எழுத்தாளராக, உளவாளியாக விரும்புகிறேன்: ஸ்ரீதேவி மகள் ஜான்வி

No Bollywood Jhanvi Kapoor Right Now

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி எழுத்தாளராக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கு இப்போதைக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசையில்லையாம்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எனக்கு தெரியவில்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு வாரமும் எனது கெரியர் பற்றிய முடிவை மாற்றிக் கொண்டே இருக்கிறேன். சில நேரம் உளவாளியாக, எழுத்தாளராக விரும்புகிறேன். அதனால் எனக்கு நிஜமாகவே தெரியவில்லை என்றார்.

ஸ்ரீதேவி கூறுகையில், எனது மகள்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறுவதுண்டு. முதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும் என்றார்.

சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் ஸ்ரீதேவியால் படிக்க முடியவில்லை. அதனால் தான் தனது மகள்களை படிக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராகவா லாரன்ஸுக்கு ரூ.2.5 கோடி அபராதம் விதித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்

Lawrence Fined Rs 2 5 Crore

ஹைதராபாத்: தெலுங்கு படமான ரிபெல்லின் தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்-நடிகர் லாரன்ஸ் ரூ.2.5 கோடி நஷ்டஈடு வழங்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் தமன்னாவை வைத்து ரிபெல் என்ற படத்தை எடுத்தார். லாரன்ஸின் இந்த படத்தால் தாங்கள் நஷ்டம் அடைந்ததாக பகவான், புல்லாராவ் ஆகிய 2 தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.

தங்கள் புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

ரிபெல் படத்தை ரூ.22.5 கோடி பட்ஜெட்டில் எடுத்து தர லாரன்சுடன் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர் நிர்ணயித்ததைவிட படத்துக்கு அதிகம் செலவு வைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லாரன்ஸ் திருப்பி தரவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரம் குறித்து விசாரிகக் 20 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு நடத்திய விசாரணையில் லாரன்ஸால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது உறுதியானது.

இதையடுத்து லாரன்ஸ் பகவான் மற்றும் புல்லாராவுக்கு ரூ.2.5 கோடி நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. மேலும் அவர் இந்த தொகையை 30 நாட்களுக்குள் கொடுக்காவிட்டால் மொத்த நஷ்டத் தொகையான ரூ.5.5 கோடியையும் அவர் அளிக்க வேண்டும் என்று எச்சரி்க்கை விடுத்துள்ளது.

 

முற்றியது மோதல் - விஸ்வரூபத்தை தியேட்டர்களில் ரிலீசாக விட மாட்டோம் - தியேட்டர் அதிபர்கள்

Theater Owners Turned Against Kamal

சென்னை: டிடிஎச்சில் ஒளிபரப்பாகவிருக்கும் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் ரிலீசாக அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

'விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டிவியில் ஒளிபரப்பும் முடிவால் கமலுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத்தின் ஒருபிரிவு தலைவரான கேயார் உள்ளிட்டோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்பினால் தியேட்டர்களை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது அவர்கள் நிலை. கமல் இந்த முடிவை கைவிடாவிட்டால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்' படத்தை திரையிடமாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் சமரச முயற்சியில் கமல் ஈடுபட்டுள்ளார். அபிராமி ராமநாதன் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சென்னையில் கூடியபோது அவர்களுடன் டெலிபோனில் பேசி்ப பார்த்தார் கமல். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசர கூட்டம் மதுரையில் இன்று காலை நடந்தது. சங்கத்தின் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள் 80 பேர் இதில் கலந்து கொண்டார்கள். டி.டி.எச்.சில் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால் தியேட்டர்களில் அப்படத்தை திரையிடக்கூடாது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சினிமா சமூகத்தை சீரழிக்கிறதா?.... இல்லை என்கிறார் இளவரசு

Cinema Never Spoils Society Says Ilavarasu

சினிமா... சமூகத்தின் பிரதிபலிப்பா? அல்லது சினிமாவின் பிரதிபலிப்பாக இன்றைய சமூகம் மாறியிருக்கிறதா என்ற கேள்விக்கு இன்றளவும் தெளிவான பதில் இல்லை. சமூக சீரழிவுக்கு சினிமாதான் காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதைப்பற்றி சன் டிவியின் கல்யாணமாலை நிகழ்ச்சியில் சுவையான பட்டிமன்றம் நடத்தினர்.

இந்த பட்டிமன்றத்தில் நடுவராக இசைஅமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் பங்கேற்றார். சினிமா சமூகத்தை சீரழிக்கிறது என்ற அணியில் பிரபல வழக்கறிஞர் சுமதி தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.

சமூகம் என்பது சினிமாவின் விதை நெல். அதை எப்படி நாங்கள் சமைத்து சாப்பிடுவோம். சமுதாயத்தை ஒருபோதும் சினிமா சீரழிக்காது என்றார் நடிகர் இளவரசு.

சமூகத்தில் இருந்துதான் சினிமாவிற்குத் தேவையான கருவை எடுத்துக் கொள்கிறோமே தவிர ஒருபோதும் சமுதாயத்தை சீரழிக்கிற மாதிரியான கருத்துக்களை சினிமா சொன்னது கிடையாது என்றார்.

கோவையில் ஏழு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லச் சொல்லி எந்த சினிமாவிலும் சொல்லவில்லை என்று கூறிய இளவரசு, பணம் கொடுத்து படம் பார்க்க வருபவர்களுக்காக சில காட்சிகளை சினிமாவில் புகுத்துவதில் தவறேதும் இல்லை என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வழக்கறிஞர் சுமதி, அலைபாயுதே திரைப்படம் வந்த பின்னர்தான் பெற்றோருக்குத் தெரியாமல் அதிக அளவில் காதல் திருமணங்கள் நடைபெறுவதாக கூறினார்.

ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு பெற்றோர் வீட்டில் வசிக்கும் பெண், கடைசியில் தன் கணவனைப் பற்றி தெரிந்து கொண்டு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கடைசியில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுவதாகவும் கூறினார் சுமதி.

என்னதான் சமூக சீரழிவிற்கு சினிமா காரணமில்லை என்று வாதிட்டாலும் சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்களுக்கு பின்னணியில், ஏதேனும் ஒரு வகையில் சினிமா இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக வரும் வாரங்களில் பேச உள்ளார் தம்பி ராமையா.

 

தமன்னா, இலியானா போன்னா நானும் பாலிவுட் போகணுமா? சமந்தா

Samantha Says She Is Not Very Keen   

சென்னை: பாலிவுட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று தனக்கு ஆசையில்லை என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமந்தா கூறுகையில்,

எனக்கு பணம் முக்கியம் இல்லை. கதை தான் முக்கியம். முதலில் எனது கதாபாத்திரம் குறித்து கேட்ட பிறகே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன். எனக்கு பாலிவுட்டில் பெரியாளாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது என்றார்.

அப்போ தமன்னாவும், இலியானாவும் பாலிவுட்டில் பெரிதாக வர விரும்புகிறார்களே என்றதற்கு அவர், அவர்கள் 2 பேரின் சொந்த ஊர் மும்பை. அதனால் அவர்கள் அங்கே பெரிய நடிகையாக விரும்புகிறார்கள். எனக்கு தென்னிந்தியாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் ஆசை என்றார்.

சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஏற்கனவே கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார் சமந்தா. இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்த எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த படம் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் பாலிவுட் ஆசை இல்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க தனக்கு ரூ.1.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.