மருத்துவமனையில் சிவகுமார் பரிசோதனை

Sivakumar,Surya

நடிகர் சிவகுமார் திடீரென்று கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை ஒரு தகவல் பரவியது.

இது வெறும் வதந்தி என்று சிவகுமார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.' சிவகுமாரும், குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை சென்றார்கள். அப்போது, சிறுநீரக கல் பரிசோதனை செய்து கொள்வதற்காக, சிவகுமார் அங்குள்ள வேதநாயகம் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் மகன் நடிகர் சூர்யாவும் சென்றிருந்தார்.

சிவகுமாருக்கு டாக்டர் கந்தசாமி மருத்துவ பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிந்து சிவகுமார் வீடு திரும்பி விட்டார். அவர் நலமாக உள்ளார்,'' என்று சிவகுமார் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.சிவகுமாரின் பிஆர்ஓவும் பின்னர் இதுகுறித்து தனியாக அறிக்கை அனுப்பியிருந்தார்.

 

‘மட்டமான படங்கள் சகிக்காமல் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநரானேன்!’- மணிரத்னத்தின் ஊமைக் குசும்பு

Conversations With Maniratnam Irks Film Makers

எழுபதுகளில் நான் பார்த்த மோசமான படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றின. தமிழ் சினிமாவைக் காப்பாற்றத் தூண்டின, என மனம் போன போக்கில் பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

கான்வர்சேஷன் வித் மணிரத்னம் என்ற புத்தகத்தில் அவரது பேட்டி இடம்பெற்றுள்ளது. பொதுவாக அதிகம் பேசாதவர் என்று அறியப்படும் மணிரத்தனம், இந்தப் பேட்டியில் நிறைய பேசியுள்ளார். அப்படி பேசியதால்தான் இவரது மனதுக்குள் எத்தனை இருட்டு நிறைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இது:

‘ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ.ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எழுபதுகளில் வந்த மட்டமான தமிழ்ப் படங்கள்தான், தமிழ் சினிமாவை நாமாவது காப்பாற்ற வேண்டும் என என்னை உணரவைத்தது.

பாலசந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல குப்பையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், கோபப்பட்டுதான் நான் சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்தே இருக்கமாட்டேன்," என்கிறார் மணிரத்னம்.

மணிரத்னம் எடுத்ததில் எது ஒரிஜினல், எது நல்ல படம் என்பதை அவரே விளக்கிச் சொன்னால்தான் உண்டு. தொடர்ந்து 4 தோல்விப் படங்கள் தந்தவர் இதே மணிரத்னம்தான். அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு புராணத்தைக் கட்டிக் கொண்டு அழும், இவர் நாயகன் எடுத்த கதையை முக்தா சீனிவாசன் கடந்த ஞாயிறன்று பிரித்து மேய்ந்துவிட்டார்.

எழுதுபதுகளில் பல அருமையான படைப்புகள் வந்தன. எழுபதுகளில் இவர் குறிப்பிடுவது பாலச்சந்தரையும், போனால் போகட்டுமென்று மகேந்திரனையும் மட்டுமே.

அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதரையோ பாலுமகேந்திராவையோ, ஏன் இன்றும் வியக்க வைக்கும் படைப்பான அவள் அப்படித்தான் தந்த ருத்ரையாவையோ விட்டுவிட்டது ஏனோ.. எழுதுபதுகளில்தான் பாரதிராஜா என்ற சினிமா புரட்சியாளன் அழுத்தமாக தடம் பதித்தான் என்பதும் இந்த இருட்டு ஸ்பெஷலிஸ்ட் மணிரத்னத்துக்கு தெரியாமல் போனது ஏனோ?

'மணிரத்னம் தன் படங்களின் நேர்மை குறித்த யோக்கியமான விவாதத்தை முதலில் தொடங்கி வைக்கட்டும். மற்ற படைப்பாளிகளை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை!' - இது மணிரத்னத்தின் பேட்டி குறித்து இன்றைய படைப்பாளி ஒருவரின் காட்டமான விமர்சனம்!

நியாயம்தானே!

 

சென்னை அல்லது ஹைதராபாதில் முதியோர் இல்லம் கட்டுகிறாராம் ஹன்சிகா!

Hansika Plans A Old Age Home

தமிழில் நான்கு படங்களும், தெலுங்கில் நான்கு படங்களும் வைத்துக் கொண்டு, சக நடிகைகளின் பொறாமையை ஏகத்துக்கும் சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா, தனக்கு ஏன் இவ்வளவு வாய்ப்புகள் குவிகின்றன என்பதற்கு விளக்கம் சொன்னார்.

