பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஜீன்ஸ் 2!

பிரசாந்த் நடிப்பில் ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு  ஜீன்ஸ் 2 என இப்போதைக்கு தலைப்பு பதிவு செய்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் பிரசாந்த்.

பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஜீன்ஸ் 2!

சமீபத்தில் அவர் நடிப்பில் மம்பட்டியான் மற்றும் பொன்னர் சங்கர் ஆகிய இரு படங்கள் வெளியாகின.

ஆனால் அதன் பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நல்ல கதைக்காக காத்திருப்பதாகக் கூறி வந்தார்.

இப்போது அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்கவிருக்கிறார் பிரசாந்த். அவற்றில் ஒன்று ஜீன்ஸ் படத்தின் தொடர்ச்சி. இந்தப் படத்தை அநேகமாக பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குவார் என்று கூறப்பட்டது.

முதல் பாகத்தில் நடித்தவர்களையே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்வதாக பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹீரோயினாக ஐஸ்வர்யா நடிப்பாரா என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் 2014-ல் தொடங்குகிறது.

மற்றொரு படத்தின் ஷூட்டிங்கும் இதற்கடுத்து தொடங்கும் என பிரசாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த இரண்டாவது படத்தை புதிய இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.

 

தமிழ், இந்தி, தெலுங்கு.. அனைத்து மொழிகளிலும் ஆரோ 3 டியில் விஸ்வரூபம் 2!

சென்னை:தமிழ், இந்தி, தெலுங்கு.. அனைத்து மொழிகளிலும் ஆரோ 3 டியில் விஸ்வரூபம் 2!  

மற்ற மொழிகளில் சாதாரண டிடிஎஸ்ஸில்தான் வெளியானது.

ஆனால் இந்த முறை அந்தக் குறை வைக்காமல், அனைத்து மொழிகளிலும் ஆரோ 3 டியில் வெளியிடுகிறார் கமல். இதனை கமல் ஹாஸனே இன்று அறிவித்துள்ளார்.

கமல் இந்த அறிவிப்பை வெளியிட முக்கிய காரணம், ஆந்திராவில் 100 புதிய அரங்குகளில் ஆரோ 11.1 ஒலி நுட்பத்தை வழங்குவதாக பார்கோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதுதான்.

இந்தியாவில் ஆரோ 3டி தொழில்நுட்பத்தை பார்கோ நிறுவனம்தான் திரையரங்குகளுக்கு வழங்கி வருகிறது.

ஜனவரி இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகிறது விஸ்வரூபம் 2. இப்போது ஹாலிவுட்டில் வைத்து சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடந்து வருகின்றன இந்தப் படத்துக்கு.

 

சிரிக்க வைக்கும் சிங்காரம் தெரு

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் புதிய நகைச்சுவை தொடர் ‘‘சிங்காரம் தெரு'' தங்களின் ரசனைக்கேற்ப அமைந்துள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

தமிழ் சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு பல காமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். விஜய் டிவியில் புதியதாக சிங்காரம் தெரு என்ற காமெடி சீரியலை கடந்த வாரம் முதல் தொடங்கியுள்ளனர்.

சிரிக்க வைக்கும் சிங்காரம் தெரு

ஒரு காலனியில் வசிக்கும் வெவ்வேறு விதமான மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளுக்குக்கூட அவர்கள் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது, அங்குள்ள காவலர்களிடம் மல்லுக்கட்டுவது தொடரில் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த காலனியில் வசிக்கும் ஐந்து குடும்பங்களில் உள்ளவர்கள் அடிக்கும் லூட்டிகளும் நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

‘லொள்ளு சபா' மூலம் பிரபலமான இயக்குனர் ராம்பாலா இயக்கும் இத்தொடர், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

ஜில்லாவுக்கு இப்போதிலிருந்து தியேட்டர் புக் பண்ணுங்க! - விஜய் தீவிரம்

சென்னை: பொங்கலுக்கு வருவதில் உறுதியாக நிற்கும் விஜய், தன் ஜில்லா படத்துக்கு வேகமாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.

