அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் அனுஷ்காவை திட்டி, அழ வைத்த மேக்கப் யூனியன்

Anushka Cries Alex Pandian Shooting In Trouble

சென்னை: அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பின்போது நாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அலெக்ஸ பாண்டியன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்த மேகப்பன் யூனியன் ஆட்கள் கடுப்பாகிவிட்டார்களாம். நாங்கள் இருக்கையில் அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30 பேர் அலெக்ஸ் பாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொன்னார்களாம். மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார்.

நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பிறகே ஷுட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.

 

அஜீத்தைப் பார்த்து அசந்த நயன்தாரா

Nayan Feels Ajith Is Amazing

அஜீத் குமாரின் புதிய கெட்டப்பைப் பார்த்த நயன்தாரா அசந்துவி்ட்டாராம்.

விஷ்ணுவர்தன் படத்துக்காக அஜீத் குமார் ஜிம் சென்று தனது உடலை கும்மென்று வைத்துள்ளார். அஜீத் பெரிய தொப்பை வைத்திருக்கிறார் என்று கிண்டலடித்தவர்களே ஆச்சரியப்படும் வகையில் தொப்பையைக் குறைத்துள்ளார். அவரது ஜிம் பாடி போட்டோ டுவிட்டரையே கலக்கிவிட்டது என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

விஷ்ணுவர்தன் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. சற்று காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த நயன் அஜீத்தின் புதிய கெட்டப்பை பார்த்து அசந்துவிட்டாராம். அட 2007ம் ஆண்டு பில்லா படத்தில் பணியாற்றியபோது இருந்த மாதிரியே ஸ்லிம்மாக இருக்கிறாரே அஜீத் என்று வியந்து கூறியுள்ளார்.

அஜீத்தின் முடி நரைத்தாலும் அவர் இன்னும் இளமையாகத் தான் உள்ளார் என்று நயன் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் அஜீத் படத்தில் காட்டும் ஈடுபாட்டை அவர் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

 

பழம்பெரும் நடிகர் ஏ.கே.ஹங்கல் மரணம்

Veteran Actor Ak Hangal Passes Away

மும்பை: பழம்பெரும் நடிகர் ஏ.கே.ஹங்கல் மும்பையில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 97.

மும்பை சான்டாக்ருஸில் உள்ள ஆஷா பரேக் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் மரணமடைந்தார். ஆகஸ்ட் 14ம் தேதி தனது வீட்டு பாத்ரூமில் அவர் வழுக்கி விழுந்ததில் தொடை எலும்பு முறி்ந்து விட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மரணத்தைத் தழுவினார்.

225க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார் ஹங்கல். நமக் ஹாரம், ஷோலே, செளகீன், ஆய்னா, பவார்ச்சி உள்ளிட்ட பல படங்களில் அவரது கேரக்டர் ரோல்கள் பேசப்பட்டன.

50 வயதில்தான் நடிக்கவே வந்தார் ஹங்கல் என்பது வியப்பான ஒரு செய்தியாகும். 1966ம் ஆண்டு வெளியான தீஸ்ரி கசம் படம்தான் அவருக்கு முதல் படம். பிறகு, ஷாகிரித் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அவர் தந்தை, மாமா உள்ளிட்ட கேரக்டர் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். கேரக்டர் ரோலா, கூப்பிடுங்கள் ஹங்கலை என்று கூறும் அளவுக்கு அந்த பாத்திரங்களாக மாறி வாழ்ந்தவர் ஹங்கல்.

 

அபிராமி ராமநாதன் 65 வது பிறந்த நாள் - திரையுலகினர் வாழ்த்து

Abhirami Ramanathan Turns 65

தமிழ்நா திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவரும் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அபிராமி மெகா மால் அதிபரான ராமநாதன், திரையரங்குகளை நவீனப்படுத்தி ரசிகர்களை ஈர்த்ததில் முன்னோடியாகப் பார்க்கப்படுபவர். படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறார்.

இன்று அவருக்கு 65 வது பிறந்த நாள். அபிராமி மெகா மாலில் தனது மனைவி நல்லம்மை ராமநாதன், மகன் சிவலிங்கம், மருமகள் ஜமுனா, மகள் மீனாட்சி, மருமகன் பெரியகருப்பன், பேரன் பேத்திகள் உள்பட குடும்பத்தினர் சூழ அவர் கேக் வெட்டி கொண்டாடினார்.

