ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட ஏழு புதுப் படங்கள்

ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் ஏழு புதிய படங்களைத் தயாரிக்கிறது.

நிறுவனத்தின் பெயர் பாஃக்ஸ் அண்ட் க்ரோவ் ஸ்டூடியோ.

ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட ஏழு புதுப் படங்கள்

1.ஜனவரி மழையில் ஒரு ஹாய்

2.கடவுள் இருக்கான் குமாரு

3.லந்து

4.கொள்ளக் கூட்ட பாஸ்

5.வட்டச் செயலாளர் வண்டு முருகன்

6.நீங்க புடுங்கிற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணிதான்

7.கோக்

இந்த 7 படங்களின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

இந்த ஏழு படங்களும் காமெடியை பின்னணியாகக் கொண்டு குறுகிய கால தயாரிப்பில் சிறு பட்ஜெட் படங்களாக தயாராகவுள்ளன.

படங்களின் கதையையும் ராஜேஷ் கண்ணன் எழுதியதோடு மட்டுமல்லாமல் அவற்றில் ‘ஜனவரி மழையில் ஒரு நாள்' மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். ஏற்கெனவே இவர் பெருமான் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

இதுகுறித்து ராஜேஷ் கண்ணன் பேசுகையில், "எனக்கு சினிமா என்றால் உயிர். ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். பல வேலை பார்த்திருக்கிறேன்.

சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அஜித் எனக்கு நல்ல நண்பர். ஒருநாள் கேட்டார். வாழ்க்கையில் என்ன ப்ளான் வச்சிருக்கேன்னு.

நான் பல வேலை செய்வதை சொன்னேன். இப்படி பலவற்றில் ஈடுபடுவது சரியாக இருக்காது. ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு நிறுவனம் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் தேவை விசிட்டிங் கார்டு என்று தெளிவு படுத்தி தொடங்கி வைத்தார்.

அதை மறக்க மாட்டேன். நான் பலரிடம் கதை சொல்லி 52 கதைகள் உருவாக்கிவிட்டேன். ஒருகட்டத்தில் சலித்துவிட்டு இம் முயற்சியில் ஈடுபட முடிவு செய்தேன். நண்பர்கள் கை கொடுத்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை எல்லாமே மேட் இன் ப்ரண்ட்ஷிப் என்றுதான் சொல்வேன். புதியதை வரவேற்கத் தயாராக இருக்கும் ரசிகர்களை நம்பி இறங்கியிருக்கிறோம்," என்றார்.

 

லிங்கா உண்மையிலேயே நஷ்டமா..? சரி பார்க்க பொறுப்பாளர் நியமனம்!

லிங்கா படம் நஷ்டம் என்று கூறும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கணக்குகளைச் சரிபார்க்க ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார் ரஜினிகாந்த் என்று தகவல் கிடைத்துள்ளது.

கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த லிங்கா கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் 3 ஆயிரம் ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது.

லிங்கா உண்மையிலேயே நஷ்டமா..? சரி பார்க்க பொறுப்பாளர் நியமனம்!

தமிழ் நாட்டில் 750 தியேட்டர்களில் திரையிட்டனர். ரஜினி 4 வருடங்களுக்குப் பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான திரையரங்குகளில் சராசரியாக ரூ 250 முதல் 300 வரை டிக்கெட் விற்கப்பட்டது. முதல் நாள் ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலித்தனர்.

ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை மூன்றாவது நாளிலிருந்தே பிரச்சாரத்தை ஆரம்பித்தனர் சிலர். குறிப்பாக படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் ஒருவர் படம் செத்துவிட்டது என்றெல்லாம் கூறினார்.

