சன்னி படம் எடுக்கிறார்!

பலான பட நடிகையாக கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து, இந்தித் திரையுலகில் புகுந்து இந்தி நடிகையாக மாறி, கவர்ச்சியில் அதகளம் செய்து வரும் சன்னி லியோன் இப்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

இவரும், இவரது கணவருமாக இணைந்து படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் தயாரிப்பா அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாம்.

சன்னி படம் எடுக்கிறார்!

சன்னியும், அவரது கணவர் டேணியல் வெப்பரும் இதுகுறித்து கூறுகையில், ஏற்கனவே நாங்கள் லாஸ் ஏஞ்சலெஸில் ஒரு பட நிறுவனம் வைத்துள்ளோம். அதற்குப் பெயர் சன் லஸ்ட். இது முற்றிலும் வேறு நிறுவனமாக இருக்கும். வேறு பெயரில் இருக்கும். பாலிவுட் படங்களை மட்டும் இது தயாரிக்கும். அக்டோபரில் முதல் படம் வெளியாகும் என்றனர்.

இசையமைப்பாளரான டேணியல் வெப்பரும் தற்போது நடிகையாகி விட்டார். 2 நாயகிகளுடன் இணைந்து அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். சன்னி லியோன் அதில் கெஸ்ட் ரோலில் வருகிறாராம்.

4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் மும்பைக்கு இடம் பெயர்ந்து வந்தனர். அதன் பின்னர் லாஸ் ஏஞ்சலெஸுக்கும், மும்பைக்குமாக பறந்து பறந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் காப்பியடிக்கப்பட்ட கதையா? - இயக்குநர் விளக்கம்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் யார் கதையையும் காப்பியடித்து உருவாக்கப்பட்டதல்ல. இது என் சொந்த அனுபவம். அதை படமாகத் தந்திருக்கிறேன் என்றார் இயக்குநர் மருது பாண்டியன்.

பாபி சிம்ஹா நடிப்பில் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் லிங்கா, பிரபஞ்ஜெயன் ஆகியோரும் கதாநாயகர்களாக வருகிறார்கள். சரண்யா சுந்தர்ராஜ், பனிமலர், நிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் காப்பியடிக்கப்பட்ட கதையா? - இயக்குநர் விளக்கம்

இந்தப் படத்தின் விளம்பரங்கள் வெளியானதும், படத்தின் கதை என்னுடையது என்று நெல்லையைச் சேர்ந்த அருண் பாரதி என்பவர் நம்மிடம் தெரிவித்திருந்தார். தனது ப்ளாக்கில் இதே தலைப்பில் எழுதிய கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என தனது மின்னஞ்சலிலும் தெரிவித்திருந்தார்.

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் காப்பியடிக்கப்பட்ட கதையா? - இயக்குநர் விளக்கம்

இதுகுறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான மருதுபாண்டியனிடம் கேட்டபோது, "இந்தக் கதை யாருடைய கதையைப் பார்த்தும் காப்பியடிக்கப்பட்டதல்ல. எனது சொந்த அனுபவம். சென்னைக்குள் நுழையும்போது, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற போர்டு தெரியுமே.. அதுதான் இந்தத் தலைப்பு. மற்றபடி கதை குறித்து யார் என்னை அணுகினாலும், சட்ட ரீதியாக அதைச் சந்திக்கவும் தயார்தான்," என்றார்.

 

திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும்! - கேயார்

படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடை கேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கேயார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். வெளியிட்ட அறிக்கை வருமாறு':

தமிழ்த் திரையுலகம் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 'லிங்கா' படத்திற்கான பிரச்னை தற்போதுதான் முடிந்திருக்கும் நிலையில், 'கொம்பன்' படத்திற்கு சில அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது, திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,

திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும்! - கேயார்

பல கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை தணிக்கை செய்துவிட்டு, வியாபாரம் பேசி, விளம்பரம் செய்து, நல்ல தியேட்டர்களை தேடிப்பிடித்து ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டிய நேரத்தில் கோர்ட்டுகளுக்கு அலைந்து கொண்டிருந்தால் எப்படி படத்தை வெளியிட முடியும்? மற்ற தொழில்களுக்கும் சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

திடீரென்று ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட முடியாது, குறைந்தது ஒருமாதமாவது திட்டமிட்டு உழைத்தால் தான் அறிவித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில், சம்மந்தமே இல்லாதவர்கள் எங்கிருந்தோ வந்து ஒரு படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தடை கேட்பது எந்த வகையில் நியாயம்?

