தீபிகா படுகோனேவிற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த அமுல் பேபி

பிறந்தநாள் கொண்டாடும் பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவை குஷி படுத்தியுள்ளது அமுல். தீபிகாவின் படங்களில் இருந்து முக்கிய போட்டோக்களை எடுத்து அட்டர்லி பட்டர்லி பேபியாக கொலாஜ் செய்து தீபிகாவை உற்சாகப்படுத்தியுள்ளது அமுல்.

அமுல் விளம்பரங்களில் வரும் உருண்டை முகமும் முட்டைகண்களும் உப்பிய கன்னங்களும் கொண்ட புள்ளிகளிட்ட சட்டை அணிந்த குட்டிப்பெண் தான் இந்த அமுல் பேபி. அமுல் இந்திய வெண்மைப் புரட்சியின் முக்கியமான அடையாளம். மிகப்பழைமையும் புகழும் கொண்ட ஒரு பிராண்ட். இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

தீபிகா படுகோனேவிற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த அமுல் பேபி

அரசியல் சினிமா கிரிக்கெட் பண்டிகைகள் என்று எல்லா விஷயங்களையும் கிண்டலடிக்கும் அந்த விளம்பரங்களின் வெற்றி அமுல் என்கிற பிராண்டை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது.

ஷாருக் கானுடன் தீபிகா ஆடும் லுங்கி டான்ஸ், யேக் ஜவானி ஹேய் தீவானி படத்தில் ரன்பீருடன் கிளாமர் ஆட்டம் போடும் தீபிகா, ராம் லீலாவில் ரன்பீர் கபூருடன் ரொமான்ஸ் செய்யும் தீபிகா, அர்ஜூன் கபூருடன் பைண்டிங் பேணியில் காதலிக்கும் தீபிகா என அனைத்து படங்களில் இருந்தும் ஸ்டில்ஸ்களைப் போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது அமுல்.

இதை பார்த்த தீபிகாவின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியை பார்க்கணுமே, சந்தோசத்தில் பூரித்து போனாராம் தீபிகா.

 

சமூக வலைத் தளங்களில் விஷமத்தனம்: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!

சமூக வலைத் தளங்களில் விஷமத்தனமாக செய்தி பரப்புவது, பிற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத் தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கம்.

சமூக வலைத் தளங்களில் விஷமத்தனம்: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!

அதேபோல அஜீத் படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் தவறான கருத்துக்களைப் பரப்புவதும், விஜய் படம் வெளியாகும்போது அஜீத் ரசிகர்கள் ஓவராகக் கலாய்ப்பதும் வழக்கமாகிவிட்டது.

சில இடங்களில் ரசிகர்களின் இந்த செயலால் வன்முறை மோதல் ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்திக் கொன்ற சம்பவங்களும் நடந்தன.

சமீப காலமாக இவர்களுடைய இந்த மோதல் எல்லை மீறிக் கொண்டே போகிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விஜய்யிடம் தெரிவித்து, ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஏற்ற விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், "ரசிகர்களே சண்டையை நிறுத்துங்கள்.

இது போன்ற வீணான விஷயங்களில் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய ட்விட்டர் கணக்கை அழித்துவிடுவேன்," என்று எச்சரித்துள்ளார்.

 

ஜனவரி 14 ம் தேதி ஐ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யு/ஏ சான்றுடனே வெளியாகிறது?

ஐ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசத்சந்திரன்.

படத்துக்கு வழங்கப்பட்ட யு ஏ சான்றை மாற்ற முடியாது என தணிக்கைக் குழு உறுதியாகவே இருப்பதால், யுஏவுடனே படம் வெளியாகும் என்று தெரிகிறது.

ஜனவரி 14 ம் தேதி ஐ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..  யு/ஏ சான்றுடனே வெளியாகிறது?

ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம் பல மாத தாமதத்துக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியாகிறது.

யு சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். இதனால் ஜனவரி 8 அல்லது 14 என்று மாற்றி மாற்றி கூறி வந்தனர்.

இப்போது ஜனவரி 14-ம் தேதிதான் படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

தெலுங்கில் இந்தப் படத்தை மெகா சூப்பர் குட் நிறுவனம் வெளியிடுகிறது.

வெளிநாடுகளில் ஆஸ்கர் ரவிச்சந்திரனே வெளியிடுகிறார்.

 

"நானும் ரவுடி தான்".. நல்லா சத்தமா சொல்லுங்க.. நயன்தாராவுக்கு காது கேக்காது!