முதல் மூன்று நாளில் உண்மையாக வசூலான தொகையை கணக்கிலேயே இவர்கள் காட்டவில்லை. குறிப்பாக முதல் நாளில் ரூ 10, 30, 50 என டிக்கெட் வசூலிக்கப்பட்டதாக புற நகர்ப் பகுதி அரங்குகளில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அரங்கம் நிரம்பி வழிந்த போதிலும், 100 முதல் 200 பேர் வரைதான் படம் பார்த்ததாக டிசிஆர் எனப்படும் வசூல் பதிவேட்டில் கணக்கு காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா வசூல் விவரங்கள் ஒருபோதும் உண்மையை வெளிப்படுத்தியதில்லை. எனவே இதில் பெரும் பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கே ஏற்படுகிறது.

லிங்காவிலும் இந்தப் பிரச்சினைதான் எதிரொலித்தது. உண்மையான வசூல் விவரத்தை வெளியிட யாரும் தயாராக இல்லை. பொய்க் கணக்கு காட்டி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்தப் பிரச்சினையை தொடர்ந்து முன்னிறுத்தி உண்ணாவிரதம் போன்ற முயற்சிகளில் இறங்கினர் சில விநியோகஸ்தர்கள்.

இப்பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் லிங்கா படத்தால் உண்மையிலேயே நஷ்டமா என்று கணக்குப் பார்க்க ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம்.

கோவை ஏரியாவின் வினியோகஸ்தரான இவர்தான் முன்பு பாபா, குசேலன் பிரச்சினைகளின் போது ரஜினிக்கு உதவியாக இருந்தார்.

உண்மையாகவே அதிக நஷ்டம் அடைந்திருப்பவர்கள் யார் என்று பார்த்து அவர்களுக்கு ஓரளவு தொகையை திரும்பத் தர முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதுவம் தெரிவிக்கப்படவில்லை.

 

விஜய்யை அடுத்து அஜீத் படத்திற்கு ட்யூன் போடும் அனிருத்

சென்னை: கொலவெறி புகழ் அனிருத் அஜீத்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

கொலவெறி பாடல் மூலம் பிரபலமான அனிருத் கோலிவுட்டில் பிசியான இயக்குனர்களில் ஒருவர். தனுஷ், சிவ கார்த்திகேயன், சிவா படங்களுக்கு இசையமைத்த அனிருத்துக்கு கத்தி மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய்யை அடுத்து அஜீத் படத்திற்கு ட்யூன் போடும் அனிருத்

கிடைத்த வாய்ப்பை அவர் நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார். விஜய்யை அடுத்து அஜீத் படத்திற்கு இசையமைக்க விரும்பினார் அனிருத். என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அவர் கைநழுவவிட்டார்.

இந்நிலையில் சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து மீண்டும் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையாம். இந்த படம் நகரத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாம். நகரத்திற்கு ஏற்ற துள்ளல் இசையை கொடுக்கவே அனிருத்துக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம்.

அஜீத் இரண்டு மாதம் பிரேக் எடுத்த பிறகு சிவாவின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஷமிதாபில் அக்ஷரா ஹாஸனின் பின்னழகை முத்தமிடும் தனுஷ்

மும்பை: ஷமிதாப் படத்தில் வரும் ஒரு காட்சியில் தனுஷ் அக்ஷரா ஹாஸனின் பின்னழகை முத்தமிடுகிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள இரண்டாவது இந்தி படம் ஷமிதாப். பால்கி இயக்கியுள்ள இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அம்மா சரிகா, அக்கா ஸ்ருதி வழியில் ஹீரோயின் ஆகியுள்ளார்.

ஷமிதாபில் அக்ஷரா ஹாஸனின் பின்னழகை முத்தமிடும் தனுஷ்

இந்த படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. ட்ரெய்லரின் பெரும் பகுதியில் அமிதாபும், தனுஷும் தான் வருகின்றனர். ஒரு காட்சியில் அக்ஷரா தனுஷ் மீது உள்ள கோபத்தில் kiss my ass குரங்கே என்று கூறுகிறார்.

