சென்சார் மீது எஸ்.பி. சரண் தாக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சென்சார் மீது எஸ்.பி. சரண் தாக்கு

1/27/2011 2:18:03 PM

நடிகரும் பாடகருமான எஸ்.பி. சரண் தயாரித்துள்ள படம் ‘ஆரண்ய காண்டம்’. ரவி கிருஷ்ணா, ஜாக்கி ஷெராப், சம்பத், யாஸ்மின் நடித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். அடுத்த மாதம் ரிலீசாகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது. அத்துடன் பல காட்சிகளை வெட்டிவிட்டதாம். இதனால் கோபம் அடைந்திருக்கிறார் எஸ்.பி. சரண். இது பற்றி அவர் கூறியது: இந்தப் படம் போதை கும்பலை பற்றிய கதை கொண்டது. அவர்களை பற்றி சொல்லும்போது, துப்பாக்கி, ரத்தம் என காட்சிகள் இருப்பது பெரிய விஷயம் கிடையாது. படத்தில் வன்முறை இருப்பதாகக் கூறி ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அது கூட பரவாயில்லை. பல காட்சிகளை நீக்கிவிட்டதுதான் தாங்க முடியவில்லை. இதை விட வன்முறை அதிகம் உள்ள பல படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளது. அதையெல்லாம் சென்சார் அனுமதித்து இருக்கிறார்கள். சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ படத்திலும் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தன. ஒரு படத்தை குழந்தை போல் நினைத்து பாதுகாக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் அக்கறை காட்டுகிறோம். அந்த காட்சிகளை வெட¢டி எறிவதை சகிக்க முடியவில்லை.


Source: Dinakaran
 

மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர்.ரகுமான் பெறுவாரா : 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர்.ரகுமான் பெறுவாரா : 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை!

1/27/2011 12:22:28 PM

கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்தார் ஏ.ஆர்.ரகுமான். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில். ரகுமான் இசையமைப்பில், டேனி பாயில் இயக்கியுள்ள 127 ஹவர்ஸ் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரகுமானின் பெயர் மட்டும் 2 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (இஃப் ஐ ரைஸ்) ஆகிய இரு பிரிவுகளில் ரகுமானின் பெயர் பரிந்துரையாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளுவாரா ரகுமான் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், அதிகபட்சமாக தி கிங்க்ஸ் ஸ்பீச் படம் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரையைப் பெற்றுள்ளது. ட்ரூ கிப்ட் படம் 10 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. 83வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.


Source: Dinakaran
 

2 ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

2 ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை

1/27/2011 12:34:15 PM

காவலன் படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ள நிலையில், தனது எதிர்கால சினிமா பற்றிய தனது பார்வையை மாற்றியுள்ளதாக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். சமூகத்துக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் படங்களில் இனி அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாக விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து தற்போது தனக்கு எந்த எண்ணம் இல்லை என்று கூறிய அவர், அதற்குகான நேரம் அமைய வேண்டும் என்று கூறினார். மேலும், அரசியலில் ஈடுபடும் முடிவை நான் எடுத்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து பேசுவதெல்லாம் மரியாதை நிமித்தம்தான் என்று விஜய் கூறினார்.

சமீபத்தில் ’3 இடியட்ஸ்’ படத்தை விஜய் 3 ஹீரோக்களின் கதை என்பதால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இரண்டு அல்லது மூன்று ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை. நல்ல கதைகள் அமைந்தால் வேறு ஹீரோக்களுடனும் நடிக்க தயார் எனக் கூறினார். மேலும், தான் நடித்து வரும் ‘வேலாயுதம்’ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் ’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதாக விஜய் தெரிவித்தார்.


