தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்!

ஹைதராபாத்: சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு உடல் நலக் குறைவால் கவலைக்கிடமாக உள்ளார்.

78 வயதான ராமாநாயுடு, தெலுங்குத் திரையுலகில் பெரும் மதிப்புக்குரியவராகத் திகழ்பவர். தமிழில் மதுரகீதம், குழந்தைக்காக, தெய்வபிறவி, திருமாங்கல்யம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த வயதில் ஆரோக்கியமாக அனைத்து திரை நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த ராமாநாயுடுவுக்கு இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்!

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு வெங்கடேஷ்பாபு, சுரேஷ்பாபு என இருமகன்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார் வெங்கடேஷ். சுரேஷ்பாபுவின் மகன் தான் தெலுங்கு நடிகர் ராணா. ராமாநாயுடுவின் மகள் லட்சுமிதான் பிரபல நடிகர் நாகார்ஜுனின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பியாக பதவி வகித்துள்ள ராமாநாயுடு, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின!

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாணப் படங்கள், காதலனுடன் நெருக்கமாக உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், தென்மேற்கு பருவக்காற்று, போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா.

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின!

இவர் தனது காதலனுடன் மிக அந்தரங்கமாக உள்ள படங்களை செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றில் டாப்லெஸ் மற்றும் முழு நிர்வாண கோலத்திலும் உள்ளார். கையில் செல்போன் வைத்தபடி, காதலனை விட்டு படமெடுக்க வைத்துள்ளார்.

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின!

இந்தப் படங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகிவிட்டன. இவரது ஆபாச வீடியோவும் வெளியாகிவிட்டது. இந்த தகவல்கள் வெளியில் பரவியதுமே, இன்ஸ்டாகிராம் கணக்கை அழித்துவிட்டார் வசுந்தரா. ஆனால் அதிலிருந்து முன்பே படத்தை டவுன்லோடு செய்த சிலர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட வேறு சமூக இணையதளங்களில் அந்தப் படங்களை அனுப்பிவிட்டனர்.

இதனால் உலகெங்கும் வசுந்தராவின் நிர்வாணப் படங்கள் வலம் வந்து கொண்டுள்ளன.

 

'ஐ' படத்தை இந்தியில் பிரபலப்படுத்த திட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகிறார் விக்ரம்

மும்பை: தான் நடித்து வெளியாக உள்ள ஐ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்தி சின்னத்திரையின் முன்னணி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில், சல்மான் கானுடன் சேர்ந்து விக்ரமும் சிறப்பு தோற்றத்தில் வர உள்ளார்.

இந்தி சின்னத்திரையில் அதிகம் டிஆர்பி பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் 8வது தொடர்ச்சி தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள ஐ திரைப்படத்தை விளம்பரப்படுத்த விக்ரம் திட்டமிட்டுள்ளார். எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கானுடன் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க விக்ரம் முடிவு செய்தார்.

'ஐ' படத்தை இந்தியில் பிரபலப்படுத்த திட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகிறார் விக்ரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்கும் காட்சிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மும்பையில் படம்பிடிக்கப்பட உள்ளன. இதற்காக இன்றே விக்ரம் மும்பை சென்றுவிட்டார்.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் ஐ வெளியாகிறது. எனவே, படம் குறித்த எதிர்பார்ப்பை பாலிவுட்டில் அதிகரிக்கும் நோக்கத்தில் விக்ரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அவரது மேனேஜர் தெரிவித்தார்.

பிக்பாஸ்-8ல் ஐ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள உபேன் பாட்டீலும் பங்கேற்றுள்ளார். எனவே இதுவும் ஐ படத்துக்கு நல்ல விளம்பரத்தை தேடித்தரும் என்று விக்ரம் எதிர்பார்க்கிறார்.

 

49வது வயதில் காலடி எடுத்து வைத்த 'சல்லு பாய்'- பிரபலங்கள் வாழ்த்து மழை

மும்பை: 49வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.