கோர்ட்டு வழக்குகள், புகார்கள் என்று செய்திகள் வந்துவிட்டாலே அந்தப்படம் வெளிவருமா வராதா என்ற பயத்தில் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பின்வாங்கி விடுகிறார்கள். வீட்டை விற்று, கந்து வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுப்பவர்களுக்கு எல்லா வகைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டு, வழக்குப் போட்டவர்கள் தப்பித்து போய்விடுகிறார்கள்.

சினிமா என்கிற விளம்பர வெளிச்சத்தில் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதற்கு ஆசைப்பட்டு, ஒரு தொழிலையே அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்? வழக்குப் போடுபவர்களுக்கும், பிரச்னையை உருவாக்குபவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால்தான் எந்தப் படத்திற்கும் யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியிருக்கிறது.

மத்திய அரசின் தணிக்கை குழு சான்றளித்த படங்களுக்கு எதிராக மற்ற அமைப்புகளும், தனிநபர்களும் சென்சார்போர்டு நடத்த ஆசைப்படுவதற்கு அரசாங்கம் சட்டரீதியாக முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்தியாவில் இந்திப்பட உலகிற்கு அடுத்து தமிழ்த்திரையுலகம் தான் முன்னிலையில் உள்ளது. புதுமையாக படைப்பாளிகளும், திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களும் இங்குதான் அதிகம். ஆனால், இந்தியாவிலேயே அடிக்கடி வழக்குப் போட்டு திரைப்படங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் கலாச்சாரமும் இங்குதான் வேகமாகப் பரவி வருகிறது.

ஜாதி, மதம், என் கதை, என் தலைப்பு என்ற பெயரில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வழக்குகள் எதிர்காலத்தில் எல்லா இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதை தெளிவாகப் புரியவைக்கின்றன.

ஜனநாயக நாட்டில் வழக்குப் போடும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது, ஆனால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. மணிசூட் (MONEY SUIT) என்கிற பணம் தொடர்பான வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட தொகையை கோர்டில் டெபாசிட் செய்துவிட்டுத் தான் வழக்குத் தொடர முடியும்.

அதுபோல ஒரு திரைப்படத்திற்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமானால், அந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டில் குறைந்தது 10 சதவீதத்தையாவது கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் எந்தச் செலவும் இல்லாமல் விளம்பரம் தேடிக்கொள்பவர்களும், படைப்புச் சுதந்திரத்தை ஒடுக்க நினைப்பவர்களும் யோசித்து செயல்படுவார்கள்.

எனவே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஆகியோர், இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடைகேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும்.

நீதிமன்றங்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், தயாரிப்பாளர்கள் அச்சமின்றி தொழில் செய்யவும் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டிய கட்டாய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன் அவர்கள் குறிப்பிட்டவாறு அந்தப்படத்தில் ஏதேனும் பிரச்னைகள் இல்லை என்கிற நிலையில் வழக்குப் போட்டவர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிப்பதற்கு ஏற்றவகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் திரையுலகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

"சம்முகம்" பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து... சகாப்தம் படத்தை விட அதிக கூட்டம்!

சென்னை: ஒரு நடிகராக தனது முதல் பிறந்த நாளை சண்முகப் பாண்டியன் இன்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

அவரது சகாப்தம் படத்திற்கு வந்ததை விட அதிக ரசிகர்கள் திரண்டு வந்து சண்முகப் பாண்டியனை வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்த்தின் இளைய மகன்தான் சண்முகப் பாண்டியன். இவருக்கு நடிப்பு ஆர்வம் சின்ன வயதிலேயே முளை விட்டு விட்டது. இருந்தாலும் அதற்கான வயசு வர வேண்டும் என்று காக்க வைத்து இப்போது நடிகராக்க உள்ளார் விஜயகாந்த். சகாப்தம் படம் மூலம் தமிழ்த் திரையுலகின் நடிகராக மாறி விட்டார் சண்முகப் பாண்டியன்.

