கருப்புப் பணத்துக்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை - சமந்தாவின் தந்தை

சென்னை: கருப்பு பணத்திற்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை என்று நடிகை சமந்தாவின் தந்தை கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவின் சென்னை வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Samantha's father denies tax evasion charges

இந்த சோதனை குறித்து சமந்தாவின் தந்தை பிரபு கூறுகையில், "கறுப்புப் பணத்துக்கும் என் மகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மகள் வருமானத்துக்கான வரிகளை ஒழுங்காகக் கட்டி வருகிறாள். வரி ஏய்ப்பு செய்ததில்லை. இப்போது வெளிநாட்டில் உள்ளார் சமந்தா.

பொதுவாக தன் வருமானம் மற்றும் கணக்கு வழக்குகளை அவள்தான் பார்த்துக் கொள்வாள்," என்றார்.

 

ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட சரத்குமார் அணி

நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணியை ஆதரிக்குமாறு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர் சரத்குமார் தலைமையிலான அணியினர்.

நடிகர் சங்கத்துக்கு வரும் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் இப்போது பொறுப்பில் உள்ள சரத்குமார் தலைமையிலான அணியும், அவர்களை எதிர்த்து விஷால் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன.

Sarathkumar team meets Rajini

அவரவர் அணிக்கு ஆதரவு திரட்டி தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் இரு அணியினரும்.

திரையுலகின் முக்கிய நடிகர் நடிகைகளைச் சந்தித்தும் ஆதரவு கோரி வருகின்றனர்.

விஷால் அணியினர் ஏற்கெனவே ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கோரினர். அனைத்து விஷயங்களையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அடுத்து இப்போது சரத்குமார் அணியினர் ரஜினியைச் சந்தித்தனர். நடிகர் சங்கப் பிரச்சினைகள் குறித்து ரஜினியுடன் பேசி, பிரச்சினைகள் தீர தங்களை ஆதரிக்குமாறு ரஜினியைக் கேட்டுக் கொண்டனர். சரத்குமார் அணியையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார் ரஜினி.

 

எந்திரன் கதை வழக்கு: ஷங்கர் தரப்பு ஆஜராகாததால் மனுதாரருக்கு சாதகமாக முடிகிறது!

ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை உரிமை வழக்கில் ஷங்கர் தரப்பு ஆஜராகத் தவறியதால், மனுதாரர் தந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை முடித்துவிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எந்திரன் படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆரூர் தமிழ் நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

HC's new order in Enthiran story case

இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

ஆனால் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும். மனுதாரர் தரப்பு ஆதாரங்களை பதிவு செய்ய ‘மாஸ்டர்' கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி 4 வாரங்களுக்குள் பதிவு செய்யவேண்டும்," என்று உத்தரவிட்டார்.

இதனால் வழக்கு மனுதாரர் ஆரூர் தமிழ்நாடனுக்கு சாதகமாக முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் காதலியின் தற்கொலை குறித்து முதன்முறையாக "மனந்திறந்த" ஜிம் கேரி

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட்டின் தலைசிறந்த காமெடி நடிகர்களில் ஒருவரான ஜிம் கேரி தனது முன்னாள் காதலியின் மரணம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்து பேசியிருக்கிறார்.

எஸ் மேன், தி மாஸ்க், நம்பர் 23 போன்ற தலைசிறந்த படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜிம் கேரி. சமீபத்தில் இவரின் காதலி கேத்தரினா வொய்ட்(28) அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Jim Carrey 'deeply saddened' by death of Ex Girl friend Cathriona White

கேத்தரினாவின் மரணத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியின் மரணம் குறித்து ஜிம் கேரி முதன்முறையாக மவுனம் உடைத்து பேசியிருக்கிறார்.

ஜிம் கேரி

எஸ் மேன், தி மாஸ்க், நம்பர் 23 போன்ற தலைசிறந்த படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜிம் கேரி. கடந்த திங்கள் கிழமை இவரின் முன்னாள் காதலி கேத்தரினா வொய்ட் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது ஹாலிவுட் திரையுலகினரின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் காதலி

கேத்தரினா வொய்ட் நடிகர் ஜிம் கேரியின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. மேக்கப் கலைஞராக இருந்த கேத்தரினா ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்.

