1,500 படங்களில் நடித்தவர் நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அம்மா வேடங்களில் நடித்திருப்பவர் எஸ்.என். லட்சுமி. 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற் றார். இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலைவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிறகு விருதுநகர் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கார் மூலம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு தன்னை அடக்கம் செய்வதற்காகவே தனி இடம் வாங்கி வைத்திருக்கிறாராம். அந்த இடத்தில் இறுதி சடங்கு நடக்கிறது. 12 வயதில் நடிக்க வந்தவர் லட்சுமி. என்.எஸ்.கிருஷ்ணன். எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.பாலசந்தர் நாடகங்களில் நடித்ததுடன் சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார். 5 ஆயிரம் நாடகங்களில் நடித்திருக்கிறார். 'சந்திரலேகா படத்தில் சிறுவேடத்தில் நடிக்க தொடங்கியவர், மாட்டுக்கார வேலன், சர்வர் சுந்தரம், சின்ன வாத்தியார், தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன் உள்பட 1,500 படங்களில் நடித்திருக்கிறார். பாக்தாத் திருடன் படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் இவர் டூப் இல்லாமல் நடித்ததாக அப்போது பரபரப்பு ஏற்பட் டது. சமீபகாலமாக டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலர்
அஞ்சலி செலுத்தினர்.


 

கிசு கிசு - தவிக்கும் ஹீரோயின் நெருங்கும் ஹீரோ

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

பத்மமான ஹீரோயின் புதுபடங்கள் இல்லாத நிலைல நாடகத்துல நடிக்க ஒத்துக்கிட்டாராம்... ஒத்துக்கிட்டாராம்.. ஆனா திடீர்ன்னு சில படங்கள் நடிக்க வாய்ப்பு வருதாம். நாடகத்துக்காக கொடுத்த கால்ஷீட்ட மாத்த முடியாததால இப்ப தவியா தவிக்கிறாராம். ஒத்துகிட்டபடி நாடகத்துல நடிப்பேன். படங்கள பொறுத்தவர நெறய வந்தாலும் செலக்ட் பண்ணிதான் நடிப்பேனு பல்லுல தண்ணி படாத குறையா பதில் சொல்றாராம்... சொல்றாராம்...

பிசின் நடிகை இப்பெல்லாம் தான் நடிக்கற படத்த பத்தி முன்கூட்டியே பேச தயங்கறாராம்... தயங்கறாராம்... பேச்சுவார்த்த நடக்கறப்பவே படத்த பத்தி பேசினா பின்னாலே அதுவே நெகடிவாக மாறிடுதாம். அக்ரிமென்ட்டுக்கு முன்ன படத்துல நடிக்கறதபத்தி பேசினா கொடுக்கற சம்பளம் குறைஞ்சிடும்ன்ற விஷயத்த வெளிப்படையா சொல்லாமே இப்படி கழுவுற மீன்ல நழுவற மீனா இருக்காராம்... இருக்காராம்...

சித்தார்த்தமான ஹீரோவுக்கு சொதப்புற படம் கோலிவுட்லயும்,  டோலிவுட்ல கைகொடுத்திருக்காம்... கைகொடுத்திருக்காம்... அதனால பாலிவுட்டுக்கு பறக்கலாம்ன்னு பண்ணியிருந்த முடிவ மாத்திகிட்டு மறுபடியும் சவுத் பக்கமே கவனத்த திருப்ப முடிவு பண்ணிருக்காராம். 'மில்க் ஹீரோயின் உங்களுக்கு பொருத்தமான ஜோடி'னு பலபேரு சொன்னதால அடுத்த படத்துலயும் அவர கமிட் பண்ற பிளான்ல நெருங்கறாராம். ஆனா அம்மணி பிடிகொடுக்காம நழுவறாராம்... நழுவறாராம்..


 

கங்கனாவை காப்பி அடிக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கங்கனா ரனாவத் வேடத்தில் நடித்தாலும் அவரை காப்பி அடிக்க மாட்டேன் என்றார் இஷா சாவ்லா. மாதவன், கங்கனா ரனாவத் நடித்த பாலிவுட் படம் 'தனு வெட்ஸ் மனு'. இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கங்கனா ரனாவத் ஏற்ற வேடத்தை இஷா சாவ்லா ஏற்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ''இப்படத்தின் இந்தி பதிப்பை பார்த்தபோது கங்கனா ரனாவத் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தேன். ஆனால் அந்த வேடம் என்னை தேடி வரும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்பாத்திரம் கிடைத்திருக்கிறது.