நல்ல உயரமாக காணப்படும் சண்முகப் பாண்டியன், தனது தந்தை ஸ்டைலில் புருவம் அசைத்து, விழிகளில் கோபத்தை கொப்பளித்து ஆவேசமாக சண்டை போடுகிறார். காமெடி செய்கிறார், நடிக்கிறார்.

சகாப்தம் படம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாவிட்டாலும் கூட முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததே பெரிய வெற்றிதான். அடுத்தடுத்த படங்களில் பட்டை தீட்டபட்டு அவர் வைரமாக மாறுவார் என்று நம்பலாம்.

சரி மேட்டருக்கு வருவோம்.. சண்முகத்திற்கு இன்று பிறந்த நாள். நடிகராக இது அவருக்கு முதல் பிறந்த நாள் என்பதால் சண்முகப் பாண்டியன் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.

தனது வீட்டில் இன்று காலை எழுந்ததும், குளித்து, புத்தாடை அணிந்து கேக் வெட்டினார். பின்னர் தனது தந்தை விஜயகாந்த், தாயார் பிரேமலதா ஆகியோரிடம் கேக் கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

அதன் பிறகு வீட்டுக்கு வெளியே வந்தார். அங்கு தெருவோரமாக திரண்டு நின்றிருந்த தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். காஞ்சிபுரம் மா்வட்ட சகாப்தம் தலைமை ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் அனகை விஜயராஜ் தலைமையில் ரசிகர்கள் திரண்டு வந்து சண்முகத்தை வாழ்த்தினர்.

தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனின் மகன்தான் இந்த விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உத்தம வில்லனுக்கு தடை விதிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனிடம் மனு!

இந்து மதக் கடவுள்களை விமர்சித்துள்ளதாகக் கூறப்படுவதால் கமல் ஹாஸன் நடித்த ‘உத்தமவில்லன்' படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு தரப்பட்டுள்ளது.

கமல் நடித்துள்ள உத்தம வில்லன் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் இந்துக் கடவுள்களுக்கு எதிரான விமர்சனம் உள்ளதாக திடீரென கிளம்பியுள்ளது விஸ்வ இந்து பரிஷத்.

உத்தம வில்லனுக்கு தடை விதிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனிடம் மனு!

இதுகுறித்து அந்த அமைப்பின் சென்னை மாநகர பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனு:

‘உத்தம வில்லன்' படத்தில் கடவுளின் பெருமாள் அவதாரங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. பக்த பிரகலாதன் மற்றும் தந்தை இரணியன் இடையிலான உரையாடலை வில்லுப்பாட்டாக உதிரத்தின் கதை எனத் தொடங்கும் பாடலில் சேர்த்துள்ளனர்.

இதில் பெருமாள் அவதாரத்தை கொச்சைப்படுத்துவதுபோல் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்து மதத்தை எதிர்க்கும் நாத்திகனாக தன்னை காட்டிக் கொள்ளும் கமல் இந்து கடவுளை விமர்சித்து இருப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

என்னை நாய் என்று இழிவாகப் பேசினார் ராதாரவி! - விஷால் வேதனை

திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் இன்னும் வேறு வேறு இன்ப துன்பங்களும் வந்து கொண்டேயிருக்கும். அதிலும் முறையாக நடந்து கொண்டால், இன்பமன்றி துன்பமில்லை.

இதையெல்லாம் நன்றாக உணர்ந்து வைத்திருப்பதால், சட்டென்று தனது ரசிகர்களை ஒன்றிணைத்து ‘அகில இந்திய புரட்சிதளபதி என்னை நாய் என்று இழிவாகப் பேசினார் ராதாரவி! - விஷால் வேதனை  

இது பற்றி விஷால் கூறும் போது, "நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் பாடங்கள் கிடைத்தன திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த அளவுக்கு வருவதற்கு, ஆதரவு கொடுத்த ரசிகர்களும் காரணம். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் இடைவெளி வந்த மாதிரி உணர்ந்தேன்.