காரணம் என்ன

நடிகர் ஜிம் கேரியின் பிரிவே கேத்தரினாவின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்று ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இறப்பதற்கு முன்பு கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு மிக அருகில், நெருங்கியவர்களிடம் இருந்து ஒரு ஒளி எனக்கு மிக அருகில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிம் கேரியின் பதில்

ஐரிஷ் மலரைப் போன்றவள் கேத்தரினா. அவளின் இறப்பு எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எனது இதயம் என்னைவிட்டு வெளியேறி அவளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் செல்கிறது. நாங்கள் எல்லோருமே அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தோம். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று தனது காதலியின் மறைவு குறித்து ஜிம் கேரி வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முழுமையான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் கேத்தரினா தற்கொலை செய்து கொண்டார் என்று காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

 

நடிகர் சங்கம் ஒன்றும் குடும்பச் சொத்து அல்ல! - குஷ்பு

நடிகர் சங்கம் ஒன்றும் யாருடைய குடும்பச் சொத்துமல்ல. விஷால் போன்ற புதியவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார்.

நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பிறகு குஷ்பு பேட்டியளிக்கையில், நடிகர் சங்க தேர்தல் பற்றிய தன் நிலையைத் தெரிவித்தார்.

Nadigar Sangam is not a family property, says Kushbhoo

அவர் கூறுகையில், "தயாரிப்பாளராகவும், பிரபல டைரக்டரின் மனைவி என்ற முறையிலும் திரையின் வெளியே இருந்து திரைப்பட துறையை பார்க்கிறேன். எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன்.

நடிகர் சங்கம் ஒன்றும் குடும்ப சொத்து இல்லை. ஆகவே புதியவர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவு நடிகர் விஷால் அணியினருக்குத்தான். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை," என்றார்.

 

இன்று இரவு அஜீத்தின் வேதாளம் டீசர்!

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் டீசர் இன்று இரவு வெளியாகிறது.

வேதாளம் படத்தின் டீசரைப் பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

Vedhalam teaser to be unveiled tonight

"அஜீத்தின் வேதாளம் ட்ரெய்லர் பார்த்தேன். இயக்குநர் சிவா மற்றும் குழுவினர் பிரமாதமாக உருவாக்கியுள்ளனர். இன்று இரவு டீசர் வெளியாகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேதாளம் படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன், சூரி, ராகுல் தேவ், கபீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

நாளை விஜய்யின் புலி படம் வெளியாகவுள்ள நிலையில், வேதாளம் டீசர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளியன்று வேதாளம் திரைக்கு வருகிறது. அன்றுதான் கமல்ஹாஸனின் தூங்கா வனமும் வெளியாகிறது.

 

தியேட்டர்காரர்கள் பொய்க் கணக்கு காட்டுவது உண்மைதான்! - கமலா தியேட்டர் உரிமையாளர்

படங்களின் வசூல் விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் பொய்க் கணக்கு காட்டுவது உண்மைதான் என்று கமலா தியேட்டர் உரிமையாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

கமலா சினிமாஸ் கணேஷ் இப்போது படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இப்போது தற்காப்பு என்ற படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

ஒரு திரையரங்க உரிமையாளராக அவர் பகிர்ந்த அனுபவங்கள் இதோ...

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

திரையரங்கு அதிபராக உங்கள் அனுபவம் எப்படி?

