கர்நாடக அரசுக்கு ரூ 3.38கோடி வருவாய் தந்த எந்திரன்!

Rajini and Aishwarya Rai
பெங்களூரு: சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை திரையிட்ட திரையரங்குகள் கேளிக்கை வரியாக மட்டும் ரூ 3.38 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில சரித்திரித்தில் இதுவரை எந்தப் படம் மூலமும் கிடைக்காத கேளிக்கை வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ரஜினியின் சிவாஜிக்கு மட்டுமே ரூ 1.3 கோடி வரியாகக் கிடைத்தது.
எந்திரன் படம் பெங்களூர் நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. புறநகர்களிலும் சேர்த்து 58 திரையரங்குகள். இவை தவிர மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தப் படம் வெளியானது. அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
பெங்களூரில் எந்திரனுக்கு கட்டணமாக ரூ 750 முதல் 1500 வரை கவுன்டர்களிலேயே விற்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக மாநில வணிக வரித்துறை இணை ஆணையர் ஜைபுன்னிசா கூறுகையில், “டிக்கெட் கட்டணத்தை அதிகமாக வைத்து விற்றதால் வணிக வரித்துறை பெங்களூர் தியேட்டர்களை சோதனையிட்டதாகக் கூறப்பட்டதில் உண்மையில்லை. வேறு வழக்கமான சோதனைகளுக்காகவே சில திரையரங்குகளுக்கு அதிகாரிகள் சென்றார்கள்.
எந்திரன் படத்தைப் பொறுத்தவரை, கர்நாடக அரசுக்கு நல்ல வருவாயைத் தந்துள்ளது. இந்தப் படம் ரிலீஸான முதல்வாரம் மட்டும் பெங்களூர் திரையரங்குகள் மூலம் ரூ 1.67 கோடி கேளிக்கை வரி கிடைத்தது. இரண்டாவது வாரம் இது ரூ 81 லட்சம். உண்மையில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வைத்து விற்பதை அரசே அனுமதித்தது. இதன் மூலம் ஒரு டிக்கெட்டுக்கு ரூ 118 வரை கேளிக்கை வரியாகக் கிடைத்துள்ளது.
கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இந்தப் படம் மூலம் ரூ 90 லட்சம் வரை வரை அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இது இதுவரை வேறு எந்தப் படம் மூலமும் கிடைக்காதது”, என்றார்.
இதற்கு முன் ரஜினியின் சிவாஜி படம் மூலம் ரூ 1.3 கோடி வரை அரசுக்கு கேளிக்கை வரியாகக் கிடைத்ததாக ஜைபுன்னிசா கூறினார்.
எந்திரன் பட கர்நாடக வெளியீட்டு உரிமை ரூ 9.5 கோடிக்கு விற்கப்பட்டது. இந்தத் தொகையை முதல் வாரத்திலேயே அந்த விநியோகஸ்தர் எடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அதிக தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை :ஐஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்தியில் படுபிஸியாக இருந்த ஐஸ்வர்யா ராய் எந்திரனில் ரஜினிக்கு ஜோடியானார். இதுவரை அவரது திரைவாழ்க்கையில் அவர் காணாத வெற்றியை எந்திரன் தந்துள்ளது. இதுபற்றி அவர், “இதுபோன்ற வேடங்களை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி எனக்கு அரிதாகக் கிடைத்த வேடத்தை சிறப்பாகச் செய்ய முடிந்தது. ஷங்கருக்கு நன்றி. முன்பைவிட இப்போது அவரை நன்கு புரிந்து கொண்டேன். அவர் நினைத்ததை என்னால் திரையில் தர முடிந்தது” என்றார். மேலும், எந்திரனின் வெற்றி எனக்கு அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளதாக ஐஸ்வர்யா ராய். கூறுகிறார்.