49வது வயதில் காலடி எடுத்து வைத்த 'சல்லு பாய்'- பிரபலங்கள் வாழ்த்து மழை

பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். முன்னதாக நேற்றிரவு அவரது பண்ணை வீட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. நெருக்கமானவர்களை மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு சல்லு அழைத்திருந்தார். அஜய் தேவ்கன், பிரியங்கா சோப்ரா, லிங்கா பட நாயகி சோனாக்ஷி, கரன் ஜோகர் உள்ளிட்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

49வது வயதில் காலடி எடுத்து வைத்த 'சல்லு பாய்'- பிரபலங்கள் வாழ்த்து மழை

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது வெட்டிய கேக்கை டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார் சல்மான்கான், "Happy Birthday Bhai" என்று கேக் மீது எழுதப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னணி சினிமா கலைஞர்கள் டிவிட்டர் மூலம், சல்லுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தபடி உள்ளனர். பிபாசா பாசு, சோனாக்ஷி, பிரீத்தி ஜிந்தா, சன்னி லியோன் என கிட்டத்தட்ட அனைத்து பிரபரலங்களும் சல்மானுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

 

வெள்ளக்கார துரை விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி, சிங்கம்புலி, ஜான் விஜய்
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
இசை: டி இமான்
தயாரிப்பு: அன்புச் செழியன்
இயக்கம்: எஸ் எழில்

துள்ளாத மனமும் துள்ளும் போன்ற சீரியஸ் படங்கள் தந்த எழில், மனம் கொத்திப் பறவையிலிருந்து நகைச்சுவை ரூட்டுக்கு மாறினார். நல்ல ரெஸ்பான்ஸ். இனி இதிலேயே கொஞ்ச நாள் பயணிக்கலாம் என்ற முடிவுடன் தந்திருக்கும் மூன்றாவது காமெடிப் படம் வெள்ளக்கார துரை.

வெள்ளக்கார துரை விமர்சனம்  

வீட்டோடு மாப்பிள்ளையான சூரி ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்ய ஒரு நிலத்தை வாங்குகிறார். அதற்கு வட்டிக்கார ஜான் விஜய்யிடம் ரூ 15 லட்சத்தை கடனாக வாங்குகிறார். சூரிக்கு உதவியாக இருக்கிறார் விக்ரம் பிரபு. இடத்தை வாங்கின பிறகுதான் தெரிகிறது அது சுடுகாடு என்று.

தன்னிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பித் தராவிட்டால், அவர்களை குடும்பத்தோடு அடிமையாக்கிக் கொள்வது ஜான் விஜய்யின் வழக்கம். அந்த வழக்கப்படி சூரி, விக்ரம் பிரபுவை தன் அடிமைகளாக ஓட்டிக் கொண்டு போகிறார்.

ஜான் விஜய் வீட்டில் ஸ்ரீதிவ்யாவைப் பார்க்கும் விக்ரம் பிரபு, அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அவரை ஜான் விஜய்யின் தங்கை என்று விக்ரம் நினைத்திருக்க, அப்புறம்தான் தெரிகிறது அவரை ஜான் விஜய் தன் மனைவியாக்க முயற்சிப்பது.

வெள்ளக்கார துரை விமர்சனம்

ஸ்ரீதிவ்யா யாருக்கு சொந்தமாகிறார் என்பது க்ளைமாக்ஸ்.

படத்துக்கு வருபவர்கள் சிரிக்க வேண்டும்... அதைத் தவிர அவர்களுக்கு எந்த யோசனையும் வரக்கூடாது என்ற முடிவோடு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் எழில். அவருக்கு ரொம்பவே கைகொடுக்கின்றன அரவிந்தனின் வசனங்கள்.

சிச்சுவேஷன் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார் சூரி. அதிலும் ஜான் விஜய்யிடமிருந்து தப்ப முயன்றி, மீண்டும் அவரிடமே மாட்டிக் கொள்ளும் காட்சியில் ரசிக மகா ஜனங்கள் சிரிப்பாய் சிரித்து மகிழ்கிறார்கள்.

வெள்ளக்கார துரை விமர்சனம்

விக்ரம் பிரபு நடித்துள்ள முதல் கிராமத்துப் படம். பரவாயில்லை.. சட்டென்று அந்த பாத்திரத்தில் பொருந்திப் போகிறார். ஜான் விஜய் வீட்டில் ஸ்ரீதிவ்யாவை இவர் ரூட் விடும் காட்சிகள் ரகளை.