அப்பா முதலில் புதுக்கோட்டயிலுள்ள பிரகதாம்பாள் என்கிற திரையரங்கை லீஸ் எனப்படும் குத்தகை முறையில் எடுத்து நடத்தினார். அதன்மூலம் திரையரங்கம் சார்ந்த அனுபவங்களைக் கற்றுக் கொண்டார். சென்னை வந்த போது முதலில் கிருஷ்ணவேனி என்கிற பழைய திரையரங்கத்தை வாங்கினார். அது பழையதாக இருக்கிறதே என்று புதிதாக ஒன்று கட்டநினைத்த போது கட்டியதுதான் கமலா திரையரங்கம். இந்த திரையரங்கம் 1972-ல் கலைஞர் அவர்களால் திறப்புவிழா செய்யப்பட்டு தொடங்கப் பட்டது. இதன் 25வது ஆண்டு விழாவிலும் கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முதலில் ஏசி இல்லாமல் தொடங்கியது. பின்னர் ஏசி கொண்டதாக மாற்றப்பட்டது. பிறகு 2 அரங்குகளாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது ஆண்டுக்கு 120 படங்கள் வெளியாகின்றன. இத்தனை ஆண்டுகளில் பல ஆயிரம் படங்கள் வெளியாகியிருக்கும்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது, திரையரங்கம் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..?

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்ல மாதிரி படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது ஏமாற்று வேலை. இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகவே இருக்கிறது. அன்று 10 அரங்கில் 50 நாட்கள் ஓடியபடம், இன்று 50 அரங்கில் 10 நாளில் வசூல் செய்து விடுகிறது. இன்றைய சூழல் மாறிவிட்டது. இனி 50 நாள் 100 நாள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அப்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை. ஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன. 1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50க்குமேல் திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப்போலவே திருட்டு விசிடியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

திருட்டு விசிடியால் பிரச்சினை இல்லை. பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். 'பாகுபலி' எப்படி வசூல் செய்தது? 'பாபநாசம்' எப்படி வசூல் செய்தது? 'தனி ஒருவன்'எப்படி வசூல் செய்தது?

'தனி ஒருவன்' அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. வீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும் போது யாரும் திருட்டுவிசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள்.இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் புகார்கள் சொல்லப் படுகின்றனவே.?

இதை நான் மறுக்கவில்லை. திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் குறைகள் இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்கின்றன. டிக்கெட் விலையில் சொல்வது ஒன்று, விற்பது ஒன்று என்று இன்றும் நடக்கிறது.

500 டிக்கெட் விற்றால் 250 தான் விற்றது என்று பொய்க் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கட்டணம் அதிகம், சுத்தமில்லை, வசதி இல்லை என்கிற நிலையும் இருக்கிறது. ஒரு திரையரங்கில் வாகனங்களுக்கு மணிக்கு 40 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் 120 ரூபாய்தான் வண்டிவிட 4 மணி நேரத்துக்கு 160 ரூபாய் என்றால் என்ன அநியாயம் இது? கடடணங்களால் இப்படி மக்களை கசக்கிப் பிழியக் கூடாது. சினிமா வளர நாங்கள் மட்டும் மாறினால் போதாது எல்லாரும் மாற வேண்டும்.

அப்படி என்ன உங்கள் திரையரங்கில் வசதிகள் உள்ளன?

எங்களைப் பொறுத்தவரை மல்டிப்ளக்ஸ் எனப்படும் சொகுசு திரையரங்குகளை விட, குறைந்த கட்டணம் நிறைவான வசதி கமலா அரங்கில் மட்டும்தான் என்பேன். இதை ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் என்றால் நான் சொல்லியிருக்க முடியாது. இப்போது எல்லாம் முறைப் படுத்தி மேம்படுத்தி நடத்தி வருகிறோம். இப்போது எனக்குத் தகுதி இருக்கிறது. என்னால் இப்போது சொல்ல முடியும்.

ஒருகாலத்தில் மணலைக் குவித்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தார்கள். பின்னர் தரை, பெஞ்ச், நாற்காலி, சோபா என்று மாறியிருக்கிறது அப்போது க்யூவில் நின்று வியர்க்க விறுக்க வெளியில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும். இன்று நெட்டில் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் எடுக்கலாம். இதனால் டிக்கெட் எடுக்கப் போய் வரவும், படம் பார்க்கப் போய் வரவும் என ஆகிற நேர விரயம் மிச்சம்.படம் பார்க்க பத்து நிமிடம் முன்பு வந்தால் போதும். எவ்வளவு சௌகரியம், பாதுகாப்பு, சுத்தம், நிம்மதி தெரியுமா? ப்ளாக் டிக்கெட்டுக்கு வேலையே இல்லை.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

