நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பட இயக்குனர் மீது நடிகை வழக்கு

World Actress Cindy Lee Garcia Sues Anti Islam Movie Director

வாஷிங்டன்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்ததாகக் கூறிய நடிகை சின்டி லீ கார்சியா அப்படத்தின் இயக்குனர் மீதும், கூகுள் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இஸ்லாம் மார்க்கத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி கலிபோர்னியாவைச் சேர்ந்த நகோலா பெசிலி எடுத்த இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த நடிகை சின்டி லீ கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், à®'ரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது இஸ்லாத்தை, முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான் என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர். மேலும் படத்தை எடுக்கையில் முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர் ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும், இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர் என்றார்.

இதையடுத்து கார்சியா இயக்குனர் நகோலா மீதும், கூகுள் மீதும் லாஸ் ஏஞசல்ஸ் நீதமன்றத்தில் கடந்த புதன்கிழமை வழக்கு தொடர்ந்தார். இதில் கூகுள் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் யூ டியூப்பில் உள்ள படத்தின் பகுதிகளை நீக்குமாறு கூகுளுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

 

ராவணா படத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கிறார் மோகன் பாபு!

Mohan Babu Sporting Six Pack Abs Ravana

தெலுங்கின் சீனியர் நடிகர்களுள் à®'ருவரான மோகன் பாபு விரைவில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக அவர் 6 பேக் உடற்கட்டுக்கு முயற்சிக்கிறாராம்.

புராணப் படங்களுக்கு எப்போதுமே தெலுங்கில் மவுசு அதிகம். அதிலும் ராமர் சார்ந்த கதைகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

இந்த வேடம் போட்டதற்காகவே என்டிஆருக்கு முதல்வர் பதவியை தூக்கிக் கொடுத்த மகா ரசிகர்கள் அவர்கள்.

இப்போதும் நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் புராண கதைகளில் நடித்து வருகின்றனர்.

இப்போது மூத்த நடிகரும் ஏகப்பட்ட ரசிகர்களைக் கொண்டவருமான மோகன் பாபு à®'ரு புராண தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.

படத்தின் தலைப்பு ராவணா. இதில் ராவணன் வேடத்தில் தோன்றும் மோகன் பாபு, தனது உடலைக் கட்டுக் கோப்பாகக் காட்ட, 6 பேக்ஸ் வைக்க முயன்று வருகிறாராம். இதற்கென தனியாக à®'ரு உடற்பயிற்சி நிபுணரையும் அமர்த்தியுள்ளாராம்.

6 பேக் என்பது இன்றைய இளம் நடிகர்களுக்கே சவாலாக உள்ள நிலையில், 60 வயதைத் தாண்டிய மோகன் பாபு அதில் சிரத்தை காட்டுவது, அவரது தொழில் சிரத்தை மற்றும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என தெலுங்கு சினிமா மற்றும் பத்திரிகையுலகம் பாராட்டி வருகிறது.

 

படத்தயாரிப்பில் குதிக்கிறார் அஜீத்?

Ajith Produce Own Film   

விரைவில் தன் சொந்த பட நிறுவனத்தை அறிவிக்கப் போகிறார் அஜீத் என்பதுதான் கோடம்பாக்கம் முழுக்க பேச்சாக இருக்கிறது.

இந்த நிறுவனத்துக்கு குட்வில் புரொடக்ஷன்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும், அட்டகத்தி படம் இயக்கிய ரஞ்சித் முதல் படத்தை இயக்கப்போகிறார் என்றும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் அஜீத்தைச் சந்தித்த ரஞ்சித் குமார், ஒரு கதையைச் சொன்னதாகவும், அது பிடித்துப் போனதால் தானே சொந்தமாக தயாரிக்க அஜீத் முடிவு செய்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்!

ஆனால் அஜீத் தரப்பில் விசாரிக்கும்போது, பலத்த மவுனமே பதிலாகக் கிடைக்கிறது.

அஜீத் இப்போது மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அவற்றில் ஒன்று தொடங்கிவிட்டது.

அஜீத் படம் தயாரிப்பது குறித்து செய்தி கிளம்புவது இது புதிதல்ல. 2010-லும் இப்படித்தான் படக்கம்பெனி தொடங்கி, படத்துக்கு தலைப்பும் வைத்துவிட்டார்கள். ஆனால் அஜீத்தோ, அப்படியா எனக்கு தெரியாதே என அந்த செய்தியை காலி பண்ணிவிட்டார் என்பது நினைவிருக்கலாம்!!

