புலிவேஷம் என் இசை வாழ்க்கைக்கு திருப்புமுனை! - ஸ்ரீகாந்த் தேவா சிறப்புப் பேட்டி


ஆர்கே நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள புலிவேஷம் படம் என் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. பாண்டியராஜனின் டபுள்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை 58 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இப்போது புலிவேஷம், ஜெயம் ரவி நடிக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பூலோகம் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தனது இசை அனுபவங்களை ஸ்ரீகாந்த் தேவா நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “தமிழ் சினிமாவில் இசையின் போக்கு முன்பு மாதிரி இல்லை. இப்படி வேணும் போட்டுக் கொடுங்க என இயக்குநர்கள்ம கேட்கிறார்கள். எனவே வேறு யோசனையின்றி நாங்களும் அதைச் செய்கிறோம்.

நல்ல பாடல், மெலடிப் பாடல் போடலாம் என்றால் அது பழசு என்று ஒதுக்கும் அபாயம் உள்ளதால்தான் என்னைப் போன்ற இசையமைப்பாளர்கள் தங்கள் ட்ரெண்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம்.

தமிழ் சினிமாவில் 2000 இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் 50 பேர்தான் பிஸியாக உள்ளனர். காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளாவிட்டால் இவர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

50 வயலின்கள்…

முன்பெல்லாம் 50 இசைக்கலைஞர்களை வைத்து பாடல்கள் கம்போஸ் செய்வார்கள். அதுவும் லைவாக. இப்போது 5 பேர் வாசிப்பதை ரெக்கார்ட் செய்து கம்ப்யூட்டரில் 50 பேர் வாசிப்பது போல மாற்றிக் கொள்கிறார்கள். டெக்னாலஜி அப்படி.

இது கொஞ்சம் சிக்கனமானது என்றாலும், லைவாக பாட்டு பன்றதுல உள்ள ஜீவன் கம்ப்யூட்டர் மயமானதில் செத்துவிட்டது என்பதுதான் உண்மை.

ராஜாவின் இசை

“போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்…” என்ற பாட்டு இன்னைக்கும் மனதில் அப்படியே நிற்கக் காரணம், அந்தப் பாட்டை ராஜா சார் ஜீவனுடன் கொடுத்திருந்ததுதான். அவர் எப்போதும் லைவாகத்தான் இசையைத் தருவார். அதனால்தான் அவர் பாடல்கள் அப்படியே இருக்கும். ராத்திரி 8 மணிக்கு மேல போனா எங்கும் ராஜா சார் பாடல்கள்தான். அப்படியே காரில் கேட்டுக் கொண்டு சுகமாக பயணிக்கலாம்.

கானா, குத்துப்பாடல்கள் சீக்கிரம் ஹிட்டாகும். ஆனால் அதே வேகத்தில் அழிந்துவிடும்.

ஒரு ‘ஓ போடு’ ஹிட்டாச்சு. அப்புறம், ‘அப்படி போடு…’ வந்துச்சு. பிறகு மன்மதராசான்னாங்க, போட்டு தாக்குன்னு பாடினாங்க. இப்ப ஜில்லாவிட்டு ஜில்லா வந்து பாட்ட கேட்கிறாங்க. ஆனால் இவை எதுவும் நிரந்தரமில்லை. மெலடி பாடல்களோ காலத்தால் அழிவதில்லை.

நெஞ்சம் மறப்பதில்லை பாட்டை இன்றைக்கும் கேட்கிறோம். போவோமா ஊர்கோலம் என்றைக்கும் கேட்கிறோம்.

இளையராஜா வழியில்….

பி.வாசு இயக்கிய, ஆர்.கே. நாயகனாக நடித்துள்ள ‘புலிவேஷம்’ படத்தில் ‘வாரேன் வாரேன் கூடவாரேன் ஏழு ஜென்மத்திலும் என் உசிரை தர்றேன்….’ என்ற மெலடி பாட்டை போட்டு இருக்கிறேன். இந்த பாட்டைக் கேட்டு, என் படங்களில் இளையராஜாவுக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாதான் ‘மெலடி’ பாட்டை நல்லா தந்திருக்கார் என்று வாசு சார் பாராட்டினார்.

இந்த பாராட்டை 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதற்கு சமமா நான் மதிக்கிறேன்.

வாசு சாரோடு பணியாற்ற ஆரம்பித்துபோது நான் கொஞ்சம் பயந்தேன். காரணம் என் தந்தை தேவா அந்த அளவு சொல்லி வைத்திருந்தார்.