உண்மையைச் சொன்னால் வெட்கத்தை விட்டுச் சொன்னால் என் மாவட்ட நிர்வாகிகள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை. இந்த இடைவெளி தவிர என் தரப்பிலும் மன்ற செயல்பாடுகளிலும் பல குறைகள் தென்பட்டன. அது மட்டுமல்ல என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைத்த ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு மாவட்ட நிர்வாகி. என்னைச் சந்திக்க முயன்றிருக்கிறார். தகவல் தொடர்பில் பிரச்சினை முடியவில்லை. சந்திக்க முடியாமலேயே போயிருக்கிறார். பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, உதவி கேட்டு வந்திருக்கிறார். மறுபடியும் சந்தித்த போது சொன்னார் அம்மா போய்ட்டாங்க.. அம்மா போனதுதான் மிச்சம். ஆனாலும் நான் உங்களுக்காக வந்திருக்கிறேன். என்றார் இது நடந்தது 2009ல். அது என்னை காயப்படுத்தி பாதித்து விட்டது. மிகவும் வருத்தப்பட்டேன். எதனால் இப்படி ஆனது? தகவல் தொடர்பு இடைவெளி. நம் அணுகுமுறையில் எங்கோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளைக் கூட எனக்குச் சரியாக அடையாளம் தெரியவில்லையே என வருந்தினேன்.

என்னை நாய் என்று இழிவாகப் பேசினார் ராதாரவி! - விஷால் வேதனை

அதன்பிறகு யோசித்தேன். நாம் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். நிர்வாகிகளை மாற்றினேன். தலைவராக புதியவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளேன். என் ரசிகர் மன்றம் இனி ‘அகில இந்திய புரட்சித் தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' என்று மாற்றப்படுகிறது. வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள்.. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் கூட பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம். நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது.. இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும். இப்படி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு, தேவை உள்ளவர்களுக்கு நாம் செய்கிற உதவி போக வேண்டும். இதில் தகவல் தொடர்பு சிக்கல் வரக்கூடாது.

என்னை நாய் என்று இழிவாகப் பேசினார் ராதாரவி! - விஷால் வேதனை

அதனால் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகள். தங்கள் பகுதியில் இப்படி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருவார்கள். தகுதியறிந்து உதவ நான் தயார். இது நாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்துவந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம். முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன். இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. கேரளா, பெங்களூரிலும் இம்மன்றங்கள் செயல்படும். மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ஒதுக்குவேன்.

‘பாயும் புலி' எந்த நிலையில் இருக்கிறது?

முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்து. இன்றுமுதல் இரண்டாம் கட்டம் தொடங்கி விட்டது. ‘பாயும் புலி' ரஜினி சார் தலைப்பு, ஏவிஎம்மில் தடையில்லா சான்று பெற்று அனுமதி வாங்கிவிட்டுத்தான் எடுக்கிறோம். ‘பாயும்புலி' தலைப்புக்கு ஒரு பலம் இருக்கிறது. அதற்காகவே வாங்கினோம். காஜல் அகர்வாலுடன் எனக்கு முதல் படம். இயக்குநர் சுசீந்திரனுக்கு 2 வது படம். மதுரை பின்னணிக் கதை. இதுவும் ஒரு போலீஸ் கதைதான். ஆனால் வழக்கமான ஒன்றாக இருக்காது. எப்போதும் சுசீந்திரன் நடுத்தர வர்க்கம் பற்றி பேசுபவர் சிந்திப்பவர். அது எனக்குப் பிடிக்கும். இந்தப் படமும் நடுத்தர வர்க்கம் பற்றிய கதைதான். இசை இமான். மதுரை பின்னணியில் ‘பாண்டியநாடு' படம் பார்த்து இருக்கிறார்கள். இதையும் பார்க்கப் போகிறீர்கள். நிஜ சம்பவங்களும் நிஜ முகங்களும் பார்க்கலாம். ஒரு நிஜ ரவுடியும் நடிக்கிறார். செப்டம்பர் 17ல் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும்.

நடிகர் சங்கப் பிரச்சினையில் உங்கள் நிலை என்ன?