ஸ்ரீதிவ்யா இந்தப் படத்திலும் செம க்யூட். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தொடர்ச்சியோ எனும் அளவுக்கு இவர் வரும் காட்சிகள் இருந்தாலும், ரசிக்க வைக்கிறார்.

சிங்கம்புலியின் அந்த கச்சேரியும், அவர் பாடும் மண்ணில் இந்த காதல் பாட்டும்... நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிற காட்சி.

வெள்ளக்கார துரை விமர்சனம்

வழக்கம்போல இதிலும் காமெடி வில்லன்தான். கலக்கியிருக்கிறார் ஜான் விஜய்.

சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் போன்றோரும் தங்கள் பங்குக்கு கிச்சு கிச்சு மூட்டத் தவறவில்லை.

டி இமான் தன் பாடல்களையே ரிபீட் அடித்திருக்கிறார். ஆனால் கேட்க நன்றாக உள்ளன. ஒரு கிராமத்து நகைச்சுவைப் படத்துக்கு என்ன தேவையோ அதை அருமையாகச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி.

படத்தில் குறை சொல்ல ஆரம்பித்தால் நிறையவே உள்ளன. ஆனால் அவற்றை நினைத்துப் பார்க்கக் கூட நேரமின்றி சிரித்துக் கொண்டே இருக்க வைத்திருப்பது எழிலின் சாமர்த்தியம். நோ லாஜிக்.. ஒன்லி லாஃபிங் என்பது இவர் பாணி. இது கூட நல்லாத்தான் இருக்கு!

 

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

-இயக்குநர் முத்துராமலிங்கன்

அப்படி திடீரென எழுந்துபோவார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

சில நொடிகளின் உறைப்பில் ‘கோபம் இருக்கும் இடத்தில் ஒரு வலுவான காரணம் இருக்கும்' என்று என் சிந்தனையில் ஓடியது.

ஜெய்லானி கிளம்பி முப்பது செகண்ட்தான் ஆகியிருக்கும். வேகமாய் எழுந்துபோய் பால்கனி வழியாக எட்டிப்பார்த்தபோது, அவர் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டிருந்தார்.

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

‘சார் மேல வாங்க. அடுத்த அஞ்சாவது நிமிசத்துலருந்து நீங்க சொன்ன வேலையை ஆரம்பீச்சிரலாம்'.

‘சும்மா' இருப்பதற்குப் பதில் எதையாவது செய்துதான் பார்ப்போமே' என்பதுதான் எனது அப்போதைய திட்டமாயிருந்தது.

அடுத்து ஒரு எட்டு மணிநேரத்துக்கு ‘மூவி ஃபண்டிங்' தொடர்பான வேலைகளை எந்தப் புள்ளியிலிருந்து துவங்கலாம், என்னவிதமான சாதக பாதகங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற அம்சங்கள் குறித்துப் பேசி விடைபெற்றோம்.

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

சினிமா கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள், முக்கியமாய் நடிக்கத்துடிப்பவர்கள் சின்னச்சின்னதாய் முதலீடு செய்ய முன்வருவார்கள். அடுத்தபடியாக தெரிந்த நண்பர்கள் உதவமுன்வருவார்கள் என்பது அப்போதைய எங்கள் கணக்காக இருந்தது.

இத்திட்டத்தின் முதல் ஸ்பான்சராக எனக்குப்பட்டவர் எனது முதல்பட தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம் தான்.

மூவி ஃபண்டிங் திட்டம் தொடர்பான விபரங்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், எங்கள் இருவரின் படங்களையும் தாண்டி, இந்த நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கும் என்ற எங்கள் எண்ணத்தை புரிந்துகொண்டு ‘நீங்கள் தயாரிக்கும் அனைத்துப்படங்களுக்கும் என் பங்களிப்பாக இருக்கட்டும்' என்று சுமார் 11 லட்சத்து அறுபதினாயிரம் மதிப்புக்கு ‘பிளாக் மேஜிக்' கேமராவும் அது தொடர்பான லென்ஸ்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கிக்கொடுக்க சம்மதித்து, அதனை அடுத்த இரண்டே வாரங்களில் நிறைவேற்றவும் செய்தார்.

