வெள்ளக்கார துரை படத்துக்கு 'யு' சான்றிதழ்!

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு - வெள்ளக்கார துரை படத்துக்கு 'யு' சான்றிதழ்!  

காதலும் நகைச்சுவையும் கலந்த இந்த படம் இம்மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு "யு" சான்றிதழ் அளித்துள்ளனர்.

டி இமான் இசையில் மனம் கொதித்தப் பறவை, தேசிங்குராஜா படங்களின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் போல, இந்த படத்தின் பாடல்களுக்கும் கிடைத்துள்ளது.

 

ஷாருக் கானுக்காக பாகிஸ்தானிலிருந்து பறந்து வரும் அழகுப் பட்சி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடிகை மஹீரா கான், ஷாருக்கானின் அடுத்த ஜோடியாகிறார். பர்ஹான் அக்தர் தயாரிக்க, ராகுல் தலோக்கியா இயக்கும் புதிய படத்தில் ஷாருக் கானடுன் ஜோடி போடுகிறாராம் மஹீரா கான்.

இதுதான் மஹீராவின் முதல் பாலிவுட் படம். இப்படத்திற்கு ரயீஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

பர்ஸானியா என்ற படத்தின் இயக்குநர்தான் ராகுல் தலோக்கியா. இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளரான ரித்தேஷ் சித்வானி, மஹீரா குறித்த தகவலையும், ஒரு புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

ஷாருக் கானுக்காக பாகிஸ்தானிலிருந்து பறந்து வரும் அழகுப் பட்சி!

அதில், கராச்சியைச் சேர்ந்த நடிகை மஹீரா கான், ஷாருக்கானுடன் ரயீஸ் படத்தில் இணைகிறார் என்று கூறியுள்ளார்.

கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு சோயப் மன்சூர் என்பவரின் இயக்கத்தில் வெளியான போல் என்ற பாகிஸ்தான் படத்தில் நடித்திருந்தார் மஹீரா என்பது குறிப்பிடத்தக்கது.

மஹீரா திருமணமானவர். இவரது கணவர் அலி அஸ்காரி. இவர் மஹீராவின் கல்லூரித் தோழி ஆவார்.

தற்போது யாஷ் ராஜின் ஃபேன் என்ற படத்தில் நடித்து வரும் ஷாருக் கான், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மஹீரா கானுடன் ஜோடி போட வருகிறாராம்.

மும்பை மற்றும் குஜராத்தின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.

 

12 ஆண்டுகளுக்குப் பிறகும் ஹீரோயினாகத் தொடரும் த்ரிஷா... சக நடிகைகள் வாழ்த்து!

12 ஆண்டுகளுக்குப் பிறகும் ஹீரோயினாகத் தொடரும் த்ரிஷா... சக நடிகைகள் வாழ்த்து!    

அந்த படத்துக்கு பிறகு சாமி, லேசா லேசா, அலை, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம், குருவி, மன்மதன் அம்பு, மங்காத்தா என நிறைய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தியில் காட்டா மீட்டா படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார்.

தற்போது தமிழில் அஜீத் ஜோடியாக என்னை அறிந்தால், ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம் படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, அஜீத், விஷால், ஆர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டார். 12 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருவது திரிஷாவின் சாதனை.

அவரது இந்த சாதனைக்கு சக நடிகைகள் ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

தன் பிறந்த நாளில் கடற்கரையில் துப்புரவு பணி செய்த நடிகர் ஆதி!

நடிகர் ஆதி தன் பிறந்தநாளன்று கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதே நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார்.

நடிகர் ஆதிக்கு டிசம்பர் 14-ம் தேதி பிறந்தநாளாகும். வழக்கமாக நடிகர்கள், திரை நட்சத்திரங்கள் நண்பர்கள் புடைசூழ பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடுவார்கள். சிலர் அனாதை இல்லங்கள் செல்வார்கள். ஏதாவது உதவிகள் செய்வார்கள்.