நடிகர் சங்கத் தலைவர்களில் சரத்குமார் ராதாரவி, அவர்கள் இருவர் மீது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவர் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். நடிகர் சங்க இடம் 19 கிரவுண்ட்.. ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பலரது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி சங்கம் வளர்ந்து கட்டடம் உருவானது. அந்த இடம் இன்று மயானம் போல காட்சி தருகிறது. அதைக் கட்டச் சொல்வது என் தனிப்பட்ட நலன் கருதியல்ல, சுமார் 2500 சிரமப்படும் நடிகர்களுக்காத்தான். அவர்களின் குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஏதாவது வழி பிறக்காதா என்கிற எண்ணத்தில்தான். எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை. சங்கத்தின் பொறுப்பிலுள்ளவர்கள், பலபேர் மத்தியில் என்னை நாய் என்கிறார்கள் ராதாரவி இழிவாகப்பேசினார். என்னைக் கடனை அடைக்கச் சொன்னார்.. நடிப்பைக் கற்றுக் கொள்ளச் சொன்னார். ஒவ்வொன்றாக நான் முடிப்பதற்குள் அவர்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள். 2500 குடும்ப மகிழ்ச்சிக்காகத்தான் இதைப் பேசுகிறேன்.

ஊழல் இல்லை என்கிறார்கள். ஏன், அவர்கள் சொன்ன தேதியில்கூட கட்டடம் கட்டவில்லை. இந்த முறையாவது தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடக்கட்டும். நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன். என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக ஆதரிக்கிறார்கள்."

 

ஆதரவற்றோருக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!

சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவதுதான். அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்யப் போகிறது 'ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ' என்கிற சென்னை வாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் அமைப்பு.

சென்னையின் சுமார் 60 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மாதம் தோறும் உணவுக்குத் தேவையான பொருட்களை தங்களது 'புட்பேங்க்' எனப்படும் உணவு வங்கி மூலம் வழங்குவகு இந்த அமைப்புதான்.

ஆதரவற்றோருக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!

ஒரு முறை ஆயிரம் குழந்தைகளை சிறப்பு ரயில் வாடகைக்குப் பிடித்து திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யவைத்து அனைத்து செலவையும் ஏற்றது நினைவிருக்கலாம்.

இன்னொரு முறை 10,000 பேரை கிஷ்கிந்தா அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க அனைத்து விளையாட்டுகளிலும் விளையாட வைத்து களிப்பு மழையில் நனைய வைத்துள்ளனர்.

மற்றொருமுறை 2500பேரை சென்னையில் சர்க்கஸ் பார்க்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இவ்வாண்டு இப்படி என்ன செய்யப்போகிறார்கள்?

சங்கத்தின் தலைவர் விஜய் கோத்தாரி கூறுகையில், "இவ்வாண்டு இப்படிப்பட்ட ஆதரவற்ற இயலாத குழந்தைகள் 1008 பேரை அழைத்து வந்து அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். இது நிதிவசூல் நிகழ்ச்சியல்ல. கட்டணம் எதுவும் இல்லை. அவர்களை மகிழ்ச்சியூட்ட மட்டுமே இது நடத்தப்படுகிறது.

இதில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பிரதானமாக கலந்துகொண்டு பாடி குழந்தைகளுக்கு நேரடி இசைநிகழ்ச்சி அனுபவத்தை தர இருக்கிறார். இசைக்குழு ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் குழுவினர். இசை நிகழ்ச்சியில் கலக்கவுள்ளனர்," என்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர்களும். திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கிறார்களாம்.

 

கனியும் சசியும் என்னைப் பார்த்து வயிறு எரிவார்கள்- நமோ நாராயணனுடன் ஒரு சந்திப்பு

'நாடோடிகள்' படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர் வைத்திடும் விளம்பரப் பிரியர் பாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்தவர் நடிகர் நமோ நாராயணன். அண்மையில் வந்துள்ள 'கொம்பன்' படம் வரை சுமார் 20 படங்கள் நடித்து இருக்கிறார்.

அவரது முகத்தில் தெரிவது வில்லத்தனமா, குறும்பா, அப்பாவித்தனமா, பாசமா என்று கணிக்கவே முடியாது அப்படி ஒரு முகவெட்டு அவருக்கு.

கனியும் சசியும் என்னைப் பார்த்து வயிறு எரிவார்கள்- நமோ நாராயணனுடன் ஒரு சந்திப்பு

அந்த நமோநாராயணனுடன் ஒரு சந்திப்பு!

'நாடோடிகள்' உங்கள் முதல்படம். அதற்கு முன் உங்களின் முன்கதை என்ன?