படத்தின் தயாரிப்பாளரிடம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அரங்குகளை ஒப்பந்தம் செய்யுமாறு விஜய் கூறியுள்ளாராம்.

ஜில்லாவுக்கு இப்போதிலிருந்து தியேட்டர் புக் பண்ணுங்க! - விஜய் தீவிரம்  

இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் உள்ள அரங்குகளை தீவிரமாக வளைத்துப் போட்டு வருகிறார்களாம்.

பொங்கலுக்கு வரும் மற்ற பெரிய படங்களான கோச்சடையான் மற்றும் வீரம் படங்களுக்கு தியேட்டர் தருவதாக வாக்களித்துள்ள நிலையில், ஜில்லாவுக்கும் அப்படி அதிக அரங்குகளை ஒதுக்குவது என மல்டிப்ளெக்ஸ் மற்றும் இரு தியேட்டர் வளாகங்கள் திகைத்து நிற்கின்றனவாம்.

'ஆனால் இதுபற்றியெல்லாம் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். படத்தை முழுமையாக விற்றாகிவிட்டது. பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்பதை வாங்கியிருப்பவர்களுக்கு அழுத்தமாக சொல்லிவிடுங்கள்', என்று விஜய்யே ஆர்பி சவுத்திரியிடம் கூறியுள்ளாராம்.

நெல்லை, கன்யாகுமரி மற்றும் தூத்துக்குடி பகுதியில்தான் முதல் புக்கிங்கை ஆரம்பித்துள்ளது ஜில்லா டீம்.

அவர்களிடம், இந்த முறை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நம்ம படம் வெளியாகும். தியேட்டர்களைக் கொடுங்க என்று உறுதியளித்தாராம் ஆர்பி சவுத்ரி.

 

ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி?

மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி ஏற்பாட்டில்தான் ஸ்ருதி ஹாஸன் தாக்கப்பட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை மீடியாவில்.

ஸ்ருதி ஹாஸன் வீட்டிலிருந்த போது அவரை மர்ம மனிதன் தாக்கிவிட்டு ஓடியது தெரிந்ததே.

ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி?  

இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் முதலில் போலீசில் புகார் செய்யவில்லை. காரணம், அந்த தாக்குதல் நடந்தபோது, அவர் வீட்டில் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், புகார் செய்தால இந்த விவகாரம் வெளியில் வந்துவிடும் என்று அஞ்சியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் குறித்து நேற்றுதான் போலீசில் புகார் செய்தார் ஸ்ருதிஹாஸன். ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அதிர வைத்துள்ளது. கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் ஸ்ருதி என்றும் இதற்கு ஒரு பிரபல கான் நடிகர்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைவிட அதிர வைக்கும் விஷயம், ஸ்ருதியைத் தாக்க இந்த நபரை ஏவியவர் அந்த நடிகரின் மனைவிதானாம். ஸ்ருதி புகார் தந்ததுமே, அந்த நடிகர் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு, இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள். இல்லாவிட்டால் என் பெயர் நாறிவிடும், என வற்புறுத்தினாராம்.

அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் ஸ்ருதியுடன் பிரச்சினை செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் அந்த நபரை நடிகரின் மனைவி ஏற்பாடு செய்திருந்தாராம். அவர் நினைத்தது கிட்டத்தட்ட இப்போது நடந்துவிட்டது. ஸ்ருதி தாக்கப்பட்டதை விட, அதன் பின்னணி பற்றித்தான் அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய பத்திரிகைகளின் நிருபர்களுக்கு இந்த விஷயத்தை நடிகரின் மனைவியே போன் போட்டு சொன்னதும் அம்பலமாகியுள்ளது.

"நடிகருடனான தொடர்பை ஸ்ருதி இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், நிச்சயம் அடுத்தமுறை நானே நேரில் வந்து அனைவருக்கும் தெரியும் வகையில் சண்டை போடவும் தயங்கமாட்டேன்... என் கணவருடன் சேர்ந்து அவரது கள்ளத் தொடர்புகளும் அம்பலமாகட்டும்," என்றும் எச்சரித்துள்ளாராம் நடிகர் மனைவி.