தன் பிறந்த நாளில் கடற்கரையில் துப்புரவு பணி செய்த நடிகர் ஆதி!

நடிகர் ஆதி தனது பிறந்த நாளை மாறுபட்ட வகையில் கொண்டாடினார். அவர் அன்று அதிகாலையில் தன் குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரை சென்றார்.அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் முழுவதும் அகற்றி சுத்தம் செய்தார். இதில் எக்ஸனோரா அமைப்பைபும் இணைந்து கொண்டது.

'க்ளீன் அண்ட் க்ரீன் சென்னை' என்கிற பெயரில் இந்நிகழ்வை நடத்தினார்.கடற்கரையைத் தூய்மைப் படுத்தியதுடன் மரக்கன்றுகளையும் ஓரங்களில் நட்டார்.

தன் பிறந்த நாளில் கடற்கரையில் துப்புரவு பணி செய்த நடிகர் ஆதி!

காலை நேரத்தில் இந்த தூய்மைப்பணி நடைபெற்றதால் ரசிகர்கள், அருகிலுள்ளவர்கள் மட்டுமல்ல நடைப் பயிற்சி சென்றவர்கள் கூட இதில் ஆர்வமாகப் பங்கேற்றனர். தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரதமர் மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கியுள்ளார். அந்தப் பயணத்தில் ஆதியும் இணைந்துள்ளார்.

இது பற்றி நடிகர் ஆதி கூறும்போது, "இந்த தூய்மைப் பணியை மக்களிடம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காக செய்தோம். என் பிறந்த நாளில் அதுவும் காலையிலேயே இப்படி தொடங்கியதில் எனக்குப் பெருமையாகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இ ருக்கிறது," என்றார்.

நடிகர் ஆதி கண்தான விழிப்புணர்வையும் இன்று ஏற்படுத்தினார். ஏற்கெனவே ஆதி, தான் நடிக்கும் 'யாகா வாராயினும் நாகாக்க' படப்பிடிப்பின் போதே படக்குழுவினரில் பலரையும் கண்தானம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார். இதற்கான சம்மத படிவங்கள் சங்கர நேத்ரலலயாவில் வழங்கப் பட்டுவிட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று தன் பிறந்த நாளிலும் 28 பேரை கண்தானம் செய்ய சம்மதிக்க வைத்ததையும் பெருமையுடன் கூறுகிறார்.

தன் பிறந்த நாளில் கடற்கரையில் துப்புரவு பணி செய்த நடிகர் ஆதி!

ஆதி தன் நண்பர்கள் 8 பேருடன் இணைந்து 'லெட்ஸ் ப்ரிட்ஜ்' என்கிற அமைப்பை வைத்திருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் வாக்குரிமை உள்ளவர்களுக்கான வாக்களிக்கும் விழிப்புணர்வை வித்தியாசமாக நடத்தினர்.

இதன்படி சின்னஞ்சிறிய 50 குழந்தைகளைக் கொண்டு புதிதாக வாக்குரிமை வயது அடைந்தவர்களிடம் சென்று அவர்களின் கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கச் செய்தனர். அதில் 'எங்கள் எதிர் காலம் உங்கள் கையில்! சிந்திப்பீர் வாக்களிப்பீர்! ' என்று எழுதப்பட்டு இருக்கும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் நடித்த அதற்கான பாடல் காட்சியில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய்சேதுபதி போன்றோரும் ஆர்வமுடன் தோன்றியிருந்தார்கள்.

 

அமெரிக்காவில் லிங்காவின் வசூல் சாதனை... எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது!

ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் அமெரிக்காவில் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி இந்தப் படம் சுமார் ரூ 10 கோடியை வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முதலிடத்தில் ரஜினியின் எந்திரன்தான் இன்னமும் உள்ளது. ஆனால் அந்த இடத்தை இன்னும் ஓரிரு நாட்களில் லிங்கா பிடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் லிங்காவின் வசூல் சாதனை... எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது!