கேமரா கிடைத்ததே எங்களுக்கு கொம்பு முளைத்தது போலிருக்க, தானே ஒரு வெப் டிசனரும் கூட என்பதால் ஜெய்லானி 'மூவி ஃபண்டிங்' நிறுவனத்துக்கு ஒரு தரமான வெப்சைட்டை வடிவமைத்திருந்தார்.

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் -3

துவக்கிய ஓரிரு தினங்களிலேயே, வெப்சைட்டை தினமும் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருந்ததே ஒழிய ரெஸ்பான்ஸ் என்று எதையும் காணோம்.

இன்னொரு பக்கம் சில இணை, துணை இயக்குநர்கள் எங்களிடம் போனில் தொடர்பு கூட கொள்ளாமல், தங்கள் புராஜக்டை எங்கள் வெப்சைட்டில் லிஸ்ட் பண்ண ஆரம்பித்தார்கள்.

நண்பர்களிடம் ஆரம்பத்தில் இதுகுறித்து சொன்னபோது கேள்விக்குறிகளோடும், ஆச்சரியக்குறிகளோடும் எதிர்கொண்டார்கள். அனைவரிடமும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருப்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

அங்கங்கே சில பாஸிடிவ் லைட்களும் எரியத்தான் செய்தன.

‘இப்பதான் டைரக்டர் மீரா கதிரவன் கிட்ட பேசுனேன். நல்ல விசயம் பண்ணுங்க. என்னால முடிஞ்ச சப்போர்ட்டை நான் பண்றேன்னார்' என்பார் ஜெய்லானி.

‘ஆமா சார் நான் கூட சூர்யா வடிவேல்[ ‘சிநேகாவின் காதலர்கள்' படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தவர்] சார் கிட்ட பேசுனேன். என்னால முடிஞ்ச அளவுக்கு நான் இன்வெஸ்ட் பண்றேன்னு சொன்னார்' என்பேன்.

ஆனாலும் இது போதாது. ‘நடிகர், நடிகைகள் தேவை' விளம்பரம் தருவது ரொம்ப பழைய்ய ஸ்டைல். போக அது ஒரு ‘உப்புமா பட' இமேஜை உண்டாக்கக்கூடியது. இதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனைக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு அவர்களிடம் விளக்கினால் என்ன? என்று முடிவு செய்தோம்.

கண்டிப்பாக அது ஒரு டர்னிங் பாயிண்டான முடிவுதான்.

கடந்த அக்டோபர் 16. பிரசாத் லேப்பில், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஏற்பாட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மீரா கதிரவன், தயாரிப்பாளர் சி.வி.குமார் முன்னிலையில் ஜெய்லானி சுமார் 15 நிமிடங்களுக்கு தெளிவான உரை ஒன்றை ஆற்றினார்.

சி.வி.குமாரும் மூவி ஃபண்டிங் பற்றிய பாஸிடிவான விசயங்களை தொட்டுப்பேசி, 'சின்னப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதுதான் பெரும்பாடாயிருக்கிறது. அதிலும் கவனம் செலுத்தினால் இத்திட்டம் பெரும்வெற்றி பெறும்' என்று ஆலோசனை சொன்னார்.

மீரா கதிரவன் தன் பங்குக்கு மூவி ஃபண்டிங் மூலம் தயாரிக்கும் ஒரு குறும்படத்துக்கு தான் நிதி உதவி அளிப்பதாய் மேடையிலேயே அறிவித்து எங்களைப் பெருமைப்படுத்தினார்.

இரவு தாமதமாக வீடு திரும்பி, குளித்து முடித்து, உண்டு உறங்கச்செல்கையில் ஸ்விட்ச் ஆஃப் பண்ண செல்ஃபோனை கையில் எடுத்துப்பார்த்தால் சுமார் இரண்டு நிமிடங்கள் முன்பு ஒரு மெஸேஜ் வந்திருந்தது...