Source: Dinakaran
 

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?
10/23/2010 1:02:24 PM
எந்திரரன் மாபெரும் வெற்றி பிறகு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், சூப்பர் ஸ்டாரின் இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இயக்குநர்களின் பட்டியல் நீண்ட கொண்டே போகிறது. இயக்குநர் மணிரத்னம், ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா என அனைத்து இயக்குநர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.
இதனையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு ரஜினி சார் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார். ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார். ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை கேஎஸ் ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்.


Source: Dinakaran
 

பிரமாண்ட ஓப்பனிங்குடன் வருகிறது மன்மதன் அம்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உலக நாயகன் கமலஹாசன் நடித்து வரும் மன்மதன் அம்பு படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் த்ரிஷா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மன்மதன் அம்பு படத்தை உலகம் தழுவிய அளவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளார் படத் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின். உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகப் போகிறது. இதற்காக வெளியீட்டுச் செலவாகவே ரூ 20 கோடிகள் வரை செலவிடுகிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். டிசம்பர் 17 ம் தேதி வெளியாகும் என்ற கூறப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் டப் பண்ணும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.


Source: Dinakaran
 

அனுஷ்கா குழப்பம் பிரண்ட்ஸ் அட்வைஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'சிங்கம்' பட வெற்றியை தொடர்ந்து தமிழில் அனுஷ்காவுக்கு நிறைய வாய்ப்பு குவியத் தொடங்கி உள்ளது. தற்போது சிம்பு ஜோடியாக 'வானம்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தெலுங்கிலும் வாய்ப்பு அலைமோதுகிறது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் வாய்ப்பு வருவதால் எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் மகேஷ்பாபுவுடன் அவர் நடித்த தெலுங்கு படம் 'கலீஜா' வெற்றி பெறாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தெலுங்கில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தில் இருக்கும் அனுஷ்காவுக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு அடுத்த வரிசையில் உள்ள இலியானா, காஜல் அகர்வால் ஆகியோர் எப்படியாவது முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று களத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். 'இரண்டு மொழியிலும் நடித்துக்கொண்டிருந்தால் தெலுங்கில் உள்ள நம்பர் ஒன் இடத்தை இழக்க வேண்டியதிருக்கும். தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்து' என்று அவரது நெருங்கிய சகாக்கள் அனுஷ்காவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.


Source: Dinakaran
 

கிசு கிசு - சமையல் கற்கும் நடிகை ஒதுங்கும் பாட்டு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…
'நான் ரொம்ப பிசி. நான் யாரையும் லவ் பண்ணலை'ன்னு சொல்லும் காலேஜ் நடிகை, சமையல் கற்பதில் கவனம் செலுத்துறாராம்… செலுத்துறாராம்… 'நடிகைகளுக்கு சமையல் தெரியாதுன்னு நினக்கறாங்க. அதை முறியடிச்சு காட்றேன் பாரு'ன்னு  தோழிகளிடம் சவால் விட்டிருக்கிறாராம். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவசர அவசரமா சமையல் கற்பது ஏனோ?'ன்னு கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்குதாம்… கிசுகிசுக்குதாம்…
வித்யமான இசைகிட்ட வாய்ப்பு கேக்கறதுக்கு பாட்டுக்காரங்க, தயங்குறாங்களாம்… தயங்குறாங்களாம்… 'உங்க மெட்டுக்கு பாட்டெழுதணும்'ன்னு விவேகமான கவிஞரு வருஷக்கணக்குல வாய்ப்பு கேட்டதால, சமீபமா அவருக்கு பாட்டெழுதும் வாய்ப்பு தந்தேன்'னு ஒரு விழாவுல இசை பகிரங்கமா சொன்னதால பக்கத்துல இருந்த கவிஞருக்கு தர்மசங்கடமாயிடுச்சாம்… வாய்ப்பு கேட்டா நம்மையும் இப்படித்தான் சொல்லுவாருன்னு பயந்து, அவரை பாத்தாலே பாட்டுக்காரங்க ஒதுங்கறாங்களாம்…. ஒதுங்கறாங்களாம்…
உச்ச நட்சத்திரம் ஆட்டோகாரரா நடிச்ச படத்தோட 2&ம் பாகம் உருவாகப்போறதா கிசுகிசு வருதாம்… வருதாம்… செகன்ட் பார்ட் ஸ்கிரிப்ட் எதுவும் ரெடி பண்றீங்களான்னு அந்த கிருஷ்ண டைரக்டர்கிட்ட கேட்டா, இல்லைன்னு கைய விரிக்கிறாராம்… எங்கிட்ட யாரும் அப்படி பேசவே இல்லையே… எப்படி இந்த செய்தி வந்துச்சுனு தெரியலைன்னு சொல்றாராம்… சொல்றாராம்…