அமெரிக்காவில் 118 அரங்குகளில் நடந்த பிரிமியர் ஷோக்கள் மூலம் மட்டுமே 404,566 டாலர்களைக் குவித்து, ஹாலிவுட் படமான ஹன்டர் கேமை பின்னுக்குத் தள்ளியது. பின்னர் வெள்ளியன்று நடந்த வழக்கமான ஷோக்கள் மற்றும் சனிக்கிழமை காட்சிகளில் மேலும் 8.5 லட்சம் டாலர்களைக் குவித்தது. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே 1.52 டாலர்கள் வசூலானது. ஆக மூன்று நாட்களில் 1.37 மில்லியன் டாலர்களைக் குவித்த லிங்கா, எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது அமெரிக்காவில்.

நாளை எந்திரனை மிஞ்சி முதலிடம் பிடிக்க வாய்ப்பிருப்பதாக படத்தை வெளியிட்டுள்ள அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இந்த 2014 ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் வசூலில் முதலிடத்தில் லிங்காவும், அடுத்த இடத்தில் கோச்சடையானும்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

லிங்காவை விறுவிறுப்பாக 10 நிமிட காட்சிகள் குறைப்பு!

லிங்கா படத்தின் நீளத்தை சற்றே குறைக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

கடந்த வெள்ளியன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது லிங்கா படம்.

ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு தயாரித்திருந்தனர். இது மிக நீளமாக இருப்பதாக விமர்சனங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

லிங்காவை விறுவிறுப்பாக 10 நிமிட காட்சிகள் குறைப்பு!

இதைத் தொடர்ந்து படத்தின் நீளத்தை 10 நிமிடங்கள் மட்டும் குறைக்க இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முடிவு செய்தார்.

படத்தின் முன்பகுதியில் சில காட்சிகளையும், இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸில் சில காட்சிகளையும் நறுக்கியுள்ளார்.

இதன்படி லிங்கா இனி 2.45 மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும். ட்ரிம் செய்யப்பட்ட லிங்காவை நாளை முதல் காணலாம்.

படம் ஏற்கெனவே 4 நாட்களில் ரூ 130 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீசில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குஷ்பு… பர்ஸ்ட் கிளாஸ் பாஸ்….

விஜய் டிவியின் பேக் டூ ஸ்கூல் நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடிய குஷ்பு நூற்றுக்கு 61 மார்க்குகள் எடுத்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்தார். ஆனாலும் வருத்தம்தானம் அவருக்கு. பள்ளியில் படிக்கும் போது 80,90 மார்க் எடுப்பாராம். இப்போது மார்க் குறைந்துவிட்டது என்று வருத்தப்பட்டார் குஷ்பு.

குஷ்பு… பர்ஸ்ட் கிளாஸ் பாஸ்….

நீயா நானா கோபிநாத் ஞாயிறு இரவுகளில் பெரியவர்களுடன் மல்லுக்கட்டினால், பகல் பொழுதுகளில் குட்டி சுட்டி குழந்தைகளுடன் பள்ளிப் பாடம் எடுக்கிறார்.

பேக் டூ ஸ்கூல் என்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுடன் பிரபலங்களும் பங்கேற்று விளையாடுகின்றனர். விளையோட்டோடு மட்டுமல்லாது கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்கெல்லாம் போடவேண்டும்.

இந்த வார பேக் டூ ஸ்கூல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குஷ்பு பங்கேற்று விளையாடினார். மும்பையில் குஷ்பு படித்த பள்ளி வகுப்பறைகளை கண் முன் கொண்டுவந்த விஜய் டிவி, குஷ்புவின் ஆசிரியரின் பேட்டியையும் ஒளிபரப்பியது.

குஷ்பு… பர்ஸ்ட் கிளாஸ் பாஸ்….

இந்த நிகழ்ச்சி தனது பள்ளி பருவத்தை நினைவூட்டியது என்று மகிழ்ச்சியடைந்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு.