அந்த மெஸேஜை அனுப்பியிருந்தவர், கிரவுட் ஃபண்டிங்கில் படம் தயாரித்து பரபரப்பை உண்டு பண்ணியிருந்த கன்னட 'லூஸியா' பட இயக்குநர் பவன்குமார்.

(மீதி வரும் திங்களன்று...)

 

சினிமா வாய்ப்புகளுக்காக குழந்தை பெறுவதை தள்ளிப் போடும் சன்னி லியோன்

பிரதமர் நரேந்திர மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் சன்னி லியோன். எதற்காக அவரைத் தேடினார்கள் என்பது ஓபன் சீக்ரெட்!

முன்பு கனடாவில் தங்கியபடி ஏராளமான ஆபாசப் படங்களில் நடித்து வந்தவர், இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாகிவிட்டார். ஜிஸ்ம் 2-க்குப் பிறகு ஏராளமான படவாய்ப்புகள், நல்ல சம்பளம் என்பதால் மும்பையிலேயே கணவருடன் செட்டிலாகிவிட்டார்.

சினிமா வாய்ப்புகளுக்காக குழந்தை பெறுவதை தள்ளிப் போடும் சன்னி லியோன்  

தமிழ் படமான வடகறி யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர், அடுத்து தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

டேனியல் வெபர் என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சன்னி லியோன். இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

தனது காதல் கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து சன்னி லியோன் இப்படிக் கூறியுள்ளார்:

நான் எப்போதும் தாய்மை அடைவது குறித்து நினைத்து வருகிறேன். நான் குழந்தைகளை விரும்புகிறேன். குடுமபப் பெண்மணியாக நடந்து கொள்ள ஆசை. ஆனால் ஒரு ஆண்டுக்கு பிறகு எனது உடம்பு இதுபோல் இருக்கும் என சொல்ல முடியாது.

பாலிவுட்டில் இப்போது தான் எனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்துள்ளது. தற்போது வரும் வாய்ப்புகளை விட்டு விட்டு குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது," என்றார்.

 

107 பாடல்கள் எழுதி இந்த ஆண்டும் முதலிடத்தில் நா முத்துக்குமார்!

தமிழ் திரையிசையில் 2014-ம் ஆண்டும் கவிஞர் நா முத்துக்குமாரின் ஆதிக்கம்தான். இந்த ஆண்டும் அவர் 35 படங்களில் 107 பாடல்கள் எழுதி முதலிடம் பிடித்துள்ளார் அவர்.

தொடர்ந்து 11வது ஆண்டாக அவர் தன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்புள்ள பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய தள ஊடக நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

107 பாடல்கள் எழுதி இந்த ஆண்டும் முதலிடத்தில் நா முத்துக்குமார்!

உங்கள் அன்பாலும், ஆதரவாலும் கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014'ம் ஆண்டிலும் அதிகப் படங்கள், அதிகப் பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. 2014 ம் ஆண்டு நான், 35 படங்களில் 107 பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் 10 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளேன்.

இந்தத் தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், என் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், மற்றும் என் பாடல்களை பிரபலமாக்கிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு அவர் பாடல்கள் எழுதிய படங்கள்...

1. அஞ்சான்
2. பூஜை
3. சைவம்
4. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
5. அரிமா நம்பி
6. பொறியாளன்
7. நான் சிகப்பு மனிதன்
8. காவியத்தலைவன்
9. திருடன் போலீஸ்
10. ராமானுஜம்
11. ஆள்
12. மேகா
13. மாலினி 22 பாளையங்கோட்டை (அனைத்துப் பாடல்கள் )
14. அதிதி
15. நான்தான் பாலா
16. அது வேற இது வேற
17. உயிர் மொழி ( அனைத்துப் பாடல்கள் )
18. ஜமாய்
19. நிமிர்ந்து நில்
20. டமால் டுமீல்
21. விஞ்ஞானி
22. ஞான கிறுக்கன்
23. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
24. என் காதல் புதிது ( அனைத்துப் பாடல்கள் )
25. கபடம் (அனைத்துப் பாடல்கள்)
26. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
27. பிரம்மன்
28. கோவலனின் காதலி
29. விரட்டு
30. அழகிய பாண்டிபுரம்
31. நெருங்கி வா முத்தமிடாதே (அனைத்துப் பாடல்கள்)
32. பனி விழும் நிலவு (அனைத்துப் பாடல்கள் )
33. ஆதியும் அந்தமும் (அனைத்துப் பாடல்கள் )
34. வேல்முருகன் போர்வெல்ஸ்
35. 1 பந்து 4 ரன் 1 விக்கெட்

107 பாடல்கள் எழுதி இந்த ஆண்டும் முதலிடத்தில் நா முத்துக்குமார்!

