படப்பிடிப்புக்கு டிமிக்கி... அனுஷ்காவால் தாமதமாகும் அலெக்ஸ் பாண்டியன்!

Alex Pandian Crew Fume On Anushka   

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் அனுஷ்காவால் தாமதாகியுள்ளது.

சகுனிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா.

படத்தின் ஷூட்டிங் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே படத்தை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, ஆர்யாவுடன் தான் நடிக்கும் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஓடிவிட்டாராம் அனுஷ்கா. அவர் வருவார் என பல நாட்கள் கார்த்தி படக்குழுவினர் காத்திருந்து ஏமாற்றமடைந்து, கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கினாராம்.

இரண்டாம் உலகம் படம் முடியும் நிலையில் இருப்பதால், கடைசி காட்சிகளை முடிக்க கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவன் அனுஷ்காவை வற்புறுத்தியதால், கார்த்தி படத்துக்கு வராமல் நின்றுவிட்டாராம் அனுஷ்கா.

இதனால் அலெக்ஸ்பாண்டியன் படத்துக்குழுவினர் அனுஷ்கா மேல் ஏக கடுப்பில் உள்ளார்களாம்.

எல்லாம் அந்த 'யோகா டீச்சரை' நேர்ல பார்க்கிற வரைக்கும்தானே!

 

ஷங்கர் படத்தில் எமி ஜாக்ஸன் சம்பளம் ரூ 75 லட்சம்!!

Amy S Current Rate Is Rs 75 Lakh Per Movie   

ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடிக்க எமி ஜாக்சனுக்கு சம்பளமாக ரூ 75 லட்சம் தர ஒப்புக் கொண்டுள்ளனர்.

தனது மூன்றாவது படத்திலேயே முக்கால் கோடியை இந்த நடிகை தொட்டிப்ப்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனை சேர்ந்த எமிஜாக்சன் நடித்த முதல் படம் மதராசபட்டணம். இந்த ஒரு படத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்தார்.

தற்போது விக்ரமை வைத்து ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் நடிக்க எமிஜாக்சனுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளது.

மதராசபட்டினம் படத்தில் நடிக்க எமிஜாக்சன் ரூ.5 லட்சம்தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இயக்கும் தாண்டவம் படத்திலும் விக்ரமுடன் எமிஜாக்சன் நடிக்கிறார். அப்படத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கினாராம். தாண்டவம் வெளியாகும் முன்பே ரூ 75 லட்சமாக சம்பத்தை உயர்த்தியுள்ளார் எமி.

 

உயிர்காக்க உதவுங்கள் - ஒரு மூத்த பத்திரிகையாளரின் சோகம்!

Senior Journalist Expecting Help

இலங்கை கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'செய்தி' பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் திரைநீதி செல்வம்.

இனக்கலவரத்திற்கு பின் அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர், இங்கு திரைப்பட செய்தி தொடர்பாளராகவும், மனோரமா போன்ற நட்சத்திரங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

ஓரளவு பிரச்சினையின்றி நகர்ந்து கொண்டிருந்த அவரது வாழ்வில் திடீர் புயல். அவரது மகள் தாரணியின் கணவர் எஸ்.சீனிவாசன் (வயது 48) திடீர் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு தன்னாலான முயற்சியால் சுமார் 2 லட்சம் வரை செலவழித்துள்ள அவர் இன்று மிக மிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

சீனிவாசனுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு தொடர் கீமோ தெரபி சிகிச்சை அளித்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்கிற சூழ்நிலை. ஒவ்வொருமுறை கீமோதெரபி செய்யும் போதும் ஐம்பதாயிரத்திற்கு குறையாமல் செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே திரைநீதி செல்வத்தின் நெருக்கடியைத் தீர்க்க முன்வரும் நண்பர்கள், வாசகர்கள் கீழ்காணும் மருத்துவமனை முகவரிக்கே தங்களின் உதவியை காசோலை மூலமாகவோ, நேரடியாகவோ சென்று அளிக்கலாம்.

Vasantha Subramanian Hospital pvt.ltd என்ற பெயரில் காசோலையோ, டி.டி.யோ அனுப்பலாம். பின்புறத்தில் மறவாமல் s.srinivasan. I.D.No 9041 என்று குறிப்பிடவும்.

