அவன் இவனுக்கு யு.ஏ

Tags: avan, Censor, film, ivan, iyer, madhu shalini, movie, movie release, sun, way, yesterday, yesterday morning

Madhu Shalini and Arya
பாலாவின் அவன் இவன் படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மே 20ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது அவன் இவன். யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாலாவின் இயக்கத்தில், விஷால், ஆர்யா நடிக்க அவர்களுடன் மது ஷாலினி, ஜனனி அய்யர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அவன் இவன்.

பாலாவின் திரையுலக வரலாற்றில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம் இது என்ற பெருமையும் இப்படத்துக்குக் கிடைத்துள்ளது. முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்களில் விஷாலும், ஆர்யாவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது. யுஏ சான்றிதழைப் படத்திற்குக் கொடுத்துள்ளது சென்சார் போர்டு. இதையடுத்து மே 20ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் தரலாம் என்று சென்சார் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அவற்றை நீக்க விரும்பாவிட்டால் யுஏ தரப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பாலா காட்சிகள் நீடிக்க வேண்டும் என்று விரும்பியதால் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ள இப்படத்தை வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ்.
English summary
Bala's much-hyped Avan Ivan has bagged 'U/A' certificate from the Regional Censor Board yesterday. It has paved way for the movie release worldwide on May 20. Reports suggest that the members of the board, who saw Avan Ivan yesterday morning, felt that a few scenes in the film cross the parameter of clean 'U'. So they awarded the movie 'U/A' certificate, claims a source. Kalpathi S Aghoram has produced Avan Ivan and it is distributed by the Sun Pictures. The movie features Aarya, Vishal, Janani Iyer and Madhu Shalini in the lead roles.
 

கன்னடத்திற்குப் போகிறார் ரம்யா நம்பீசன்!

Tags: acting career, actress, audience, babu, fame, kannada movies, limelight, mallu girl, raman, rao, ravi varma, sandalwood, several movies, taj mahal, tamil, telugu, three languages, upcoming film


Ramya Nambeesan
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து அங்கு பெரிய அளவில் பிரேக் கிடைக்காமல் திண்டாடி வரும் ரம்யா நம்பீசன் தற்போது கன்னடத்தில் தலை காட்டவுள்ளார்.

மலையாள நடிகைகள் பலரும் மலையாளத்தை விட பிற மொழிகளில் குறிப்பாக தமிழில் நடிக்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். டப்பு ஜாஸ்தி என்பதுதான் இதற்கு ஒரே காரணம்.

தமிழைப் போலவே அவர்கள் ஆர்வம் காட்டும் இன்னொரு மொழி தெலுங்கு. சிலர் கன்னடத்திற்கும் போவதுண்டு.

அந்த வகையில், பாவனா, பிரியாமணி, மம்தா மோகன்தாஸ், நவ்யா நாயர், பார்வதி மேனன் என பலரும் மலையாளத்திலிருந்து தமிழ் வழியாக கன்னடத்திற்குப் போயுள்ளனர். அந்த வரிசையில் தற்போது இணைகிறார் ரம்யா நம்பீசன்.

தமிழில் ராமன் தேடிய சீதை மூலம் அறிமுகமானவர் ரம்யா. ஆனால் அவருக்கு இதுவரை தமிழில் பிரேக் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வேறு வாய்ப்புகளைத் தேடிய அவருக்கு கன்னட வாய்ப்பு வந்துள்ளது.

அஜய் ராவ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடி போடப் போகிறாராம் ரம்யா. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.

கன்னடத்தில் நடித்தாலும் கூட தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் அவற்றையும் பிடித்துக் கொண்டு நடிப்பாராம் ரம்யா.

‘கலைச்சேவை’தானே, எங்கிருந்து செய்தால் என்ன…!

English summary
The latest Mallu girl to enter Sandalwood is none other than actress Remya Nambeesan. Remya Nambeesan is reportedly set to debut in Kannada movies with actor Ajay Rao’s upcoming film, which is yet to be titled. The Taj Mahal star’s next movie will be directed by Sangama fame Ravi Varma and produced by SV Babu. Ajay Rao and Remya will play the lead roles in the film. Remya started her acting career with Malayalam movie Kathapurushan in 1996. Her debut movie in Tamil, Raman Thediya Seethai brought her to limelight and got her many offers. Later, she has acted in several movies in Tamil, Telugu and Malayalam and is successful in impressing the audience in all the three languages.
 

கார்த்தியின் அடுத்த ஆட்டம் 'சகுனி'

Tags: bollywood actors, chennai, dayal, debutant, dream warrior, film, heroine, new film, pictures, ranjani, work


Tamanna and Karthi
கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தனது புதிய படத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார் கார்த்தி.