Source: Dinakaran
 

‘அமெரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு’!

ad film shot in Hollywood in Tamil Title
அமெரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு-ஹாலிவுட்டில் ஒரு ‘விளம்பரம்’!
இப்படி ஒரு தலைப்பில் ஒரு படத்தை அமெரிக்காவின் போய் எடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதாவது முழு நீள திரைப்படமல்ல, விளம்பரப் படம்!
சமையல் எண்ணெய் விளம்பரங்களில் முன்னோடி என்று சொல்லும் அளவுக்கு இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்துக்கு வித்யாசமான விளம்பரப் படங்களைத் தந்தவர் லேகா ரத்னகுமார். இந்த ‘அமரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு’ என்ற கான்செப்ட் விளம்பரத்தையும் அவர்தான் எடுத்துள்ளார்.
இந்த ஊர் நல்லெண்ணெய்க்கு அமெரிக்கா போய் படம் எடுக்க வேண்டிய அவசியமென்ன?
“பொதுவா இங்கிருந்து வேலைக்கு வெளிநாடு போற நம்மாளுங்க, கூடவே சமையல் எண்ணெய்ப் பாக்கெட்டுகளையும் சுமந்துபோகிறார்கள். அப்படிப் போகும்போது, செக்-இன்னில் அவற்றை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். எண்ணெய் போன்ற நீர்மப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் பெரும்பாலும் அனுமதி இல்லை.
இன்னொரு பக்கம் வெளிநாடுகளிலேயே இந்தப் எண்ணெய் கிடைத்தால் வியாபாரமும் புதிய பரிமாணம் பெறும் என்பதற்காக, இதயம் எண்ணெய் வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளோம். இதை சரியான முறையில், அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாகத்தான் இந்த விளம்பரத்தை எடுத்துள்ளோம்”, என்கிறார் லேகா ரத்னகுமார்.
இந்த விளம்பரத்தை எடுத்தது ஒரு பயனுள்ள சுவாரஸ்யமான அனுபவமாகவும் அமைந்துள்ளது ரத்னகுமாருக்கு. அமெரிக்காவில் ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து இந்தப் படத்துக்காக பணியாற்றியிருக்கிறார். அடுத்து ஹாலிவுட்டில், தான் எடுக்கப் போகும் த்ரில்லர் பட ஷூட்டிங்குக்கு முன்னோட்டமாக இந்த அனுபவம் இருந்தது என்கிறார் லேகா.
நினைத்ததை விட மிகச் சிறப்பாக வந்திருக்கிறதாம் படத்தின் தரம். “ஷூட்டிங்குக்கு தேவையான எல்லாமே தி பெஸ்ட் எனும் வகையில் அங்கே கிடைத்தன. இங்கே என்றால் எல்லாத்துக்கும் செட் போடணும். அங்கே எல்லாமே ஒரிஜினல்தான். ஒரு அவுட்டோர் வீடு வேண்டும் என்றால், அதற்காகவே விதம் விதமாக அட்டகாசமாக கட்டி வைத்திருக்கிறார்கள். இதன் பலன், இந்தியாவில் எடுத்தால் ஆகிற செலவில் பாதிதான் எங்களுக்கு அமெரிக்காவில் ஆனது. நல்ல தரம், குறைந்த செலவு… வேறென்ன வேண்டும்” என்கிறார் லேகா ரத்னகுமார்.
இன்னும் சில தினங்களில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் விளம்பரப்படம் என்ற அறிவிப்போடு ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த ‘அமெரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு’!
 

