சிம்புவுக்காக காடு காடாக சுற்றப் போகும் விஜய்

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு சில காட்டுப் பகுதிகளை தேர்வு செய்துள்ளார்களாம்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. இதையடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்டோருடன் நடிக்கிறார்.

சிம்புவுக்காக காடு காடாக சுற்றப் போகும் விஜய்

இந்த படத்திற்காக சில லொகேஷன்களை தேர்வு செய்துள்ளார்களாம். கேரளாவில் இருக்கும் சாலக்குடி, நெல்லியம்பதி காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவிலும், வட இந்தியாவிலும் படமாக்கப்பட உள்ளதாம். இந்த படத்தின் மூலம் ஸ்ருதி ஹாஸன் முதன்முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். முன்னதாக அவர் விஜய்யுடன் சேர்ந்து கத்தி படத்தில் ஒரு டூயட் பாடலை பாடுகிறார்.

சிம்பு படத்தில் ஸ்ருதியின் கதாபாத்திரம் தன்னை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளாராம் ஹன்சிகா.

 

பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கிய நடிகர் சூர்யா

சென்னை: பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கியுள்ளார் நடிகர் சூர்யா.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது கோம்பை பெருங்காடு என்னும் கிராமம். இந்த கிராமத்தினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இல்லை. காரணம் பள்ளிக்கு செல்ல தினமும் 10 கிலோமீட்டர் நடக்க வேண்டும். இந்நிலையிலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னவன் என்பவரின் மகள் ரேவதி பிளஸ் டூ வரை படித்து முடித்தார்.

பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கிய நடிகர் சூர்யா

ஆனால் அவரால் அதற்கு பிறகு கல்லூரிக்கு சென்று படிக்க வசதி வாய்ப்பு இல்லை. இதையடுத்து அவர் பெற்றோருடன் காட்டு வேலைக்கு சென்றார். இந்நிலையில் இது குறித்து நடிகர் சூர்யாவுக்கு தகவல் தெரிவித்தனர் அவரின் அகரம் பவுன்டேஷன் நிர்வாகிகள். உடனே அவர் ரேவதிக்கு உதவுமாறு கூறினார்.

இதையடுத்து ரேவதி சென்னை அப்பலோ கல்லூரியில் பி.சி.ஏ. படிப்பில் சேர்ந்துள்ளார். ரேவதியின் படிப்பு செலவை அகரம் பவுன்டேஷன் ஏற்றுள்ளது.

பி.சி.ஏ.வை முடித்த பிறகு சி.ஏ. படிக்க விரும்புகிறார் ரேவதி. படித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள குழந்தைகளை படிக்க வைக்கும் ஆசை அவரிடம் உள்ளது.

 

நான் தான் 'ஹீரோயின்', இல்ல நான் தான்: மல்லுக்கட்டிய 2 நடிகைகள்

சென்னை: சுந்தரமான இயக்குனரின் படத்தில் நடித்து வரும் புஸு புஸு நடிகைக்கும், ராசிக்காக பெயரை மாற்றி வைத்துள்ள நடிக்கைக்கும் இடையே லடாயாம்.

சுந்தரமான இயக்குனர் எடுத்து வரும் பங்களா படத்தில் புஸு புஸு நடிகையும், ராசிக்காக பெயரை மாற்றி வைத்துள் நடிகையும் நடிக்கிறார்கள். இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் இருந்தால் யாருக்கு அதிகம் முக்கியத்துவம் என்ற போட்டி இருக்கும். இந்த படத்திலும் அதே போட்டி தான் உள்ளதாம்.

புஸு புஸு நடிகை தனக்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது என்று கூற பெயர் மாற்றிய நடிகையோ இல்லை எனக்கு தான் என்று பதிலுக்கு தெரிவிக்க பயங்கரமாக வாக்குவாதம் நடந்ததாம். படத்தையே என் பெயரை வைத்து தான் இயக்குனர் விளம்பரம் செய்கிறார், நீ வெறும் ஒரு கதாபாத்திரம் அவ்வளவு தான் என்று புஸு புஸு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டை போட பெயரை மாற்றிய நடிகைக்கு கடுப்பாகிவிட்டதாம்.

இதையடுத்து அந்த நடிகை இயக்குனரை அணுகி கேட்க அவரோ உங்கள் இருவருக்குமே சமமான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் தான் கூறி சமாதானம் செய்தாராம். படத்தில் இன்னொரு நடிகையும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மகேஷ் பாபுவின் மனம் கவர்ந்த நடிகை யார் தெரியுமா?

ஹைதராபாத்: தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவுக்கு பிடித்த ஹீரோயின் என்றால் அது ஸ்ரீதேவி தானாம்.

டோலிவுட்டின் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு. அவர் ஆந்திரா தவிர்த்து இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளார். அவருடன் நடிக்க பல நடிகைகள் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் அவரிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று கேட்கப்பட்டது.

மகேஷ் பாபுவின் மனம் கவர்ந்த நடிகை யார் தெரியுமா?

அவர் என்னவென்றால் எனக்கு பிடித்த ஹீரோயின் என்றால் அது ஸ்ரீதேவி தான் என்று பொசுக்கென பதில் அளித்துவிட்டார். ஸ்ரீதேவி மகேஷ்பாபுவின் அப்பா கிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஹீரோயின் யாரின் பெயரையாவது கூறினால் பிறருக்கு மனக்கசப்பு ஏற்படலாம் என்று நினைத்து அப்பா காலத்து ஹீரோயின் பெயரை கூறிவிட்டார் போல மகேஷ்.