அதில், "அனாவசியமாக யாரிடமும் நான் கோபித்துக் கொண்டதில்லை. சிரித்துக் கொண்டே இருப்பேன். என் சிரிப்பு மற்றவர்களையுமம கூலாக்கிவிடும். ஷூட்டிங் நேரம் தவறியதேயில்லை. யாருடனும் எனக்குப் போட்டியில்லை.

தயாரிப்பாளராக ஆசை உள்ளது. விரைவில் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.

22 குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். அவர்களின் சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணிகள் எல்லாவற்றையுமே நானே கவனித்துக் கொள்கிறேன்.

சிறுவயதில் பண்டிகை நாட்களில் எனது அம்மா அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அங்கேதான் பண்டிகைகளை கொண்டாடுவோம். அப்போதிலிருந்தே ஆதரவற்றவர்கள் மேல் எனக்கு பாசம் அதிகம்.

வயதானவர்களை அவர்களின் பிள்ளைகளே ஒதுக்கி வைப்பது வேதனை அளிக்கிறது. இதுபோல் கைவிடப்படுகிறவர்களுக்காக முதியோர் இல்லம் கட்ட திட்டமிட்டு உள்ளேன். சென்னை அல்லது ஐதராபாத்தில் இந்த இல்லத்தை கட்டுவேன்," என்று கூறியுள்ளார்.

 

எதிர்பாராத பரிசுகளை கொடுத்து அசத்தும் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சி

sun express show

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை கொடுத்து அசத்துகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி பிரபலமாகத் தொடங்கியுள்ளது.

நம் வீட்டில் ரிப்பேராக உள்ள பழைய பொருட்களை மாற்றவேண்டுமா? கடை கடையாக ஏறி அதை எக்சேஞ்ச் ஆபரில் மாற்றிக்கொண்டு வருவோம். ஆனால் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் அவர்களே நம் வீடு தேடி வந்து நமக்கும் தேவையான பொருட்களை இலவசமாக கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். பொருளை வாங்குபவர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிச் தொகுப்பாளர் தீபக் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் போதும் அவர்களுக்கான பொருள் பரிசாக கிடைத்துவிடும்.

இந்த வாரம் சன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சிக்காக தீபக் சென்றது வேலூர். வேலூர் கல்லூரி மாணவர்களிடம் விளையாடிய தீபக் ஸ்மார்ட் போனை வைத்து எக்ஸ்பிரஸ் ரவுண்டை விளையாடினார். தீபக் கேட்ட மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விக்கு சரியான பதிலை கூறி ஸ்மார்ட் போனை ஜெயித்தார் மாணவர் கதிரவன்.

அதேபோல் வேலூரைச் சேர்ந்த சலீம் பாஷா வீட்டிற்கு சென்றது சன் எக்ஸ்ப்ரஸ். தீபக், முதலில் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி ஃப்ரிட்ஜ், சைக்கிளை பரிசாக பெற்றார். அதேபோல் மற்றொரு குடும்பத் தலைவி சரியான பதிலைச் சொல்லி எல்.சி.டி கலர்டிவியை பரிசாக பெற்றார். ஆனால், மற்றொரு கேள்விக்கு தவறான பதிலை கூறியதால் ஏ.சி. மெசினை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டனர்.

அது சரி தீபக் பின்னாடி நிற்கிற பீம்பாய்கள் ஏன் சிரிக்கவே மாட்டேங்கிறாங்க. ஜோக் அடிச்சா கூட சிரிக்க கூடாதுன்னு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்காங்களா என்ன?

வாரந்தோறும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிச்சயம் ஒரு மாற்றத்தை தரும் நிகழ்ச்சிதான் என்கின்றனர் ரசிகர்கள்.
 

இசையில்லாமல் சினிமா இல்லை - இளையராஜா

Music Cinema Inseperable Says Maestro Ilayaraja

சென்னை: இசையில்லாமல் சினிமா இல்லை... இரண்டும் பிரிக்க முடியாதவை என்றார் இசைஞானி இளையராஜா.

சமீபத்தில் சென்னையில் நடந்த à®'ரு விழாவில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, "என்னை இங்கே எல்லோரும் பாராட்டி பேசினார்கள். பாட்டு நன்றாக போட்டு இருக்கிறீர்கள் என்று என்னைப் பாராட்டுவது, 'நீங்க நல்லா மூச்சு விடறீங்க' என்று சொல்வது போல் இருக்கிறது.