சென்னையில் மீண்டும் கன்னடப் படம்!

Jockey Movie
நீண்ட காலத்திற்குப் பிறகு சென்னையில் ஒரு கன்னடப் படம்!
தமிழகத்தில் இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வெளியாகின்றன. குறிப்பாக இந்திப் படங்கள் தமிழுக்கு இணையாக வெளியிடப்படுவதும் உண்டு. மை நேம் ஈஸ் கான் படம் 15 திரையரங்குகளில் வெளியானது, சென்னையில் மட்டும்.
தெலுங்குப் படங்களும் நல்ல தியேட்டர்களில் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் திராவிட மொழிகளில் ஒன்றான கன்னடப் படங்கள் மட்டும் வெளியாவதில்லை. கர்நாடக எல்லையையொட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மட்டும் ஓரளவு வெளியாவதுண்டு. ஆனால் தலைநகர் சென்னையில் கன்னடப் படங்களைப் பார்ப்பது அரிதான விஷயமே. இத்தனைக்கும் கர்நாடகாவில் உள்ளது போன்ற எந்த கட்டுப்பாடும் தமிழகத்தில் இல்லை. படத்தில் ‘ஸ்டஃப்’ இருந்தால் 1000 நாட்கள் கூட ஓட்டலாம்.
மேலும், கன்னடம் உள்பட எந்த மொழிப் படத்தை எதிர்த்தும் தமிழகத்தில் யாரும் கொடி பிடித்து எதிர்ப்பு காட்டுவதில்லை.
காசினோ, மோட்சம், சங்கம் காம்ப்ளக்ஸ் போன்ற திரையரங்குகளில் எப்போதாவது ஒரு கன்னடப் படம் வெளியாகி வந்த வேகத்தில் போய்விடும். விளம்பரம் கூட செய்யப்படுவதில்லை. பிறப்பால் கன்னடராக இருந்தாலும், தமிழில் பிஆர் பந்துலு தந்த பிரமாண்ட படங்கள் காலத்தால் அழியாதவை. அவர் இயக்கிய போஸ்ட்மாஸ்டர், ஸ்கூல்மாஸ்டர் (தமிழிலும் வந்தது), கிருஷ்ணதேவராயா போன்ற படங்கள் தமிழகத்திலும் வெளியாகின.
பின்னர் பாலுமகேந்திரா இயக்கிய முதல் கன்னடப் படமான கோகிலா சென்னையில் 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. மணிரத்னம் இயக்கிய (அவருக்கு இதுதான் முதல் படம்) பல்லவி அனுபல்லவி படமும் சென்னையில் ரிலீசானது.
பக்த விஜய, பக்த பிரகலாத் போன்ற ராஜ்குமாரின் படங்களும் சென்னையில் வெளியாகியுள்ளன. சௌந்தர்யா நடித்த நாக தேவதா படமும் சென்னையில் வெளியானது. பி வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட ஆப்தமித்ரா மற்றும் ஆப்தரக்ஷகா இரண்டுமே சென்னை காசினோ, மோட்சம் மற்றும் மாயாஜாலில் வெளியாகின.
அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் ஒரு கன்னடப் படம் தமிழில் வெளியாகியுள்ளது.
மாயாஜாலில் ஒரு காட்சியாக கடந்த அக்டோபர் 14-ம் தேதி வெளியான ஜாக்கி, பரவாயில்லை எனும் அளவு வசூலுடன் இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டுள்ளது. இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மலையாளத்து பாவனா.
பொதுவாக கன்னடத் திரையுலகினர் தமிழருக்கு எதிரானவர்கள் என்ற ஒரு அபிப்பிராயம் நிலவி வந்த சூழலில் யாரும் எதிர்பாராத ஒரு செயலை புனித் ராஜ்குமார் செய்தார்.
இலங்கையில் ஐஃபா விழாவுக்கு இந்திய நடிகர்கள் போகக் கூடாது என்பதற்கு கன்னடத் திரையுலகிலிருந்து ஆதரவுக் குரல் கொடுத்தவர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் விசேஷமாக நன்றி தெரிவித்து அறிக்கை விட்டது நினைவிருக்கலாம்.
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகனான புனித் ராஜ்குமார், இன்றைய கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