சென்னை: விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் காது கேளாதவராக நடித்துள்ளாராம் நயன்தாரா.

நாயகனைச் சுற்றி வந்து காதலிப்பது, டூயட் பாடுவது என்பது மட்டுமல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நயன் தாரா நடித்து வருகிறார். ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அந்தவகையில், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு காது கேளாதவர் கதாபாத்திரமாம். அத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்திலும் இப்படம் உருவாகிறதாம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பெரும்பட்குதி பாண்டிச்சேரியில் படமாக்கப் பட்டுள்ளது.

இது தவிர உதயநிதியுடன் நடிக்கும் நண்பேண்டா படமு, சிம்பு ஜோடியாக நடித்த இது நம்ம ஆளு பட வேலைகளும் முடிந்துள்ளது. இப்படங்கள் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதேபோல், சூர்யா ஜோடியாக மாஸ் படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக தனி ஒருவன் படத்திலும், ஆரியுடன் நைட்ஷோ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் அவர் நடிக்கிறார்.

 

சென்சாராகி வெளிவராத 464 தமிழ்ப் படங்கள்!

தமிழ் சினிமாவில் சென்சாராகி சான்று பெறும் எல்லாப் படங்களும் வெளியாவதில்லை.

வெளியான படங்களைவிட பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை, அப்படி வெளியாகாமல் உள்ள படங்களின் எண்ணிக்கை மட்டும் 464.

சென்சாராகி வெளிவராத 464 தமிழ்ப் படங்கள்!

குறிப்பாக 2014-ம் ஆண்டு மட்டும் 215 படங்கள் வெளியாகின. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இது மிகப் பெரிய எண்ணிக்கை. அதே நேரம் இந்த ஆண்டு மட்டும் தணிக்கை சான்றிதழ் பெற்று ரிலீசாகாமல் போன படங்கள் 144 ஆகும்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்சாராகி இன்னும் வராமல் உள்ள படங்கள் 320.

ஆக 464 படங்கள் பெட்டியில் தூங்கிக் கொண்டுள்ளன. இவற்றை வெளியிட முடியாமல் அவற்றின் தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டது இன்னொரு சோகக் கதை.

இந்தப் படங்கள் வெளியாகாமல் கிடப்பதற்கு முக்கிய காரணம், நிதிச் சிக்கல்கள்தான். காப்பி, கதைப் பிரச்சினை, வழக்குகள் போன்றவை இன்னும் சில காரணங்கள்.

புதிதாக பதவி ஏற்கப் போகும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவார்களா?

 

ஆடியோ ரிலீஸுக்கு அனுமதி மறுப்பு.. ரசிகருக்கு கத்திக் குத்து: பவன் கல்யாண் பட விழாவில் பரபரப்பு

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் ரசிகர் ஒருவருக்கு கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு பட நடிகர் பவன் கல்யாணின் புதிய திரைப்படம் 'கோபாலா கோபாலா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அவரது ரசிகர்களுக்கும் இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.

ஆடியோ ரிலீஸுக்கு அனுமதி மறுப்பு.. ரசிகருக்கு கத்திக் குத்து: பவன் கல்யாண் பட விழாவில் பரபரப்பு

இதற்கென விழா அரங்கு வாசலில் நுழைவுச் சீட்டு வழங்கப் பட்டது. அப்போது ரசிகர் ஒருவர் தனது நண்பர்களுக்கும் நுழைவுச் சீட்டு வேண்டும் என தகராறு செய்துள்ளார். ஆனால், விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர், நுழைவு சீட்டுகளை விநியோகித்த ஸ்ரீனிவாஸ் என்ற உறுப்பினரை கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்தில் அறுத்துள்ளார். காயமடைந்த ஸ்ரீனிவாஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்திய ரசிகரின் விபரம் ஏதும் தெரியவில்லை. தலைமறைவாக உள்ள தாக்குதல் நடத்திய அந்த ரசிகரைத் தேடி வருவதாக மாதாப்பூர் காவல் நிலைய கண்காணிப்பாளர் கே. நரசிம்மலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது

இந்த தாக்குதல் சம்பவத்தால் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று 48வது பிறந்த நாள்

இசைப்புயல் என வர்ணிக்கப்படும் ஏ ஆர் ரஹ்மான் இன்று 48வது பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான்.

திரையுலகுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 22 ஆண்டுகளும் இசையுலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறார் ரஹ்மான்.

இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று 48வது பிறந்த நாள்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்தி, ஆங்கிலம் என சர்வதேச அளவில் ரஹ்மான் இசை பிரபலமானது. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

இந்த ஆண்டு அவர் இசையில் கோச்சடையான், லிங்கா மற்றும் காவியத் தலைவன் போன்ற படங்கள் வெளியாகின. இவற்றில் கோச்சடையான் படத்தின் இசைக்காகவும் வேறு இரு ஆங்கிலப் படங்களின் இசைக்காகவும் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ ஆர் ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது.

மூன்று படங்களின் இசைக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அவர் இன்னொரு ஆஸ்கர் பெற வாழ்த்துவோம்!

 

"கும்கி"க்கு காலண்டர் அடித்த சிவகாசி செல்வம் மேனன் மற்றும் கார்த்திக் மேனன்...!

சென்னை: நடிகை லட்சுமிமேனன் போட்டோக்களைக் கொண்டு அவரது ரசிகர்கள் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கும்கி படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கேரளாவைச் சேர்ந்த லட்சுமிமேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், ஜிகிர்தண்டா, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

லட்சுமி மேனனின் பரம ரசிகர்கள் இணைந்து சிவகாசியில் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். லட்சுமிமேனன் புகைப்படத்துடன் உள்ள அந்த காலண்டரில் லட்சுமி மேனன் ரசிகர் மன்றம் - சிவகாசி என எழுதப்பட்டுள்ளது. கூடவே கும்கி படத்தில் யானைக்கு லட்சுமிமேனன் முத்தமிடுவது போன்ற புகைப்படமும் அதில் உள்ளது.

இது தவிர காலண்டரின் மேல் பகுதி அன்பு, அடக்கம், அழகு என லட்சுமி மேனனின் புகழ் பாடுகிறது.

லட்சுமி மேனன் புகைப்படம் தவிர அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இருவரது படமும் காலண்டரில் இடம் பெற்றுள்ளது. அதில் ஒருவரது பெயர் செல்வம் மேனன், மற்றொருவர் பெயர் கார்த்திக் மேனன் (செல்வம், கார்த்திக் இவங்க பெயர் போலத் தெரிகிறது... பின்னால் உள்ள மேனன் இவர்களாக சேர்த்துக் கொண்டு விட்டார்கள்)

இதெல்லாம் கூட ஓகே, ஆனால் காலண்டரின் கீழ் பகுதியில் லட்சுமிமேனனின் புகைப்படத்திற்கு கீழே மே 19, 2015 என எழுதப்பட்டுள்ளது. அதாகப்பட்டது, லட்சுமிமேனனின் பிறந்தநாள் மே 19ம் தேதி வருகிறதாம்.

இந்த காலண்டர் புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் வேகமாக பரவி வருகிறது.

என்னம்மா யோசிக்கிறாங்கப்பா....!

 

பிரஸ் மீட்டா, ஆளவிடுங்க: தெறித்து ஓடும் நம்பர் நடிகை

சென்னை: சின்ன நம்பர் நடிகை பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றாலே தெறித்து ஓடுகிறாரராம்.

சின்ன நம்பர் நடிகைக்கு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வருவது பிடிக்காதாம். அதனால் தான் முடிந்த வரை பத்திரிக்கையாளர் சந்திப்புகளை தவிர்த்து வருகிறாராம். தற்போது அவர் நடித்துள்ள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் டிமிக்கி கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இவர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இப்படி மிரளுகிறார் என்று நினைத்தால் அதற்கு காரணம் உண்டு. அவர் முன்பு எப்பொழுது பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்தாலும் அவருக்கும், தெலுங்கு நடிகருக்குமான காதல் பற்றி தான் பலர் கேள்வி கேட்டுள்ளனர். தற்போது அந்த நடிகருடனான காதல் முறிந்து சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருடன் காதல் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் நிச்சயம் முதல் கேள்வி புது காதலை பற்றி தான் இருக்கும். அதற்கு விளக்கம் அளிக்க முடியாது என்று தான் நடிகை பத்திரிக்கையாளர் சந்திப்புகளை தவிர்க்க முடிவு செய்துள்ளாராம்.

நடிகை பலமுறை மறுப்பு தெரிவித்தும் அவரின் திருமண செய்தி மட்டும் அடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் 60 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நிற்கும் அஜீத்

கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த அஜீத் ரசிகர்கள் என்னை அறிந்தால் படத்துக்காக 'தல'க்கு 60 அடி உயர கட்அவுட் வைத்துள்ளார்களாம்.