 

சாட்டை, சாருலதா... இன்னிக்கு ரெண்டே ரெண்டுதான்!!

Saattai Charulatha Hit Screens Today   

சென்னை: இன்று வெள்ளிக்கிழமை இரண்டு படங்கள் மட்டுமே ரிலீசாகின்றன, தமிழில்.

இந்த இரண்டில் மிக முக்கியமான படைப்பாக பார்க்கப்படுகிறது சாட்டை.

இயக்குநர் பிரபு சாலமன் முதல் முறையாக ஷாலோம் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அவரது உதவியாளர் அன்பழகன் என்பவர் இயக்கியுள்ளார்.

ஒரு அரசுப் பள்ளியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக் கனி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் திரையுலகம் மற்றும் பத்திரிகையுலகினரால் பெரிதும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு படம் சாருலதா.

சிறையிலிருந்து வந்து புதிய அவதாரம் எடுத்துள்ள (எத்தனை நாளைக்கோ!!) சக்சேனா அன்ட் கோ வெளியிடும் படம்.

இந்த இரு தமிழ்ப் படங்களைத் தவிர, கரீனா கபூர் நடித்து மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள ஹீரோயின் வெளியாகிறது. 19 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

ட்ரெட் எனும் 3டி ஆங்கிலப் படமும் இன்று வெளியாகிறது.

இவை தவிர, ஒரு மலையாளப்படம் (ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா), தெலுங்குப் படமும் (டான் சீனு) வெளியாகின்றன.

 

இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே...

Singam 2 Makes Hansika Unhappy   

சென்னை: சிங்கம் 2 படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லை என்று ஹன்சிகா புலம்பி வருகிறாராம்.

சிங்கம் 2 தமிழ் மற்றும் இந்தியில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் அனுஷ்கா மட்டுமே ஹீரோயின். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுடன், ஹன்சிகாவும் இருக்கிறார். அனுஷ்கா தான் முதல் ஹீரோயின், ஹன்சிகா இரண்டாவது நாயகி தான்.

ஹன்சிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு தற்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று நினைத்து வருத்தப்படுகிறாராம். சிம்புவுடன் 2 படங்கள், ஆர்யாவுடன் ஒரு படம் என்று பிசியாக இருக்கும் அவருக்கு இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லையாம். இதனால் இப்படி என்னை போய் இரண்டாவது நாயகியாக நடிக்க வைக்கிறார்களே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம்.

அனுஷ்கா கால்ஷீட் பெறவே இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர் விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துவிட்டு, ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் என்று கேப் விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏம்ப்பா ஹன்சிகா புலம்புவதற்கு நீங்க என்ன சொல்றீங்க?

 

வோடபோனுக்காக 400 திருக்குறளுக்கு இசையமைத்த சரவணா கலைமணி!

தொலைக்காட்சி,வானொலிகளில் எத்தனையோ விளம்பரங்கள் வருகின்றன. சில நம்மையறியாமல் நமக்குப் பிடித்து விடும். அவை வரும்போது ரிமோட்டை மறந்துவிட்டு ரசிப்போம்.

young musician composes 400 couplet
Close
 
இப்படி ரசிக்கப்படும் விளம்பரங்களின் பின்னனியில் இருப்பவரை யாருக்கும் தெரியாது. அப்படி அண்மைக்காலமாக அனைவரையும் ஈர்த்த சுந்தரி சில்க்ஸ்,குமரன் சில்க்ஸ்,கல்யாண் ஜூவல்லர்ஸ்,ரூபினி சன் ப்ளவர் போன்ற 400 விளம்பரங்களுக்கு மேல் இசையமைத்திருப்பவர் சரவணா கலைமணி.

அனைத்து சேனல்களிலும் இவரது விளம்பர இசை ஒலித்து கொண்டிருக்கிறது. இவர் அமைதியாக அடக்கமாக இருக்கிறார்.

பிரபல விளம்பரங்களின் பின்னனியில் உள்ள சரவணா கலை மணியின் பின்னனி என்ன?