எனக்குச் சொந்தஊர் மதுரை. அப்பா அம்மா இருவருமே போஸ்ட் மாஸ்டர்ஸ். என்னுடன் பிறந்தவர்கள் 2 தம்பி 3 தங்கைகள் நான்தான் மூத்த பிள்ளை. சாப்ட்வேர் இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு பஹ்ரின், மலேசியா, சிங்கப்பூர் என பல வெளிநாடுகளில் வேலை பார்த்தேன். .. அதன் பிறகுதான் சென்னை வந்து வேலை பார்த்தேன்.

ஒரே ஊர்க்காரர்கள் என்றாலும் இங்கு வந்துதான் சமுத்திரக்கனி, சசிகுமார் எல்லாம் பழக்கம். இங்கு வந்துதான் நெருங்கி பழகி வாடா போடா நண்பர்களானோம். ஒன்றாக தங்கி இருந்தோம். இந்த நட்புக்கு இன்று வயது 25 ஆண்டுகள் என்றால் பாருங்களேன்.

'நாடோடிகள்' படம் எடுத்த போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பெரும்பாலும் வெளியூரில் இருப்பார். அவர் என் நண்பனின் நண்பர். அப்படித்தான் அறிமுகம்.

மும்பையில் பிஸினஸ் இருந்ததால் இங்கே இருக்கவே மாட்டார்.

இங்கு பொறுப்பாக படத் தயாரிப்பைக் கவனித்துக் கொள்ள ஒரு ஆள் தேவைப்பட்டது. என்னை எக்சிகியூட்டிவ் புரொடியூசராக்கி பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்படித்தான் எக்சிகியூட்டிவ் புரொடியூசர் அதாவது நிர்வாகத் தயாரிப்பாளர் ஆனேன்.

படப்பிடிப்பு இடங்களுக்கெல்லாம் நான் ஒயிட் அண்ட் ஒயிட்டில் சென்று மிடுக்காக வலம் வருவேன். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பேன். இதை சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் பார்த்து வயிறு எரிந்தார்கள். நாம மட்டும் சேறு சகதி வெயில் மழை என்று நாயாய் பேயாய் உழைக்கிறோம். நம்முடன் இருந்த இவன் மட்டும் மெலுக்காகத் திரிகிறானே என்று யோசித்து இருக்க வேண்டும். என் எதிரிலேயே அப்படிப் பேசினார்கள்.

'டேய் இதில் ஒரு ரோல் இருக்கு நீ நடிடா' என்றார் கனி. 'வேண்டாம். நமக்கு அது சரிப்பட்டு வராது' என்று மறுத்தேன் நான்.

'நாங்க இவ்வளவு கஷ்டப் படறோம். நீ ஜாலியாத் திரியுற.. நீ இந்தப் படத்துல நடிக்கிற சேறு சகதியெல்லாம் இறங்குறே. நாங்க பார்க்கிறோம்...' என்ற கனி என்னை வலுக்கட்டாயமாக நடிப்பில் இறக்கி விட்டார். அப்படித்தான் அதில் நடித்தேன்.

கனியும் சசியும் என்னைப் பார்த்து வயிறு எரிவார்கள்- நமோ நாராயணனுடன் ஒரு சந்திப்பு

முதல்பட நடிப்பு அனுபவம் எப்படி?

சினிமாக் காரர்களுடனேயே ரொம்ப காலம் இருந்ததால் சினிமா பற்றி எல்லா புரிதலும் ஒரளவுக்கு எனக்கு இருந்தது. எனவே கேமரா முன்பு நிற்கும் முதல் நாள் தான் நடிப்பு புதிதாக உதறல் இருந்தது. மறுநாள் முதல் அதுவும் பழகி விட்டது. எல்லாருமே தெரிந்த முகங்கள் எனவே எதுவும் பிரச்சினை இல்லை. அன்று முதல் இன்றுவரை நானாக எதுவும் செய்வதில்லை. இயக்குநரை செய்து காட்டச் சொல்வேன்: அப்படியே திரும்ப இமிடேட் செய்து நடிப்பேன். 'நாடோடிகளு' க்குப் பிறகு 'ஈசன்' 'நிமிர்ந்துநில்' படங்களில் நடித்தேன்.

