தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான டைரக்டர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43.
வி.ஏ.ஜி கார் வண்ண ராஜா ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டிருந்தார்.
சிறிது காலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமடையவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் பலனின்று இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.
மரணமடைந்த வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவுக்கு, ஹெண்ணிலா கார்வண்ணராஜா என்ற மனைவியும் 10 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கார் வண்ணராஜாவின் உடல் நாளை காலை 10 மணிக்கு போரூர் மின்சார மையானத்தில் தகனம் செய்யப்படுகிறது.