இந்தத் விவரங்கள் இப்போது தமிழ்ப் பத்திரிகைகள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

 

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.0/5

சின்ன வயசிலிருந்தே எல்லாருக்குள்ளும் கற்பனை உலகம் அல்லது உலகங்கள் உண்டு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவற்றில் சஞ்சரிக்கத் தவறுவதில்லை. நாம் விரும்பியபடி அந்த உலகில் சுற்றித் திரியலாம். மனசு இச்சைப்படும் நிகழ்வுகளை மட்டுமே நடக்க வைக்கலாம்... எல்லாவற்றையும் நாமே தீர்மானிக்கலாம்!

செல்வராகவன் தன் மனதில் இருந்த கற்பனை உலகங்களுக்கு வண்ணமயமாக வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறார்.

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

ஆனால் அந்த கற்பனை உலகங்களில் என்னென்னவெல்லாம் நிகழ வேண்டும் என அவர் விரும்பினாரோ, அவை அசுவாரஸ்யமாக அமைந்துவிட்டன என்பதுதான் இரண்டாம் உலகம் படத்தின் ஆகப் பெரிய குறைபாடு!

ஒரு வறண்ட கற்பனையை, கோடிகளை வாரியிறைத்து வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் செல்வா.

திரைக்கதையை அழுத்தமாகவும் ரசிகன் யோசிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும் படைத்திருந்தால் இந்தப் படத்தின் வீச்சு வேறு மாதிரி இருந்திருக்கும்!

செல்வாவின் இரண்டாம் உலகக் கதை...

இப்போது நாம் வாழும் காதலும் மோதலும் மிக்க பூமி... அதற்கு இணையாக வான்வெளியில் உள்ள இன்னொரு கிரகம் (உலகம் அல்ல). அதில் மோதல் மட்டும்தான் உண்டு. காதல் கிடையாது. அதனால் பூக்களே பூப்பதில்லை. அந்த கிரகத்தின் கடவுளான 'அம்மா'வுக்கு, தங்கள் மண்ணில் காதல் அரும்ப வேண்டும்.. பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு ஒரு மாவீரன் வேண்டும். அவனுக்கேற்ற ஒரு காதலி வேண்டும்.

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

பூலோகத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்கிறார்கள்... அவர்கள் காதல் முழுமையாக வெளிப்படும் ஒரு இரவில், அனுஷ்கா திடீரென மரிக்கிறார். அதற்கு இரு தினங்கள் முன்பே ஆர்யாவின் தந்தை இறக்கிறார். அவரது ஆன்மா அனுஷ்கா இறந்த இடத்தில் நிற்கும் ஆர்யா கண்முன் தோன்றி, 'காதல் உண்மையானதென்றால்... உன் காதலியை நீ மீண்டும் பார்ப்பாய்' என்கிறார். அதை நம்பி, ஊரெல்லாம் சுற்றுகிறார் ஆர்யா. ஒரு நாள், பேய் மழை.. பூமி அதிர்கிறது. கண்ணெதிரே ஒரு பழைய பியட் கார் உருண்டு செல்கிறது... அதில் ஏறி பயணிக்கிறார் ஆர்யா... அப்படியே அந்த இரண்டாவது கிரகத்துக்குப் போய் விடுகிறார்..!

அவர் வருகை பூக்களையும் காதலையும் பூக்க வைக்கிறது அந்த வேற்று கிரகத்தில்...

-இப்படிப் போகிறது இரண்டாம் உலகம் குறித்த செல்வராகவனின் அதிமிகைக் கற்பனை. முடிவில் மூன்றாவதாக வேறு உலகத்தை வேறு காட்டுகிறது, 'இன்னொரு பாகம் இருக்குடி..' என மிரட்டுகிறது!

பேன்டஸி.. அதாவது கற்பனை என்று வந்த பிறகு அது கேமரூனின் பண்டோராவாக இருந்தால் என்ன... அதன் பாதிப்பில் உருவான இரண்டாம் உலகமாக இருந்தால் என்ன... பெரிய வித்தியாசமில்லை, ரசிக்கத் தடையுமில்லை.