ஆனால் அவரும் நானும் கொஞ்ச நேரத்திலேயே நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். நல்ல குரல் வளம் அவருக்கு. நான் இசைக்க, அவர் பாட, ஒரே கலகலப்புதான்.

வாரேன் வாரேன்… ட்யூனை போட்டபோது பி வாசு பக்கத்தில் இருந்தார். அவருக்கு இசையிலும் ஞானம் அதிகம் என்பதால், என்ன மாதிரி பாட்டு வேண்டும் என்று அழகாக கேட்டு வாங்கி விட்டார். மொத்தம் 5 பாடல்கள். அத்தனையும் அருமையாக வந்துள்ளன. பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆர்கேவின் ஆர்வம்…

இங்கே ஹீரோ ஆர்கே சாரைப் பற்றி சொல்லியாக வேண்டும். இசையில் அவருக்கும் ஆர்வம் அதிகம். அதனால்தான், என்ன செலவானாலும் பரவாயில்லை, இசை லைவாக இருக்க வேண்டும் என்றார்.

அதனால் 35 வயலின் கலைஞர்களை வைத்து பின்னணி இசை சேர்த்தோம். ரொம்ப நாளைக்குப் பிறகு நானே நிறைவாக உணர்ந்தது புலிவேஷம் பட பின்னணி இசை சேர்ப்பின்போதுதான். இதற்கான முழு பெருமையும் ஆர்கேவைச் சேரும். அவர் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் சாத்தியமில்லை,” என்றார்.

 

ஒரு மாதம் பொறுங்க, நானே வந்து பார்க்கிறேன்! - விவிஐபிகளுக்கு ரஜினி பதில்


சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பி இன்றோடு 1 மாதம் ஆகிறது. இதுவரை வீட்டிலிருந்து வெளியே வரவில்லை அவர்.

இந்த ஒரு மாத காலத்தில் அவரைப் பார்க்க நெருங்கிய உறவினர்கள் கூட போயஸ் கார்டன் வரவில்லை. அவர்கள் வர ஆரம்பித்தால் தொடர்ந்து பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் வரத் தொடங்கிவிடுவார்கள். இது ரஜினி உடலிநிலையில் மீண்டும் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணமாம்.

அதற்கேற்ப, ரஜினியைப் பார்க்க ஏராளமான விவிஐபிக்கள் ஆர்வம் காட்டி, தினமும் அவருக்கு போன் செய்து வருகிறார்களாம். டெல்லித் தலைவர்கள், சென்னை பிரமுகர்கள் நேரில் வந்து பார்க்கலாமா என்று அன்புடன் கேட்க, ரஜினியோ என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம்.

ஒருவருக்கு ஓகே சொல்லி, அடுத்தவரை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத ரஜினி, அனைவருக்குமே சொல்லும் பதில், “ஒரு மாதம் பொறுங்க, நானே அனைவரையும் வந்து சந்திக்கிறேன்,” என்பதுதான்.

பேசும் வாய்ப்பாவது கிடைத்ததே என்ற திருப்தியில், பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்களாம் ரஜினி அன்பர்கள்!

 

தமிழ் குழந்தையை தத்தெடுக்க ஹன்சிகா ஆர்வம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் குழந்தையை தத்தெடுக்க ஹன்சிகா ஆர்வம்

8/13/2011 12:20:54 PM

தமிழ்க்குழந்தையை தத்தெடுக்க இருப்பதாக ஹன்சிகா மோத்வானி தெரிவித்தார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது என் அம்மாவின் வழக்கம். இப்போது 20-வது வயதில் 20-வது குழந்தையை தத்தெடுத்திருக்கிறார்.  இந்தக் குழந்தைகள் அவரவர் வீட்டில் வளர்வார்கள். அது தன் சொந்தக் காலில் நிற்கும்வரை அவர்களுக்கான செலவு எங்களுடையது. இதுவரை மும்பை குழந்தைகளை தத்தெடுத்தோம். அடுத்து தமிழ்நாட்டுக் குழந்தை. டிரஸ்ட் தொடங்கி நிறைய குழந்தைகளை பராமரிக்கும் எண்ணம் இருக்கிறது. நான் நடித்துள்ள 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களில் வித்தியாசமான ஹன்சிகாவை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

நாக சைதன்யா ஜோடியானார் அமலா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நாக சைதன்யா ஜோடியானார் அமலா!