அவர் ஏதோ கோபத்தில் சொன்னதை தனுஷ் சீரியஸாக எடுத்துக் கொண்டு அக்ஷராவின் பின்னழகை முத்தமிடுகிறார். இந்த முத்தக் காட்சி கவர்ச்சி கடலான பாலிவுட்டுக்கே சற்று புதிது தான். எப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்க.

இது போன்ற போல்டான காட்சிகளில் நடித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது ஒன்றும் தனுஷ்ஜிக்கு புதிது அல்ல.

 

த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது

சென்னை: பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 2002-ல் ‘மவுனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது

முன்னணி நாயகி

கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தி படமொன்றிலும் நடித்துள்ளார்.

வருண் மணியன்

பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷாவுக்கு திடீரென திருமணம் முடிவாகியுள்ளது. தயாரிப்பாளர் வருண் மணியனை மணக்கிறார். இவர் தமிழில் ‘வாயை மூடி பேசவும்', ‘காவியத்தலைவன்' படங்களை தயாரித்துள்ளார். தொழில் அதிபராகவும் இருக்கிறார்.

இன்று நிச்சயதார்த்தம்

த்ரிஷா-வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மோதிரம் மாற்றி...

நிகழ்ச்சியில் த்ரிஷாவும், வருண்மணியனும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். உறவினர்களுக்கு ருசியான விருந்தும் பரிமாறப்பட்டது.

நாளை விருந்து

தனது திருமண நிச்சயதார்த்ததுக்காக சக நடிகர், நடிகைகளுக்கு திரிஷா நாளை விருந்து கொடுக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

நடிப்பு தொடரும்...

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடரப் போவதாக த்ரிஷா ஏற்கெனவே அறிவித்தது நினைவிருக்கலாம்.

 

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலைப் படமாக்கும் வசந்த்.. சுதா ரகுநாதன் இசை!

அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் நாவலை படமாக்குகிறார் இயக்குநர் வசந்த். இதன் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது.

கேளடி கண்மணி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்த். ஆசை, நேருக்கு நேர், ரிதம் போன்றவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலைப் படமாக்கும் வசந்த்.. சுதா ரகுநாதன் இசை!

அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் மூன்று பேர் மூன்று காதல். அந்தப் படத்துக்குப் பிறகு தற்போது தண்ணீர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக தன் பெயரை வசந்த் சாய் என்று மாற்றிக் கொண்டுள்ளார் வசந்த்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகியான சுதா ரகுநாதன். இதற்கு முன் இளையராஜா இசையில் பாடல் பாடியுள்ளார் சுதா ரகுநாதன்.

தண்ணீர் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய நாவலைத்தான் அதே பெயரில் படமாக்குகிறார் வசந்த்.

இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இயக்குநர் பாரதிராஜா, எழுத்தாளர் அசோகமித்திரன், சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

பிரபல தெலுங்கு நடிகர் எம்எஸ் நாராயணா மரணம்!

பிரபல தெலுங்கு நடிகர் நாராயணா இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 63.

பீமாவரத்தைச் சேர்ந்த நாராயணா, 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவற்றில் பல படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு நேரடி தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் எம்எஸ் நாராயணா மரணம்!

ஐந்து தடவை சிறந்த காமெடி நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

எம்.எஸ். நாராயணா உடலுக்கு தெலுங்கு நடிகர்- நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள விகராபாதில் இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.

 

டூரிங் டாக்கீஸ்... ஏழு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்த இளையராஜா!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த மாதம் 30-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

படம் குறித்து இயக்குனர் எஸ். ஏ.சியுடன் பேசினோம்.

"சினிமாவுக்கு வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த சினிமாவில் என்னை ஞாபகம் செய்கிற மாதிரி எதையாவது விட்டு போக ஆசைப்ட்டேன். அதற்காக எடுக்கப்பட்ட படம்தான் டூரிங் டாக்கீஸ்.

டூரிங் டாக்கீஸ்...  ஏழு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்த இளையராஜா!