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

[இரண்டாம் உலகம் படங்கள்]

ஆனால் அங்கே நடக்கிற நிகழ்வுகள்.. சம்பவங்களின் தொடர்ச்சிகள் எத்தனை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக இருக்க வேண்டும்? அப்படி எதுவுமே இரண்டாம் உலகத்தில் இல்லை. இதுதான் முதல் பிரச்சினை.

அனுஷ்கா அறிமுகத்தில் தொடங்கி பல விஷயங்களில் அவதாரை ஜெராக்ஸ் எடுக்க முயன்றிருக்கிறார் செல்வராகவன். இது தேவையற்றது. நமது பாட்டன் பாட்டி சொன்ன செவி வழிக் கதைகளை நவீனப்படுத்தினால் கூடப் போதும்... பல அவதார்களைக் காட்ட முடியும்!

லாஜிக்கை விட்டுத் தள்ளுங்கள்... ஆனால் ஒரு காட்சியாவது ரசிக்கும்படி இருக்கிறதா என்றால்... ம்ஹூம்!

ஆர்யாவை அனுஷ்கா மாப்பிள்ளை கேட்டும் பூலோகக் காட்சி தொடங்கி, இந்த இருவரும் சேர மறுக்கும் அந்த இரண்டாம் உலகக் காட்சிகள் வரை எதிலுமே ஒரு ஈர்ப்பில்லை.

ஆனால் ஒரு நிலா இரவில் காதல் உணர்ச்சியில் பின்னிப் பிணைந்து, விடிய விடியப் பேசி, கடைசிவரை அந்த உதட்டுச் சந்திப்பு நடக்காமல் போய் அனுஷ்கா உயிர் துறக்கும் அந்த ஒரே ஒரு காட்சியில் 7ஜி செல்வராகவனைப் பார்க்க முடிந்தது!

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

நடிப்பு என்று பார்த்தால் ஆர்யா, அனுஷ்கா இருவருமே ஒரு கட்டத்துக்குப் பிறகு என்ன பண்ணுவதென்றே தெரியாமல் விழிக்கிறார்கள். அதிலும் மயக்கம் என்ன பாணியில் வரும் ஒரு பாட்டுக்கு அனுஷ்கா ஒப்புக்கு ஆடுவார் பாருங்கள்... அதில் தெரிகிறது எந்த அளவு வெறுத்துப் போய் நடித்திருக்கிறார்கள் என்று!

இரண்டாம் உலகத்தின் கடவுள் என்று ஒரு சின்னப் பெண்ணைக் காட்டுகிறார்கள். அது கடவுளா.. கைப்பிள்ளையா என்று தெரியாத அளவுக்கு சித்தரிக்கப்பட்டிருப்பதால் பலத்த கேலிக்குள்ளாகிறது.

இரண்டு உலகங்கள் இணைவது சாத்தியமா... சாத்தியமில்லாத இந்த விஷயத்தை சாத்தியம் எனக் காட்ட முயற்சித்த செல்வராகவன் அதற்காக எத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டும். ஆனால் ஏதோ பக்கத்து வீட்டு காம்பவுண்டைக் கடப்பது மாதிரி ஆர்யா இந்த உலகிலிருந்து அந்த உலகுக்கு போய் வருகிறார்!

அதிலும் மூன்றாம் உலகத்துக்கு ஆர்யா வரும் விதம் மகா சொதப்பல். இரண்டாம் உலகத்தின் ஒரு நதியில் விழும் ஆர்யா, மூன்றாம் உலகத்தில் ஒரு கடலில் எழுகிறார்! இரண்டு உலகங்களுக்கும் இடையில் அத்தாதண்டி ஓட்டையா...?

எல்லா படங்களிலும் தன் பாத்திரங்களுக்கென்று தனி மொழி வைத்திருக்கிறார் செல்வராகவன். மயக்கம் என்ன-வில் 'ஆய் போட்டோ' மாதிரி, இதில் 'குப்ப ராஜா...'!