விவாகரத்துக்கு காவ்யா மாதவன் கணவரும் சம்மதம்

Kavya Madhavan and Nishal Chandran
கொச்சி: நடிகை காவ்யா மாதவன் கணவரும் விவாகரத்துக்கு சம்மதித்தார். இதனால் பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் விவாகரத்து பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் காவ்யா மாதவன். தமிழில் என் மன வானில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும், கேரளாவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் நிஷால் சந்திரனுக்கும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் காவ்யா மாதவன், சினிமாவில் நடிக்கவில்லை.
நிஷால் சந்திரன் துபாயில் வேலை பார்த்து வந்தார். எனவே காவ்யா மாதவனும் துபாய் சென்று கணவருடன் குடும்பம் நடத்தினார்.
குடும்ப வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே, இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாலியல் துன்புறுத்தலில் கணவரும் அவர் தம்பியும் ஈடுபட்டதாக போலீஸில் புகார் அளித்த காவ்யா, கேரளா திரும்பி விட்டார். பின்னர் அவர் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் கொச்சி குடும்பநல கோர்ட்டில், காவ்யா மாதவன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் “எனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதால், விவாகரத்து வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் எர்ணாகுளம் கோர்ட்டிலும் அவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் “எனது கணவரும், கணவரின் குடும்பத்தினரும் என்னை கொடுமை படுத்தினார்கள்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இது போல, நிஷால் சந்திரன், கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, “என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் காவ்யா மாதவன் எர்ணாகுளம் கோர்ட்டில் தொடர்ந்து இருக்கும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இந்த நிலையில் காவ்யா மாதவன் குடும்பத்தினரும், நிஷால் சந்திரன் குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசினார்கள். அப்போது இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் அவரவர் தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவ்யா மாதவன், நிஷால் சந்திரன் ஆகியோர் தரப்பில் கொச்சி குடும்பநல கோர்ட்டில் தனித்தனியே இரு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. “கோர்ட்டுக்கு வெளியே இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு, சுமூகமாக விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே எங்களுக்கு விவாகரத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனுக்களை விசாரணைக்கு நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
 

ஐஸ்வர்யா ராய்க்கு நம்பிக்கை தந்த எந்திரன் வெற்றி!

Aishwarya Rai
எந்திரனின் வெற்றி எனக்கு அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. முன்பைவிட இப்போது இன்னும் வசதியாக உணர்கிறேன், என்கிறார் ஐஸ்வர்யா ராய்.
உலக அழகியாக தேர்வு பெற்ற கையோடு ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் மணிரத்னத்தின் இருவர். ஆனால் அவர் முதலில் வெற்றியை ருசி பார்த்தது ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில்தான்.
அதன்பிறகு தமிழில் அவர் நிறைய படங்கள் நடிக்கவில்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என சில படங்களே நடித்தார். இந்தியில் படுபிஸியாக இருந்தவர் எந்திரனில் ரஜினிக்கு ஜோடியானார். இதுவரை அவரது திரைவாழ்க்கையில் அவர் காணாத வெற்றியை எந்திரன் தந்துள்ளது.
அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் ஐஸ்வர்யா இப்படிப் பேசுகிறார்:
“இருவர், ஜீன்ஸ் நடித்தபோது இல்லாத தன்னம்பிக்கையும் தைரியமும் எனக்கு இப்போது வந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிறைய முறை போயிருக்கிறேன். தங்கியிருக்கிறேன். அந்த மொழி எனக்கு நன்கு பரிச்சயமானது. பேசினால் புரிந்து கொள்வேன். ஏன்… ஓரளவு பேசவும் செய்வேன். ஆனால் தமிழ்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால்தான் அதை பேசிக் கெடுக்காமல் இருந்தேன்.
இப்போது நன்கு கற்றுக் கொண்டுள்ளேன். என்னால் தெளிவாக, தடுமாற்றமின்றி படங்களில் தமிழைப் பிரயோகிக்க முடியும். அதனாலேயே நிறையப் படங்கள் செய்ய விரும்புகிறேன்.
எந்திரனில் நடித்தது பற்றிக் கூறும்போது, “இதுபோன்ற வேடங்களை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி எனக்கு அரிதாகக் கிடைத்த வேடத்தை சிறப்பாகச் செய்ய முடிந்தது. ஷங்கருக்கு நன்றி. முன்பைவிட இப்போது அவரை நன்கு புரிந்து கொண்டேன். அவர் நினைத்ததை என்னால் திரையில் தர முடிந்தது” என்றார்.
 