"நான் எம்.எப்.ஏ.விஸ்காம் படித்துள்ளேன். சென்னை கவின் கலைக் கல்லூரியில் முடித்தேன். அதுமட்டுமல்ல மேற்கத்திய இசையில் லண்டன் டிரினிட்டி காலேஜின் 8 கிரேடு முடித்து இசையில் பட்டம் பெற்றுள்ளேன். மேற்கத்திய இசை தவிர கர்நாடக,இந்துஸ்தானி இசையும் கற்றிருக்கிறேன்.

" நாடகங்கள், நிகழ்ச்சிகள் என்று ஆரம்பித்து குறும்படங்கள்,ஆவணப் படங்கள் என்று விரிந்தது. என் நண்பர் மூலம் ஒரு விளம்பரப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பும் வந்தது. அதன்பிறகு 300 விளம்பரங்கள் தாண்டி இசையமைத்து விட்டேன். இதில் மாநில,தேசிய அளவிலான நிறுவனங்கள் எல்லாம் அடக்கம்," என்கிறார் கலைமணி.

விளம்பரப் படங்களுக்கு ஒருபக்கம் இசை அமைத்துக் கொண்டும் இன்னொரு புறம் ஜெயாவிடிக்காக "உங்க ஏரியா உள்ள வாங்க" கேம் ஷோவுக்கும் இசையமைத்து வருகிறார். டைட்டில் பாடலையும் பாடியுள்ளார். இதே சேனலில் இன்னொரு கேம்ஷோவான "மிஸ் & மிஸஸ் " உன்வாசம் என்நேசம்" தொடர்களுக்கும் இசையமைத்தது வருகிறார். டைட்டில் பாடலும் இவரே.

தன் இசைபயணத்தில் 400 திருக்குறள்களுக்கு இசையமைத்துள்ளதை, பெருமையாகக் குறிப்பிடுகிறார். வோடபோன் நிறுவனத்திற்காக இதைச் செய்திருக்கிறார். 40 தலைப்புகளில் 400 குறள்பாக்கள் ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு மாதிரியான தன்மையில் இசையை வழங்கியிருக்கிறார். இம்முயற்சியில் வோடபோன் நிறுவனத்தின் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.

"இதை இசையமைக்கும் போது சுத்தமான கர்நாடக இசை மாதிரியும் தெரியாமல் ஒருமாதிரி கலவையான இசை வடிவத்தைக் கொடுத்திருந்தேன் இது சின்னஞ் சிறுவர்களைக் கவர்ந்திருந்தது.

அதனால் அவர்களால் எளிதில் எல்லாக் குறள்களையும் மனதில் பதிய வைக்க முடிந்தது. என்னைமாதிரி இளம் இசையமைப்பாளருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு அதுவும் ஆரம்ப நிலையிலேயே வந்த இப்படிப்பட்ட வாய்ப்பு நான் செய்த பாக்கியம். நான் பலரால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்," என்றார்.

ஏராளமான விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ள சரவணா கலைமணி. இப்போது 2 மியூசிக் வீடியோவுக்கு இசையமைத்து வருகிறார். அதுவும் ஆங்கில மொழியில் ஒன்று. இதில் ஒரு பாடலை இசையமைத்துப் பாடியும் உள்ளார். சினிமா வாய்ப்புகளும் வந்துள்ளனனவாம்!

 

பெரிய படங்களால் நஷ்டம்... காமெடி படங்கள் வசூலுக்கு கியாரண்டி! - சொல்கிறார் கருணாஸ்

Comedy Flicks Are Safe Says Karunas   

காமெடி படங்கள் எப்போதும் நல்ல வசூலைத் தருகின்றன. ஆனால் பெரிய படங்களால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார் காமெடியன் கருணாஸ்.

'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசத்திரம் அம்பானி' படங்களில் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற கருணாஸ், அடுத்து 'ரகளபுரம்', 'மச்சான்', 'சந்தமாமா' ஆகிய காமெடி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அதே நேரம் மற்ற நடிகர்களுடன் காமெடியனாகவும் நடிக்க தயங்குவதில்லை.

தனது இந்த நிலை குறித்து கருணாஸ் கூறுகையில், "காமெடிப் படங்கள் எப்போதுமே பாதுகாப்பானவை. இந்த ஆண்டு நன்றாக ஓடிய பெரும்பாலான படங்கள் நகைச்சுவையாக அமைந்தவைதான்.