கௌதம் மேனனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் தல பொங்கல் என்று ரசிகர்கள் குஷியாக இருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு 40, அஜீத்துக்கு 60 அடி கட்அவுட்

ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த அஜீத் ரசிகர்கள் அங்கு என்னை அறிந்தால் படத்திற்காக 'தல'க்கு 60 அடி உயர கட் அவுட் வைத்துள்ளார்களாம்.

இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு 40 அடி கட்அவுட் வைக்கப்பட்டது தான் சாதனையாக இருந்து வந்தது. ஆனால் ஆரம்பம் பட ரிலீஸையொட்டி அஜீத் ரசிகர்கள் அவருக்கு 58 அடி உயர கட் அவுட் வைத்து எம்.ஜி.ஆர். கட்அவுட் சாதனையை முறியடித்தனர்.

தற்போது ஆரம்பம் கட்அவுட் சாதனையை என்னை அறிந்தால் பட கட்அவுட் முறியடித்துள்ளது.

 

இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டரில் போய் பார்க்கனும்!

சென்னை: ராஜேந்திரன் வர வர கெட்டப் நாயகனாக மாறி வருகிறார். கொடூரமான வில்லனாக அறிமுகமாகி, ரணகளமான காமெடியானாக மாறி கலக்கி வந்த அவர் தற்போது விதம் விதமான கெட்டப்பில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

நான் கடவுள் படத்தில் பார்த்த ராஜேந்திரனாக இப்போது அவர் இல்லை. மாறாக காமெடி பீஸாகி விட்டார். அதாவது காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் பாடிய ஆரோமலே பாட்டைக் கேட்டு காது நரம்பு கிழிந்து போனவர்கள் பட்டியல் ரொம்பவே நீளம். ஆனாலும் ராஜேந்திரன் விடுவதாக இல்லை. தொடர்ந்து காமெடியில் ரசிகர்களை நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்.

வில்லாதி வில்லனாக வலம் வந்த ராஜேந்திரன் திடீரென திருடன் போலீஸ் படத்தில் பெண் வேடத்தில் வந்த காட்சியைப் பார்த்து எலும்பு சிலிர்த்துப் போனவர்கள் அதிகம்.

இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டரில் போய் பார்க்கனும்!

இந்த நிலையில் தற்போது காலகட்டம் படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டுகிறார் ராஜேந்திரன்.

பாஸ்கர்.. இவர்தான் இந்த காலகட்டம் படத்தின் இயக்குநர். இவர் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். நடிகர் நடிகையரை டான்ஸ் ஆட வைத்தவர். இவர்தான் தற்போது இயக்குநராகியுள்ளார். இவர் இயக்கும் படம்தான் காலகட்டம். பவன் ஹீரோவாக நடிக்கிறார்.

இதெல்லாம் நமக்குத் தேவையே இல்லை - சத்யஸ்ரீ என்ற அழகான ஹீரோயின் இதில் அறிமுகமாகியிருந்தாலும் கூட - நாம, ராசேந்திரனை மட்டும் பார்ப்போம்.

இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டரில் போய் பார்க்கனும்!  

பழைய காலத்து படங்களில் வரும் எம்.ஜி.ஆர். போலவே தகதகன்னு இதில் மிளிர்கிறார் ராஜேந்திரன். அதாவது எம்.ஜி.ஆர். போலவே பளார் டிரஸ்ஸிலும், பொளேர் கலர் கண்ணாடியும் போட்டு கண்களை கூச வைக்கிறார்.

தலையில் விக் வேறு. வாகாக சீவி விட்ட அந்த ஸ்டைல் தலை முடியலங்கராம்... ஆஹாஹா.. ஓஹோஹோ!

இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டரில் போய் பார்க்கனும்!

ஒரு காலத்தில் சுதாகர் போன்ற அக்காலத்து டாப் டக்கர் ஹீரோக்களின் சட்டைகளை அலங்கரித்து வந்த மெகா சைஸ் காலர் போட்ட ராஜேந்திரனைப் பார்க்கும்போது அவருக்கே கூட அடையாளம் தெரியாது பாஸ்!.

ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணை சாய்க்கிறா அவ உதட்டைக் கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா... டொடோடோடொய்ங்.... என்று எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலன் படத்தில் பாடுவாரே.. அந்தப் பாட்டுதான் இந்த ஸ்டில்லில் ஒன்றைப் பார்த்தபோது ஞாபகத்திற்கு வந்தது.. ராஜேந்திரனின் "உதட்டு அழகு" அப்படி இருக்கு இதில்!

