ஹைதராபாத்: சமீபத்தில் ராம்சரண் தேஜாவின் பிறந்தநாளுக்காக, அவரது மனைவி உபாசனா ஒரு அழகிய நாய்க்குட்டியைப் பரிசளித்தார்.
அந்நாய்க்குட்டிக்கு பிராட் எனப் பெயரிட்ட ராம்சரண் அதனி மிகவும் பரிவுடம் கவனித்து வந்தார். ஆனால், சமீபத்தில் ஒரு காலில் அடிபட்டது பிராட்டுக்கு.
உடனடியாக தேவையான சிகிச்சையைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையாக குணமாகவில்லையாம் பிராட். இதற்காக தன்னௌடைய அசைவ உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டு விரதம் இருக்கிறாராம் ராம் சரண்.
மேலும், இது குறித்து ராம் சரண் கூறியிருப்பதாவது,
மனைவியின் காதல் பரிசு...
மார்ச் 27 அன்று என் பிறந்த நாள் பரிசாக உபாசனா ஒரு அழகிய நாய்க்குட்டியைப் பரிசளித்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என உபாசனா கேட்டபோது என் வாயில் டக்கென்று வந்தப் பெயர் பிராட்.
பிராட் ஸ்பெஷல் தான்...
காரணம், எனது முந்தைய செல்ல நாயின் பெயர் பிராட். துவரை எங்கள் குடும்பத்தில் எவ்வளவோ நாய்கள் வளர்த்த போதும், பிராட் சம்திங் ஸ்பெஷல் தான்.
நீங்காத நினைவுகள்...
எதிர்பாராத விதமாக ஒருநாள் வாக்கிங் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பிராட் பலியாகிவிட்டது. ஆனாலும் அதன் நினைவுகள் இன்னும் என் மனதில் அப்படியே உள்ளது.
ஸ்பெஷல் கவனிப்பு...
அதன் நினைவாகத் தான் இந்தப் புதிய நாய்க்குட்டிக்கும் பிராட் எனப் பெயரிட்டுள்ளேன். இந்தப் பிராட்டை மிகவும் கண்ணும், கருத்துமாக கவனித்து வருகிறோம்
சைவமாகிட்டேன்...
ஆன போதும், கீழே விழுந்ததில் காலில் பிளேட் வைக்க வேண்டிய நிலைக்கு பிராட் தள்ளப்பட்டு விட்டான். அவன் பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக அசைவம் உண்ணுமெனது பழக்கத்தை விட்டு விட்டேன்
எதையும் செய்யத் தயார்...
பிராட்டுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஏனெனில் பிராட் எனக்கு அவ்வளவு முக்கியம்' எனத் தெரிவித்துள்ளார் ராம்சரண்