ஆன்லைனில் எடுப்பதால் இன்று எல்லாருடைய முகவரியும் பதிவாகி விடுவதால் குற்றச் செயல்கள் இல்லை. படம் பார்ப்பது இன்று பாதுகாப்பான அனுபவமாக மாறி இருக்கிறது. யார் தலையும் மறைக்காத வகையில் திரையரங்க இருக்கைகள் அமைப்பு உள்ளது. ஒலியமைப்பு சரிவரத் துல்லியமாகக் கேட்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

குடிப்பவர்களை புகைப்பவர்களை நாங்கள் திரையரங்குகளில் அனுமதிப்பதில்லை. இங்கே சிகரெட் விற்பதே இல்லை. முன்பெல்லாம் இடைவேளையில் மட்டும்தான் தின்பதற்கு ஏதாவது வாங்க முடியும். திடீரென்று ஒரு குழந்தை அழுதால் அதற்குப் பால் தேவைப்பட்டால் இப்போது உள்ளே உள்ள உணவகத்தில் வாங்க முடியும். எப்போதும் எதுவும் இப்படி உணவகத்தில் வாங்கிக்கொள்ள முடியும். டிக்கெட் எடுக்க காத்திருக்கும் இடமும் கூட ஏசி செய்துள்ளோம். இதற்கெல்லாம் காரணம் எங்களுக்குப் படம் பார்க்க வருகிறவர்களின் வசதிதான் முக்கியம்.

 

செய்தி சேகரிக்க வந்த நிருபர்களைத் திட்டிய சமந்தாவின் தாய்.. அடிக்கப் பாய்ந்த சகோதரர்!

வருமான வரித்துறை ரெய்ட் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை கோபத்துடன் திட்டி வெளியேற்றினார் நடிகை சமந்தாவின் அம்மா.

Samantha's mother and brother attack Journalists

நடிகை சமந்தாவின் வீடு சென்னை பல்லாவரத்தில் உள்ளது. இங்குதான் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சினிமாவில், விளம்பரங்களில் சம்பாதித்த பணத்துக்கு சமந்தா முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறி இந்த சோதனையை மேற்கொண்டனர் அதிகாரிகள்.

இதனைக் கேள்விப்பட்டு, அவரது வீட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்றனர் நிருபர்கள்.

Samantha's mother and brother attack Journalists

அவர்களை ஆங்கிலத்தில் திட்டியபடி, விரட்டியடிக்க முனைந்தார் சமந்தாவின் தாயார். "உங்களுக்கு இங்கே வேலையில்லை... வெளியே போங்கள்" என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து வேகமாக வந்த சமந்தாவின் சகோதரர் செய்தியாளர்களைத் தாக்க ஆரம்பித்தார்.

இதனால் பதிலுக்கு அவரைத் தாக்க செய்தியாளர்கள் முனைந்தபோது, அவர் உள்ளே ஓடிவிட்டார். அவரை வெளியே வருமாறும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப் போவதாகவும் செய்தியாளர்கள் கூற, உடனே செய்தியாளர்கள்தான் தாக்கியதா அடாவடியாகப் பேச ஆரம்பித்துவிட்டார் சமந்தாவின் தாயார்.

அதன் பின்னர் சமந்தாவின் தந்தை பிரபு வெளியில் வந்து, வரிமான வரி குறித்து விளக்கம் கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார்.

 

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி'!- சீமான் பாராட்டு

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி' என்று பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார்.

Seeman hails Kaththukkutti

படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ''நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வயிறு குலுங்க சிரித்த படம் கத்துக்குட்டிதான். மிக ஆழமான சிந்தனையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி புதுமையான திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள்.

குறிப்பாக தம்பி சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் வயிறு புண்ணாகி விடுகிறது. மிக வித்தியாசமான உடல் மொழியில் விளையாடித் தீர்த்திருக்கிறார் சூரி.