சமுத்திரக் கனி, சசிகுமார் படக்குழுவினர் தவிர மற்றவர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையா?

அப்படி ஒன்றுமில்லை. என் ஆரம்பகாலப் படங்கள் அப்படி அமைந்தன அவ்வளவுதான். 'நாடோடிகளு' க்குப் பிறகு 'ஈசன்', 'நிமிர்ந்துநில்' படங்களில் நடித்தேன். 'குட்டிப்புலி' 'கொம்பன்' வரை பழகிய அதே படக் குழுவினர். கனி, சசி படங்களுக்குப் பிறகு 'யாமிருக்கப் பயமே' ,'கேடிபில்லா கில்லாடி ரங்கா' படங்கள் நடித்தேன். 'வாய்மை'யில் கவுண்டமணியுடன் ,'ரஜினிமுருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் 'நீயெல்லாம் நல்லா வருவடா' வில் விமலுடன் நடித்திருக்கிறேன். மாகாபாவுடன் 'நவரசத் திலகம்' படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை தமிழில் 18 படங்கள் முடித்து விட்டேன். மலையாளத்தில் மம்முட்டியுடன் 'தாப்பானா' வில் நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த போது பதற்றத்தில் 5 டேக் வாங்கினேன். அவர் பேசிப் பழகி சகஜமாக்கினார். பதற்றம் போக டிப்ஸ் எல்லாம் கொடுத்தார். அதை மறக்க முடியாது. பிறகு 'பையா பையா' நடித்தேன். இப்படி மலையாளத்தில் 2 படங்கள் நடித்திருக்கிறேன். சிறிய படங்கள் முதல் மெகா ஸ்டார் வரை அதற்குள் நடிக்க வாய்ப்பு வந்தது பெருமையாக இருக்கிறது.

குடும்பத்தில் நடிகர் நமோநாராயணனை எப்படி பார்க்கிறார்கள்?

நமோ நாராயணனை சினிமாவுக்காக வைத்ததா புதிதாக இருக்கிறதே என்கிறார்கள்.

இது என் தாத்தா பெயர். அதைத்தான் எனக்கு வைத்தார்கள்.

எனக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள். எல்லாரும் மதுரையில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நான் சினிமாவில் ஈடுபடுவது குடும்பத்தில் பிடிக்கவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இப்போது நான் நடிப்பதை ரசிக்கிறார்கள். சிரிக்கிறார்கள். கேலி பேசுகிறார்கள். எல்லாம் நடக்கிறது.

நிர்வாகத் தயாரிப்பு அனுபவம் நடிக்கும் போது உதவுகிறதா?

ஒரு காட்சி எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறதுஎன்று புரிகிறது. என்னென்ன தேவை என்பது எல்லாம் தெரிகிறது.படப்பிடிப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல் பற்றி அறிய முடிகிறது . இப்படி பல வகையில் உதவியாக இருக்கிறது

நடிகராக உங்கள் திட்டம்?

அப்படி எதுவுமில்லை. பாசிடிவோ நெகடிவோ நல்லவனோ கெட்டவனோ. பாத்திரம்தான் முக்கியம். எது கொடுத்தாலும் நடிப்பேன். இயக்குநர் சொன்னதை அப்படியே செய்யப் போகிறேன். சிறிது நேரம் வந்தாலும் ஜெயிக்கிற படத்தில் இருக்க வேண்டும். இதுதான் என் ஆசை. நம் முகத்தைக் கொஞ்சம் பார்ப்பதே பெரிய விஷயம். இதையே படம் முழுக்க வரவேண்டும் பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது பேராசை அல்லவா?

கனியும் சசியும் என்னைப் பார்த்து வயிறு எரிவார்கள்- நமோ நாராயணனுடன் ஒரு சந்திப்பு

'கொம்பன்' அனுபவம்.?

ஏற்கெனவே எனக்கு அறிமுகமானதுதான் 'கொம்பன்'படக்குழு.எனவே எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ராமநாதபுரம் பேச்சு வழக்கு எனக்கு பெரிய சிக்கல் இல்லை.