Source: Dinakaran
 

அமலாபால் வாய்ப்பை பிடிக்க ஓவியா முயற்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அமலாபால் வாய்ப்பை பிடிக்க ஓவியா முயற்சி

1/27/2011 2:08:12 PM

‘களவாணி’ படத்துக்கு பின் சற்குணம் இயக்கும் படம் ‘வாகை சூட வா’. விமல் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நடிக்க அமலா பால் தேர்வாகியிருந்தார். இப்போது கால்ஷீட் பிரச்னையால் படத்திலிருந்து விலக அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையே அவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். அதே நேரம், அமலா பால் விலக முடிவு செய்திருப்பதை அறிந்த ‘களவாணி’ பட ஹீரோயின் ஓவியா, அந்த வாய்ப்பை பிடிக்க முயற்சித்து வருகிறாராம். ஏற்கெனவே தெரிந்த இயக்குனர், ஹீரோ என்பதால் அவர்களுக்கு தூது விட்டிருக்கிறாராம் ஓவியா.
ஒருவரின் வாய்ப்பை இன்னொருவர் தட்டிப் பறிப்பதாக அமலா பால், ஓவியா பற்றி முன்பே கிசு கிசு பரவியுள்ளது. இந்நிலையில் ஓவியா இந்த பட வாய்ப்பை பெற முயற்சிப்பதால், இருவருக்கும் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.


Source: Dinakaran
 

ரஜினிக்காக கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்காக கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா

1/27/2011 12:47:23 PM

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ராணா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன. சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் அனிமேஷன் படத்தில் ரஜினி நடிக்கும் நேரடி காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது.

நேரடி காட்சிகளில் வரும் ரஜினிக்கு த்ரிஷா ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது தீபிகாவை அணுகியுள்ளனர். ரஜினி படத்திற்காக தன்னை அணுகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தீபிகா. இருப்பினும் இன்னும் தான் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடைய கால்ஷீட் புத்தகம் 2011 இறுதி வரை நிரம்பி வழிகிறதாம். இருப்பினும் ரஜினி படம் என்பதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக, கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் தீபிகா.

தான் ஒரு தீவிர ரஜினி ரசிகை என்று கூறியுள்ள தீபிகா, அவருடைய படத்தில் இணைந்து நடிப்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

கவுரவ வேடத்தில் கஸ்தூரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவுரவ வேடத்தில் கஸ்தூரி

1/27/2011 2:26:53 PM

பேசன் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'பதினாறு' படத்தை வி கிரியேசன்ஸ்  சார்பாக கலைப்புலி தாணு வெளியிடுகிறார். பரதன், வி ஐ பி, புன்னகை பூவே ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சபாபதி  இப்படத்தை இயக்கியுள்ளார். பதினாறு பட இசை வெளியீட்டில்  ஹீரோ சிவா, 'இது உண்மையான காதலை மையமாக கொண்ட படம். அறிமுக நாயகி மது ஷாலினி என்னுடன் நடித்துள்ளார். இப்படத்தின் கதை நகரத்திலும், கிராமத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறுகிறது. சென்னை,தேனீ,கொடைக்கானல் ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளார்கள். ‘பதினாறு’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கஸ்தூரி என்று பேசினார்.


Source: Dinakaran
 

முத்துக்கு முத்தாக அடுத்த மாதம் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முத்துக்கு முத்தாக அடுத்த மாதம் ரிலீஸ்

1/27/2011 2:29:30 PM

'முத்துக்கு முத்தாக' படத்தை தயாரித்து இயக்கும் ராசு மதுரவன், அடுத்து லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விக்ராந்த், நட்ராஜ், ஹரீஷ், வீரசமர், பிரகாஷ் நடித்துள்ள 'முத்துக்கு முத்தாக' ஷூட்டிங் முடிந்துவிட்டது. படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. நெஞ்சை நெகிழ வைக்கும் குடும்பக்கதை வந்து நாளாகி விட்டது. அந்தக்குறையை 'முத்துக்கு முத்தாக' போக்கும். தாய், தந்தை, மகன்கள் இவர்களது பாசப் போராட்டமே கதைக்களம். முழு படத்தையும் பார்த்தவர்கள், சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படத்தை அனுப்பி வையுங்கள் என்று ஆலோசனை சொன்னார்கள். ஆங்கிலத்தில் சப்&டைட்டில் போடும் பணி நடந்து வருகிறது. 'முத்துக்கு முத்தாக' ரிலீசுக்கு பிறகு இயக்கும் படம், 'பக்கி'. இதில் லாரன்ஸ் ஹீரோ. கே.பி பிலிம்ஸ் கே.பாலு தயாரிக்கிறார்.


Source: Dinakaran