படத்தின் பெயர்தான் 'கத்துக்குட்டி'யே தவிர, எல்லோருக்கும் கத்துக் கொடுக்கும் குட்டியாக தம்பி இரா.சரவணன் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

விவசாயப் பின்னணியில் தஞ்சை மாவட்டத்தின் வாழ்வியலை படம் அருமையாகப் பிரதிபலிக்கிறது. படத்தின் ஒவ்வொரு வசனமும் முத்து முத்தாக நெஞ்சை ஈர்க்கிறது. நல்ல கருத்தை சொல்லும் விதமாகச் சொன்னால், கடைக்கோடி ரசிகனுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்தக் கத்துக்குட்டி நிரூபித்திருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும் தனக்கான படமாகப் பெருமிதத்தோடு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி நமக்காகப் பாடுபடும் ஒவ்வொரு விவசாயிக்குமான வெற்றியாக இருக்கும். எனவே, தமிழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு போய் பார்த்து கத்துக்குட்டி படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!" என்றார்.

சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து கூறுகையில், ''படம் பார்த்து நிறைய இடங்களில் சிரித்தேன்; நிறைய இடங்களில் அழுதேன். வழக்கமான படங்களில் ஒன்றாக இல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதை அச்சு அசலாகப் படத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக படத்தில் வரும் ஒரு பாட்டி பாத்திரம் மனதைக் கொண்டாட வைத்துவிட்டது. மண் சார்ந்த பதிவை இவ்வளவு நகைச்சுவையாகவும் சுவாரசியமான திருப்பங்களுடனும் சொல்லி இருப்பது சிறப்பு. இறுதிக்கட்ட காட்சியில் என்னையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டினேன். இந்த மண்ணுக்காக ஆத்மார்த்தமாக உழைக்கும் அத்தனை உழைப்பாளர்களுக்கும் ராஜ‌மரியாதை செய்திருக்கிறது 'கத்துக்குட்டி' படம்," என்றார் சிலிர்ப்பு குறையாமல்.

'கத்துக்குட்டி' படம் நாளை (அக்டோபர் 1-ம் தேதி) திரைக்கு வருகிறது.

 

கள்ளக்காதலருடன் கையும், களவுமாக சிக்கிய ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி

மும்பை:பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் நடிகர் அர்ஜுன் ராம்பலுடன் காபி ஷாப்பிற்கு சென்று சுற்றியுள்ளவர்களை மறந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் பற்றி பலவாரியாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. சூசனுக்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையான நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Arjun Rampal

இந்த கள்ளத்தொடர்பால் தான் சூசன் ரித்திக்கை பிரிந்து சென்றதாகவும் பேசுகிறார்கள். சூசனால் அர்ஜுன் ராம்பலுக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும், அவர்கள் விவாகரத்து பெறக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சூசனும், அர்ஜுனும் மும்பையில் உள்ள காபி ஷாப் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சுற்றி இருப்பவர்களை மறந்துவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நேரம் ஆக ஆக கடையில் கூட்டம் கூடியுள்ளது.

கூட்டத்தை கவனித்த அவர்கள் இனியும் இங்கிருந்தால் நன்றாக இருக்காது என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.

 

விஜயின் புலி, பிரபாஸின் பாகுபலியை "இந்த" விஷயங்களில் முறியடிக்குமா?

சென்னை: அது வேற இது வேற, பாகுபலியுடன் புலி திரைப்படத்தை ஒப்பிடாதீர்கள் என்று இயக்குநர் சிம்புதேவன் முதல் ஹன்சிகா வரை கூறினாலும் கூட, பாகுபலி படத்துடன் புலியை ஒப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.

Puli (Hindi) (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒருவழியாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை உலகமெங்கும் விஜயின் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இடையில் இன்று காலை விஜய் வீட்டில் நடந்த ரெய்டு கூட படத்திற்கு பப்ளிசிட்டியாகவே மாறிவிட்டது.

Box Office: Vijay's 'Puli' Break Rajamouli's 'Baahubali' Record?

இந்நிலையில் பாகுபலி படம் தென்னிந்தியாவில் இருந்து வெளியாகி உலகமெங்கும் பல்வேறு சாதனைகளைப் புரிந்தது. அவற்றில் குறிப்பிட்ட சில சாதனைகளை புலி முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

பாகுபலி படத்தின் இந்த சாதனைகளை புலி திரைப்படம் முறியடிக்குமா? என்று பார்க்கலாம்.