பெல்ட் என்ன, பெல்பாட்டம் பேன்ட் என்ன, ஆரஞ்சுக் கலர் சட்டை என்ன... ஓவர் கோட் என்ன.. அத்தாத்தண்டி செயின் என்ன.. கூலர் என்ன.. எங்கேயோ போய்ட்டீங்க ராஜி!

இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டருக்குப் பார்க்கனும்!

 

பொங்கலன்று பயமுறுத்த வரும் 'டார்லிங்' பேய்!

பொங்கல் பண்டிகைக்கு இத்தனை படங்கள்தான் வரும் என சொல்ல முடியாத நிலையே இன்னும் நீடிக்கிறது.

கடந்த வாரம் வரை பொங்கல் ரிலீசில் உறுதியாக நின்ற அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, அந்த இடத்துக்கு பல படங்களும் போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கிச் சட்டை படத்தை பொங்கலுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

பொங்கலன்று பயமுறுத்த வரும் 'டார்லிங்' பேய்!  

இந்த நிலையில் திடீரென பொங்கல் ரேசில் குதித்துள்ளது டார்லிங் திரைப்படம்.

ஜிவி பிரகாஷ் குமார் - நிக்கி கல்ராணி, சிருஷ்டி நடித்துள்ள டார்லிங் ஒரு பேய்ப் படம். தெலுங்கில் வெளியான பிரேம கதா சித்திரம் படத்தின் தமிழ் ரீமேக் இது.

அஜீத் படம் வெளிவராத சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் படத்தை முன்கூட்டியே பொங்கல் தினத்தன்று வெளியிடுகிறார்கள்.

ஷங்கரின் ஐ, விஷால் நடித்த ஆம்பள ஆகிய படங்கள் வெளியீட்டுத் தேதிகளை அறிவித்துவிட்டனர். இப்போது டார்லிங் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்கிச் சட்டை படத்தின் வெளியீட்டுத் தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஜிவி பிரகாஷ் முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் பென்சில். அந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் டார்லிங் படம் அவரது அறிமுகப் படமாக வருகிறது.

 

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

கவுண்ட மணி, வடிவேலுவின் ஒன்லைன் காமெடி வசனங்கள்தான் இப்போது உருவாகி வரும் பல புதிய படங்களுக்கு தலைப்பு.

கவுண்டரின் புகழ்பெற்ற அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா வசனம் இப்போது ஒரு புதுப் படத்தின் தலைப்பாகிவிட்டது.

கடுமையான முயற்சிக்குப் பிறகு சினிமாவில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கும் கணேஷ் பிரசாத் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

ஏற்கெனவே கரையோரம், தற்காப்பு போன்ற படங்களில் நடித்து வந்த அவர், இப்போது ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' படத்தில் நடிக்கிறார்.

தனது சினிமா ஆசை, இதுவரையிலான அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில், "
"கோயம்புத்தூர்ல என்ஜினியரிங் முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பனியில் பணியாற்றி வந்தேன். எனக்கு அங்கு வேலை செய்வது நெருடலாய் இருந்தது. சின்ன வயசுல இருந்து நான் அஜித் சார் ரசிகன், எனக்கு அவர மாதிரி நடிகன் ஆகனும்தான் ஆசை. சென்னைக்கு கிளம்பிட்டேன். இங்க பல இடங்களுக்கு வாய்ப்புகள் தேடி சென்றேன். பின்னர் ஸ்டுடியோ 9 நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து கொண்டே வாய்ப்புகளை தேடினேன்.

"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக நடிச்சிருக்கேன். இந்த படம் ஒரு காமெடி கலாட்டா பவர்ஸ்டார், சாம் ஆன்டர்சன் , ஜான் விஜய், சுப்பு, மனோ பாலா அண்ணன் இப்படி ஒரு பெரிய சிரிப்பு பட்டாளம். முதற்கட்ட படபிடிப்பு கொடைக்கானலில் முடிவடைந்துள்ளது, பாண்டிச்சேரி, சென்னை என படபிடிப்பை தொடர உள்ளோம்," என்றார்.

‘கரையோரம்' படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக வருகிறார் கணேஷ். இதில் இனியா அவருக்கு ஜோடி. ஷக்தி நாயகனாக நடிக்கும் 'தற்காப்பு' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.