8/13/2011 12:19:49 PM

தெலுங்கு படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடிக்கிறார் அமலா பால். ராம்கோபால் வர்மா தெலுங்கில் தயாரிக்கும் படம், 'பேஜாவாடா ரவுடிலு'. இதை விவேக் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா ஹீரோ. அவர் ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் 'சிக்குபுக்கு' பிரீத்திகா ராவ், இன்னொருவராக அமலா பால் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கில் அடுத்த வாரம் கலந்துகொள்ளும் அமலா, தமிழில் ஆர்யா ஜோடியாக 'வேட்டை', அதர்வா ஜோடியாக 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', தனுஷ் ஜோடியாக '3' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

கெட்டவன் அஜீத் : வெங்கட் பிரபு தகவல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கெட்டவன் அஜீத் : வெங்கட் பிரபு தகவல்!

8/13/2011 12:18:49 PM

'மங்காத்தா' படத்தில் அஜீத் கெட்டவனாக நடிக்கிறார் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார். அஜீத்தின் 50-வது படமான இதில் அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, லட்சுமிராய், ஆண்ட்ரியா, பிரேம்ஜி நடிக்கின்றனர். படம் பற்றி நிருபர்களிடம் வெங்கட்பிரபு கூறியதாவது: இளம் நடிகர்களை வைத்து 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா' படங்களை இயக்கினேன். முன்னணி ஹீரோ படம் இயக்குவது எப்போது என்று நண்பர்கள் கேட்டனர். அதற்கான விடைதான் 'மங்காத்தா'. அஜீத்திடம் கதை சொன்னேன். ஐந்து பேர் கெட்டவர்கள். ஒருவன் மட்டும் ரொம்ப கெட்டவன் என்றேன். அந்த ரொம்ப கெட்டவன் நீங்கள்தான் என்றேன். நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவர் இரு வேடங்களில் நடிக்கவில்லை. நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கெட்டவன் ஒளிந்திருக்கிறான். வெளியே நல்லவன் மாதிரி வேடம் போடுகிறார்கள். அவர்கள் யார்? ஒருவரை மற்றவர் ஏமாற்றும்போது நடக்கும் பிரச்னைகளை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கியுள்ளேன். இப்படத்தின் இன்னொரு ஹீரோ, யுவன்சங்கர் ராஜா. இவ்வாறு அவர் பேசினார். படம் பற்றி கங்கை அமரன், யுவன்சங்கர் ராஜா, வைபவ், ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகாஷ், வாசுகி பாஸ்கர், பிரேம்ஜி உட்பட பலர் பேசினர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.




 

நாயகி தேடுகிறார் லாரன்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நாயகி தேடுகிறார் லாரன்ஸ்!

8/13/2011 12:15:26 PM

'காஞ்சனா' படத்தை தொடர்ந்து தெலுங்கு படம் இயக்குகிறார் லாரன்ஸ். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கு 'ரிபெல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார். தற்போது அதில் மாற்றம் செய்ய முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே 'காஞ்சனா' படத்திலும் முதலில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் நடிக்கவில்லை. லட்சுமிராய் ஹீரோயினாக நடித்தார். 'ரிபெல்' படத்திலும் கால்ஷீட் பிரச்னையால் அனுஷ்கா நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்காக காத்திருந்தால் ஷூட்டிங் தொடங்க தாமதமாகும் என்பதால் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ள லாரன்ஸ், ஹீரோயினாக யாரை நடிக்க வைப்பது என்று தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.

 

தொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்... மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்!


சென்னை: இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்ற உப தலைப்போடு திரைக்கு வந்துள்ள அமிதாப் பச்சனின் ஆராக்ஷன் திரைப்படத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுவரை அரசியல் கட்சிகள் மட்டுமே இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது ஒடுக்கப்பட்ட இன மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் இந்தப் படம் ஆளாகியுள்ளது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ளார் அமிதாப் பச்சன்.

மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை கேவலமாக கிண்டலடிக்கும் காட்சிகளும், வசனங்களும் ஆராக்ஷன் படத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்கவேண்டும் என்று கண்டித்து உபி, பஞ்சாப் மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநில அரசுகள் இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்த 3 மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங் களிலும் ஆராக்ஷன் படம் வெளியிடப்பட்டது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஈகா, பி.வி.ஆர். மெலோடி, மாயாஜால், ஏ.ஜி.எஸ், பேம் நேஷனல் ஆகிய தியேட்டர்களில் ஆராக்ஷன் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை தடை செய்யக்கோரி சத்யம் தியேட்டர் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஏழுமலை, ஜமுனா கேசவன், செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'தடை செய், தடை செய் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆராக்ஷன் படத்தை தடை செய்' என்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடையாது என்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இந்தப் படத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த பொதுநல அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களைத் திரட்டி ஆராக்ஷன் வெளியாகியுள்ள திரையரங்குள் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. மேலும் அமிதாப்பச்சனைக் கண்டித்தும் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர்.

பொதுவாக அமிதாப் மீது அனைத்துப் பிரிவினருக்குமே அபிமானம் உண்டு. ஆனால் இந்த ஆராக்ஷன் படம் காரணமாக பிற்படுத்தப்பட்ட மக்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார் அவர் என்று திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்தப் படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அமிதாப் மற்றும் இந்தப் படத்தின் பேனர்களைக் கொளுத்தி வருகின்றனர் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்.
 

தேர்தல் முடிவு பற்றி கருத்து சொன்னதற்காக குஷ்பு மீது அதிமுக வக்கீல் வழக்கு!


சேலம்: சட்டசபைத் தேர்தல் முடிவு பற்றி கருத்து சொன்ன நடிகை குஷ்பு மீது அதிமுக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த நடிகை குஷ்பு, இது தி.மு.கவிற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறி இருந்தார். இது தொடர்பாக குஷ்பு மீது வழக்கு தொடர சேலம் அ.தி.மு.க. வக்கீல் வி.அறிவழகன் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள மனுவில், "சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கருத்து கூறுவது மனிதனுக்கு சுதந்திரம் ஆனால் அந்த சுதந்திரத்தை பயன் படுத்தி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம் கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது போல் உள்ளது.

நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது கோர்ட்டில் வழக்கு தொடரவும் உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே தனது துணிச்சலான கருத்துக்களுக்காக பல வழக்குகளைச் சந்தித்தவர் குஷ்பு. இந்த நிலையில் இந்த புதிய வழக்கு குறித்து அவரிடம் கேட்டபோது, நான் மக்களை திட்டவில்லை. தவறாக எதுவும் கூறவில்லை. அவர்களின் முடிவு குறித்த எனது கருத்து இது. இதில் மக்களை அவமானப்படுத்துவது எங்கே வந்தது. மற்றபடி வழக்கு குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை," என்றார்.
 

விரைவில் திருமணம்... - மம்தா அறிவிப்பு


விரைவில் திருமண வாழ்க்கையில் செட்டிலாகிறார் நடிகை மம்தா மோகன்தாஸ்.

சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானவர் மம்தா. சொந்த ஊர் கேரளா.

ரஜினியுடன் குசேலன், மாதவனுடன் குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் நடிப்பு, பின்னணி பாடுவது என படுபிஸியாக உள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் சென்னை வந்திருந்த அவர் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "தடையற தாக்க படத்தில் எனக்கு முக்கியமான வேடம். கதையும் பிடித்தது. எனவே நடிக்க சம்மதித்தேன். மலையாளத்தில் நடித்த 'நயிகர' படம் ரிலீசுக்கு தயாராகிறது. அதில் ஒரு பாடலும் பாடி உள்ளேன்.

சமீபத்தில் கொச்சில் நடந்த பேஷன் ஷோவுக்கு என்னை தூதுவராக நியமித்தனர். ஒரே வாரத்தில் பேஷனில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஆனாலும் அந்த ஷோ பேஷன் பிரியர்களுக்கு நல்ல வழியை காட்டியது.

எனக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். பொருத்தமான வரன் அமைந்தால் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். கடந்த இரு வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இயக்குனர் மகிழ் திருமேனி 'தடையற தாக்க' படத்துக்காக மீண்டும் அழைத்து வந்துள்ளார். இந்தப் படம் தமிழில் எனக்கு முதல் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.
 

'மாமியார்' மீனா... ஆவாரா ரஜினிக்கு அம்மா!


ஒரு காலத்தில் பல லட்சம் ரசிகர்களின் தூக்கம் கெடுத்த கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இப்போது திருமணமாகி, குழந்தை பெற்றுவிட்ட அவர், மீண்டும் நடிக்க வருகிறார்... மாமியார் வேடத்தில்!