மெகா பட்ஜெட்டில் எடுத்த சீரியஸ் கதையம்சம் உள்ள படங்கள் பல தோல்வி அடைந்துள்ளன. இதனால் ரூ 400 கோடி வரை நஷ்டமானதாகக் கூறுகிறார்கள்.

விலைவாசி உயர்வு, போக்குவரத்து நெரிசல், அலுவலகத்தில் நெருக்கடி போன்ற பல காரணங்களால் டென்ஷனில் உள்ள மக்களை சிரிக்க வைப்பதுதான் என்னைப் போன்றவர்களின் வேலை என நினைக்கிறேன். எனவேதான் நான் காமெடி படங்களில் நடித்து வருகிறேன்.

'ரகளபுரம்' இதுவரை வந்த காமெடி படங்களில் சிறப்பானதாக இருக்கும்," என்றார்.

 

பெங்களூரில் பாஜகவினரை 'சவுண்ட்' விட்ட குத்து ரம்யா

Ramya Blasts Bjp Cadres On The Day   

பெங்களூர்: நேற்றைய முழு அடைப்பின்போது, அதை முன்னெடுத்த ஆளும் பாஜகவினருடன் கடும் மோதலில் ஈடுபட்டார் நடிகை குத்து ரம்யா எனப்படும் திவ்யா.

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் திகந்த், நடிகை ரம்யா ஜோடியாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மைசூர் லலிதா மகால் பேலஸ் மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பு குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கான பணிகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்யா காலை 9.30 மணி அளவில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் வந்து இறங்கினார்.

அப்போது அங்கு வந்த பா.ஜனதா தொண்டர்கள், நடிகை ரம்யாவிடம், 'இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. சினிமா தியேட்டர்கள் கூட மூடப்பட்டுள்ளன. எனவே ஷூட்டிங் நடக்கக்கூடாது,' என்றனர்.

இதற்கு ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'இந்த பந்தே சட்ட விரோதம்... நாங்கள் ஏன் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். இங்கு சுமார் 150 பேர் படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்தால் அவர்களுக்கு யார் கூலி கொடுப்பது, நீங்கள் கொடுக்கிறீர்களா? ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் ரோட்டுக்கு போங்கள்,'' என்றார் கோபத்துடன்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரம்யா அங்கிருந்து சென்று காரில் ஏறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்து அவர் ஆர்ப்பாட்டக் காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

'பொதுமக்களுக்கு இப்படி தொந்தரவு கொடுப்பதை சகித்துக் கொள்ள முடியாது'', என்று கூறிவிட்டு, படப்பிடிப்பைத் தொடருமாறு கூறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும், பா.ஜனதா வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாஜகவினர் தொடர்ந்து ரம்யாவை திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அவர் அசரவில்லை. பதிலுக்கு பாஜகவினரை திட்டித் தீர்த்தார். இந்த பந்தால் மக்களுக்கு கஷ்டம், நாட்டுக்கு நஷ்டம். வேறு ஒரு பலனுமில்லை. இதில் கோபப்பட பாஜகவுக்கு உரிமையில்லை, என்றார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய இளம் தலைவர் ரம்யா என்பதும், அவர் மத்திய அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணாவின் உறவினர் என்பதும் தெரியுமல்லவா?

இல்லாவிட்டால் பாஜகவினர் இவ்வளவு பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு சும்மாதான் போயிருப்பார்களா?

 

'வேல்முருகன் போர்வெல்ஸ்'... தயாரிப்பாளராகிறார் காமெடியன் கஞ்சா கருப்பு!

Kanja Karuppu Turns Producer

நமக்குப் பிறகு வந்த சந்தானமே தயாரிப்பாளராகிவிட்டார்... நாம சும்மாருந்தா எப்படி என்று நினைத்துவிட்டாரோ என்னமோ... தயாரிப்புக் களத்தில் குதித்துவிட்டார் கஞ்சா கருப்பு.

வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற தலைப்பில் புதிய படம் தயாரிக்கிறார் அவர்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பிதாமகன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. மதுரைக்காரர்.

