய தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்திருப்பதால் 'நண்பன்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. இந்தியில் வெளியான '' படத்தின் ரீமேக் படம் தான். ஆனாலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதால் புதுமைக்கு பஞ்சம் இருக்காது.  அதே போல் லிங்குசாமியின் 'வேட்டை' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. லிங்குசாமி படத்திற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லை என்பதால் இவரது படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இந்த படத்தில் மாதவன், ஆர்யா கூட்டணி வெற்றி கூட்டணியாக மாற துடித்துக்கொண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி 'why this kolaveri di' பாடல் உலக முழுவதும் சூப்பர் ஹிட், இந்த பாடல் '3' படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. தனுஷின் துடிப்பான நடிப்பும் படத்திற்கு மிக பலம் சேர்க்கும். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் முதல் படமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொங்கல் தமிழ் சினிமாவிற்கு அரோக்கியமான போட்டியை தரும் என்தில எந்தவித சந்தேகமும் இல்லை.



 

வசந்த பாலன் இயக்கத்தில் ஜீவா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்த ஆண்டு ஜீவாவிற்கு சிறப்பாக அமைந்தது. அதே போல் அடுத்த வருடம் சார் ரொம்ப பிசி. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்திலும், மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு, எஸ்.பி.ஜனார்த்தனன் இயக்கத்திலும், வாமனன் இயக்குனர் அகமது இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் ஸ்பெஷலாக ஷங்கரின் இயக்கத்தில் விஜய் மற்றும் ஸ்ரீகாந்த்துடன் ஜீவா நடித்துள்ள 'நண்பன்' வெளியாக இருக்கிறது. அப்போ அடுத்த வருடம் தொடக்கமும் ஜீவாவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.


 

ஒரே படத்தில் 50 வேடங்களில் நடிக்க விக்ரம் ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே படத்தில் 50 வேடங்களில் நடித்து சாதனை செய்வேன் என்று விக்ரம் கூறினார். விக்ரம் நடித்து வெளிவந்துள்ள படம் 'ராஜபாட்டை'. இதில் அவர் 15 கெட்அப்களில் நடித்துள்ளார். படம் பற்றி விக்ரம் நிருபர்களிடம் கூறியதாவது: 'காசி', 'பிதாமகன்', 'தெய்வத் திருமகள்' போன்ற கனமான படங்களில் நடித்தாலும் 'சாமி', 'தூள்' மாதிரி கமர்சியல் படங்களிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு படம்தான் இது. ஜனரஞ்சக படங்களிலும் முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன். இதுவரை நடித்த படங்களில் அதிக உழைப்பை கொடுத்த படம், 'ராஜபாட்டை'தான். காரணம் நிறைய கெட்அப்புகள் போட்டிருக்கிறேன். ஒவ்வோரு கெட்அப்பிற்கும் பலமணி நேரம் மேக்கப்பிற்காக செலவிட்டிருக்கிறேன். நிறைய கெட்அப்களில் நடிப்பது யாருக்கும் போட்டியாக இல்லை. என்னால், ஒரு படத்தில் 50 கெட்அப்பில் கூட நடிக்க முடியும். அப்படி நடித்து விரைவில் சாதனை படைப்பேன். எனது எல்லா படங்களிலும் மெசேஜ் இருக்கும். அதை நேரடியாக கூறாமல் உணர வைப்பதுதான் சினிமா. இதில் நில அபகரிப்பு பற்றி சொல்லியிருக்கிறோம். இவ்வாறு விக்ரம் கூறினார்.