அதிகத் திரையரங்குகள்

தென்னிந்தியாவில் உருவான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான இத்திரைப்படம் சுமார் 20க்கும் மேலான நாடுகளில் 500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை புரிந்தது. மேலும் எந்திரன் மற்றும் ஐ போன்ற திரைப்படங்களின் வரலாற்றையும் முறியடித்தது பாகுபலி.

பிரீமியர் ஷோவில்

பாகுபலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அமெரிக்காவில் சுமார் 118 திரையரங்குகளில் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்த காட்சி மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி, மேலும் அமீர்கானின் "பிகே" படத்தின் வரலாற்றையும் முறியடித்தது பாகுபலி.

உலகளவில் மிகப்பெரிய ஓபனிங்

உலகளவில் சுமார் 75 கோடிகளை வெளியான முதல் நாளே வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. இதற்கு முன்பு தென்னிந்திய மொழியில் வெளியாகி அதிக வசூலைப் பெற்ற ரஜினியின் எந்திரன் திரைப்படத்தின் வசூலை முறியடித்தது பாகுபலி.

வேகமான 100 கோடி

வெளியான 2 தினங்களில் உலகளவில் சுமார் 135 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. ஒரு இந்தியப் படம் உலகளவில் வேகமாக 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது இதுவே முதல்முறை.

5 நாட்களில் 200 கோடி

பாகுபலி வெளியான 5 நாட்களில் உலகளவில் சுமார் 213 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. ஒரு தென்னிந்தியப் படம் வேகமாக 200 கோடிகளை வசூலித்தது இதுவே முதல்முறை.

எந்திரனின் வரலாற்றை

வெளியான முதல் வாரத்தில் சுமார் 255 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. மேலும் எந்திரன் படத்தின் மொத்த வசூலையும் சுமார் 7 நாட்களில் முறியடித்து சாதனை புரிந்தது படம்.

ஹிந்தியில் மட்டும் 100 கோடி

ஹிந்தி மொழியில் வெளியான பாகுபலி ஹிந்தியில் மட்டும் சுமார் 120 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. தென்னிந்திய மொழியில் உருவான பாகுபலி ஹிந்தியில் டப் செய்யப்பட்டு 100 கோடி கிளப்பில் இணைந்தது, பாலிவுட்டில் மாபெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மேலே சொன்ன சாதனைகளை புலி திரைப்படம் முறியடித்தால், இந்திய சினிமா வரலாற்றில் புலியுடன் விஜயின் பெயரும் இடம்பெறும். பாகுபலியின் வரலாற்றை புலி முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

மலையாள டிவி சேனலில் பாகுபலி… அக்டோபர் 4ல் ஒளிபரப்பு

பாகுபலி திரைப்படம் பிரபல மலையாள டிவி சேனலான மழவில் மனோரமாவில் அக்டோபர் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்திய திரைப்பட உலகம் கொண்டாடும் பாகுபலி திரைப்படம் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Bahubali to be aired on Mazhavil Manorama

பிரபாஸ், தமன்னா, ராணா, அனுஷ்கா நடித்துள்ள இந்த திரைப்படத்தினை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ளார். இந்த படத்தின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமம், தமிழ், மலையாளம், தெலுங்கு, சேட்டிலைட் சேனல்களுக்கு தனித்தனியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் பாகுபலி திரைப்படம் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மழவில் மனோரமா சேனலில் பாகுபலி ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 4ம் தேதி பாகுபலி ஒளிபரப்பாக உள்ளதாக மலையாள டிவி சேனல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ் சேனல்களில் புத்தம் புதுப்படங்களை ஒளிபரப்பும் நிலையில் ஞாயிறு டிஆர்பி ரேட்டிங்கை கருத்தில் கொண்டு பாகுபலியை ஒளிபரப்பி கல்லா கட்டப்போகிறது மழவில் மனோரமா சேனல்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய நான் ஈ, மகதீரா ஆகிய படங்களின் ஒளிபரப்பு உரிமையையும் மழவில் மனோரமா சேனல்தான் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனி மேக்ஸ் சேனல் இந்தி பாகுபலி படத்தை அக்டோபர் 25ம் தேதி ஒளிபரப்பப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இப்படி வெயிட் குறையுதே, அழுது புலம்பும் அலியா பட்