கடைசியாக கார்த்தி நடித்த படம் சிறுத்தை. இப்படத்திற்குப் பிறகு அடுத்த படமாக சகுனியில் நடிக்கிறார் கார்த்தி.

புதியவரான ஷங்கர் தயாள் சர்மா இயக்கும் இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பி.ஜி. முத்தையா கேமராவைக் கையாளுகிறார், ஆர்ட்டைக் கவனிக்கிறார் ராஜீவன்.

கடந்த வாரம்தான் கார்த்திக்கும், கோவையைச் சேர்ந்தவரான ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த கையோடு நடிக்க கிளம்பி விட்டார் கார்த்தி.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். சிறுத்தையைப் போலவே இதுவும் பக்கா மசாலாப் படமாம்.

படத்திற்கான நாயகி இதுவரை முடிவாகவில்லை. அவரைத் தேடி வருகிறார்களாம். யாராவது மும்பை முகம் நாயகியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

English summary
Karthi who got engaged last week to Ranjani, has started work on his new film Saguni. The film directed by debutant Shankar Dayal, is produced by a new banner Dream Warrior Pictures. The shoot of Saguni has started in and around Chennai and suburbs. It is said to be a mass masala film, being made like Siruthai. The heroine search for the film is still going on, as many Bollywood actors have been approached.
 

சிரஞ்சீவி சினிமா ஸ்டைலில் தொடையை தட்டினால் கடப்பாவில் எடுபடாது-ரோஜா

Tags: campaigning, chiranjeevi, cinema style, Congress, cr, gimmick, jagan mohan, mohan reddy, poll campaign


Roja
பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் நடிகை ரோஜா.

கடப்பா எம்.பியாக இருந்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது மீண்டும் அதே தொகுதியில் ஜெகன்மோகன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து ரோஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை பேய் என்று கூட சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.

இதற்காக அவர் ரூ. 500 கோடி வரை வாங்கி உள்ளார். பணத்திற்காக தனது கொள்கைகளையும், மானத்தையும் அடகு வைத்து விட்டார்.

இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

அவரது கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும்போது பாதி பேர் வேறு கட்சிகளுக்கு தாவி விடுவார்கள்.

ஆந்திர மக்கள் தொடக்கத்தில் இருந்தே சிரஞ்சீவியை நம்பவில்லை. இனியும் நம்ப மாட்டார்கள் என்றார் ரோஜா.

English summary
Actress Roja has blasted Actor Chiranjeevi in her Cuddapah poll campaign. Jagan Mohan Reddy is contesting in Cuddappah LS by poll. While campaigning Roja charged that, Chiranjeevi has got Rs. 500 cr from Congress. His cinema style gimmick will not succeed in Cuddapah, she roared.
 

யாரையும் காப்பி அடிக்க மாட்டேன் : அசின்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யாரையும் காப்பி அடிக்க மாட்டேன் : அசின்!

5/3/2011 2:14:20 PM

அசின் கூறியது: தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதில்லையா என்கிறார்கள். நல்ல கதைகள் வரும்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்தியில் 'ரெடிÕ படம் நடித்துள்ளேன். தமிழில் வெளியான 'உத்தமபுத்திரன்Õதான் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார். அவரைப்போல் நீங்கள் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. அவர் ஏற்ற கேரக்டரை முற்றிலுமாக மாற்றி இருக்கிறார்கள். சீன்கள், திரைக்கதை மற்றும் கேரக்டரின் தன்மைகள் என்று படம் முழுவதுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கேரக்டர் என்ன டிமாண்ட் செய்கிறதோ அதை நிறைவு செய்வதுதான் எனது எண்ணம். அதேநேரம் வேறு யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்.

 

இட்ஸ் மை ஷோ!

Tags:

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
இட்ஸ் மை ஷோ!

5/3/2011 12:00:38 PM

மா தொலைக்காட்சியில் கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார் பிரகாஷ்ரா‌ஜ். 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ப‌ரிசு கொண்டதாம் இந்த கேம் ஷோ. தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களுடன் பிரகாஷ்ரா‌ஜின் மனைவி போனி வர்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷோவின் பெயர் இட்ஸ் மை ஷோ!




 

தெலுங்குக்கு மாறினார் தமன்னா!

Tags: Cinema, films, focus, movie, recenty, Soruces


Tamanna
சீச்சீ இந்த மாங்காய் புளிக்கும் என்ற கதையாக தமிழில் தன்னைத் தேடி ஒரு பட வாய்ப்பும் வராததால் கடுப்பாகிப் போன தமன்னா, தமிழே வேண்டாம் என்று தெலுங்குக்குத் தாவி விட்டாராம்.

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் கோலோச்சி வந்தவர் தமன்னா. அவருக்கு முன்னணி ஹீரோக்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தினார்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அமலா பாலின் வரவால் தமன்னாவின் மார்க்கெட் தடுமாற்றமாகி விட்டது. அவரைத் தேடி பட வாய்ப்புகள் குறைந்து விட்டனவாம்.