ராமநாத புரத்தில் சிறு வயது சேட்டை தாங்காமல் என் பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி 7வது 8வது வகுப்பு படிக்க வைத்தார்கள். அங்கே தங்கி படித்திருக்கிறேன் அதனால் ராமநாதபுரம் பேச்சு வழக்கு எனக்கு அப்போது அறிமுகமுண்டு.

கார்த்தி மிகவும் எளிமையானவர். சகஜமாகப் பழகக் கூடியவர். அதேமாதிரிஅண்ணன் ராஜ்கிரணும் பாசமுடன் பழகினார்.ஒரு குடும்பம் போல இருந்தோம். மறக்க முடியாத அனுபவம். கதையில் பகை கொண்ட குடும்பங்களாக நடித்திருந்தாலும் படப்பிடிப்பில் ஒன்றாகவே ஒரு குடும்பம் போல இருந்தோம்.

 

திமிரு இரண்டாம் பாகம்... தானே ஹீரோவாக நடிக்கிறார் தருண் கோபி

விஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் திமிரு. அந்தப் படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதற்கு பிறகு நடிகராக திசை மாறிய தருண்கோபி. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

திமிரு படத்தின் இரண்டாம் பாகத்துக்கு வெறி ( திமிரு 2 ) என்று தலைப்பிட்டவர், படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார். சத்தமில்லாமல் படத்தை முடித்துவிட்டார் தருண் கோபி.

திமிரு இரண்டாம் பாகம்... தானே ஹீரோவாக நடிக்கிறார் தருண் கோபி

படத்தை டப்பிங்கின்போது பார்த்தவர்கள், காட்சிகளின் வேகம் கண்டு ஆச்சரியப்பட்டார்களாம். 'டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்கிறது. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க' என்றார்களாம்.

படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கிறது படம்!

 

முடிந்தது மாஸ்... இந்த மாதம் இசை.. அடுத்த மாதம் படம்!

சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் ஷூட்டிங் படுவேகமாக நடந்து முடிந்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ப்ரணிதா, பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முடிந்தது மாஸ்... இந்த மாதம் இசை.. அடுத்த மாதம் படம்!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகள், அவரது டப்பிங் அனைத்தையும் படுவேகமாக முடித்த வெங்கட் பிரபு, சூர்யாவை அடுத்த படமான 24-ல் நடிக்க அனுப்பிவிட்டார்.

மாஸ் படத்தின் பாடல்கள் இம்மாதமும், படத்தை மே மாதமும் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

இது என்ன மாயம்... கொடுக்குமா விஜய்க்கு?

தலைவா, சைவம் என அடுத்தடுத்த சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் விஜய், இப்போது விக்ரம் பிரபுவுடன் கை கோர்த்து களமிறங்கியுள்ளார்.

படம் இது என்ன மாயம்.

இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசை.

சண்டமாருதம் படத்தைத் தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள்.

இது என்ன மாயம்... கொடுக்குமா விஜய்க்கு?

படம் பற்றி இயக்குனர் விஜயிடம் கேட்டோம்..

"இது காதல் சம்மந்தப்பட்ட படம்தான்.. காதல்ங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அது யாருக்கு வருகிறது, அவர்களுக்கு அது எந்த கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதைத்தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும். இதில் இரண்டு கால கட்டங்கள்! ஒன்று ஜாலியாகத் திரிந்த கல்லூரி வாழ்க்கை...

இன்னொன்று கல்லூரி காம்பவுண்டை விட்டு வந்து நிகழ்கால வாழ்க்கையில் கடந்த கால இனிமையை நினைத்து பார்க்கும் காலகட்டம்! எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்று சொல்கிறவன் கூட தனது காதலை மறக்க முடியவில்லை என்றே சொல்வான்.

அழகான காதலனாக அருண் பாத்திரத்தில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ்குமார், நா.முத்துக்குமார் என்கிற ஒரே சிந்தனையாளர்கள் இதிலும் கை கோர்க்கிறோம் ஜெயிப்பதற்காக. இந்த வெற்றியில் மேஜிக் பிரேம்ஸ் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் மூவரும் கூட இணைந்திருக்கிறார்கள் ஜெயிப்பதற்காக," என்றார் இயக்குநர் விஜய்.

இப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மே 1ம் தேதி சூர்யாவின் மாஸ்' ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்துடன் விக்ரம் பிரபுவின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.