மும்பை: பாலிவுட்டின் அழகான நடிகைகளில் ஒருவரான அலியா பட் தனது உடல் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வதால், தற்போது வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

பாலிவுட்டின் சர்ச்சை நாயகி என்று பெயரெடுத்த அலியா பட் தற்போது சந்தார் என்னும் படத்தில் ஷாகித் கபூருடன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் பிகினி உடையில் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

Alia Bhatt Worried about her Weight Loss

இந்தப் படத்தில் பிகினி காட்சியில் நடிப்பதற்காக அலியா பட் தொடர்ந்து தீவிரமான உடற்பயிற்சிகள் செய்து தனது உடலைக் கட்டுக்கோப்பாக, கொண்டுவந்தார்.

ஆனால் அவர் கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடையைவிட தற்போது அதிக எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார் அலியாபட்.

"எனது உடல் எடை தொடர்ந்து குறைந்து வருவது எனக்கு வருத்தத்தை அளிக்கும் செயலாக இருக்கிறது. என்னைப் பார்க்கும் அனைவருமே தொடர்ந்து என்னுடைய உடல் எடையைக் குறித்தே பேசுவது எனக்கு கவலை அளிக்கிறது" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார் அலியா பட்.

உடல் எடை குறைந்ததை நினைத்து ஒருபக்கம் கவலைப்பட்டாலும் மறுபக்கம், எல்லா உடைகளும் இப்போது அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

மேலும் இப்பொழுது எனது தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சந்தோஷப் பட்டிருக்கு பொண்ணு. உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலயே...

 

நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல்

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.

அக்டோபர் 18 ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

Nadigar Sangam Election: Tomorrow Nomination file Starts

காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெற இருக்கின்றது.தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 3-ந் தேதி(சனிக்கிழமை) ஆகும்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் மற்றும் விஷால் ஆகியோர் தலைமையில் 2 அணிகள் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர்.

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி காலை(ஞாயிறு) பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந்(வியாழக்கிழமை) தேதி வெளியிடப்படும்.

சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும் துணைத்தலைவர் பதவிக்கு சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் அணிசார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் நிற்கிறார். நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், அஜய்ரத்னம் போன்றோர் முக்கிய பதவிகளுக்கு நிறுத்தப்பட இருப்பதாக கூறுகின்றனர்.

எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வருவதால் 2 அணியினரும் தங்கள் அணிக்கு ஆதரவைத் திரட்டி வருகிறார்கள்.

 

புலியைத் தொடர்ந்து வேதாளத்தில் மைக் பிடித்த "சுருதி"

சென்னை: விஜயுடன் இணைந்து புலி படத்தில் ஒரு டூயட் பாடலைப் பாடிய நடிகை சுருதிஹாசன், தற்போது அஜீத்தின் வேதாளம் படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

ஒரே சமயத்தில் நடிகர் விஜய், அஜீத்துடன் நடித்து வரும் சுருதிஹாசன் அடுத்தடுத்து இருவரின் படங்களிலும் தலா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

Shruti  Haasan Sing a Song in Ajith's Vedhlam

இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, சுருதி ஹாசன் தனியாக பாடலைப் பாடியிருக்கிறார். அஜீத் - சுருதியின் நடிப்பில் இத்தாலியில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

அனிருத் இசையமைப்பில் 3 படத்தில் "கண்ணழகா", மான் கராத்தே படத்தில் "உன் விழிகளில்" போன்ற பாடல்களை ஏற்கனவே பாடியிருக்கும் சுருதி, தற்போது வேதாளம் படத்திலும் பாடியிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைந்து, சுருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தீபவாளி வெளியீடாக வரும் வேதாளம் படத்தின் ஆடியோ இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகலாம் என்று கூறுகின்றனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அஜீத் ரசிகர்கள் "ஆடியோ" வைக் கொண்டாடி மகிழத் தீர்மானித்து இருக்கின்றனர்.