இன்றைய தேதியில் தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம். புதிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லையாம். இதனால் அப்செட்டாகி விட்டார் தமன்னா.

இந்த நிலையில் ஆறுதலாக வந்து சேர்ந்துள்ளது தெலுங்குப் பட வாய்ப்புகள். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.

தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம். மறுபடியும் தெலுங்கில் நடிப்போம். மறு வாய்ப்பு வரும்போது மீண்டும் தமிழுக்கு வரலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம் தமன்னா.

English summary
Actress Tamannah is already abandoned by Tamil cinema. Till date she has one movie in Tamil. So she has shifted her focus on Telugu. Soruces say that recenty she has accepcted 4 films in Telugu.
 

காரமான 'தாரம்'!

Tags: Aparna, bala, heroine, Malayalam, manoj k jayan, Menon, Swetha, Thaaram


Swetha menon
தாரம் என்ற பெயரில் குண்டக்க மண்டக்க கதையுடன் தமிழுக்கு ஒரு திரைப்படம் வருகிறது – மலையாளத்திலிருந்து.

வித்தியாசமான கதை என்ற பெயரில் சர்ச்சையான கதைகளுடன் படம் எடுப்பது தற்போது பேஷனாகி விட்டது.

அந்த வரிசையில் இந்த தாரமும் இணைகிறது. இப்படம் மலையாளத்தில் வெளியான காயம் என்ற படத்தின் டப்பிங் ஆகும். ஸ்வேதா மேனன் நாயகியாக நடித்த படம் இது.

படம் முழுக்க கவர்ச்சிகரமாக வளைய வந்திருப்பார் ஸ்வேதா மேனன். படத்தின் கதை சற்றே காரமானது.

ஊர்ப் பண்ணையாரிடம் செக்ஸ் அடிமையாக சிக்கித் தவிக்கிறார் படத்தின் நாயகி. அவரை மீட்கிறான் நாயகன். தனது வீட்டில் அடைக்கலம் தருகிறான். திருமணமும் செய்து கொள்கிறார்கள். இந்த சமயத்தில் அவன் கொல்லப்படுகிறான்.

இதனால் மறுபடியும் நிர்க்கதியாகும் நாயகனுக்கு ஆறுதலாக இருக்கிறான் கணவரின் தம்பி. இதனால் அவன் மீது காதல் கொள்கிறாள் நாயகி. இது ஊரில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. மகன் ஸ்தானத்தில் உள்ளவன் மீது மோகம் கொள்வதா என்று பொங்குகிறது ஊர்.

அதற்கு நாயகி, மனைவி இறந்து விட்டால் அவளது தங்கச்சியை ஆண்கள் மணக்கலாம், ஆனால் நான் எனது கணவரின் தம்பியை மணக்கக் கூடாதா என்று கேட்கிறாள்.

அதன் பிறகு இருவரும் என்ன ஆகிறார்கள். கை பிடிக்கிறார்களா என்பது படத்தின் மீதிக் கதை.

படு காரமான கதையுடன் கூடிய இப்படம் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி, சலசலப்பையும், பரபரப்பையும் உருவாக்கியது. இதுதான் தற்போது தாரம் என்ற பெயரில் டப் ஆகி தமிழுக்கு வருகிறது.

படத்தில் அபர்ணாவும் நடித்துள்ளார். மனோஜ் கே ஜெயன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். நம்ம ஊர் பாலா, நாயகனின் தம்பி வேடத்தில் வருகிறார்.

ஏற்கனவே கணவரின் தம்பி மீது கள்ளத்தனமாக மோகம் கொள்ளும் பாத்திரத்தில் சங்கீதா நடித்த படம் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் மருமகள், மாமனார் இடையிலான முறை தவறிய காதலை வெளிப்படுத்திய படமும் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாரம் படம் தமிழகத்தில் என்ன மாதிரியான சலசலப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.

English summary
Kaayam of Malayalam coming to Tamil as Thaaram. This dubbing movie has Swetha Menon as heroine. Manoj K Jayan, Aparna and Bala has acted in the movie.
 

அடுத்த வாரம் மங்காத்தாவிலிருந்து ஒரு பாட்டு வெளியீடு

Tags: ajith kumar, audience, birthday, film, song, trailer


Ajith and Lakshmi Rai
அஜீத் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் அவரது 50வது படமான மங்காத்தா ஜூனில் திரைகளைத் தொடவுள்ளது. இந்த நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள விளையாடு மங்காத்தா என்ற பாடல் பெரும் ஹிட்டாகியுள்ளது.