2014ம் ஆண்டு நா முத்துக்குமார் எழுதி ஹிட்டான பாடல்களில் சில...

1. ஏக்தோ தோ தீன் சார் ( அஞ்சான் )
2. தேவதையை தேட ( பூஜை )
3. இப்படியே எங்க வேணா (பூஜை )
4. வேறாரும் கண்டிராம ( பூஜை )
5. வாங்க மக்கா வாங்க ( காவியத்தலைவன் )
6. பேசாதே பார்வைகள் வீசாதே ( திருடன் போலீஸ் )
7. என்னோடு வா குத்தாட்டம் போடு ( திருடன் போலீஸ் )
8. இதயம் என் இதயம் ( அரிமா நன்பி )
9. வெண்மேகம் போலவே ( கதை திரைக்கதை வசனம் இயக்கம் )
10. வானத்துல நிலவிருக்கும் ( பிரம்மன் )
11. அழகே அழகு ( சைவம் )
12. ஒரே ஒரு ஊரில் ( சைவம் )
13. கொக்கரக்கோ ( சைவம் )
14. உன் ஆசை காதில் சொன்னால் ( நான் சிகப்பு மனிதன் )
15. இதயம் உன்னை தேடுதே ( நான் சிகப்பு மனிதன் )
16. ஏலேலோ மெதப்பு வந்துருச்சு ( நான் சிகப்பு மனிதன் )
17. ஆடு மச்சி ஆடு ( நான் சிகப்பு மனிதன் )
18. முகிலோ மேகமோ ( மேகா )
19. கள்வனே கள்வனே ( மேகா )
20. துளித் துளியாய் ( ராமானுஜம் )

இப்போது அவர் தாரை தப்பட்டை, டூரிங் டாக்கீஸ் உள்பட 101 படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டுள்ளார்.

2014-ம் ஆண்டு அவருக்கு இன்னும் ஒரு சிறப்பு கிடைத்தது. அதுதான் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக கிடைத்த தேசிய விருது. இதே பாடலுக்கு பிலிம்பேர் விருது, சைமா விருது, ஆனந்த விகடன் விருது போன்றவையும் கிடைத்தன.

கல்வியாளர் நெ து சுந்தர வடிவேலு அறக்கட்டளை விருதையும் இந்த ஆண்டு நா முத்துக்குமார் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியதும் இந்த ஆண்டுதான்.

 

33 படங்களுக்கு 82 பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி!

பாடலாசிரியர் மதன் கார்க்கி 2014ஆம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தையை மிஞ்சிய தனையன் என்பார்கள். கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் தனது அப்பாவை மிஞ்சிவிட்டார் என்கின்றனர். இந்த ஆண்டு எழுதியுள்ள 82 பாடல்களே இதற்கு சாட்சி என்கின்றனர்.

நா.முத்துகுமார்தான் வருடந்தோறும் அதிகமான பாடல்களை எழுதுவார். இப்போது அவருக்கு போட்டியாக மதன் கார்க்கியும் வந்திருக்கிறார். இந்த ஆண்டு 82 பாடல்களை எழுதியுள்ளார் மதன் கார்க்கி.

33 படங்களுக்கு 82 பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி!