நடிகை மீனா 1982-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2009 வரை படங்களில் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக சேர்ந்தார். அதன் பிறகு பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

கடந்த ஜனவரியில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டனர். திருமணத்துக்கு பின் மீனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டார். மீண்டும் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார்.

ஆனால் திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். தெலுங்கில் பிரபல நடிகர் ராம்சரண் படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை வி.வி.வினாயக் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கயுள்ளது. மீனா நடிப்பதற்கு அவர் கணவரும் சம்மதம் சொல்லி விட்டாராம்.

முன்பு ஒரு திரைப்பட விழாவில், "மீனா என் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஜோடியாக நடித்தார். யார் கண்டது, பின்னாளில் எனக்கு அம்மாவாகக் கூட அவர் நடிக்கலாம்," என்று ரஜினி கூறியிருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் அவர் சொன்னது நிஜமாகிவிடும் போலிருக்கிறதே!
 

லிப் டு லிப் காட்சியில் நடிச்சா வீட்ல சேர்க்க மாட்டாங்க! - அஜ்மல்


பொதுவாக காதல் காட்சிகளில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரும் காட்சி வைத்தால் அதில் நடிக்க ஹீரோயின்கள்தான் தயங்குவார்கள்.

ஆனால் முதல்முறையாகத ஒரு ஹீரோ வேண்டாம் என்று மறுத்த, பிடிவாதமாக அந்தக் காட்சியை மாற்றச் சொல்லியுள்ளார்.

அவர் அஜ்மல். படம் கருப்பம்பட்டி.

இந்தப் படத்தில் அஜ்மல் ஜோடியாக அபர்ணா பாஜ்பாய் நடிக்கிறார். பிரபுராஜ சோழன் இயக்குகிறார்.

பழனியின் இறுதிக் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட போது, ஒரு கட்டத்தில், அஜ்மல் தன் காதலை அபர்ணாவிடம் சொல்கிறார். அந்தக் காதலை அபர்ணா ஏற்க, அப்படியே கட்டிப் பிடித்து உதட்டோடு உதடு பதித்து முத்தமிடுவது போல் நடிக்க வேண்டும்.

இந்தக் காட்சிக்கு நாயகி ஒப்புக் கொண்டார். ஆனால் நாயகன் அஜ்மல் மறுத்துவிட்டாராம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நடிக்க மறுத்துவிட்டாராம் அஜ்மல். பின்னர் உதட்டுக்கு பதில் கன்னத்தில் முத்தமிடுவதாக மாற்றி எடுத்திருக்கிறார்கள். இதனால் 2 மணிநேரம் ஷூட்டிங் வேறு பாதிக்கப்பட்டுள்ளது.

உதட்டோடு உதடு முத்தக் காட்சியில் நடிக்க மறுத்தது குறித்து அஜ்மல் கூறுகையில், "நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. சில நிபந்தனைகளோடுதான் நடிக்க வந்தன். அதன்படி "நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்க மாட்டேன், விரசமான காட்சிகளில் நடிக்க மாட்டேன், இரட்டை அர்த்த வசனம் பேச மாட்டேன்," என்றெல்லாம் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளேன்.

அதில் இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்,'' என்றார் அப்பாவியாக!
 

மம்மூட்டி, மோகன்லால் ரூ.30கோடிக்கு வரி ஏய்ப்பு!


திருவனந்தபுரம்: நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30கோடி கணக்கில் காட்டப்படாத சொத்துகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு சொந்தமாக சென்னை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2 வாரத்துக்கு முன் ஓரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இருவரின் தொழில் பங்குதாரர்கள் சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த சோதனையில் மம்மூட்டியும், மோகன்லாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. ஆனால் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தனர்.

வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடந்தால் ஒரு சில நாட்களில் சோதனை குறித்த விபரங்கள் வெளியிடப்படும். ஆனால் மம்மூட்டி, மோகன்லால் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையின் விபரங்கள் 3 வாரங்களாக வெளியிடப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொச்சி வருமான வரித்துறை இயக்குனர் லூக்கோஸ் நேற்று வேளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இதுவரை நடந்த சோதனையில் மம்மூட்டி, மோகன்லால் அதிகமாக வைத்திருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவருக்கும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மோகன்லாலின் வீட்டில் கண்டிபிடிக்கப்பட்ட ஓவியங்கள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு கண்டறிய தனிகுழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பழங்கால பொருட்களின் மதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.