அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் - ஸ்டன்ட் மாஸ்டரின் பரபரப்பு பேச்சு

அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் - ஸ்டன்ட் மாஸ்டரின் பரபரப்பு பேச்சு

சென்னை: அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்' என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அறிமுக இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள ‘‘வலியுடன் ஒரு காதல்'' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஞ

இவ்விழாவில் தயாரிப்பாளர் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல். நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், ‘சிலந்தி' ஆதிராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித்ரா லெட்சுமணன், விஜய முரளி உள்ளிட்ட திரளான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் களஞ்சியம் பேசுகையில், "திரையுலகில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஆனாலும் சிறிய முதலீட்டில் இந்த 'வலியுடன் ஒரு காதல்' மாதிரி உருவான எனது 'ஊர்சுற்றி புராணம்' திரைப்படத்தில் இருந்து நடிகை அஞ்சலி பாதியில் ஓடிவிட்டார்.

இதுபற்றி எத்தனையோ முறை மேற்படி சங்கங்களிடம் நான் புகார் கொடுத்து விட்டேன். யாரும் அதைப்பற்றி என்ன ஏது என்று கூப்பிட்டு விசாரிக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு தயாரிப்பாளர் பல கோடி ரூபாய் போட்டு இந்தமாதிரி சிறிய படங்களில் முதலீடு செய்து, படம் வெளிவரும் என நம்பிக்கையில் இருக்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை பேசித் தீர்க்கத்தானே இதுமாதிரி சங்கங்கள் உள்ளது. ஆனால் அவர்கள், அவர்களது கடமைகளை செய்வதில்லை. தமிழ் சினிமாவில் புதிய சிறு தயாரிப்பாளர்கள் வருவது அஞ்சலி மாதிரி நடிகைகளால் கேள்விக்குறியாகி உள்ளது.

அப்புறம் எப்படி சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வருவார்கள், தமிழ் சினிமா தொழிலாளர்கள் எவ்வாறு பிழைப்பார்கள், இதற்கெல்லாம் இதுமாதிரி சங்கங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், எனது 'ஊர்சுற்றி புராணம்' வெளிவர வேண்டும் என்றார்.

ஜாகுவார் தங்கம்

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய ஜாக்குவார் தங்கம், "இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்கமாட்டோம்.

இந்த பிரச்னைக்கு இன்றே தீர்வு காண களமிறங்குவோம், அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம். இனி இதுமாதிரி பிரச்னைகளில் நடிகைகள் பாதியில் கழன்று கொண்டார்கள் என்றால் அவர்களிடம் பேசி மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் அல்லது அதுவரை அப்படப்பிடிப்பிற்கான செலவை வட்டியுடன் வசூலிப்பது என முடிவெடுப்போம்.

கில்டில் செயலாளராக இருக்கும் நான், தற்போதைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினர் எனும் பொறுப்புடன் பேசுகிறேன். தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் சிறுமுதலீட்டு படங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பவர், அவரிடம் உங்கள் புகாரை ஒரு முறை அளியுங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்," என பரபரப்பாக பேசி அமர்ந்தார்.

 

ரசிகர்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள்... தீபாவளி வாழ்த்துகள் - அஜீத்

சென்னை: ரசிகர்கள் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது. தமிழக மக்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துகள் என அறிக்கை வெளியிட்டுள்ளார் அஜீத்.

தீபாவளியை முன்னிட்டு நேற்று அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள்... தீபாவளி வாழ்த்துகள் - அஜீத்

இந்நிலையில் சில இடங்களில் ரசிகர்கள் ஆர்வத்தில் அரங்குகளை சேதப்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து ‘வீரம்' படப்பிடிப்பில் இருக்கும் அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைப்படம் என்பது அனைவரும் பார்த்து மகிழவே எடுக்கப்பட்டது.எனது ரசிகர்களின் அன்பை நான் அறிவேன். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில திரையரங்கில் ரசிகர்கள் சேதப்படுத்துவதாக வந்த செய்தி என்னை கவலை அடைய செய்துள்ளது. நாம் யார் மனதையும் புண்படுத்தவோ, இல்லை அவர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவோ கூடாது.

தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் சந்தோஷத்துடனும்,பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்.

தமிழ் மக்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.

 

அழகுராஜா, பாண்டிய நாடு நாளை ரிலீஸ்!

தீபாவளி ஸ்பெஷல் படங்களாக அறிவிக்கப்பட்ட மூன்றில் ஆரம்பம் நேற்றே வெளியாகிவிட்ட நிலையில், மற்ற இரு படங்களான அழகு ராஜாவும் பாண்டிய நாடும் நாளை உலகமெங்கும் வெளியாகின்றன.

அழகுராஜா, பாண்டிய நாடு நாளை ரிலீஸ்!

முதலில் அழகுராஜா படத்தை இன்று, நவம்பர் 1-ம் தேதிதான் வெளியிடுவதாக இருநாதார்கள். ஆனால் இந்தத் திட்டத்தை மாற்றிக் கொண்டு, தீபாவளி தினமான நாளையே வெளியிடத் தீர்மானித்து மாற்றிவிட்டனர்.

இதற்கிடையே, படத்தின் பெயரான ஆல் இன் ஆல் அழகுராஜாவிலிருந்து, ஆல் இன் ஆல் என்பதை மட்டும் தூக்கிவிட்டனர்

உலகம் முழுவதும் இந்தப் படம் அதிக அரங்குகளில் வெளியாகிறது.

பாண்டிய நாடு

அழகுராஜா, பாண்டிய நாடு நாளை ரிலீஸ்!

விஷால் நடித்த பாண்டிய நாடு படமும் நாளைதான் வெளியாகிறது. இந்தப் படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே நல்ல விதமான பேச்சுகள் நிலவி வருவது, படத்தின் முன்பதிவை அதிகரிக்க வைத்துள்ளது.

 

அழகுராஜா படத்துக்கு வரி விலக்கு - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கு வரிவிலக்கு அளித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற தலைப்பில், ஆல் இன் ஆல் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தனர். உடனடியாக வரி விலக்கும் கிடைத்தது.

அழகுராஜா படத்துக்கு வரி விலக்கு - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேலன் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை ஸ்டூடியோ கிரீன் படநிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

2-ந்தேதி (நாளை) இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் படத்துக்கு 29.10.2013 அன்று வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளளது.

ஏமாற்று வேலை

தமிழக அரசிடம் தயாரிப்பளார் கொடுத்துள்ள விண்ணப்பத்தில் படத்தின் பெயர் அழகுராஜா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் விளம்பரங்கள், போஸ்டர்களில் ஆல் இன் ஆல் அழகுராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஆல் இன் ஆல் என்ற ஆங்கிலப் பெயரை மறைத்து அரசை ஏமாற்றி தமிழ் பெயருக்கு உரிய வரிச் சலுகையை தயாரிப்பாளர் பெற்றுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.18 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, படத்துக்கு அரசு வரிவிலக்கு அளித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்", என்று கூறியயிருந்தார்.

நோட்டீஸ்

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தயநாராயணா முன்னிலையில் வசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சுந்தரேசன், ஜோயல் ஆகியோர் ஆஜரானார்கள்.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து அரசு முதன்மை செயலாளர், வணிகவரித் துறை கமிஷனர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் வருகிற 7-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.