சச்சின் இல்லாமல் கிரிக்கெட்டா? ஓ நோ!: ஷாருக்கான் வருத்தம்

மும்பை: சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க முடியாது என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து கேள்விப்பட்ட பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சச்சின் இல்லாமல் கிரிக்கெட்டா? ஓ நோ!: ஷாருக்கான் வருத்தம்

ஓ நோ! அடிமையாதல் என்பதன் அர்த்தம் திடீர் என்று புரிந்துள்ளது. என்னுடையது மாஸ்டர். சச்சின் இல்லாமல் கிரிக்கெட் பார்ப்பது? தாங்க முடியவில்லை.

சச்சின் ஓய்வு பெறுவதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் இதே போன்று இருக்குமா? உங்களின் கருத்துகளை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.

 

ஒரு எஸ்எம்எஸ்ஸில் வாய்ப்பை இழந்தேன் - சூர்யா

ஒரு எஸ்எம்எஸ்ஸில் வாய்ப்பை இழந்தேன் - சூர்யா

சென்னை: இயக்குநர் ராஜேஷுடன் பணியாற்ற வேண்டிய வாய்ப்பை ஒரு எஸ்எம்எஸில் இழந்தேன், என்றார் நடிகர் சூர்யா.

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசுகையில், "இது காதலும், நகைச்சுவையும் கலந்த கதை. பல்வேறு மனநிலைகளில் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயம் அல்ல.

வசனம் பேசும்போது, எங்கே இடைவெளி கொடுக்க வேண்டும்? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜேஷுடன் நான் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் ஒரு எஸ்எம்எஸ்ஸில் அந்த வாய்ப்பு போய்விட்டது.

நடிக்கும்போதும், ‘டப்பிங்' பேசும்போதும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் கார்த்தி எங்கள் வீட்டில் நடித்துக் காட்டுவான். அந்த அளவுக்கு இந்த படம் அவனை கவர்ந்து இருக்கிறது.

அதனால்தான் 102 டிகிரி காய்ச்சலில் படுத்திருந்தவன், இந்த விழாவுக்கு வந்திருக்கிறான்,'' என்றார் சூர்யா.

 

பிரபு மாதிரி நடிக்க கஷ்டமா இருந்தது - கார்த்தி

சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜாவில் பிரபுவை இமிடேட் செய்து நடிக்க சிரமப்பட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி-காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா'. ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் நடந்தது.

நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரபு மாதிரி நடிக்க கஷ்டமா இருந்தது - கார்த்தி

படத்தின் நாயகன் கார்த்தி பேசுகையில், "இயக்குனர் ராஜேஷின் ‘சிவா மனசுல சக்தி' படம் பார்த்தபோதே ராஜேஷுடன் ஒரு படம் பண்ணனும்னு நினைச்சேன்.

இப்ப அது நிறைவேறிடுச்சி. இந்த படத்தில் 80-களில் நடப்பதுபோல ஒரு காட்சி... அதில் பிரபு சார் போலவே கெட்டப் அணிந்து, அவரைப்போலவே நடிக்க வேண்டும். இதற்காக மிகவும் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இதை நம்மால் சரிவர செய்யமுடியாது என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன்.

பிரபு மாதிரி நடிக்க கஷ்டமா இருந்தது - கார்த்தி

ஆனால், இயக்குனர் பிடிவாதமாக சொன்னதால் இதை வெற்றிகரமாக செய்துமுடித்தேன். இப்படம் சிறந்த காமெடி படமாக வந்துள்ளது," என்றார்.

 

என் பெயரைச் சொல்லி மோசடி - இயக்குநர் பாண்டிராஜ் புகார்

என் பெயரைச் சொல்லி மோசடி - இயக்குநர் பாண்டிராஜ் புகார்

சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன் பெயரில் பண மோசடி நடக்கிறது, என்று இயக்குநர் பாண்டிராஜ் பரபரப்பாகக் புகார் கூறியுள்ளார்.

பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என வெற்றிப் படங்களை இயக்கியவர் பாண்டிராஜ்.

தற்போது சிம்புவை வைத்து புதிய படம் இயக்குகிறார்.