வங்கி முகவரி- அக்கவுன்ட் நம்பர் O.D.121168
city union bank. Annasalai. Chennai

 

'காட்டுவாசம் போதும்.. நாட்டுக்கு போகணும் சேட்டா!'

சமீப காலமாக இந்த இயக்குநரை மேடைகளில் அதிகம் பார்க்க முடிகிறது. அட முன்பெல்லாம் உம்மென்றுதான் இருப்பார். இப்போது ஜம்மென்று பேசவும் செய்கிறார்.

இந்த மாற்றங்கள் மேடையில் மட்டுமில்லையாம்.. .தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூடத்தானாம்.

ரொம்ப வித்தியாசமான தலைப்புகளில் படமெடுத்து ரசிகர்களைக் கொக்கி போட்டு பிடித்த அந்த இயக்குநர், இப்போது தான் அறிமுகப்படுத்தும் புது நடிகையை அடுத்த சில ஆண்டுகளுக்கு எங்கும் நகரவிடாமல் செய்துவிட்டாராம்.

தன் படம் முடியும் வரை மட்டுமல்ல, முடிந்த பிறகும்கூட, அடுத்து எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நான்தான் டிசைட் பண்ணுவேன் என அடம்பிடிக்கிறாராம்.

'மீறி கையெழுத்திட்டால், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல பாத்துக்கோ' என்று மிரட்டலாக எச்சரித்து வைத்திருக்கிறாராம்.

'சரி, வேற படம் பண்ணல. ஆனால் இந்த காட்டுவாசம் போதும்.. நாட்டுக்கு போகணும் சேட்டா!' என்று கேட்டாலும் விடுவதாக இல்லையாம்.

மீறிப் போய்ப் பார்த்தால்தான் என்ன.... எத்தனை நாளைக்கு இவரது 'காட்டு இம்சையை' தாங்குவது என சேச்சிகளிடம் யோசனை கேட்டு வருகிறாராம்!

 

தில்லு முல்லு படத்தில் ரஜினி வேடத்தில் சிவா!

Tamil Padam Shiva Do Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவின் ரீமேக்கில், ரஜினி வேடத்தில் நடிக்கிறார் சிவா.

கே பாலச்சந்தர் இயக்க, ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ல் ரிலீசான படம் தில்லு முல்லு. தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் நடித்திருந்தனர்.

க்ளைமாக்ஸில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் தோன்றினார். சரிதாவின் தங்கை விஜி இதில் ரஜினி தங்கையாக அறிமுகமானார்.

மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் கலக்கின.

தங்கங்களே தம்பிகளே பாடலில் எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா, கமல் போல அசத்தலாக இமிடேட் செய்திருப்பார் ரஜினி. கடைசியில் பில்லா ரஜினியாகவும் தோன்றுவார்.

இந்த படம் தற்போது ரீமேக் ஆகிறது. ரஜினி வேடத்தில் நடிக்க சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ் படம், சென்னை 28, சரோஜா, கலகலப்பு என காமெடிப் படங்களின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.

சிவாவிடம் இது குறித்து கேட்ட போது, "தில்லு முல்லு ரீமேக்கில் நான் நடிக்கப் போவது உண்மைதான். சூப்பர் ஸ்டார் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்த பிரமாதமான படம் இது. அவர் பேரை கெடுக்காம இருக்கணுமே என்ற பயமும் உள்ளது!," என்றார்.

 

திரும்பிப் பார்க்கிறேன் மூலம் திரும்பவரும் நடிகை ரஞ்சனி

Actress Ranjani Come Back Jaya Tv Program

பாரதிராஜாவால் அறிமுகமான நடிகை ரஞ்சனி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன பின்னர் மீடியாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். தற்போது திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியின் மூலம் ஜெயா டிவியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

திரையுலக வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூறும் நிகழ்ச்சியான திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சி ஜெயா டிவியில் வாரந்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் நடிகை ரஞ்சனியின் நினைவலைகள் ஒளிபரப்பாகிறது.