சினிமா என் மீது வந்து போகிறது. நான், 'ஸ்கிரீன்.' ஸ்கிரீன் இல்லாமல், சினிமா à®"ட்ட முடியாது. இசை இல்லாமல், சினிமா இல்லை.

ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். சமீபத்தில் நானும், ரஜினியும், மோகன்பாபுவும் à®'ரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

எனக்கு ஞாபகம் இல்லாத விஷயங்களை எல்லாம் ரஜினி ஞாபகப்படுத்தினார். அந்தக் காலத்தில் à®'ரு முறை ரஜினிகாந்துக்கு à®'ரு குறிப்பிட்ட படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. அந்த படத்தில் அவரை நடிக்கும்படி, நான் சொல்லி அனுப்பினேன். அதன்பிறகு அவர் அந்த படத்தில் நடித்தார்.

"சாமி (இளையராஜா) சொன்னதால்தான் அந்த படத்தில் நடித்தேன். படம் வெற்றி பெற்றது'' என்று பழைய சம்பவங்களை எல்லாம் ரஜினி எனக்கு ஞாபகப்படுத்தினார்.

இப்படிச் சொல்வதால், நான் அவரை விட பெரிய ஆள் என்று அர்த்தம் அல்ல. ரஜினி பெருந்தன்மையானவர் என்பதுதான் உண்மை!'' என்றார்.

 

சோனாவின் அடுத்த தாக்குதல்.. இசையமைப்பாளராக மாறினார்!!

Actress Sona Turns Music Director   

கவர்ச்சி நடிப்பில் கரை கண்ட நடிகை சோனா அடுத்து இசையமைப்பாளராக மாறிப் போவதாக அறிவித்து, புதிதாக வரும் நிலம் புயலுக்கு இணையாக ரசிகர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

தானே கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்தில்தான் இந்த இசைஅவதாரத்தை எடுக்கப் போகிறாராம்.

இதற்கு முன்னோட்டமாக à®'ரு ஆல்பத்துக்கு இசையமைப்பதில் மும்முரமாக உள்ளாராம். அதனை விரைவில் வெளியிடவும் போகிறாராம்.

கனிமொழி படத்தைத் தயாரித்ததில் ஏற்பட்ட நஷ்டம், நட்பு வட்டாரம் செய்த துரோகம், வீட்டுத் தகராறு என ஏகப்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி புண்பட்ட மனதை, இசை விட்டு ஆற்றும் முயற்சியாகவே இதனைச் செய்கிறாராம் அம்மணி. அதுமட்டுமல்ல, தன் சொந்தக் குரலில் பாடவும் செய்கிறாராம்.

அய்யோ... தமிழ் சினிமா இசைக்கு இன்னும் என்னவெல்லாம் சோதனைகள் காத்திருக்கின்றனவோ!

 

பிரியாணி ஹீரோயின் யார்? : ஹன்சிகா ரிச்சா மோதல்

Who is Heroine? Hansika Richa conflict

சென்னை: வெங்கட்பிரபுவின் பிரியாணி படத்தில் ஹீரோயின் யார் என்பதில் ஏற்பட்ட மோதலில் ரிச்சா கங்கோபாத்யாய் வெளியேறினார். வெங்கட்பிரபு  இயக்கும் படம் 'பிரியாணி. கார்த்தி ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ரிச்சா கங்கோபாத்யாயிடம் வெங்கட் பிரபு பேசி வந்தார். ஆனால்  அவரை ஒப்பந்தம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார். இந்தநிலையில் வேறு ஹீரோயின்களுடனும் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். சமீபத்தில்  ஹன்சிகாவிடம் கதை சொன்னார். அவருக்கு பிடித்துவிடவே நடிக்க ஒப்புக்கொண்டார். மற்றொரு ஹீரோயினாக ரிச்சா நடிப்பார் என்று தகவல் வெளியானது.  ஆனால் இதை அவர் ஏற்கவில்லை.