இத்தனைக்கும் இந்தப் பாடலின் சில வரிகள் மட்டுமே மே 1ம் தேதி அஜீத் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டுள்ள படத்தின் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதுவே ஹிட் ஆகி விட்டதால் அடுத்த வாரம் இந்தப் பாடலை முழுமையாகவே வெளியிடப் போகிறார்களாம்.

43 நிமிடம் ஓடும் இந்த டிரெய்லர் அஜீத் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் படம் சூப்பர் ஹிட் என்று தயாரிப்புத் தரப்பும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இப்போதே உற்சாகமாகி விட்டனராம்.

படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவும் தனது பாடல்களுக்குக் கிடைக்கப் போகும் வரவேற்பு குறித்து பெருமையுடன் உள்ளாராம்.

மே 1ம் தேதியே படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் இது தள்ளிப் போய் விட்டது. சோனி மியூசிக் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ விழாவை விமரிசையாக நடத்த சோனி மியூசிக் விரும்புவதால் மே 3வது வாரத்திற்குப் பாடல் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

மங்காத்தா படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரேம்ஜி அமரன், வைபவ் ரெட்டி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா, சோனா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

English summary
Mangatha’s first promotional video which was released on Ajith Kumar’s birthday, has received a huge response from his fans. The 43-second trailer, which also features ‘vilayaadu mangatha…’ song, has attracted the audience. Hence, the makers of the film have decided to release the full track by next week. Sources say that the makers of the film are happy after ‘vilayaadu mangatha…’ song was widely appreciated by the audience.
 

இந்தியில் கோ படத்தில் அக்சய் குமார்

Tags:


bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

இந்தியில் கோ படத்தில் அக்சய் குமார்

5/3/2011 11:23:27 AM

சுமாரான படத்தை ‌‌ரீமேக் செய்யவே முட்டி மோதுவார்கள். கோ சூப்பர்ஹிட் படம். ‌ரிலீஸாவதற்குள் பாய்ந்து வருகின்றன ஆஃபர்கள். அக்சய் குமாருக்கு மும்பையில் கோ படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் உடனடியாக கே.வி.ஆனந்துக்கு ஃபோன் செய்து தனது பாராட்டுக்களை தெ‌ரிவித்துள்ளார். இந்த‌ப் பாராட்டு அப்படியே இந்தி ‌ரீமேக்கில்தான் சென்று முடியும் என்கிறார்கள். ஆனந்த் உடனடியாக சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை தொடங்கயிரு‌ப்பதால் கோ இந்தியில் ‌ரீமேக் செய்யப்பட்டால் ஆனந்த் அதை இயக்க மாட்டார் என்கிறார்கள்.

 

ஷங்கரை கவர்ந்த விஜய்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஷங்கரை கவர்ந்த விஜய்

5/3/2011 10:28:43 AM

தனக்கு பழக்கமேயில்லாத வேகத்தில் நண்பன் படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். படத்தில் மூன்று ஹீரோக்கள் இரு‌ந்தாலும் எந்த இடையூறும் இல்லை, குறிப்பாக விஜய். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகிவிடுகிறார் விஜய். இது மொத்தப்பட யூனிட்டையும் ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது. மாஸ் ஹீரோ என்ற எந்த பந்தாவும் இல்லை. விஜய்யின் இந்த டெடிகேஷன் ஷங்கரை வியக்க வைத்திருக்கிறது. ஆச்ச‌ரியத்துடன் நெருங்கிய நண்பர்களிடம் விஜய்யை புகழ்ந்து வருகிறார்.

 

முற்றும் துறக்கும் பிரைடா பின்டோ

Tags: actress, debut, film, freida, intimate sex, millionaire, movie, pinto, sex, sex scene, Tarsem, tarsem singh


Freida Pinto
டார்சம் சிங்கின் புதிய படமான இம்மார்ட்டல்ஸ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நாயகி பிரைடா பின்டோ அப்படத்திற்காக நிர்வாணமாக தோன்றப் போகிறாராம்.

ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமான பிரைடா பின்டோ, இப்படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் முழுமையான கவர்ச்சியில் அவர் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் படத்தில் பிரைடா கவர்ச்சியாக நடிப்பதை நிரூபிக்கும் வகையிலான டீசர்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஒரு புகைப்படத்தில் முதுகை மட்டும் காட்டியபடி முன்புறம் முற்றும் துறந்த நிலையில் காணப்படுகிறார் பிரைடா.

இப்படத்தில் பாதீரா என்ற வேடத்தில் வருகிறார் பிரைடா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹென்றி கேவில்.

English summary
Freida Pinto will be baring it all in Tarsem Singh’s upcoming movie Immortals. The Slumdog Millionaire actress will be seen doing an intimate sex scene in the film. This would be her first makeout scene in a movie since her debut. There is already buzz surrounding the sensuous nature of Freida’s role, now that the teaser of the film is out. She not only features prominently in the promo but also shows some skin when she goes backless in a particular scene.