ஜெயிப்பேனோ தோற்பேனோ தெரியாது ஆனால், பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு, பாட்டு, நடனம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பேன் என்றார் குஷ்பு.

சினிமா, அரசியல், தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளர் என பலவித முகங்கள் கொண்ட குஷ்பு, கேம்ஷோவிலும் பங்கேற்று உற்சாகமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முடிந்தால் எழுந்து வாருங்கள் அய்யா...! - கே பாலச்சந்தருடன் பேசிய கமல் ஹாஸன்!

பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவால் நேற்று மயிலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரை, ரஜினிகாந்த், குஷ்பு, மனோபாலா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர் நலமுடன் இருப்பதாகவும், சீக்கிரம் எழுந்து வருவார் என்றும் அவரை நலம் விசாரித்தவர்கள் கூறினர்.

முடிந்தால் எழுந்து வாருங்கள் அய்யா...! - கே பாலச்சந்தருடன் பேசிய கமல் ஹாஸன்!

இந்நிலையில், உத்தமவில்லன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமலுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வீடியோ பதிவொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், கமல் பேசியிருப்பதாவது:

கமல்.. சீக்கிரம் படத்தை முடித்துக் காட்டு, பார்த்துவிட்டுப் போகிறேன் என்று இரட்டை அர்த்தம் எதுவுமில்லாமல் ஒரே அர்த்தத்தில் சொன்னார் கே.பி. அவர் உத்தமவில்லன் படம் பார்க்கத் துடித்ததின் வேகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இங்கே, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் முக்கிய இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, கே.பாலச்சந்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி என்னை வந்து அடைந்தது.

அவருடைய உதவியாளர் மோகனிடம் விசாரிக்கத்தான் கூப்பிட்டேன். அவர், ஆமாம் சார்... கிரிட்டிக்கல்னு சொல்றாங்க. நினைவிருக்கிறது, ஆனால் 3 நாட்களாக யாரிடமும் அவர் பேசவில்லை. நீங்கள் வேண்டுமானால் பேசிப் பார்க்கிறீர்களா? என்று முன்னெச்சரிக்கை எதுவுமில்லாமல் கைப்பேசியை கே.பாலச்சந்தரிடம் கொடுத்துவிட்டார் மோகன்.

ஹலோ என்று அவரது குரல் மெலிதாக வந்தது. கிட்டத்தட்ட 43 வருடங்களாக கேட்டுப் பழகிய குரல். எத்தனை பழுதுபட்டாலும் அடையாளம் புரிந்தது எனக்கு. சார் படவேலை நடந்துக்கிட்டிருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன். பார்த்துக்கங்க என்றேன்.

அதற்கு பிறகு நீண்டநேரம், கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடம், அவர் இருந்த நிலையில் அது நீண்ட நேரம்தானே. அவர் பேசியது எதுவுமே எனக்குப் புரியவில்லை. ஆனால், புரிந்ததுபோல் அவர் பேச்சுக்கிடையில் சரியான தருணம் பார்த்து இடைவேளையில் சரி, ஆகட்டும் சார், என்று தோராயமாக சொல்லி வைத்தேன். சற்று நேரத்தில் தவறான இடங்களில் ஆமோதிக்கிறேன் என்று இருவருக்குமே விளங்கியபோது மெலிதாகச் சிரித்தார். எனினும், தொடர்ந்து கொஞ்சம் பேசிவிட்டு செல்போனை உதவியாளரிடம் கொடுத்தார்.

மோகன், ஆச்சர்யமாக இருந்தது சார், பேசிவிட்டார் சார். நாளைக்கும் கூப்பிடுங்கள் சார், இன்னும் தெளிவாக பேசினாலும் பேசுவார் என்றார் குரல் தழுதழுத்தபடி.