இப்படத்தை 2 முறை நான் பார்த்துவிட்டேன். மீண்டும் அதை பார்க்க மாட்டேன். ஏனென்றால் கங்கனாவின் நடிப்பு என் மனதில் பதிந்துவிடக்கூடாது. அவரது நடிப்பை காப்பி அடிக்க எனக்கு விருப்பமில்லை. அவர் நடித்த வேடமாகவே இருந்தாலும் என்னுடைய பாணியில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். பட வாய்ப்பு என்பது அதிர்ஷ்டவசமாகவே பலருக்கு கிடைக்கிறது. தற்போது தெலுங்கில் நான் நடித்துள்ள 2 படங்கள் ஹிட் ஆகி உள்ளது. அடுத்து பாலகிருஷ்ணாவுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளேன் என்றார்.


 

கோச்சடையான் படத்தில் தீபிகாவுக்கு கருப்பு மேக்கப் கிடையாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோச்சடையான் படத்தில் ரஜினியின் நிறத்துக்கு ஏற்ப தீபிகா படுகோனுக்கு கருப்பு மேக்கப் எதுவும் போடவில்லை என்று பட அதிபர் கூறினார். ரஜினி நடிக்கும் படம் கோச்சடையான். தீபிகா படுகோன் ஜோடி. இதில் ரஜினியின் நிறத்துக்கு ஏற்ப தீபிகாவின்  தோல் நிறத்துக்கு கருப்பு மேக்கப் போடப்படுகிறது என்று செய்தி வெளியானது. இது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறியது: இந்தியாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்ப முறையில் இப்பட ஷூட்டிங் நடக்கிறது.

இந்த தொழில்நுட்பத்துக்கு நடிகர், நடிகைகளின் தோல்நிறம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த சூழலில் தீபிகாவுக்கு கருப்பு மேக்கப் போட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இப்படத்தின் விளம்பர போட்டோக்கள் எடுப்பதற்காக தீபிகா சமீபத்தில் சென்னை வந்தார். ஆனால் அதுபற்றி தவறான செய்தி பரப்பி இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை. மார்ச் மாதம் மத்தியில் இங்கிலாந்தில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் ஷூட்டிங் தொடங்குகிறது.


 

இயக்குனர் ஆகிறார் காயத்ரி ரகுராம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை காயத்ரி ரகுராம் இயக்குனராகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: இயக்குனராக வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அதற்கான கதையும் முன்பே தயாராக வைத்திருந்தேன். வெளிநாட்டில் இருந்தபோது இயக்குனருக்கான படிப்பும் படித்தேன். என்னிடம் உள்ள கதையை திரைக்கதையாக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறேன். நடனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதால் அதற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்த பிறகு மற்ற விவரங்களை பற்றி அறிவிப்பேன். தற்போது 5 படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறேன். படம் இயக்கினாலும் தொடர்ந்து நடன இயக்குனராகவும் பணியாற்றுவேன்.


 

நாடகத்தில் நடிக்கிறார் பத்மப்பிரியா

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடகத்தில் நடிக்கப் போகிறேன் என்று பத்மப்பிரியா கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது; நாடகத்துறையிலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். இங்கு வந்த பிறகு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒரே எண்ணம் கொண்ட, மலையாள நடிகை ஆன் ஆகஸ்டின், இயக்குனர் வி.கே.பிரகாஷ், எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் குலூருடன் நானும் பேசிக்கொண்டிருந்தபோது நாடக எண்ணம் மீண்டும் துளிர்த்தது. சிறந்த நாடகங்களை தயாரித்து அதிகமான ரசிகர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி, ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் மற்றும் ஜெயப்பிரகாஷ் குலூர் படைப்புகளை நாடகமாக்கியுள்ளோம். நாடகத்துக்கு வந்துவிட்டதால் சினிமா அவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். தமிழில் 'தங்கமீன்கள்' படத்தில் நடித்துள்ளேன். மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவள் நான். அதனால் சிறந்த கதைகளைத் தேடித் தேடி நடிக்கிறேன். இவ்வாறு பத்மப்பிரியா கூறினார்.