மீண்டும் நடிக்கிறார் சிரஞ்சீவி:அடுத்த ஆண்டிற்குள் பட வெளியீடு

Chiranjeevi
ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று மீண்டும் நடிக்கவிருக்கிறார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
நடிகர் சிரஞ்ஜீவி திருப்பதியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருப்பதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தனர். அதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னை நம்பும் மக்களின் குறைகளைக் கேட்கவே நான் மாதந்தோறும் திருப்பதி வருகிறேன்.
ரசிகர்கள் என்னைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்கள் வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியாது. எனவே, நான் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கிறேன். அதற்கான கதை விவாதம் நடந்து கொணடிருக்கிறது.
ரசிகர்களுக்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பேன். இந்த படம் அடுத்த ஆண்டிற்குள் வெளிவரும் என்று அவர் கூறினார்.
 

சீதா வீட்டுக்கு வரும் கார்களால் மோதல்-மாயா புகார்!

Seetha
நடிகைகள் சீதா-மாயா திடீர் மோதல்-சீதாவைத் தேடி வரும் கார்களால் பிரச்சினை!
சீதா வீட்டுக்கும், கவர்ச்சி நடிகை மாயா வீட்டுக்கும் வரும் ஏகப்பட்ட கார்களால் இரு நடிகைகளுக்கும் இடையே மோதல் மூண்டது. இருவரும் ஆபாசமாக திட்டிக் கொண்டு சண்டை போட்டுள்ளனர். தற்போது இருவரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆண்பாவத்தில் அறிமுகமாகி கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் சீதா. முன்னாள் குத்தாட்ட நடிகை மாயா. இவர்கள் இருவரும் சாலிகிராமம் புஷ்பா கார்டனில் அருகருகே உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.
நடிகை மாயா மீது சீதா விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், “என் வீட்டின் முன்னால் வண்டிகளை நிறுத்தி மாயா இடைஞ்சல் செய்கிறார். இது பற்றி கேட்டால் ஆபாசமாக திட்டுகிறார். மிரட்டவும் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாயாவும் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து சீதா மீது புகார் அளித்தார்.
அதில், “சீதா என் வீட்டு முன் கார்களை நிறுத்தி தொந்தரவு செய்கிறார். இதனால் நானும் என் மகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். கார்களை வீட்டு முன் நிறுத்துவதை தவிர்க்குமாறு பலமுறை சீதாவிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. சீதா வீட்டில் இருக்கும் சதீஷும் அவருடன் மேலும் இருவரும் இணைந்து என்னை மிரட்டுகிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீதாவைத் தேடி நிறைய கார்கள் வருகின்றன
பின்னர் நிருபர்களிடம் மாயா கூறுகையில், “சீதா வீட்டுக்கு தினமும் நிறைய கார்கள் வந்து போகின்றன. இதனால் என் வீட்டில் கார் நிறுத்த முடியவில்லை. எனது எட்டரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சீதா வீட்டுக்கு வந்த ஒருவர் மோதுவது போல் காரை நிறுத்தினார்.
சீதா வீடு என நினைத்து சில பேர் என் வீட்டுக்கும் வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கும் எனக்கும் பிரச்சினை வந்து விடுகிறது. சீதா என்னை மோசமாக திட்டியதால்தான் நானும் பதிலுக்கு திட்ட வேண்டி வந்தது..”, என்றார்.