பெருங் குழப்பத்திலிருந்திருப்பார் போலிருக்கிறது படத்தின் எடிட்டர். கண்டபடி ஓடவிட்டு கத்தரி போட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பும் அவரது ஒளிப்பதிவுடன் சில காட்சிகளை கிராபிக்ஸில் குழைத்திருக்கும் விதம் அபாரம். சில காட்சிகளில்தான் இந்த அபாரமெல்லாம்... பெரும்பாலான காட்சிகளில் கிராபிக்ஸும் ரொம்ப குழந்தைத்தனமாகவே உள்ளது.

இந்தப் படத்தின் இசையும் பின்னணி இசையும் கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. இந்த இரண்டையும் வெவ்வேறு பெயர்களில் செய்திருந்தாலும், தரம் செல்வா பாஷையில் 'குப்ப'!

செல்வராகவனின் இரண்டாம் உலகத்தை ரூ 50 கோடி குப்பை என்று சுலபத்தில் தூர எறிந்துவிடலாம். அதற்குத் தகுதியானதாகவே இந்தப் படம் உள்ளது.

ஆனால் ஒரு படைப்பாளியாக செல்வராகவனை தூக்கி எறிய இன்னும் மனம் வரவில்லை.. ரசிகனின் இந்த மனநிலை செல்வாவுக்குப் புரிய வேண்டும்... தயாரிப்பாளர்களுக்கும் இருக்க வேண்டும்!

சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு விஷயத்தில் மட்டும் பரம திருப்தி... மூன்று உலகங்களிலும் பேசப்படும் மொழி தமிழ்தான்!

 

'படுக்கையறைக் காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டுகிறார் அந்த வியாபாரி'- நடிகை ராதா

சென்னை: தாலிகட்டாமலேயே குடித்தனம் நடத்தியபோது அந்தரங்கமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டுவதாக வைர வியாபாரி மீது நடிகை ராதா கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சுந்தரா டிராவல் நாயகி ராதா, சென்னை கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில், திருவல்லிக்கேணியைச் சேந்த வைர வியாபாரியான பைசூல், சினிமா தயாரிப்பாளர் என்று அறிமுகம் ஆனார். பின்னர் ஆசை வார்த்தை என்னிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்.

'படுக்கையறைக் காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டுகிறார் அந்த வியாபாரி'- நடிகை ராதா

என்னை திருமணம் செய்துகொள்ளவதாக கூறி ஏமாற்றி விட்டார். பலமுறை என்னை அடித்து, மிரட்டி நிர்வாணப்படுத்துவார். நானும் அவரும் அந்தரங்கமாக இருந்த படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

என் பணம் நகைகளைத் திருப்பிக் கேட்டபோது, இந்த வீடியோக்களை வைத்து மிரட்டுகிறார். என் பணம் 50 லட்சம் மற்றும் நகைகளை மீட்டுத் தாருங்கள், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அஞ்சலி வழக்கு... டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை: நடிகை அஞ்சலி மீது இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக நடிகை அஞ்சலி புகார் கூறி இருந்தார்.

அஞ்சலி வழக்கு... டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறி களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் நடிகை அஞ்சலி 22-ந் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அஞ்சலி நேரில் ஆஜராவதிலிருந்து உயர்நீதிமன்றம் விலக்களித்துவிட்டதால், நடிகை அஞ்சலி நேற்று ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

 

நடிக்க கூப்பிட்டால் 2 விரலை காட்டும் நடிகை!

சென்னை: நயன நடிகையை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய சென்றால் அவர் இரண்டு விரல்களை காட்டுகிறாராம்.

நயன நடிகை நடிப்புக்கு லீவு விட்டு மீண்டும் வந்த பிறகும் அவரது மார்க்கெட் மட்டும் ஏறுமுகமாகவே உள்ளது. காரணம் அவரது தொழில் திறமை. அவருடன் நடிக்க இளம் ஹீரோக்கள் எல்லாம் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இப்படி ஹீரோக்கள் நயன நடிகையுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதை அறிந்து இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விருப்பமாக உள்ளனர். தனது மார்க்கெட் மிகவும் பலமாக உள்ளது என்பதை அறிந்து வைத்துள்ள நடிகை சம்பளத்தில் மட்டும் கறாராக இருக்கிறாராம். அதேநேரம் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லையாம்.