 

சூர்யா படத்துக்கு பர்மிஷன்.. புதுமுகம் படத்துக்கு தடையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூர்யா நடிக்கும் மாற்றான் ஷூட்டிங் நடக்கிறது. புதுமுகம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது என்று 'கோழி கூவுது' பட குழுவினர் புகார் கூறினர். பெப்சி, தயாரிப்பாளர்கள் இடையேயான சம்பள பிரச்னையால் தமிழ் திரையுலகில் சுமார் 1 மாதமாக ஷூட்டிங் பணிகள் முடங்கி இருக்கிறது. பிரபல நடிகர்களின் படங்கள் உள்பட 50 படங்கள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் 'மாற்றான்' பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இது பல இயக்குனர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி பட யூனிட்டில் விசாரித்தபோது, ''ஐதராபாத் பிலிம்சிட்டியில் ஷூட்டிங் நடத்தும்போது அங்குள்ள செட் மற்றும் கருவிகளை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் இருக்கிறது.

அதன்படிதான் இந்த ஷூட்டிங் நடக்கிறது. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள எந்த டெக்னிஷியனையும் இந்த ஷூட்டிங்கில் நாங்கள் பயன்படுத்தவில்லை என்றனர். கடந்தவாரம் அஜீத்குமார் நடிக்கும் 'பில்லா 2' ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தபோது தொழிலாளர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து அதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அசோக், ஸ்ரீஜா, ஜோதிலட்சுமி, ரோகிணி ஆகியோர் நடிக்கும் 'கோழி கூவுது' என்ற படத்தின் ஷூட்டிங்கை காரைக்குடியில் நடத்த இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் நாகராஜன் திட்டமிட்டனர். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் நேற்று முன்தினம் காரைக்குடி புறப்பட்டு சென்றனர்.

திடீரென்று ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி பட குழு கூறும்போது,'' திரையுலகில் ஸ்டிரைக் நடப்பதால் ஷூட்டிங் தொடங்கக்கூடாது, அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்து அறிவிப்பு வந்தபிறகு ஷூட்டிங் நடத்துங்கள் என்று சங்க நிர்வாகிகள் சிலர் கூறினர்.இதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஊருக்கு திரும்பிவிட்டோம்'' என்றனர். தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் பெப்சி, தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடக்கிறது.


 

பட வாய்ப்பு இல்லை : சமையல் கலையில் இறங்கினார் சதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பட வாய்ப்பு இல்லாததால் சமையலில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சதா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தெலுங்கில் சிவாஜியுடன் திரில்லர் கதையில் நடித்துவருகிறேன். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது ஹீரோயினை மையப்படுத்திய கதை. இதையடுத்து வேறொரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறேன். தமிழ், கன்னடத்தில் அதிக வாய்ப்புகள் இல்லை. நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். நேரம் அதிகமாக கிடைப்பதால் குடும்பத்துடன் பொழுதை கழிக்கிறேன். தினமும் வீட்டில் எனது சமையல்தான். ஒவ்வொரு நாளும் சமையலில் புதுமையான டிஷ்களை செய்து பார்க்கிறேன். இதற்காக, சமையல் தொடர்பான சேனல்களை பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் விஷயங்களை வீட்டில் செய்து பார்க்கிறேன். நல்லவேளையாக, செய்யும் டிஷ்கள் சுவையாக இருக்கிறது. இதுவும் புதுமையான அனுபவம்தான். நான் செய்யும் சன்னா பட்டூராவுக்கு எனது குடும்பமே அடிமையாகிக்கிடக்கிறது இப்போது. 'சமையலில் இறங்கிவிட்டீர்கள். அடுத்து திருமணம்தானா?' என்று கேட்கிறார்கள். இப்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை. இவ்வாறு சதா கூறினார்.


 

தமிழில் டப் ஆகும் மம்மூட்டி படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாளத்தில் ரிலீசான 'போக்கிரி ராஜா' படம், தமிழில் 'ராஜா போக்கிரி ராஜா' பெயரில் டப் ஆகிறது. வாணி பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் மலேசியா பாண்டியன் தயாரிக்கிறார். மம்மூட்டி, பிருத்விராஜ், ஸ்ரேயா, ரியாஸ்கான், சரண்ராஜ், தண்டபாணி, பரவை முனியம்மா, கராத்தே ராஜா, நெடுமுடி வேணு, சித்திக், ராஜேந்திரா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஷாஜிகுமார். இசை, ஜாஸிகிப்ட். பாடல்கள், விவேகா. வசனம், வி.பிரபாகர். இயக்கம், விஷாக். அவர் கூறுகையில், 'சின்ன வயதில், செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்று பயந்து, திருச்சியில் இருந்து மதுரைக்கு வந்து குடியேறுகிறார் மம்மூட்டி. பிறகு பெரும்புள்ளியாக மாறுகிறார். தன் தம்பி பிருத்விராஜின் காதலுக்கு பிரச்னை ஏற்படும்போது, மீண்டும் திருச்சிக்கு வருகிறார். பிருத்விராஜ், ஸ்ரேயாவின் காதலுக்கு அவர் எப்படி உதவுகிறார் என்பது கதை' என்றார்.