இளையராஜாவும் நானும் பல படங்களில் பணியாற்றியிருந்தாலும் இந்த படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கார். இந்த படம் ஒரே டிக்கெட்டில் இரண்டு கதைகள் இருக்குற மாதிரி பண்ணியிருக்கேன். முதல் பாதியில் எழுபத்தி ஐந்து வாலிபன் தன்னோட காதல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறான் எப்ன்பதை காட்டியிருக்கேன்.

டூரிங் டாக்கீஸ்...  ஏழு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்த இளையராஜா!

இரண்டாம் பாதியில் ஒரு கிராமத்து பொண்ணு இந்த சமூகத்தில் உள்ள துஷ்டர்களால் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை காட்டியிருக்கேன்.

டூரிங் டாக்கீஸ்...  ஏழு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்த இளையராஜா!

முதல் பாதி கதையில் நானே நடிச்சிருக்கேன். நான் கதை சொல்லப் போகும்போது மூன்று பாட்டுதான் வைப்பதாக இருந்தது. படத்தில் ரொம்பவும் ஈடுபாடு வந்ததால் இளையராஜா ஏழு பாட்டு போட்டுக் கொடுத்திருக்கார். அவ்வளவும் சூப்பர் ஹிட் ரகம். ஜனவரி முப்பதாம் தேதி படம் வெளியாகிறது," என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

டூரிங் டாக்கீஸ்...  ஏழு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்த இளையராஜா!
 

மறுபடிம் உங்க படத்திலா?: இயக்குனருக்கு 'டாட்டா' காண்பித்த தளபதி நடிகர்

சென்னை: தளபதி நடிகர் தன்னை வைத்து 2 படங்களை எடுத்த முன்னணி இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ரொம்ப நல்லவர் நடிகரின் படம் மூலம் இயக்குனரானவர் அந்த கள்ளக்குறிச்சிக்காரர். அவர் கோலிவுட் தவிர பாலிவுட்டிலும் படம் இயக்கி வருகிறார். பாலிவுட்டிலும் மனிதருக்கு நல்ல பெயர் உள்ளது.

மறுபடிம் உங்க படத்திலா?: இயக்குனருக்கு 'டாட்டா' காண்பித்த தளபதி நடிகர்

அப்படிப்பட்டவரின் படத்தில் நடிக்க தளபதி நடிகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரின் ஆசையும் நிறைவேறியது. அந்த இயக்குனர் தளபதி நடிகரை வைத்து வரிசையாக இரண்டு படங்களை இயக்கினார். மேலும் தளபதி நடிகரை வைத்து தான் எடுத்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து வெற்றியும் கண்டார்.

நடிகரும் இயக்குனரும் இரண்டாவது முறையாக சேர்ந்தபோது வெற்றிக் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் தளபதி நடிகரை அணுகி மீண்டும் ஒரு படத்தில் நடிக்குமாறு கேட்டாராம். கதையை கூட தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

தளபதி நடிகரோ மூன்றாவது முறையாக அந்த இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். நடிகரின் இந்த செயல் இயக்குனரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். இத்தனைக்கும் அந்த இயக்குனரின் இயக்கத்தில் தங்களின் தளபதி நடித்த 2 படங்களும் சூப்பர் ஹிட் என்று நடிகரின் ரசிகர்கள் ஊரெல்லாம் மைக் செட் வைக்காத குறையாக கூறினார்கள்.

 

பிப் 5-ல் என்னை அறிந்தால்... அய்ங்கரன் அறிவிப்பு

அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்று அப்படத்தை வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமை பெற்ற அய்ங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளியானதால் தியேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கியிருந்ததால் தள்ளிப் போனதாகக் கூறப்பட்டது.

பிப் 5-ல் என்னை அறிந்தால்... அய்ங்கரன் அறிவிப்பு

ஜனவரி 29-ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போயுள்ளது. இதனை படத்தின் வெளியீட்டாளர்களான ஈராஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான அய்ங்கரன் அறிவித்துள்ளது.