அடுத்தநாள் பேசக் கூப்பிட்டபோது கே.பி.யின் மகன் பிரசன்னா பேசினார். "நான் பிரசன்னா பேசுறேன்" என்றார். உன் பாத்திரத்தின் பெயர் பிரசன்னா, என்று 40 வருடத்துக்கு முன்னால் ஒரு புன்னகையுடன் கே.பி., அபூர்வ ராகங்கள் படத்தின் பாத்திரத்தை எனக்கு விளக்கிய காட்சி மின்னி மறைந்தது.

இரண்டு சகோதரர்கள் தங்களது தந்தையார் கவலைக்கிடமாக கிடக்கையில் என்னென்ன பேசுவார்களோ, அனைத்தையும் பேசினோம். உடனே சென்னை புறப்பட பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார் கவுதமி. என் மூத்தவர் சந்திரஹாசனிடம் பேசினேன்.

நான் வந்து சாதிக்கக்கூடியது ஒன்றும் இல்லை. எனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் இத்தருணத்தில் உதவாது. சரியாகச் சொன்னால், படிக்காமல் வாங்கிய எந்த பட்டமும் எத்தருணத்திலும் உதவாது. வேலையை முடிக்காமல் வருவதை நான் மட்டுமல்ல, நான் தொழில் கற்க உதவிய கே.பி.யும் விரும்ப மாட்டார். எனது ஆர்வமெல்லாம் முடிந்தால் முதலில் படத்தை அவருக்கு போட்டுக் காட்டவேண்டும்.

இரண்டாவது, அது முதலாவதை விட முக்கியமானது. தொலைபேசியில் அந்த ஒன்றரை நிமிடம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒருவேளை இவ்விரண்டும் இயலாமல் போனால் அவர் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று என்னால் யூகிக்க முடியும். அந்த புரிதலை அவருடன் நான் பழகிய 43 வருடங்கள் எனக்கு வழங்கியிருக்கிறது.

இன்னும் பல ஆண்டுகள் கே.பி. அவர்கள் மக்கள் மனதில் தெளிவாக நினைவிருக்கும்படி செய்யும் மற்றுமொரு படம் உத்தமவில்லன். எங்கள் நேசத்தின் மற்றுமொரு பாசக் கடிதம் ‘உத்தமவில்லன்'. 36 வருடங்களில் அவரிடம் பெற்ற அனுபவம் இன்னும் பல வருடங்கள் கைகொடுக்கும் எனக்கு.

இந்த எழுத்துகூட வேலைக்கு நடுவில்தான் நடக்கிறது. எனக்கு நான் விரும்பும் கலையில் நல்ல இடத்தை தேடித்தந்த என் ஆசானுக்கு வணக்கங்கள் என்றும்போல். முடிந்தால் மீண்டும் எழுந்து வாருங்கள் அய்யா. உங்கள் கமல்."

 

இசை நிகழ்ச்சியில் பாட வந்த ரூ.20 கோடி வாய்ப்பை ஏற்க மறுத்த பிரியங்கா சோப்ரா

மம்மி கூட இருக்க ரூ.20 கோடி வாய்ப்பை ஏற்க மறுத்த பிரியங்கா சோப்ரா  

இதையடுத்து பிரியங்காவுக்கு பாட பாலிவுட்டில் இல்லை சர்வதேச அளவில் இருந்து வாய்ப்புகள் வருகிறது. ஆனால் கைவசம் பல படங்கள் இருப்பதால் அவர் பாட வரும் வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச இசை நிகழ்ச்சியில் பாடுமாறு பிரியங்காவை கேட்டுள்ளனர். அவ்வாறு அவர் பாட ரூ.20 கோடி தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடிக்கும் முன்பு தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட விரும்புகிறார் பிரியங்கா. அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பாட விரும்பவில்லை.

பிரியங்கா தனது குடும்பத்தார் மீது மிகுந்த பாசம் உள்ளவர் என்பதால் அவர் ரூ.20 கோடி வாய்ப்பை ஏற்க மறுத்ததில் ஆச்சரியம் இல்லை.