அவற்றில் யாரோ யார் அவள்(அரிமா நம்பி), வாசம் மோக்கா(வாலு), ஹனியே(ஆஹா கல்யாணம்), நெகிழி(நிமிர்ந்து நில்), மாஞ்சா(மான்கராத்தே), நீ என்ன பெரிய அப்பாடக்கரா(என்னமோ ஏதோ), டக்கு டக்கு(சிகரம் தொடு), பேங் பேங்(அஞ்சான்), முன்னே என் முன்னே(சதுரங்க வேட்டை), சரிதானா... (அமரகாவியம்), எனை மறுபடி மறுபடி(நண்பேன்டா), பச்சை வண்ணப் பூவே(வை ராஜா வை), இசை லீஸி(இசை), காதல் கஸாட்டா(கப்பல்), செல்ஃபி புள்ள(கத்தி), பூக்களே(ஐ), ஒருத்தி மேல(ஜீவா), ஏன் இங்கு வந்தான்(மீகாமன்), என் நெஞ்சில்(நாய்கள் ஜாக்கிரதை), மோனோ கேஸலீனா(லிங்கா)", போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளனவாம்.

இது குறித்து பேசிய மதன் கார்க்கி, "திரையுலகில் ஓர் எழுத்தாளனாக நான் அடியெடுத்து வைத்து ஐந்தாண்டுகள் நிறைவுறுகிறது. என் இந்தப் பயணம் தொடங்கிய நான் முதல் இன்றுவரை பத்திரிகையாளர்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கும், விமர்சனங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

எனக்கு சூழலும், சுதந்திரமும் தந்த என் இயக்குனர்களுக்கும், என் வரிகளுக்கு உருவம் தந்த இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி. இன்னும் அழகான, தரமான பாடல்களோடு வரும் ஆண்டும் அமையும் என்று நம்புகிறேன்.." என்று கூறியுள்ளார் மதன் கார்க்கி.

 

உனக்கு நான் ஆன்ட்டியா? - பிரேம்ஜியை எச்சரித்த நயன்தாரா

தன்னை ஆன்ட்டி என்று பிரேம்ஜி தொடர்ந்து அழைத்ததால் எரிச்சலடைந்த நடிகை உனக்கு நான் ஆன்ட்டியா? - பிரேம்ஜியை எச்சரித்த நயன்தாரா  

படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரையும் கலாய்க்கும் பிரேம்ஜி, நாயகியான நயன்தாராவையும் விட்டுவைக்கவில்லை.

அடிக்கடி அவரை ஆன்ட்டி ஆன்ட்டி என்று அழைக்க, முதலில் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த நயன், ஒரு கட்டத்தில் செம கடுப்பாகிவிட்டாராம்.

பதிலுக்கு பிரேம்ஜி அமரனை கோபமாக திட்டிய நயன்தாரா, 'உனக்கு நான் ஆன்ட்டியா? இனி இப்படிக் கூப்பிட்டால் நடப்பதே வேறு,' என்றும் எச்சரித்துள்ளார்.

இது படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்த, அமைதியாக அங்கிருந்து வெளியேறினாராம் பிரேம்ஜி.

 

திருட்டு விசிடியை ஒழிக்க முடியாதவர்கள் எதற்கு பதவிக்கு வரவேண்டும் - மன்சூர் அலிகான்

சென்னை: திருட்டு விசிடியை ஒழிக்க முடியாதவர்கள் எதற்காக தயாரிப்பாளர் சங்கப் பதவிக்கு வரவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மன்சூர் அலிகான்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக எஸ் ஏ சந்திரசேகரன் கோஷ்டி, கேயார் கோஷ்டி என யார் பதவிக்கு வந்தாலும், தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு மோதல்களும், வழக்குகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந்தேதி சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருட்டு விசிடியை ஒழிக்க முடியாதவர்கள் எதற்கு பதவிக்கு வரவேண்டும் - மன்சூர் அலிகான்

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கலைப்புலி தாணு, நடிகர் மன்சூர் அலிகான், கமீலா நாசர் மூவரும் அறிவித்துள்ளனர்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதியே தொடங்கிவிட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றுதான் கடைசி நாளாகும். கலைப்புலி தாணு, மன்சூர் அலிகான், கமீலா நாசர் மூவரும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, "தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய சகாப்தம் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக 300, 400 படங்கள் விற்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுப்பதற்காகத்தான் பதவிக்கு வருகிறார்கள்.