அமீரின் ‘ராம்' படத்தில் 'வாழவந்தானாக' நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, ‘சுப்பிரமணியபுரம்', ‘பருத்தி வீரன்', ‘சண்டக்கோழி', மிரட்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காமெடியில் தனக்கென தனி இடம் பிடித்த கஞ்சா கருப்பு தற்போது கே.கே.பிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் பட கம்பெனி தொடங்கி தயாரிப்பில் குதித்துள்ளார். அவர் எடுக்கும் முதல்படத்துக்கு ‘வேல்முருகன் போர்வெல்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

கரணை வைத்து ‘மலையன்' என்ற படத்தை இயக்கிய எம்.பி.கோபி இப்படத்தை இயக்குகிறார். ‘அங்காடி தெரு' மகேஷ் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பும் நடிக்கிறார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்தியானந்தா!

Nithyananda Bigg Boss 6   

இது வதந்தியோ, உண்மையோ ஆனால் டிவி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நித்தியானந்தா ரியாலிட்டி ஷோ வான பிக் பாஸ் சீசன் 6 ல் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. நிகழ்ச்சி பற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும் ஒரளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 6வது சீசன் அக்டோப‌ர் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீசனில்தான் நித்தியானந்த பங்கேற்க உள்ளதாக அவருடைய செய்தித்தொடர்பாளர் டாலே பக்வகர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் சுவாமியின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது!. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

ஆனால் இது குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பங்கேற்பாளர்கள் பற்றி ரகசியமாக வைத்திருக்கப்படும். இல்லையென்றால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் போய்விடும் என்பதற்காக இவ்வாறு கடைபிடிக்கப்படுவதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனார்.

 

வீணா மாலிக்கின் 'சீச்சீ' வீடியோ...!

மும்பை: வீணா மாலிக்கும் தற்போது ஷெர்லின் சோப்ரா, பூஜா பாண்டே ரேஞ்சுக்கு நாட்டியாக மாற ஆரம்பித்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் அவர் படு நாட்டியாக காட்சி தருகிறார். கூடவே பாட்டும் பாடுகிறார்.

veena malik gets naughty video    | படங்கள்  
Close
 
டிராமா க்வீன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோதான், வீணா மாலிக்கின் முதல் சிங்கிள் வீடியோவாகும். இதில் அவர் செக்ஸியான இசைக்கு ஏற்பட கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். அழகுப் பெண்களுடன் ஒட்டி உரசி உராய்கிறார்.

ஹோமோசெக்ஸ் தவறில்லை என்பதை விளக்கும் ஆல்பமாம் இது. படு செக்ஸியாக, ஹாட்டாக இருக்கிறது இந்த வீடியோ. இதில் ஒரு பெண்ணுக்கு முத்தமிடுகிறார் வீணா. கூடவே ஒட்டி உறவாடுகிறார்.

இந்த வீடியோவைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு எரியுமாம் காமத் தீ. அந்த அளவுக்கு இது இருப்பதாக வீணாவே பெருமையுடன் கூறுகிறார்.

என்னுடைய ஹோமோசெக்ஸ் நண்பர்களுக்கான பிரத்யேக வீடியோ இது, என்ஜாய் என்கிறார் வீணா சிரித்தபடி.

 

அமிதாப் பச்சன், கரண் ஜோஹார், லாரா தத்தாவிடம் சபாஷ் வாங்கிய இலியானா

Ileana On Cloud Nine

ஹைதராபாத்: டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானாவின் முதல் இந்தி படமான பர்ஃபியில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு அமிதாப் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கம் இலியானா அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலையைக் காட்டிவி்ட்டு செல்கிறார். இந்நிலையில் அவரின் கவனம் பாலிவுட்டுக்கு சென்றது. சல்மான் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தட்டிக்கழித்த அவர் இறுதியாக ரன்பிர் கபூர், பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து பர்ஃபி படத்தில் நடித்தார். அண்மையில் ரிலீஸான அந்த படத்தில் இலியானாவின் நடிப்பு பேசப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் உள்பட பல பிரபலங்கள் இலியானாவை பாராட்டியுள்ளனர்.

அமிதாப் பச்சன் டுவீட்:

முதல் இந்தி படத்திலேயே இலியானா டி க்ரூஸின் நடிப்பு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

கரண் ஜோஹாரின் டுவீட்:

வெல் டன் இலியானா, சூப்பரான முதல் படம்

இவர்கள் தவிர நடிகைகள் லாரா தத்தா, தியா மிர்சா, சோஃபி சவுத்ரி உள்ளிட்ட பலரும் இலியைப் பாராட்டியுள்ளனர். பாலிவுட்டில் வெற்றி பெற்றதும் அங்கேயே செட்டிலாகிவிட்ட தென்னிந்திய நடிகை அசின் மாதிரி இவரும் சென்றுவிடக் கூடாது என்று பலரும் விரும்புகின்றனர்.