இதையடுத்து ஹீரோயின் யார் என்பதை முடிவு செய்யும்படி இயக்குனரிடம் வாக்குவாதம் செய்தாராம். அவரை இயக்குனர் சமாதானம் செய்தார். 'படத்தில் 2  ஹீரோயின்கள் இருப்பதால் உங்களது கதாபாத்திரம் சற்று மாற்றங்களுடன் இடம்பெறுகிறது என்று விளக்கினார். ஆனால் அதை ரிச்சா ஏற்கவில்லை.  இதையடுத்து படத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரிச்சா, 'என்னுடைய கதாபாத்திரத்தில் மாற்றம்  செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை. எனவே படத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதே நேரம், சம்பள பிரச்னையால்தான் ரிச்சா  விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் மற்றொரு ஹீரோயினாக நீது சந்திரா நடிப்பார் என தெரிகிறது.
 

கிசு கிசு - கோடம்பாக்கம் கோடங்கி

Kodambakkam Kodangi

வேல்டு ஹீரோவும், பெல் இயக்கமும் 25 வருஷத்துக்கு பிறகு இணையப்போறதா தகவல் வெளியாச்சாம்... வெளியாச்சாம்... இதுபத்தி ரெண்டுபேரும்  பேசினாங்களாம். அந்த பேச்ச பத்தி ரெண்டுபேருமே வெளில சொல்றதில்லன்னு முடிவு பண்ணிருக்காங்களாம். ஆனாலும் இவங்க மூலமாவே மேட்டர்  வெளியே கசியுதாம்... கசியுதாம்... இது எல்லாமே பரபரப்புக்குத்தான், ரெண்டு பேரும் எப்போவும் ஒண்ணு சேரமாட்டாங்கன்னு இண்டஸ்ட்ரிகாரங்க  பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

எமியான இங¢கிலீசு நடிகை பிரமாண்ட இயக்குனரு படத்துல நடிக்கிறாரு. சீனால பாட்டு சீன் படமாக்கினாங்களாம். இந்த சீனை பத்தி டுவிட்டர்ல நடிகை  எழுதிட்டாராம்... எழுதிட்டாராம்... இதை படிச்சிட்டு இயக்கம் கடுப்பாயிட்டாராம்... கடுப்பாயிட்டாராம்... படம் சம்பந்தமா என் பர்மிஷன் இல்லாம எந்த  தகவலையும் வெளியே சொல்லக்கூடாதுÕன்னு நடிகையை லெப்ட் ரைட் வாங்கிட்டாராம்... வாங்கிட்டாராம்...

ஆர்யமான ஹீரோவையும் அவரோட ஜோடி சேர்ற ஹீரோயினயும் லிங்க் பண்ணி கிசுகிசு கிளம்புறது வாடிக்கையாம்... வாடிக்கையாம்... இது பத்தி அவர் கிட்ட  கேட்டாலும் டென்ஷனாகாம கூலா பதில் சொல்வாராம். ஆனா இரண்டாவது முறையா ஜோடி சேந்திருக்கற நயன ஹீரோயினோட சுத்தறீங்களாமேனு  லேட்டஸ்ட் கிசுகிசு பத்தி கேட்டா மட்டும் ஹீரோ உர்ராயிடுறாராம்... உர்ராயிடுறாராம்... வழக்கமா கிசுகிசுக்கு கவலப்படாம மத்த ஹீரோக்களையும்  கிண்டலடிச்சி தொங்கல்ல விட்ட ஆர்யமான ஹீரோவுக்கு லேட்டஸ்ட் கிசுகிசு மட்டும் கோபத்த வரவழைக்குது. அது ஏன்னு கோடம்பாக்க ஆட்கள்  கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்...
 

நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு?

Sivakumar Family Denies Reports On His Health

நடிகர் சிவகுமாருக்கு உடல்நிலை சரியில்லை என்று வந்த செய்திகளுக்கு அவர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகுமார் திடீரென்று கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை ஒரு தகவல் பரவியது.

விசாரித்தபோது, 'இது வெறும் வதந்திதான்'' என்று சிவகுமார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

"சிவகுமாரும், குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை சென்றார்கள். அப்போது, சிறுநீரக கல் பரிசோதனை செய்து கொள்வதற்காக, சிவகுமார் அங்குள்ள வேதநாயகம் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் மகன் நடிகர் சூர்யாவும் சென்றிருந்தார்.

சிவகுமாருக்கு டாக்டர் கந்தசாமி மருத்துவ பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிந்து சிவகுமார் வீடு திரும்பி விட்டார். அவர் நலமாக உள்ளார்,'' என்று சிவகுமார் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

சிவகுமாரின் பிஆர்ஓவும் பின்னர் இதுகுறித்து தனியாக அறிக்கை அனுப்பியிருந்தார்.