சிங்கப்பூரில் பிறந்த ரஞ்சனியை `முதல் மரியாதை' படத்தில் செவுலி கதாபாத்திரம் மூலம் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா. அந்த படம் ரஞ்சனிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தொடர்ந்து கடலோரக் கவிதைகள் படத்திலும் நடித்தார். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்த ரஞ்சனி, கேரளாவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

மீடியாக்களின் வெளிச்சத்தில் படாமல் ஒதுங்கியிருந்த ரஞ்சனி இப்போது திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் மீண்டும் முகம் காட்ட வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரையுலக வாழ்வில் நடந்த மறக்க முடியாத பல நிகழ்வுகளை பட்டியலிடுகிறார். நிகழ்ச்சியில் அவர் நடித்த படங்களில் இருந்து காட்சிகளும் பாடல்களும் இடம் பெற உள்ளது.

 

இது வரை காதல் வந்ததில்லை : நடிகை அம்மு

I Am Home Bird Actress Ammu

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலை வாழ்க்கையை தொடங்கியவர் அம்மு. சீரியல், சினிமா, டப்பிங் என 'ஆல் இன் ஆளாக' மீடியா உலகில் வலம் வருகிறார். சினிமா, சின்னத்திரை என இத்தனை ஆண்டுகால பயணத்தில் காதல் பக்கங்கள் இவருக்கு கிடையாதாம். அம்மா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறார் இவர்.

தனது பயணங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்..

நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய வாழ்க்கை இப்பொழுது சினிமாவில் நாயகி ஆகும் அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. மலையாளப் படத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சினிமாவில் பெயர் சொல்லும் படியான நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

நடிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, டப்பிங், சினிமா என வாழ்க்கை பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஓவியா என்ற திகில் தொடரில் நடித்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவம். முதன்முறையாக இதுபோன்ற திகில் தொடரில் நடித்தேன். அதேபோல் சன் டிவியில் பைரவி தொடரில் நடித்ததும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

பெரியதிரை பக்கம் இப்போதைக்குக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால் வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை

நடிப்பு, டப்பிங், தொகுப்பாளினி என எந்த வேலையுமே எனக்கு இஷ்டப்பட்டதுதான் அதனால் எதையுமே நான் கடினமாக நினைக்க வில்லை. வேலை மட்டுமல்ல; எதையும் கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். சுலபம் என்று நினைத்தால் சுலபம்.

மீடியா உலகில் இத்தனை ஆண்டுகாலம் இருந்தும் எனக்க இதுவரை காதல் வரவில்லை. இனியும் வருமா என்று தெரியவில்லை. அதனால் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்!

 

முகமூடியில் புரூஸ்லீயுடன் பணியாற்றிய ஸ்டன்ட் கலைஞர்!

Bruce Lee S Stuntman Mysskin S Muga   

உலகப் புகழ்பெற்ற குங்ஃபூ நிபுணர் மறைந்த புரூஸ்லீயுடன் பணியாற்றிய ஸ்டன்ட் கலைஞர், மிஷ்கினின் முகமூடி படத்தில் பணியாற்றியுள்ளார்.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

முதல் சிடியை நடிகர் விஜய் வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இநதப் படம் குறித்துப் பேசிய இயக்குநர் மிஷ்கின், " இந்தப் படத்தில் ஜீவாவின் பாத்திரம் புரூஸ்லீ. மறைந்த நடிகர் புரூஸ்லீ கற்றுக் கொடுத்த குங்ஃபூ தற்காப்புக் கலையின் ஒரு அரிதான பிரிவை படத்தில் பயன்படுத்தியுள்ளோம். அதற்காக, அந்தக் கலை நன்கு தெரிந்தவர்களைத் தேடி ஹாங்காங்குக்கே போனோம்.

அப்போதுதான் புரூஸ்லீயுடன் பணியாற்றிய அந்த ஸ்டன்ட் கலைஞரைச் சந்தித்தோம். என்டர் தி ட்ரேகன் படத்தில் புரூஸ் லீயுடன் சண்டை போடும் கலைஞராக நடித்து, பின்னர் ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றும் அவர் எங்கள் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டது அதிசயம்தான். ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்தப் படத்தில் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் போலிருக்கிறது என்றார்.

சண்டைக் காட்சிகள் அத்தனை தத்ரூபமாக அமைந்துள்ளன," என்றார்.

ஜீவாவுடன் நரேன், பூஜா ஹெக்டே, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வரிகளுக்கு கே இசையமைத்துள்ளார்.

படத்தில் ஜீவாவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக சூப்பர் மேன் உடையை ஹாங்காங்கை சேர்ந்த ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஜீவடிவமைத்துள்ளனர். ஆகஸ்ட் 31-ந் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார்.