 

சென்சாரில் யு சான்று பெற்ற தாண்டவம்!

Thaandavam Gets Clean U   

யுடிவி தயாரிப்பில் விஜய் இயக்கியுள்ள தாண்டவம் படத்துக்கு சென்சாரில் அனைவரும் பார்க்கும் வகையிலான யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

விக்ரம் - அனுஷ்கா - எமி ஜாக்ஸன் - ஜெகபதிபாபு நடித்துள்ள தாண்டவம் படம் வரும் 28-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லண்டனில் அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்த தமிழ்ப் படம் என்ற பெருமை கொண்ட தாண்டவம், நேற்று சென்சார் குழுவினருக்குக் காட்டப்பட்டது.

இந்தப் படத்துக்கு எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

நல்ல படம் என்று பாராட்டவும் செய்தார்கள் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர்.

செப்டம்பர் 28-ம் தேதி உலகம் முழுக்க 1000 அரங்குகளில் வெளியாகிறது தாண்டவம் திரைப்படம். தெலுங்கில் சிவதாண்டவம் என்ற பெயரில் அதே நாளில் வெளியாகிறது.

 

'குரோர்பதியில்' அமிதாப்புடன் இணைந்த ஸ்ரீதேவி!

Sridevi On Kaun Banega Crorepati 6

அமிதாப்பச்சன் நடத்தும் குரோர்பதி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி பங்கேற்று விளையாடியுள்ளார்.

ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் அக்டோபர் 5 ம் தேதி வெளியாக உள்ளது. அதை புரமோட் செய்யும் விதமாக குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த படம் குறித்து அமிதாப் ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு டிவிட்டரில் வாழ்த்து சொல்லியிருந்தார். இதனையடுத்து குரோர்பதி நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பங்கேற்று கேள்விகளுடன் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' படம் பற்றிய முக்கிய அம்சங்களை உரையாடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியுடன் அவருடைய கணவர் போனிகபூர், ‘பா' பட இயக்குநர் பால்கி அவருடைய மனைவியும், இங்கிலீஸ் விங்கிலீஸ் பட இயக்குநருமான கவுரி ஆகியோர் பங்கேற்றனர்.

அமிதாப்புடன் ‘ஆக்ரி ராஸ்தா', ‘இன்குலாப்', ‘குடா கவா' ஆகிய இந்தி திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்த ஜோடி சின்னத்திரை கேம்ஷோவில் தோன்ற உள்ளனர். இது விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஹாங்காங் படப்பிடிப்பு: ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்து பிந்து மாதவி - பியா படுகாயம்!

Actresses Bindhu Madhavi Pia Injured At Hong Kong Shoot   

சென்னை: சட்டம் ஒரு இருட்டறை படத்துக்காக ஹாங்காங்கில் ஹெலிகாப்டரில் வைத்து ஷூட்டிங் நடந்த போது தவறி விழுந்து படுகாயமடைந்தனர் நடிகைகள் பிந்து மாதவியும் பியாவும்.

அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

விஜயகாந்த் நடித்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தயாராகி வெற்றி பெற்ற `சட்டம் ஒரு இருட்டறை' படம், மீண்டும் தயாராகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த சினேகா பிரிட்டோ டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தில் தமன் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். பியா, பிந்து மாதவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் ஹாங்காங்கில் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஹாங்காங்கில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியின் இரவு நேர அழகை ஒரு ஹெலிகாப்டர் மூலம் படமாக்கினார்கள். பியா, பிந்து மாதவி இருவரும் ஹெலிகாப்டரை பிடித்துக்கொண்டு தொங்குவது போன்ற காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு பேரும் கீழே விழுந்தார்கள். அதில் இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.

ஹெலிகாப்டர் மிக குறைந்த உயரத்தில் பறந்ததால், இருவரும் உயிர் தப்பினார்கள். படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

பியா, பிந்து மாதவி இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர். இருவரும் ஓய்வெடுத்தனர். அதன்பிறகு வேறு காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்தது.