அவருக்கு தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், கலைப்புலி தாணு, ராம நாராயணன் உள்பட திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

ஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் உள்ள ஒற்றுமை

Sarathkumar S Daughter Knows Kick Boxing

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கு கிக் பாக்சிங் தெரியுமாம்.

அப்பா சரத்குமார் வழியில் திரையுலகிற்கு வந்துள்ளவர் வரலக்ஷ்மி. அவர் சிம்புவுடன் போடா போடி என்ற படத்தில் அறிமுகமாகிறார். அதையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜாவில் ஜோடி சேர்கிறார். மீண்டும் விஷாலுடன் சேர்ந்து அவர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது.

வரலக்ஷ்மி நடிக்கும் போடா போடி வரும் 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கும், விஷாலுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டதாக கோடம்பாக்கம் முழுவதும் பேச்சாகக் கிடந்தது.

இந்நிலையில் வரலக்ஷ்மியைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. ஹீரோக்களில் ஜெயம் ரவிக்கு கிக் பாக்சிங் தெரியும். அதே போன்று ஹீரோயின்களில் வரலக்ஷ்மிக்கு கிக் பாக்சிங் தெரியுமாம். அதனால் அவரிடம் வம்பு இழுப்பதற்கு முன்பு இந்த தகவலை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

 

மீனாளின் புது அவதாரம்!

Aadukalam Meenal Lands New Role

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நார்த்தங்கா என்ற கேரக்டரில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் மீனாள். இந்த கேரக்டர் தனக்குப் பெரும் பெயரை வாங்கித் தரும் என்றும் மனசெல்லாம் உற்சாகம் பொங்க சந்தோஷமாக கூறுகிறார் மீனாள்.

தவமாய் தவமிருந்துதான் மீனாளின் முதல் படம். சேரனால் அறிமுகப்படுத்தப்பட்ட மீனாள், முதல் படத்திலேயே நல்ல பெயரை வாங்கினார். ஆடுகளம் படத்திலும் இவருக்கு அழுத்தமான பாத்திரம் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது பாரதிராஜாவின் பார்வையில் சிக்கி வெயிட்டான ரோலை வாங்கி விட்டார். அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் இவருக்கு முக்கியமான பாத்திரத்தை அளித்துள்ளாராம் பாரதிராஜா.

இதுகுறித்து மீனாள் கூறுகையில், தனது அன்னக்கொடியும் படத்தில் நார்த்தங்கா என்ற கேரக்டரில் என்னயோ அல்லது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தவரையோ போட வேண்டும் என்று நினைத்துள்ளார் பாரதிராஜா. இதையடுத்து என்னை வரவழைத்துப் பேசினார். அப்போது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தது நான்தான் என்று அவரிடம் கூறியபோது அவரால் நம்பவே முடியவில்லை. அப்படியே அசந்து போய் விட்டார்.

இந்த நேரத்தில் நான் சேரன் சாருக்கும், ஆடுகளம் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த இரண்டு படங்களும்தான் பாரதிராஜவிடம் என்னை கொண்டு போய் சேர்க்க உதவியுள்ளன என்றார் நெஞ்செல்லாம் சந்தோஷம் பொங்க.

அன்னக்கொடி படத்தில் நடித்து வரும் மீனாள் ஒவ்வொரு காட்சியையும் நடித்து முடிக்கும்போது பாரதிராஜா பிரமாதம் என்று கூறி பாராட்டித் தள்ளுகிறாராம். இத்தனை நாள் எங்கம்மா இருந்தே என்றும் பாராட்டுகிறாராம்.

தற்போது தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மீனாள். தங்கரின் மனைவி வேடத்தில் வருகிறாராம். ஏற்கனவே பள்ளிக்கூடம் படத்திலும் தங்கருக்கு ஜோடி போட்டவர் மீனாள் என்பது நினைவிருக்கலாம். அதேபோல கலியுகம், மச்சான் ஆகிய படங்களையும் எதிர்பார்த்துள்ளார் மீனாள்.


விவேக்குடன் கவர்ச்சி கலந்த காமெடி கேரக்டர்களில் நிறைய நடித்துள்ள மீனாள் இப்போது முக்கிய வேடங்களில் நடிக்கப் புகுந்திருப்பது அவருக்கு நிச்சயம் ஒரு புதிய அவதாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 

டாக்சி டிரைவரை கத்தி முனையில் பலாத்காரம் செய்த 'ஏஞ்ஜெலீனா ஜூலி'!