 

டிரஸ் மாற்றுவதை செல்போனில் படம்பிடித்த நபர் .. டிவி நடிகைகள் கதறல்.. ஷூட்டிங் ரத்து

சென்னை: சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் டி.வி. தொடர் படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகைகள் உடைமாற்றுவதை செல்போனில் ஒரு மர்ம நபர் வீடியோ படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

குரோம்பேட்டை துர்கா நகரில் உள்ள கோவில் ஒன்றில் ஒரு டிவி தொடரின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது சின்னத் திரை நடிகைகள் உடை மாற்றுவதற்கு கோவில் அருகில் அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அந்த அறைக்கு உடைமாற்ற சென்ற நடிகைகள் அந்த அறையில் செல்போன் ஒன்று இருந்ததையும், அதில் வீடியோ ஆனில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் உடைமாற்றும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இதையடுத்து செல்போனில் பதிவாகியிருந்த காட்சிகளை நடிகைகள் அழித்துவிட்டனர். இந்த காட்சிகளால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெளியில் இந்தக் காட்சிகள் பரவினால் பெருத்த அவமானம் ஏற்படுமே என்றும் அழுதனர். நடிக்கவும் மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

செல்போனை டிரஸ்ஸிங் ரூமில் வைத்த நபர் தப்பி விட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் எதுவும் தரப்படவில்லை. ஆனால் துர்காநகர் முழுவதும் இந்த விவகாரம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

9 வருடமாக இழுத்து வந்த ஆபாசப் பட வழக்கிலிருந்து ஷகீலா ஒரு வழியாக விடுதலை

Shakeela Gets Freedom After 9 Years

நெல்லை: ஆபாசப் படத்தில் நடித்ததாக நெல்லை மாவட்ட கோர்ட்டில் கடந்த 9 வருடமாக இழுபறியாக இருந்து வந்த வழக்கிலிருந்து கவர்ச்சி நடிகை ஷகீலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போலீஸார் ரெய்டு போனார்கள். அங்கு அப்போது ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சோதனையின்போது சென்சார் போர்டின் அனுமதி பெறாத ஆபாசக் காட்சிகள் அடங்கிய படச்சுருளை போலீஸார் கைப்பற்றினர். அதில் ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து ஷகீலா, தினேஷ், தியேட்டர் மேலாளர் பாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பாஸ்கர் தப்பி விட்டார். மற்ற 9 பேரும் கைது செய்யப்பட்டு நெல்லை குற்றவியல் முதலாவது கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.

கடந்த 9 வருடமாக இந்த வழக்கு இழுத்துக் கொண்டிருந்தது. விசாரணைக்காக சில முறை ஷகீலா கோர்ட்டுக்கு வந்துள்ளார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராமலிங்கம் நேற்று தீர்ப்பை அளித்தார். தீர்ப்பையொட்டி ஷகீலா, தினேஷ் உள்ளிட்ட 9 பேரும் வந்திருந்தனர். அப்போது அனைவரையும் விடுதலை செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சந்தோஷத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி கோர்ட்டை விட்டுக் கிளம்பிச் சென்றனர்.

 

நவ.5 முதல் சினிமாவில் ஆட்டம் போட கரீனா ரெடி

Kareena Returns Work On November 5

திருமணம், ரிசப்சன் முடிந்து ஒருவழியாக மீண்டும் சினிமா ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார் கரீனா கபூர் நவம்பர் 5 முதல் அவர் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சயீப் அலிகான் - கரீனா திருமணம்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊடகங்களின் ஹாட் டாபிக். எந்த ஒரு விழாவையும் விடாமல் கவர் செய்து வெளியிட்டனர்.

திருமணம், ரிசப்பன், தேனிலவு முடிந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்ல தயாராகிவிட்டாராம் கரீனா. திருமணத்திற்கு முன்பே பேபு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் மீதி காட்சியில் நடிக்கவேண்டியுள்ளது. ஃபெவிகால், தபாங் 2 ஆகிய படங்களில் நடிக்கவும் கரீனா கையெழுத்திட்டிருக்கிறார். அதற்கான ஷூட்டிங்கில் நவம்பர் 5 ம் தேதி முதல் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஃபெவிகால், தபாங் 2 படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் கரீனா. தபாங் 2 படத்தில் ஐட்டம் பாடலில் ஆட கரீனா ஒத்துக்கொண்டதற்காக பி.எம்.டபுள்யூ கார் ஒன்றினை சல்மான்கான் பரிசளித்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.