புதுப் பட சிடிக்கள் உடனுக்குடன் பிளாட்பாரத்துக்கு வந்துவிடுகின்றன. அரசு பஸ்சில் இருந்து ஏ.சி. பஸ்களில் எல்லாம் அந்த படம் ஓடுகிறது. தாம்பரத்தைத் தாண்டினா கேபிள் டி.வி.யில் படம் ஓடுகிறது. இதையெல்லாம் தடுக்க முடியாதவர்கள் எதற்கு பதவிக்கு வருகிறார்கள் என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

தயாரிப்பாளர்கள் சொத்து தெருவில் விற்கப்படுகிறது. இதையெல்லாம் பாதுகாக்க முடியவில்லை. இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் நேரடியாக செயலில் ஈடுபட வேண்டும். இதற்கான செயல் திட்டத்துடன்தான் நான் போட்டியில் நிற்கிறேன்.

நான் பதவிக்கு வந்தால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் எந்த பேருந்திலும், எந்த கேபிள் டி.வி.யிலும் எந்த புதுப்படமும் திருட்டு வி.சி.டி.யும் இருக்காது. நான் நியாயத்திற்காக போராடுகிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவேன்," என்றார்.

 

ரஜினிகாந்த், ஜெயலலிதாவைவிட பலம்மிக்கவர் இயக்குநர் ஷங்கர்! - ராம் கோபால் வர்மா மீண்டும் உளறல்

தமிழ் நாட்டில் ரஜினிகாந்த், ஜெயலலிதா போன்றவர்களை விட பலம் வாய்ந்தவர் இயக்குநர் ஷங்கர்தான் என்று கமென்ட் அடித்துள்ளார் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா.

முன்பெல்லாம் தனது படங்களுக்காகப் பேசப்பட்ட ராம் கோபால் வர்மா, இப்போது தனது நாகரீகமற்ற கமென்ட்டுகள், சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளால் அதிகம் பேசப்படுகிறார்.

பப்ளிசிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவது என்ற முடிவோடு அவர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்.

ரஜினிகாந்த், ஜெயலலிதாவைவிட பலம்மிக்கவர் இயக்குநர் ஷங்கர்! -  ராம் கோபால் வர்மா மீண்டும் உளறல்

முன்பு சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் போன்றவர்களை வம்புக்கிழுத்து வாங்கிக் கட்டியவர், இப்போது ரஜினி, ஜெயலலிதா பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஷங்கரின் ஐ படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்த ராம் கோபால் வர்மாவுக்கு, அது மிகவும் பிடித்துப் போகவே, தன் கருத்தை ட்வீட் செய்துள்ளார்.

அதில் ஐ பட ட்ரைலர் பார்த்தேன். பிரமித்துவிட்டேன். ஐ படத்தோடு மோத நினைப்பவர்கள் முட்டாள்கள். ஷங்கரால்தான் இந்திய சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்த முடியும்.

தமிழகத்தில் ரஜினிகாந்த், ஜெயலலிதா இருவரை விட பலம் வாய்ந்தவர் ஷங்கர்தான். அவரது படங்கள் ரஜினி படங்களை விட பெரியவை. அதிக வசூல் குவிப்பவை. ஜெயலலிதாவை விட ஷங்கரின் செல்வாக்கு அதிகம், என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் ட்ரைலரைப் பாராட்டிவிட்டுப் போகாமல், ரஜினியையும் ஜெயலலிதாவையும் எதற்கு இவர் வம்புக்கிழுக்க வேண்டும் என ராம் கோபால் வர்மாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

 

பாலுமகேந்திரா, ராம.நாராயணன், பாலச்சந்தர்... தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களை பறிகொடுத்த 2014

சென்னை: பாலு மகேந்திரா, பாலச்சந்தர் உள்ளிட்ட முன்னணி தமிழ் திரைப்பட கலைஞர்கள் 2014ல் விண்ணுலகம் சென்றுள்ளனர். அதில் பெரும்பாலானோர் படைப்புகள் காலம் கடந்தும் சாகா வரம் பெற்றவை. அந்த இமயங்களின் பெயர்களை அவர்களின் படைப்புகள் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இறந்தும் சாகாவரம் பெற்றவர்கள்தான் இந்த கலைஞர்கள். ஆம்.. கலைஞர்கள் மறையலாம், ஆனால் அவர்களின் கலை என்றுமே மறவாதது.

{photo-feature}