Angelina Lookalike Raped Me Romania Taxi Driver

லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் உத்தடழகி ஏஞ்ஜெலீனா ஜூலியைப் போன்ற உருவம் கொண்ட லூமினிடா பெரிஜோக் என்ற பெண் தன்னைக் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக டாக்சி டிரைவர் ஒருவர் பரபரப்பாக கூறியுள்ளார். ருமேனியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த டிரைவரின் பெயர் நிக்கோல் ஸ்டான். 34 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தந்தை ஆவார்.

இந்த சம்பவம் குறித்து நிக்கோல் கூறுகையில், நான் மாடல் அழகியான பெரிஜோக்கை அவரது வீட்டுக்கு டாக்சியில் அழைத்துச் சென்றேன். வீட்டுக்கு வந்து இறங்கியவுடன் தனது பேக்கை தூக்கிக் கொண்டு வர உதவுமாறு கோரினார். இதையடுத்து நான் உதவி செய்தேன். பேக்குடன் வீட்டுக்குள் சென்று மாடிப்படியில் ஏறிச் சென்று வைத்து விட்டுத் திரும்பினேன்.

அப்போது அவர் என்னை கிச்சனுக்குள் வருமாறு அழைத்தார். அங்கு போனபோது தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கூறினார். நான் மறுக்கவே கத்தியை எடுத்து மிரட்டி வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார்.

பின்னர் மீண்டும் ஒரு முறை உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி மறுபடியும் என்னுடன் உறவு கொண்டார். அவருடன் நான் போராடியபோது எனது உடலில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டு விட்டது.

அவரிடமிருந்து மிகுந்த சிரமப்பட்டு நான் தப்பி வந்தேன். எனது மொபைல் போன் மூலம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன் என்றார் நிக்கோல்.

அவரது புகாரின் பேரில் தற்போது ருமேனியாவின், டுல்சி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தில்லுமுல்லு பூஜையில் பார்த்திபனின் 'சிவ... சிவா' பேச்சு!

Parthiban S Comment On Isha Talwar   

சென்னை: தில்லுமுல்லு ரீமேக் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனின் பேச்சு வழக்கம் போல அனைவரையும் கவர்ந்தது. படத்தின் நாயகி இஷா தல்வார், நாயகன் சிவாவை விட அழகாக இருப்பதாக கூறிய பார்த்திபன், இப்படிப்பட்ட நாயகி கிடைத்தால் சிவபெருமானே பார்வதியை தள்ளி வைத்து விடுவார் என்று பேசியது மட்டும்தான் சற்றே இடித்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அசத்தல் காமெடி நடிப்பில் வெளியான படம் தில்லுமுல்லு. இப்படம் இப்போது ரீ்மேக் ஆகிறது. ரஜினி செய்த கோல்மால் கேரக்டரில் சிவா நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. அதில் பார்த்திபன் கலந்து கொண்டு வழக்கம் போல அனைவரையும் கலாய்த்தார்.

பார்த்திபன் பேசுகையில், ரஜினிகாந்த் நடித்த பாத்திரத்தில் சிவா நடிக்கிறார். அதை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் சிவாவை விட அழகான இஷா தல்வார் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படிப்பட்ட à®'ருவர் கிடைத்தால் சிவனே கூட பார்வதியை தள்ளி வைத்து விட்டு à®'ரு டூயட் பாடி விடுவார். அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார் இஷா. சிவனுக்கே அப்படி என்றால் சிவா எம்மாத்திரம்...

இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள். சிவாவுக்கு தயவு செய்து சம்பளம் தராதீர்கள். அதுதான், அழகான நாயகியையே அவருக்கு சம்பளமாக தந்து விட்டீர்களே....

பிரகாஷ் ராஜ், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் நடிப்பது மிகச் சிறப்பானது. தேங்காய்க்கு இதுவரை மாற்று இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த இடத்திற்கு பிரகாஷ் ராஜ் வந்துள்ளார். தேங்காய்க்கு சரியான மாற்று பிரகாஷ் ராஜ்தான் என்றார் பார்த்திபன்.