 

வில்லன் கேரக்டரில் விருப்பம்: ரிச்சர்ட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வில்லன் கேரக்டரில் விரும்பியே நடிக்கிறேன் என்றார் ரிச்சர்ட். இது குறித்து அவர் கூறியதாவது: தெலுங்கில் தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறேன். ஹீரோ வாய்ப்பு கிடைக்காததால் வில்லனாக நடிப்பதாக சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. வில்லன் கேரக்டரில் விருப்பமுடன்தான் நடிக்கிறேன். 'தமிழ் படம்' அமுதனின் 'ரெண்டாவது படம்' எனக்கு திருப்புமுனை தரும். அடுத்து பத்மா மகன் இயக்கத்தில் 'கூத்துகள்' படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறேன். 'சுற்றுலாÕ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறேன்.


 

நந்தா நந்திதா வன்முறை படமா? இயக்குனர் விளக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் டீம் சினிமாஸ் தயாரித்துள்ள படம், 'நந்தா நந்திதா'. ஹேமச்சந்திரன், மேக்னா ராஜ் நடித்துள்ளார்கள். ராம் ஷிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ராம் ஷிவா கூறியதாவது: கன்னடத்தில் ஹிட்டான 'நந்தா நந்திதா' படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறோம். வன்முறையை கையில் எடுத்தால் அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது கதை. நகர்ப்புற குடிசை பகுதியில் நடக்கும் கதை என்பதால் அங்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகள் படத்தில் இருந்தது. இதனால் வன்முறை படம் என்று சொல்லி, சென்சார், 'ஏ' சான்றிதழ்தான் தருவோம் என்றார்கள். இதே கதை கன்னடத்தில் வெளிவந்துள்ளது என்று வாதிட்ட பிறகு, 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். இதனால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம்.



 

சிசிஎல் கிரிக்கெட் வித்தியாசமான அனுபவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற சென்னை ரைனோஸ் அணியினருக்கு மெடல் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. அணி உரிமையாளர் கங்கா பிரசாத் வழங்கினார். ஸ்ரீகாந்த், விக்ராந்த், ரமணா, விஷ்ணு, சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். அணி கேப்டன் விஷால் பேசியதாவது: எங்கள் அணி ஜெயித்தது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது, எங்களை மாதிரி நடிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம். இந்தியாவிலுள்ள எல்லா மொழி நடிகர்களும் ஒன்றாக இணையும் வாய்ப்பு இதுபோன்ற விளையாட்டுகளில்தான் அமையும். நடிகர்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும் என்ற இமேஜை, கிரிக்கெட் விளையாடி வெற்றிபெற்று உடைத்தெறிந்து இருக்கிறோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களுக்கு நடிப்பு தவிர இன்னொரு திறமையும் இருக்கிறது என்பதை மக்கள் முன் நிரூபித்து விட்டோம். சிசிஎல் போட்டி ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கும்.


 

லிங்குசாமி படத்தில் இருந்து ஆர்யா திடீர் விலகல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா திடீரென்று விலகிவிட்டார். லிங்குசாமி இயக்கிய 'வேட்டை' படத்தில் மாதவனு டன் இணைந்து நடித்தார் ஆர்யா. அடுத்து லிங்குசாமி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்க உள்ளார். 'எங்கேயும் எப்போதும்' ஹிட் ஆனதை தொடர்ந்து சரவணன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினர். ஆர்யாவிடம் புதுபட ஸ்கிரிப்டை சொன்னார். இதையடுத்து நடிக்க ஒப்புக்கொண் டார். ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்திலிருந்து ஆர்யா விலகி விட்டார். இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது, ''இப்படத்தின் கதை எனக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் விலகி விட்டேன்'' என்றார். அவர் விலகியதையடுத்து தெலுங்கு நடிகர் ராம் அந்த வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழியில் இப்படம் உருவாக உள்ளது.