 

எம் டிவியில் ஸ்ருதி ஹாசன் : இசைநிகழ்ச்சி மூலம் அறிமுகம்

Shruti Hassan Make Tv Debut Music S

உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசை அமைத்த ஸ்ருதிஹாசன் தற்போது எம். டிவியில் புதுமையான இசை நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் அடிப்படையில் இசைத்துறையை சார்ந்தவர். இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால்தான் தனது தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் திரைப்படமான உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசை அமைத்தார். பல திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

தற்போது முதல்முறையாக எம்.டிவி யில் அறிமுகமாகிறார். `எம்டிவி ரஷ்' என்ற அந்த புதுமையான நிகழ்ச்சி, எம்.டி.வியில் ஒளிபரப்பாகிறது. பிஜோய் நம்பியாரால் இயக்கப்படும் `எம்டிவி ரஷ்', அட்டகாசமான 13 பகுதிகள் கொண்டதாம். இசை மீதான அவருக்கு உள்ள காதலினை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தும் என்கிறார்கள். இதில் ஓர் அத்தியாயத்தில் ஸ்ருதிஹாசன் தனது சொந்த இசைக்கோர்வைகளை அரங்கேற்றுவாராம்.

எம்டிவி ரஷ் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கு. பிஜோய் என்னை அணுகி இந்த கான்செப்டை சொன்னதுமே எனக்கு பிடிச்சுப் போச்சு. இதில் நான் உருவாக்கிய இசைக்கோர்வையை நானே இசைப்பதை ரசிகர்கள் கண்டு, கேட்டு மகிழலாம். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என்று உற்சாகத்தோடு தெரிவித்தார் ஸ்ருதி.

 

தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது - புனித் ராஜ்குமார்

I M Happy Work Tamil Directors Says Puneet Rajkumar

தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து ஒரு தமிழ் - கன்னட இரட்டை மொழிப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன், என்று கன்னடத்தின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கூறியுள்ளார்.

முகமூடி இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த புனித் ராஜ்குமாரிடம் பேசினோம்.

தமிழ் சினிமா விழாவில் முதல் முறையாக பங்கேற்றது குறித்து கேட்டபோது, "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.." என்றார் நல்ல தமிழில்.

"இத்தனைக்கும் நான் சின்ன வயசு வரைக்கும் சென்னையில்தான் இருந்தேன். ட்ரஸ்ட்புரத்தில இன்னும் எங்க வீடு இருக்கு. அடிக்கடி சென்னைக்கு வந்திடுவேன். ஆனா சினிமா நிகழ்ச்சியில கலந்துகிட்டது இதுதான் முதல் முறை. எனக்கு சென்னை மக்களை, சென்னை உணவுகளை ரொம்பப் பிடிக்கும். வாய்ப்பு கிடைச்சா இனி அடிக்கடி பங்கேற்பேன்," என்றார்.

தமிழில் சூப்பர்ஹிட் படமான நாடோடிகளின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார் நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் போராளி படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்கள் குடும்பத்துக்கே மகிழ்ச்சி தரும் விஷயம். தமிழ் இயக்குநர்கள் அத்தனை திறமையாளர்கள். இதற்கு முன்பும் சிங்கீதம் சீனிவாசராவ், பி வாசு போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளோம். என் தந்தைக்கு பூர்வீக கிராமமே தமிழ்நாட்டில்தான் உள்ளது. எங்கள் குடும்பத்தின் மிகச் சிறந்த நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி இங்குதான் உள்ளார். விக்ரம், சூர்யா போன்றவர்களுடனும் நான் நல்ல நட்பில் இருக்கிறேன். எனவே நானும் இந்த தமிழ் சினிமாவில் ஒருவனாகத்தான் உணர்கிறேன். நிச்சயம் ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பேன்" என்றார்.

கவுதம் மேனனுடன் நீங்கள் பணியாற்றுவதாக கூறப்பட்டதே...

ஆமாம்.. நாங்கள் இருவரும் பேசினோம். ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. எங்கள் வேலைகளில் பிஸியாகிவிட்டோம். ஆனால் நிச்சயம் ஒரு நாள் கைகூடும் என நம்புகிறேன்," என்றார்.