இந்த நிலையில் தன் பெயரில் பண மோசடி நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டு கூறியுள்ளார். மோசடி செய்பவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாண்டிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிக்க சான்ஸ் தருவதாக என் பெயரில் மோசடி நடக்கிறது. சினிமா நடிகர், நடிகைகள் முகவரி புத்தகங்களில் நடிக்க வாய்ப்பு தேடும் புதுமுகங்கள் செல்போன் நம்பருடன் தங்கள் படங்களை இடம் பெறச் செய்துள்ளனர்.

அந்த நம்பருக்கு பாண்டிராஜ் மானேஜர் பேசுறேன் என்று சில மோசடியான ஆட்கள் தொடர்பு கொண்டு, 'புதுமுகங்களை வைத்து படம் எடுக்கிறோம்... உங்களை எங்கள் டைரக்டருக்கு பிடித்துவிட்டது. நடிப்பதற்கு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். ரூ.49 ஆயிரம் கொடுத்து விடுங்கள்,' என்று ஏமாற்றுகின்றனர்.

ஏற்கனவே சசிகுமார், பிரபுசாலமன் பெயர்களில் இதுபோல் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகும் அஜீத்தின் ஆரம்பம்

சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே அக்டோபர் 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் லிஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஆரம்பம்'.

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகும் அஜீத்தின் ஆரம்பம்

அஜீத்துடன், ஆர்யா, நயன்தாரா,டாப்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. ஆனால் தீபாவளி தினமான நவம்பர் 2 ந்தேதி வெளியிடாமல் அதற்கு முன்னதாக அக்டோபர் 31 ஆம் தேதியே (வியாழக்கிழமை) படத்தை வெளியிடுகின்றனர்.

இந்த படத்தில், தெலுங்கு நடிகர் ராணா முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.
அத்துடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.

மங்காத்தாவுக்குப் பிறகு வெற்றிப் படத்துக்காகக் காத்திருக்கும் அஜீத், ஆரம்பம் மூலம் அசத்துவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

கவுதம் மேனனுக்காக பல மாதங்கள் வீட்டில் சும்மா இருந்தேன்... இப்போது விலகுகிறேன்!- சூர்யா அதிரடி

சென்னை: கவுதம் மேனன் இயக்குவதாக அறிவித்த துருவ நட்சத்திரம் படத்திலிருந்து விலகுகிறேன் என சூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஆறுமாதங்கள் வரை அவரிடமிருந்து முழுமையான கதை வரும் என்று காத்திருந்ததாகவும், இனிமேலும் காத்திருக்க முடியாது என்பதால் கவுதம் மேனன் படத்திலிருந்து விலகுவதாகவும் சூர்யா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று மாலை சூர்யா விடுத்த அறிக்கை:

"கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் நாங்கள் இருவரும் இப்போது இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே , படப்பிடிப்புக்குச் செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாகக் கருதுகிறேன்.

Surya walked out of Goutham Menon projectSurya walked out of Goutham Menon project

இயக்குனர் கவுதமிடம் என்னுடைய இந்த கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்து கொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து ஒரு வருட காலம் கழிந்த பிறகும், கவுதம் அவர்கள் இன்னும் முழு கதையை என்னிடம் திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.

‘சிங்கம் -2' படம் முடிந்த பிறகு ஆறு மாதங்களாக முழு கதையையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டு விடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். ஒரு டெஸ்ட் ஷுட் செய்து கெட்டப் மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கவுதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல் வீட்டில் காத்திருக்கிறேன். கவுதம் அவர்களிடமிருந்து , நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக் கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.

முன்பே, கவுதம் அவர்களின் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் மட்டும் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும் கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்த படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது.

ஆறு மாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும், கவுதம் அவர்களும், கருத்தளவிலும் எதிரெதிர் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்த நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.

ஒரு திரைப்படம் உருவாவதில், பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கை இல்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன. நட்பின் அடிப்படையில் கவுதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன்.

இனி, நாங்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால், கவுதம் படத்திலிருருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!"

-இவ்வாறு சூர்யா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.