தனக்கு வாய்ப்பு அளிக்க வருபவர்களிடம் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறராம். அம்மணி அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த பிறகு தான் ரூ. 2 கோடி கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் கேட்ட பணத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்கிறார்களாம்.

அது சரி மார்க்கெட் உள்ள போது தானே சம்பாதிக்க முடியும்!

 

ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு ஆதாரம் தரட்டுமா?- வைர வியாபாரி

ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு ஆதாரம் தரட்டுமா?- வைர வியாபாரி

சென்னை: நடிகை ராதாவின் புகார்களுக்கு பதிலளித்துள்ள வைர வியாபாரி பைசூல், 'ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு ஆதாரங்களை நான் காட்டுகிறேன்,' என்று கூறியுள்ளார்.

ராதாவின் பேட்டி மற்றும் புகார் குறித்து, தொழில் அதிபர் பைசூலிடம் விசாரித்த போது, அவர் கூறியவை:

நடிகை ராதாவின் புகார் மற்றும் பேட்டி விவரங்களை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் என்மீது சொன்ன குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை. அவற்றை நான் மறுக்கிறேன். அவரது புகாரை நான் சட்டப்படி சந்திப்பேன். நியாயப்படி நான்தான் அவர் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு பெண் என்று இரக்கப்பட்டு, அவர் மீது புகார் கொடுக்காமல், அவர் கொடுத்த தொல்லைகளை நான் சமாளித்து வந்தேன். அரசியல்வாதிகள் மூலம் அவர் என்னை மிரட்டி வந்தார். தயாரிப்பாளர் என்ற முறையில் நான் அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, என்னை அவமானப்படுத்தியுள்ளார்.

அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரமாக அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது வருமான வரித்துறை பான் கார்டு நகல்கள் உள்ளன.

பான் கார்டில் அவரது கணவர் பெயர் என்ன போடப்பட்டுள்ளது, பாஸ்போர்ட்டில் அவரது கணவர் பெயர் என்ன என்று போடப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆதாரங்களை நான் சென்னை வந்ததும், போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுப்பேன்.

அவர் எனக்கு அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். தகவல்களில் கூட நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவர் என்னை ஜெயிலுக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். நான் அவரை ஒரு முறை அல்ல, பல முறை ஜெயிலுக்கு அனுப்புவேன்," என்றார்.

 

ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியவரின் அடையாளம் தெரிந்தது!

ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியவரின் அடையாளம் தெரிந்தது!

மும்பை: ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கிய நபர் யார் என்ற அடையாளம் தெரிந்துவிட்டது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.

மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது.

இந்த சம்பவத்தினால் அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன் அந்த வீட்டில் தங்காமல், தன் தோழி வீட்டில் இருக்கிறார்.

முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்ருதிஹாசன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு வரும் வெளியாட்கள், பாதுகாவலர் அறையில் இருக்கும் நோட்டில் தங்களது பெயர் விவரங்களை எழுதி வைப்பது வழக்கம்.அந்த நோட்டில் பார்த்த போது சுருதிஹாசனை பார்க்க வந்தது அசோக் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர் அசோக் ஜெயின் என்று தனது பெயரை பதிவு செய்து இருந்தவன் தெரியவந்தது. அந்த நபரை அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் அடையாளம் காட்டினர்.

மேலும் அந்த நபர் சிறிது நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு அரங்குகளிலும் ஸ்ருதியைத் தொட முயற்சித்து விரட்டியடிக்கப்பட்டுள்ளான். படப்பிடிப்பு குழுவினரிடம் கண்காணிப்பு கேமரா வீடியோவைக் காட்டியபோது, அவர்களும் அந்த வாலிபரை அடையாளம் காட்டினர்.

இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது அத்துமீறல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தேட ஆரம்பித்துள்ளனர் போலீசார்.

இதற்கிடையே ஸ்ருதிஹாஸன் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அதிர வைக்கும் வேறு சில தகவல்களை மும்பை மீடியா வெளியிட்டுள்ளன.